Monday, January 12, 2009

திருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வரலாம்...

திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க., பெரும் வெற்றி பெற்றதை அடுத்து..தமிழக அரசியலில் மாற்றங்கள் வரலாம்.

சமீப காலமாக..தி.மு.க.வை கழட்டிவிடலாமா? என்ற எண்ணத்தில் இருந்த காங்கிரஸ் தமிழக தலைவர்கள் இனி வாயடைத்து போய்விடுவார்கள்.தி.மு.க.வை விட்டால் வேறு கதியில்லை என்று..காங்கிரஸ் மேலிடம்..இனி அடக்கி வாசிக்கும்.பா.ம.க.,அணிக்குள் மீண்டும் வரும்.

பாராளுமன்ற தேர்தலுடன்...தமிழக சட்டசபை தேர்தலும் வரலாம்.பாராளுமன்றத்திற்கு காங்கிரஸிற்கு அதிக இடங்களும்..சட்டசபைக்கு..தி.மு.க.விற்கு அதிக இடங்களும் கூட்டணியில் ஒதுக்கப்படும்.
மைனாரிட்டி..தி.மு.க. அரசு..என்ற நிலை மாறி..அறுதி பெரும்பான்மையுடன்..தி.மு.க., பதவிக்கு வரும்.

2011 கனவில் இருப்பவர்கள்..இனி 2014 கனவில் இருக்க வேண்டியதுதான்.

முன்னர்..தமிழக தேர்தல்கள் பற்றி அறிந்தவர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள்.

9 comments:

Thamizhan said...

பார்ப்பனீயத்தை வெற்றி கொண்டு வருகிறது தமிழின எழுச்சி.
இதை நன்கு பயன் படுத்திப் பார்ப்பனீய அடிவருடிகளையும் சேர்த்துக் களையெடுக்க வேண்டிய கால கட்டம் வந்து விட்டது.
கைக்கூலிக் காங்கிரசையும் தமிழ்நாட்டில் ஆழப் புதைக்க வேண்டியது தான்.பி.ஜே.பி,அதன் ஊது குழல்கள்,பச்சைப் பார்ப்பனீயம்,முகமூடிப் பார்ப்பனீயம்,அனைத்தையும் ஒழிக்க வேண்டிய தருணம் இது.ஆணானப் பட்டப் பெருந்தலைவர் காமராசரும்,ராசகோபாலச்சாரியாரும் சேர்ந்து சாதிக்க முடியாததை இந்த அரை வேக்காடுகளா சாதிக்கப் போகின்றன்?
தமிழின உணர்வைத் துணிவுடன் எடுத்துச் சென்றால் புதுடில்லியின் குடுமி நம் கைக்கு வரும்.

நசரேயன் said...

வரலாம்

குடுகுடுப்பை said...

இலங்கையில் தமிழர்கள் மிஞ்சுவார்களா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
இலங்கையில் தமிழர்கள் மிஞ்சுவார்களா?//


இலங்கை தமிழர் பிரச்னை..கலைஞர் மீண்டும் கையில் எடுப்பார்..அந்த காரணமும்..சட்டசபை கலைப்புக்கு காரணமாக அமையும் குடுகுடுப்பை

ARIVUMANI, LISBON said...
This comment has been removed by the author.
ARIVUMANI, LISBON said...

//இலங்கை தமிழர் பிரச்னை..கலைஞர் மீண்டும் கையில் எடுப்பார்..அந்த காரணமும்..சட்டசபை கலைப்புக்கு காரணமாக அமையும் குடுகுடுப்பை//
மிகச் சரியாக கூறினீர்..


தமிழன் கருத்தை வழி மொழிகிறேன்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அறிவுமணி