இதுவரை..உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்..இந்தியாவில் பார்க்க விரும்பிய இடங்களாக..தாஜ் மகால்,ஜெய்ப்பூர் அரண்மனை போன்ற இடங்கள் முன்னிலை வகித்து வந்தன.
திடீரென..ஒரு புது இடம் இப்போது..அனைத்து சுற்றுலா பயணிகளையும் பார்க்க தூண்டி வருகிறதாம்.
இதற்கு பிரதம காரணம் 'ஸ்லம்டாக் மில்லினர்' என்ற திரைப்படம்.
ஆசியாவின்..மிகப்பெரிய குடிசைப் பகுதியாக மும்பை தாரவி கருதப்படுகிறது.அங்கு வசிக்கும் ஒரு சிறுவனின் கனவு வாழ்க்கையையும்..பரம ஏழையான அவன்..கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மூலம்..கோடீஸ்வரன் ஆவதையும் சொல்லும் படம் இது.குடிசைப்பகுதிகள் முழுவதையும் படம் காட்டுகிறதாம்.அதனால் அப்பகுதிகளை நேரில் பார்க்க மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.
இப்பகுதியில் வாழும் 16000 க்கும் மேல் உள்ள மக்கள் பயன்படுத்த 6 டாய்லெட்டுகள் தான் உள்ளதாம்.அதை காணவும் ஆர்வமாம்.(இன்னொருத்தர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை)
தினம் தினம் செத்துப் பிழைக்கும்...இப்பகுதி ஏழைகள் வாழ்வில் படும் துன்பத்தைப் பார்க்க வசதி படைத்தோற்கு எவ்வளவு ஆசை???!!!
7 comments:
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நமது அவலம் மற்றவர்க்கு கொண்டாட்டம். தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட். நன்றி
நன்றி
viji
இப்பகுதியில் வாழும் 16000 க்கும் மேல் உள்ள மக்கள் பயன்படுத்த 6 டாய்லெட்டுகள் தான் உள்ளதாம்.அதை காணவும் ஆர்வமாம்.(இன்னொருத்தர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை)
///
இந்தியான்னாலே
இப்படித்தானே
எடுக்கிறான்க!!
இந்த
படத்துக்கு
பரிசு
வேற!!!
///thevanmayam said...
இப்பகுதியில் வாழும் 16000 க்கும் மேல் உள்ள மக்கள் பயன்படுத்த 6 டாய்லெட்டுகள் தான் உள்ளதாம்.அதை காணவும் ஆர்வமாம்.(இன்னொருத்தர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை)
///
இந்தியான்னாலே
இப்படித்தானே
எடுக்கிறான்க!!
இந்த
படத்துக்கு
பரிசு
வேற!!!///
:-((((((((
கமெண்ட் போடறவங்க எல்லாம் அட்லீஸ்ட் படம் பாத்துட்டு போடலாம் ! படத்தோட பேர தவிர மிச்சம் எதுவும் offensiveaa இல்ல.
இந்த reuters செய்தி எல்லாம் எங்கேந்து புடிச்சீங்க சார் ?
பத்திரிகைகளில் வந்த செய்திதான் மணி
// மங்களூர் சிவா said...
:((//
:-(((
Post a Comment