இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் சென்று பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உடைத்துக் கொண்டு போக முடியாது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை இன்னும் தயாராகவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்கிறது. மெத்தனம் காட்டவில்லை. இலங்கைக்குப் பிரணாப் முகர்ஜி போக வேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அது உடனடியாக சாத்தியமானதல்ல.
இலங்கைத் தமிழர்களுக்காக இந்த விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி எங்களிடம் கூறி இருக்கிறார்.
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
நன்றி -வெப் துனியா
8 comments:
அப்படியே போயிட்டாலும்..
விமானம் கிடைக்கவில்லை
அது இல்லை இளா...டிசம்பர் 4ம் நாள்.. கலைஞர் தலைமையில் அனைத்து கட்சியினர்..பிரதமரை சந்தித்தபோது ப்ரனாப் இலங்கை செல்வார் எனக் கூறப்பட்டது.அவர் போனாலும்..எதையும் சாதிக்கப்போவதில்லை..அது வேறு விஷயம்..ஆனால் இதுநாள் வரை மத்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாகவே நடந்து வருகிறது.அதைக் கண்டிக்காமல்..பாலு சப்பைக்கட்டு கட்டுகிறாரே!
ஒரு வேளை ..அனைத்து இலங்கை தமிழனும் அழிவதற்காக காத்திருக்கிறார்களோ என்னவோ...
\\\நசரேயன் said...
விமானம் கிடைக்கவில்லை\\\
:-(((((((((
இவர்கள் எல்லாம் மனிதர்களா
இல்லை மிருங்களா
இரக்கம் என்பது கூட
இல்லாமல்
இருப்பதைப் பார்க்கும்பொழுது
தோன்றுகிறது
//திகழ்மிளிர் said...
இவர்கள் எல்லாம் மனிதர்களா
இல்லை மிருங்களா
இரக்கம் என்பது கூட
இல்லாமல்
இருப்பதைப் பார்க்கும்பொழுது
தோன்றுகிறது//
இதை நாம் சொன்னால் ஒரு சாராருக்கு கோபம் வருகிறதே திகழ்மிளிர்
பாலுச் சாமி, நீங்க சொல்றதை எல்லாம் நம்புறோம் ஐயா!
நடத்துங்கள்!! நடத்துங்கள்!!
// ஜோதிபாரதி said...
பாலுச் சாமி, நீங்க சொல்றதை எல்லாம் நம்புறோம் ஐயா!
//
வேறு வழி..?
Post a Comment