Friday, January 30, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(31-1-09)

1.விவேகானந்தர் சிறுவனாய் இருந்த போது..ஒரு நாள் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டார்.பந்தயத்தில் அவரே எல்லோருக்கும் முன்னால் வந்துக் கொண்டிருந்தார்.தனக்குப் பின்னால் ஒரு சிறுவன் ஓடி வருவதைக் கண்ட அவர் 'சட்' டென வேகத்தைக் குறைத்து..அவனை முந்தி ஓடச் செய்தார்.தனக்கு கிடைக்க வேண்டிய முதல் பரிசை...தான் அடைவதைக் காட்டிலும்..இன்னொருவர் பெறுவதைக் கண்டு மகிழ்வதில்தான் ஆனந்தம் இருப்பதாகக் கூறினார்.(தன்னலம் கருதாமல் பிறர்க்கு உதவும் போது ஏற்படும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை)

2.ஆபிரகாம் லிங்கன் ஏழ்மையான நிலையிலிருந்து ஜனாதிபதி ஆனவர்.மரக்குடிலிலிருந்து (வெள்ளை) மாளிகைக்கு வந்தவர் என்று அவரை வர்ணிப்பார்கள்.ஒபாமாவும் அப்படித்தான்.சாதாரண நிலையிலிருந்து அதிபர் ஆனவர்.வெள்ளை மாளிகையில் முதல் கறுப்பர் என வர்ணிக்கப்படுபவர்..அதெல்லாம் சரி...லிங்கன் பதவி எற்புக்கும் 833 கோடி செலவானதா...தெரியவில்லை.

3.மும்பை ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு தினத்தன்று..பிபாசாபாசு அரைமணி நேரம் நடனம் ஆடினார்.அதற்கு அவர் வாங்கிய தொகை ஒன்றரை கோடியாம்.

4.சீன நாட்டு தேசியக் கொடியில் 'gate of heavenly peace' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

5.நண்பர் 1 -(தனக்குத்தானே பேசிக்கொள்பவரிடம்)ஏன் நீங்கள் தனக்குத் தானே பேசிக் கொள்கிறீர்கள்
நண்பர்2 - என் பேச்சைக் கேட்க நான் ஒருவனாவது இருக்கிறேனே

6.ஒரு கவிதை-
உடல் பசி தீர்த்தவளின்
வயிற்றுப் பசி தீர்த்தேன்
அன்புடன் தந்தாள்
எய்ட்ஸை

4 comments:

நாமக்கல் சிபி said...

இன்றைய தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல் அருமை!

5வதா இன்னொரு ஐட்டமும் இருக்கே!

நாமக்கல் சிபி said...

தேங்கா, மாங்கா, பட்டாணி, சுண்டல், கவிதை..!?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சிபி

T.V.ராதாகிருஷ்ணன் said...

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டலுக்கு கொசுறு கவிதை