சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முறைகேடுகள் பற்றி..கடந்த மூன்று நாட்களாக மாறி..மாறி ஊடகங்களில் செய்திகளைக் கேட்கிறோம்..படிக்கிறோம்..
சத்யம் நிறுவனத்தை இன்ஃபோஸிஸ் வாங்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த நாராயணமூர்த்தி..கறை படிந்த நிறுவனத்தை வாங்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் என்ன? என்ற கேள்விக்கு..சமீபத்தில் அதன் துணைத்தலைவர் நந்தன் நிலேகனி.
'ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை நன்னெறிகள் உண்டு.அவற்றிலிருந்து எப்போதும்,எந்த காரணத்துக்காகவும்..நாம் விலகிவிடக் கூடாது.நாம் செய்வது பிஸினஸ் என்றாலும்..இந்த சமூகத்தில் நமக்குள்ள பொறுப்புகளை தட்டிக் கழிக்கக்கூடாது.முதலீட்டாளர்கள் நலனைக் காப்பது ஒரு கம்பெனியின் நோக்கமாக இருக்கலாம்.அதே சமயம் கம்பெனியில் பணிபுரிபவர்களின் நலனை பாதுகாப்பதும் மிகவும் அவசியம்.இதுபோன்ற கொள்கைகள்தான் எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கான அஸ்திவாரம்' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில்..சத்யம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணம் இல்லை என்பதும்,அவர்களின் கிரடிட் கார்ட் லிமிட் குறைக்கப்பட்டுவிட்டது என்றும்..அவர்கள் வாங்கியுள்ள வீட்டுக்கடன் தவணைப் பணத்தை நெருக்க வேண்டாம் என தனியார் வங்கி ஒன்று தீர்மானித்துள்ளதாகவும்..செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
4 comments:
கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. ஐ.பி.எம் , சத்யத்தை வாங்க போவதாக கேள்விப்பட்டேன், எந்தளவுக்கு உண்மை என்பது தெரியாது
//இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் என்ன? என்ற கேள்விக்கு..சமீபத்தில் அதன் துணைத்தலைவர் நந்தன் நிலேகனி.//
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் என்று சொல்லுவாங்க, போகப் போகத்தான் தெரியும்
அது வதந்திதான்..உண்மையில்லை
வருகைக்கு நன்றி ஆளவந்தான்
// கோவி.கண்ணன் said...
//இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் என்ன? என்ற கேள்விக்கு..சமீபத்தில் அதன் துணைத்தலைவர் நந்தன் நிலேகனி.//
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் என்று சொல்லுவாங்க, போகப் போகத்தான் தெரியும்//
உண்மை கோவி.
Post a Comment