Friday, January 23, 2009

அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்?

இந்த கேள்விக்கு உடனே நாம் ஷங்கர் என்போம்..ஆனால் அவரையும் மிஞ்சி விட்டாராம் முருகதாஸ்.

அதைப்பற்றிய ஒரு செய்தி.
ஷங்கர் பத்து கோடி சம்பளம் வாங்குகிறார். இந்தச் சம்பளத்தைத் தமிழ்ப் பட இயக்குனர்கள் யாரும் யோசித்துக்கூடப் பார்ப்பதில்லை. ஆனால் ஷங்கரே வியக்கிற அளவுக்குப் பத்து கோடி சம்பளத்தை எட்டிவிட்டாராம் முருகதாஸ். இந்தி கஜினி வெற்றிக்குப் பிறகு முருகதாஸைச் சந்தித்த ஆமிர் கான், லாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தாராம். சம்பளத்தையும் முறையாகக் கொடுத்து, தான் கேட்காமலே ஒரு தொகையையும் கொடுத்த அமீர் கானைப் பாராட்டி மகிழ்கிறார் முருகதாஸ்.

அடுத்து ஷாருக் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கும் முருகதாஸுக்குப் பேசப்பட்ட சம்பளம்தான் பத்துக் கோடி. பாலிவுட்டின் முன்னணிக் கதாநாயகிகள் இப்போதே இவரை நெருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறதோ?

இந்தியே தெரியாத முருகதாஸ் தனது ஸ்கிரிப்டை மட்டும் பக்காவாக இந்தியில் தயாரித்து மனப்பாடம் செய்து விடுகிறாராம். ஒரு வரி மாற்றிப் பேசினால்கூடக் கண்டுபிடிக்கும் அளவுக்கு!
(நன்றி டி என்எஸ்)

9 comments:

தேவன் மாயம் said...

இந்தியே தெரியாத முருகதாஸ் தனது ஸ்கிரிப்டை மட்டும் பக்காவாக இந்தியில் தயாரித்து மனப்பாடம் செய்து விடுகிறாராம். ஒரு வரி மாற்றிப் பேசினால்கூடக் கண்டுபிடிக்கும் அளவுக்கு!///

தமிழர் சாதிப்பதில் மகிழ்ச்சியே!!1

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி thevanmayam

குடுகுடுப்பை said...

பாலிவுட்டின் முன்னணிக் கதாநாயகிகள் இப்போதே இவரை நெருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறதோ? //

முருகதாசுக்குதான்.:))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Valaipookkal

KarthigaVasudevan said...

//இந்தியே தெரியாத முருகதாஸ் தனது ஸ்கிரிப்டை மட்டும் பக்காவாக இந்தியில் தயாரித்து மனப்பாடம் செய்து விடுகிறாராம். ஒரு வரி மாற்றிப் பேசினால்கூடக் கண்டுபிடிக்கும் அளவுக்கு!///

இந்த பெர்பெக்சன் தான் வெற்றிக்கு காரணமோ ?!

குமரன் said...

எவன் சம்பளம் எப்படி வாங்கினா என்ன?

ஏற்கனவே தமிழக மக்கள் சினிமாவில் மூழ்கி கிடக்கிறார்கள்.

இதில், இப்படி எல்லாம் செய்தி வேற?

உருப்படியான பதிவா போடுங்க தலைவா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மிஸஸ்.டவுட்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நொந்தகுமாரன் said...
எவன் சம்பளம் எப்படி வாங்கினா என்ன?

ஏற்கனவே தமிழக மக்கள் சினிமாவில் மூழ்கி கிடக்கிறார்கள்.

இதில், இப்படி எல்லாம் செய்தி வேற?

உருப்படியான பதிவா போடுங்க தலைவா!//

உடன்பிறப்பே..
இப்பதிவின் நோக்கம்..கஜினி படம் எடுக்க அதிகபட்சம் 2 ஆண்டுகள் ஆகியிருக்கும்.அப்போது அந்த இயக்குநர் வருடத்திற்கு 1 கோடி
சம்பாதித்து இருக்கிறார்.இதுவே சில லட்சங்கள் சம்பாதிக்கும் ஐ.டி.ஊழியர்கள் மீது எத்தனை வன்மம்..பொறாமை.அப்படிப்பட்ட எண்ணம் கொண்டோர்..இவர்களைப் பார்த்தும் சற்று பொறாமை படட்டுமே என்றுதான்.பாருங்கள் காலையிலிருந்து சூடான இடுகையில் இருக்கிறது.