![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeNtM_5mHA_lzYEU8BJS7oV-1uzhn7T4gPbfXalabVFVRo5nMgwchimXohUcnyF5ycLV11RL6sDMI8rROfvSJsHwb08WKD6afiZ2cjtZcHI4y1foEdXDWq379WNFKq4jevInvWPv7_uXc/s400/IN15_OBAMA_8128e.jpg)
அருண் வைத்தியநாதன் இயக்கி, பிரசன்னா,சிநேகா நடித்த படம் 'அச்சமுண்டு..அச்சமுண்டு'. இப்படம் சீன மொழியில் சப்டைடிலுடன் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்போது கெய்ரோவில் நடக்கும் 33ஆவது சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வாகியுள்ளதாம்.வாழ்த்துகள் அருண்
2)கருணாநிதி என்று அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகே அறியும் என விஜய்காந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
3)இலங்கை அதிபரை திருமாவளவன் சந்தித்த போது ராஜபக்க்ஷே 'இலங்கை போரின் போது பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால்..அவருடன் சேர்ந்து நீங்களும் மறைந்திருக்கக்கூடும்..நான் இப்போது உங்களை சந்திக்க முடியாது போயிருக்கும்' என்றாராம்.அதுபற்றி திருமாவளவன் கூறுகையில் 'என்னை அவருக்கு அறிமகம் செய்த போது, அவர் நகைச்சுவையாக இதைக் கூறினார்.நானும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டேன்' என்றாராம்.
தமிழா..தமிழா..
4)பிச்சைக்காரர்களைவிட கேவலமாக வாழ்ந்து வருவதாக ஈழத் தமிழர்கள் கூறியதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.
5)உலகம் முழுதும் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா.,அமைப்பின் ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.இந்நிலை நீடிக்குமேயாயின் மிகவும் மோசமான பாதிப்புகளை உலகு சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது.
6)மனித உடலில் இருபது லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.இவை எப்போதும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.நாம் உணராமலேயே நாள் ஒன்றிற்கு அரை லிட்டர் வியர்வை வெளியேறுகிறதாம்.
7) ஒரு ஜோக்
படம் முதல் நாளே நொண்டுதே..
அதனால்தான் அப்பவே சுளுக்குன்னு பெயர் வைக்காதீங்கன்னு சொன்னேன்
12 comments:
சுளுக்கு ஜோக் சூப்பர்
:-) deepavali valthukal:-)
///3)இலங்கை அதிபரை திருமாவளவன் சந்தித்த போது ராஜபக்க்ஷே 'இலங்கை போரின் போது பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால்..அவருடன் சேர்ந்து நீங்களும் மறைந்திருக்கக்கூடும்..நான் இப்போது உங்களை சந்திக்க முடியாது போயிருக்கும்' என்றாராம்.அதுபற்றி திருமாவளவன் கூறுகையில் 'என்னை அவருக்கு அறிமகம் செய்த போது, அவர் நகைச்சுவையாக இதைக் கூறினார்.நானும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டேன்' என்றாராம்.
தமிழா..தமிழா..///
intha joke super sir
//3)இலங்கை அதிபரை திருமாவளவன் சந்தித்த போது ராஜபக்க்ஷே 'இலங்கை போரின் போது பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால்..அவருடன் சேர்ந்து நீங்களும் மறைந்திருக்கக்கூடும்..நான் இப்போது உங்களை சந்திக்க முடியாது போயிருக்கும்' என்றாராம்.அதுபற்றி திருமாவளவன் கூறுகையில் 'என்னை அவருக்கு அறிமகம் செய்த போது, அவர் நகைச்சுவையாக இதைக் கூறினார்.நானும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டேன்' என்றாராம்.
தமிழா..தமிழா..//
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
நானும் அருண் அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லிக்கிறேன்.
// இந்நிலை நீடிக்குமேயாயின் மிகவும் மோசமான பாதிப்புகளை உலகு சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது.//
இதுக்கு ஒரு ஆய்வு அறிக்கை தேவையா. நிலை நீடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆய்வு அறிக்கை கொடுத்திருந்தால் பாராட்டலாம்.
3 வது பாயிண்டை படிச்ச பிறகு ஜோக் ஒன்னுமில்லாம போயிடுச்சுங்க.
//goma said...
சுளுக்கு ஜோக் சூப்பர்//
வருகைக்கு நன்றி கோமா
//இயற்கை said...
:-) deepavali valthukal:-)//
வருகைக்கும்..வழ்த்துக்கும் நன்றி ராஜி
வருகைக்கு நன்றி அக்னி பார்வை
வருகைக்கும்..கருத்துக்களுக்கும் நன்றி இராகவன்
nice!
தீபாவளி வாழ்த்துக்கள்.
//மங்களூர் சிவா said...
nice!
தீபாவளி வாழ்த்துக்கள்.//
நன்றி சிவா
தீபாவளி வாழ்த்துக்கள்
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
தீபாவளி வாழ்த்துக்கள்//
நன்றி SUREஷ்
Post a Comment