Friday, January 9, 2009

உறவுகளும்..நாமும்...

உறவுகள்...

இதில்தான் எத்தனை வகை..

தாய்,தந்தை,தாத்தா,பாட்டி,மனைவி,மகன்,மகள் போன்ற குடும்ப உறவுகள்..

வெளியே..நண்பர்கள் என சமூக உறவுகள்.

நம் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.உண்மையில்..ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போதுதான்..உறவுகளின் ஞாபகம் வருகிறது.ஆனால்..எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது...உறவில் விரிசல் ஏற்படுகிறது.

நம் உறவுகள்..நம்மை..விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது.நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது.உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது.நமக்கு கோபம் வருவது போல..உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.

சற்று யோசனை செய்தால்..இவை புரியும்..

நம் வீட்டில் வேலை செய்யும்..நபர்கள் கூட..தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை.அதனால்...அவர்களையும்..நமக்கு சமமாக...நம்மில் ஒருவராக..எண்ணி பழகினால்..எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்

உறவுகள்..தொடர..யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.

உறவுக்கு ஆதாரம் அன்புதான்..ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.வெறுப்பை..வெறுத்து ஒதுக்குவோம்.

உறவுப்பூக்கள் மலரும்..இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்..

கடைசியாக ஒரு ஜோக்..

நண்பன்-ஏன்..காலையிலிருந்து வருத்தமாய் இருக்கீங்க?
இவர்- என் மனையுடன் சண்டை..ஒரு மாசம் பேசமாட்டேன்னு சொல்லிட்டா
நண்பன்-இது சந்தோஷ விசயம் தானே...ஏன் வருந்த வேண்டும்
இவர்-அந்த ஒரு மாசம்..இன்னியோட முடியுதே!

7 comments:

நசரேயன் said...

நல்லா இருக்கு ஐயா

அன்பு said...

ஏம்பா உனக்கு பின்னூட்டம் போட்டா உன் கைத்தடி வந்து பதில் சொல்றான். உனக்கே ஒன்னு ரெண்டு கைத்தடி இருக்கும் போது 70 வருசமா அரசியல் செய்றவங்களுக்கு எத்தனை இருக்கும், அதனால் எழுதும் போது யோசிச்சு எழுது

குடுகுடுப்பை said...

கடைசி ஜோக்குக்கு முந்தின நாள் மாதிரி இருந்தா வாழ்க்கை நல்லாதான் இருக்கும்

மதன் said...

http://azhagiyalkadhaigal.blogspot.com/2008/11/blog-post_25.html

இது உறவுகளைப் பற்றிய என்னுடையது.. TVR போலன்றி சற்று சீரியசானது..!:) அன்பைப் பற்றி இருவருமே பேசியிருப்பதால் நண்பர்களின் கவனத்துக்கு..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

///புலிகேசி said...
ஏம்பா உனக்கு பின்னூட்டம் போட்டா உன் கைத்தடி வந்து பதில் சொல்றான். உனக்கே ஒன்னு ரெண்டு கைத்தடி இருக்கும் போது 70 வருசமா அரசியல் செய்றவங்களுக்கு எத்தனை இருக்கும், அதனால் எழுதும் போது யோசிச்சு எழுது//
புலிகேசி said...
ஏம்பா உனக்கு பின்னூட்டம் போட்டா உன் கைத்தடி வந்து பதில் சொல்றான். உனக்கே ஒன்னு ரெண்டு கைத்தடி இருக்கும் போது 70 வருசமா அரசியல் செய்றவங்களுக்கு எத்தனை இருக்கும், அதனால் எழுதும் போது யோசிச்சு எழுது
புலிகேசி said...
ஏம்பா உனக்கு பின்னூட்டம் போட்டா உன் கைத்தடி வந்து பதில் சொல்றான். உனக்கே ஒன்னு ரெண்டு கைத்தடி இருக்கும் போது 70 வருசமா அரசியல் செய்றவங்களுக்கு எத்தனை இருக்கும், அதனால் எழுதும் போது யோசிச்சு எழுதுபுலிகேசி said...
ஏம்பா உனக்கு பின்னூட்டம் போட்டா உன் கைத்தடி வந்து பதில் சொல்றான். உனக்கே ஒன்னு ரெண்டு கைத்தடி இருக்கும் போது 70 வருசமா அரசியல் செய்றவங்களுக்கு எத்தனை இருக்கும், அதனால் எழுதும் போது யோசிச்சு எழுது//

நன்றி சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// குடுகுடுப்பை said...
கடைசி ஜோக்குக்கு முந்தின நாள் மாதிரி இருந்தா வாழ்க்கை நல்லாதான் இருக்கும்//

வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மதன் said...
http://azhagiyalkadhaigal.blogspot.com/2008/11/blog-post_25.html

இது உறவுகளைப் பற்றிய என்னுடையது.. TVR போலன்றி சற்று சீரியசானது..!:) அன்பைப் பற்றி இருவருமே பேசியிருப்பதால் நண்பர்களின் கவனத்துக்கு..!//

மதன்..படித்தேன்..அருமையாக இருக்கிறது..அடிக்கடி நிறைய எழுங்கள்.வாழ்த்துகள்