Sunday, January 4, 2009

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...?

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கூறி..கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் 4-12-08 அன்று..பிரதமரை சந்தித்து வலியுறித்தினர்.பிரதமரும் விரைவில் ப்ரனாப் முகர்ஜியை(??!!) அங்கு அனுப்புவதாக வாக்களித்தார்.ஆனால் இதுவரை மத்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாகவே இருந்து வருகிறது.இவ்விஷயம் கலைஞரை சற்றே உறுத்தியதால் தான்..தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில் ..மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும்..ஒரு தமிழர் அங்கு பலியாகிறார்..என்று கண்கள் கலங்கக் கூறினார்.பிரதமரின் வாக்குறுதியையும் நினைவு படுத்தினார்.
இதையும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.

இந்நிலையில்..திருமங்கலம் இடைத்தேர்தலில்..பா.ம.க. எக்கட்சிக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்து விட்டது.இப்போது தி.மு.க.உடன் காங்கிரஸ் மட்டுமே உள்ளது.ஆகவே..நம்மை விட்டால் கலைஞருக்கு ஆள் இல்லை என காங்கிரஸ் நினைக்கிறது போலும்.காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஒப்புக்கு திருமங்கலத்தில்..தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவு பிரச்சாரம் செய்கின்றனர்.

ராமதாஸ் வேறு..அவ்வப்போது..காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என பேசி வருகிறார்.விஜய்காந்த்தையும் சமீபகாலமாக காங்கிரஸ் அணுகிவருவது தெரிகிறது.திருமங்கலம்..தேர்தல் முடிவுக்குப் பின்..கூட்டணிகள்..விஷயத்தில் மாறுதல்கள் வரலாம்.

காங்கிரஸ்,தே.மு.தி.க.,பா.ம.க. ஆகிய கட்சிக் கூட்டணி உருவாக சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.அப்படி அமையுமே ஆனால்..தி.மு.க.தனித்து விடப்படும்.

காங்கிரஸ் மண் குதிரை என கலைஞர் அறிவார்...அண்ணா சொன்னதுபோல பதவி ..வெறும் துண்டு..கொள்கை என்ற வேட்டியே முக்கியம்.இலங்கைப் பிரச்னையில் ஏற்கனவே ..பதவியை தூக்கி எறிந்தவர் கலைஞர்.

ராஜதந்திரியான கலைஞர்..என்ன முடிவு எடுப்பார்...தமிழக அரசியலில் என்ன என்ன மாற்றங்கள் வரும் ..என ..இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் தெரிய வரும்..

பாராளுமன்ற தேர்தலில்..புதுக் கூட்டணிகள் உருவாகலாம்...

பொறுத்திருந்து பார்ப்போம்.

(ஒரு உபரி செய்தி... எப்போதும் கலைஞருக்கு..வாழ்த்துகள் தெரிவிப்பதில்..முதலில் நிற்கும் சோனியாவும்,மன் மோஹனும்..புத்தாண்டு வாழ்த்துக்களை 3ம் தேதிதான் தெரிவித்தனர்.அதைக்கூட..டி.ஆர்.பாலு..கலைஞரின் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவித்ததும் தான்...இதியும் நினைவில் கொள்ள வேண்டும்.)

10 comments:

கோவி.கண்ணன் said...

காங்கிரஸ் திமுகவிடமிருந்து கழண்டு கொண்டால், அதன்பிறகு அப்பாவி ஈழத் தமிழர்கள் குறித்து கலைஞர் அழ ஆரம்பிப்பார் என நினைக்கிறேன். அதுவரையில் ஆடுரா ராமா தான்.
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலைஞர் ..இவ்விஷயத்தில்...ஏன் தாமதிக்கிறார்...தயங்குகிறார் என தெரியவில்லை
வருகைக்கு நன்றி கோவி

குடுகுடுப்பை said...

மத்தியில் ஆட்சி மாறினால்தான் எதுவும் நடக்க வாய்ப்பு உள்ளது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
மத்தியில் ஆட்சி மாறினால்தான் எதுவும் நடக்க வாய்ப்பு உள்ளது//


வேறு எந்த கட்சி இருக்கிறது...குடுகுடுப்பை

மதிபாலா said...

நல்ல பதிவு. கோவியாரின் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன். வரவர கலைஞரின் நிலையின் பால் அபரிமிதமான சலிப்பு வந்துவிட்டது.

குடுகுடுப்பை said...

பாஜகதான், காங்கிரஸ் கண்டிப்பாக கண்டு கொள்ள வாய்ப்பில்லை.பாஜக ஆதரிக்குமா உறுதியாக தெரியாது,ஆனால் வாய்ப்பு உள்ளது

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மதிபாலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
பாஜகதான், காங்கிரஸ் கண்டிப்பாக கண்டு கொள்ள வாய்ப்பில்லை.பாஜக ஆதரிக்குமா உறுதியாக தெரியாது,ஆனால் வாய்ப்பு உள்ளது//

நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

\\மதிபாலா said...
நல்ல பதிவு. கோவியாரின் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன்\\

repeateyyyyy