Saturday, January 17, 2009

அபியும் நானும்..மற்றும் சர்தார்ஜியும்..

இப்போதுதான் அபியும் நானும் படம் பார்க்க முடிந்தது.

இப்பதிவு..படவிமரிசனம் இல்லை...ஆனாலும் குழந்தைகள் உள்ள ஒவ்வொரு பெற்றோரும் (அபியை பெற்றிருந்தாலும் சரி..அபிராமனை பெற்றிருந்தாலும் சரி) பார்க்க வேண்டிய படம்.ஆனாலும்..இடைவேளைக்குப் பிறகு...திரைக்கதையை எப்படி இழ்த்துச் செல்வது..என தடுமாறியுள்ளது தெரிகிறது.

சரி..தலைப்புக்கு வருகிறேன்.

இப்படத்தில்..தலைவாசல் விஜய் ஒரு வசனம் சொல்கிறார்..

தில்லியில் ஒருமுறை..நாங்களெல்லாம்..ஒரு காரில் ஊரைச் சுற்றினோம்.ஒரு சர்தாஜிதான் டிரைவர்.சர்தாஜி ஜோக்ஸ்களை ஒருவருக்கொருவர் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம். பயணம் முடிந்தது..காருக்கான பணத்தை வாங்கிக்கொண்ட சர்தார்ஜி...என் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து..எங்கேனும் ஒரு சர்தாஜி பிச்சை எடுத்தால்..இதைப் போடுங்கள் என்றார்..ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை.இன்றும் அந்த ஒரு ரூபாய் எங்கிட்டதான் இருக்கிறது என்பார்.

ஆம்..யோசித்துப் பார்த்தால் அது சரியென்றே தொன்றுகிறது.டாக்ஸி டிரைவர்களாகவும்..கடைவைத்திருப்பவர்களாகவும்,ராணுவத்தில் பணிபுரிபவராகவும்..இப்படி..உடலுழைப்பில் சாப்பிடுபவர்கள் அவர்கள்.அவர்களை மூடர்களாக்கி எவ்வளவு நகைச்சுவை.

சர்தார்ஜி ஜோக்ஸ்..என ஆனந்தவிகடன்..ஒரு முறை வெளியிட்டப்போது...மனம் வருந்தியவர்கள் அவர்கள்.உடன் ஆவி நிர்வாகமும்..இனி சர்தார்ஜி ஜோக்ஸ் கிடையாது..அதற்கு பதில் மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ் எனப்போடுகிறோம் என்றது.

நானும்..அப்படிப்பட்ட சில ஜோக்குகளை அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ் என பதிவிட்டுள்ளேன்.

சர்தார்ஜி ஜோக்ஸ் என பதிவிடுபவர்களும் இனி வேறு பெயரை உபயோக்கிக்கலாம்.

உழைத்து வாழும் அவர்களை மதிப்போம்.

10 comments:

குடுகுடுப்பை said...

கண்டிப்பாக....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி குடுகுடுப்பை

ARV Loshan said...

நல விஷயம்.. நான் கூட சர்தார்ஜியை பற்றி நல்ல,பெருமையான விஷயங்கள் கேள்விப்பட்டுள்ளேன்..

Anonymous said...

ஆமாங்க. தெரிஞ்சே செஞ்ச தவற சரி செய்ய இது ஒரு சந்தர்ப்பம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி LOSHAN

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வேலன்..

ஆமாம் ..ஊர்ல இருக்கீங்களா? ரொம்ப நாளா காணோம்

நசரேயன் said...

உண்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

கோவி.கண்ணன் said...

//சர்தார்ஜி ஜோக்ஸ் என பதிவிடுபவர்களும் இனி வேறு பெயரை உபயோக்கிக்கலாம்.//

ஆம்ஜி ! :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.