Wednesday, October 21, 2009

வைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒரு கதை 2009 போட்டிக்கு)

'அப்பாவிடம் தயங்கித் தயங்கி தன் காதலைச் சொன்னாள் வைதேகி..

அப்போதுதான்..குளித்துவிட்டு வந்திருந்த அரவாமுதன்..தன் குடுமியில் இருந்த சிக்கலையும்..ஈரத்தையும் நீவி விட்டவாறு..அவள் கூறியவற்றை அலட்சியத்துடன் கேட்டபடி..தன் ஸ்ரீசூர்ணம் பெட்டியைத் திறந்து..அதில் இருந்த செந்நிறப் பொடியை சிறிது தன் இடது உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு..சிறிது நீர்விட்டு கலக்கி..சிறு குச்சியில் அதைத் தோய்த்து..நெற்றியில் நீண்ட கோடு ஒன்றை இட்டுக் கொண்டார்.குழாயைத் திறந்து இடது கையை கழுவிக் கொண்டார்.பக்கத்து துவாலையில் கைகளைத் துடைத்துக் கொண்டார்.

அப்பாவின் செயல்களை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த வைதேகி..அவர் என்ன சொல்லப் போகிறாரோ என அவர் முகத்தையும்..தரையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

நைட் ஷிஃப்ட் முடிந்து வந்து நேரமாகியும்..இன்னும் காஃபிக்காக அடுக்களையில் நுழையா மகளை அழைத்த படியே வந்தாள் ரங்கநாயகி.

அங்கு..தன் கணவனையும், மகளையும், நிசப்தத்தையும் கண்டு.."ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது என உணர்ந்துக் கொண்டாள்..

'என்ன ஆச்சு..அப்பாவுக்கும்..பொண்ணுக்கும்' என மௌனத்தை உடைத்தாள்.அதற்கு பதில் வராததால்..'யாராவது ஒருத்தர் வாயைத் திறந்து சொன்னால்தானே தெரியும்..' என்றபடி வைதேகியை நோக்கி.."ஏண்டி..ரெஷசன்ல வேலை போயிடுச்சா?' என்றாள்.

வைதேகி தலையைக் குனிந்துக் கொண்டாள்.கண்ணீர்த் துளிகள் இரண்டு..கால் கட்டைவிரல்களில் விழுந்தது.

'அது ஒண்ணுமில்லடி..அவளுக்கு..இந்த அரவாமுதனோட..அப்பாவோட "ஏ' ங்கிற இனிஷியல் வேண்டாமாம்..ஆமாம்..என்ன பேர் சொன்ன.." என்றார் வைதேகியிடம்.

"ஜேம்ஸ்" தன் செப்பு வாயைத் திறந்து மெல்லிய குரலில் சொன்னாள் வைதேகி..அது அவளுக்கேக் கேட்டிருக்குமாவென்று தெரியவில்லை..

'ஜேம்ஸ்..அவளுக்கு இப்ப ஜே ங்கற இனிஷியல் வேணுமாம்..வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோவிலுக்கு போயிண்டு இருந்தவள்..இனிமே ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்கு போகட்டான்னு கேட்கறா.பெருமாள் பிரசாதம்..துளசியை மென்னவளுக்கு..அப்பம் முழுங்க ஆசையாம்..'கோபத்துடன்..அதே சமயம் அது வெளியே தெரியா நக்கலுடன் கூறினார்.

சற்றே..தைரியம் வந்த வைதேகி..'அம்மா..என் கூட கால்சென்டர்ல வேலை செய்யற ஜேம்ஸை எனக்குப் பிடிச்சு இருக்கு..அவரைக் கல்யாணம் பண்ணிக்க அப்பாவோட பர்மிஷனைக் கேட்டேன்..'என்று சொல்லிக் கொண்டிருந்த போதே..அவள் கன்னங்களில் 'பளார்..பளார்..' என நாலு அறை அறைந்த ரங்கநாயகி 'அடிப்பாவி..எவ்வளவு லேசா சொல்ற..நாம என்ன ஜாதி..அவன் என்ன ஜாதி..நம்ம குடும்பம் சாஸ்தோஸ்ரமான குடும்பம்..நம்ம ஜாதியைத் தவிர யார் வந்தாலும்..அவா தண்ணீ கேட்டாக் கூட..சொம்புல கொண்டு வந்து கீழ வைப்போம்.அவா குடிச்சுட்டு கீழ வச்சதும்..தண்ணீ தெளிச்சு எடுத்து வைப்போம்..அப்படி ஒரு குடும்பத்துல வந்து பொறந்துட்டு..அப்படிப்பட்ட அப்பாவுக்கு வந்து பொறந்துட்டு..உன் மூளை ஏண்டி இப்படிப் போச்சு..' என அழத் தொடங்கினாள்.

'அம்மா..இப்ப என்ன ஆச்சு..அப்பா சரின்னாதான்..இந்த கல்யாணம் நடக்கும்..இல்லேனா..காலம் பூரா நான் கல்யாணம் பண்ணிக்காமலேயே இருப்பேன்.வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்...ஆனா ஒன்னு சொல்லட்டா..எனக்கு இருபத்தெட்டு வயசாச்சு..எனக்குக் கீழ நாலு பொண்ணுங்க..எல்லாருக்கும் கல்யாணம் பண்ணனும்னா எவ்வளவு பணம் தேவை..நாம இருக்கற நிலைல அது எவ்வளவு கஷ்டம் யோசனைப் பண்ணுங்க..இந்த ஜேம்ஸ் ரொம்ப நல்லவன்..பணக்காரன்..நம்ம குடும்பத்துக்கு ஒரு மகனா இருந்து ஒத்தாசை பண்ணுவான்' என்றாள்.

'இனிமே இதைப் பத்தி யாரும் பேசக் கூடாது..வேற மதத்துக்காரன்..வேற ஜாதிக்காரன் தயவு எனக்குத் தேவையில்லை.பணமாம்..பணம்..யாருக்கு வேண்டும் பணம்..பணம்னதுமே அப்பா வாயை இளிப்பான்னு நினைச்சியா..அப்படி ஒரு பெயரைச்சொல்லி வரப் பணம் எனக்கு வேண்டாம்..கடைசிவரை நம்ம ஜாதிதான் உயர்ந்ததுங்கற எண்ணம் இருக்கணும்.அன்னிக்கு டி.வி.ல பார்த்தியே..அந்த பொண்ணு என்ன சொல்லித்து..நான் இந்த ஜாதில பொறந்ததுக்கு பெருமாளுக்கு நன்றி சொல்லறேன்னுத்தே..அது பொண்ணு..உனக்கு கடைசியா சொல்றேன்..இனிமே என் மூச்சுக் காத்திலக் கூட அவன் பெயர் படக்கூடாது..' என்றார் கறாராக.

***** ***** ***** *****
அன்று இரவு நைட் ஷிஃப்டிற்கு வந்த வைதேகி..அலுவலகத்தில்..அவள் பதிலுக்குக் காத்திருந்த ஜேம்ஸை நளினமாக தவிர்த்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்து ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டாள்.

முதல் அழைப்பு வந்தது..

"குட் மார்னிங் சார்..கேத்ரின் ஹியர்..வாட் கேன் ஐ டு ஃபார் யு சார் " என்றாள் இயந்திரமாக....

43 comments:

JesusJoseph said...

நல்ல இருக்கு

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

T.V.Radhakrishnan said...

நன்றி ஜோசப்

goma said...

கேத்ரினுக்கு வாழ்த்துக்கள்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இந்த ஜேம்ஸ் ரொம்ப நல்லவன்..பணக்காரன்..//

அடி சக்கை,,,,,,

ஷைலஜா said...

callcentreல வேலைபாக்கறாளா வைதேகி அட நல்லாருக்கே கதை!

ராமலக்ஷ்மி said...

//கேத்ரின் ஹியர்//

டாப். நல்லா முடிச்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

தண்டோரா ...... said...

சூப்பர் தலைவா..அமெரிக்காகாரனின் “ஆசீர்வாதம்” அலமேலுவுக்கு

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல கதை

வைதேகி உள்ளம் வாடுதே !!

T.V.Radhakrishnan said...

//goma said...
கேத்ரினுக்கு வாழ்த்துக்கள்..//

..நன்றி goma

Anonymous said...

வைதேகி தப்பான முடிவு எடுத்துட்டாளா? ஏன் ஜேம்ஸை தவிர்க்கணும்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

T.V.Radhakrishnan said...
This comment has been removed by a blog administrator.
T.V.Radhakrishnan said...

//ஷைலஜா said...
callcentreல வேலைபாக்கறாளா வைதேகி அட நல்லாருக்கே கதை!//

நன்றி ஷைலஜா

T.V.Radhakrishnan said...

//ராமலக்ஷ்மி said...
//கேத்ரின் ஹியர்//

டாப். நல்லா முடிச்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!//

நன்றி ராமலக்ஷ்மி

T.V.Radhakrishnan said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//இந்த ஜேம்ஸ் ரொம்ப நல்லவன்..பணக்காரன்..//

அடி சக்கை,,,,,,//

வைதேகி ஏன் அப்படி சொல்ல வேண்டும்..யூகியுங்கள் பார்க்கலாம் சுரேஷ்

க.பாலாசி said...

கதை நன்றாயிருக்கிறது அன்பரே...வெற்றிபெற நானும் வாழ்த்துகிறேன்...

T.V.Radhakrishnan said...

//தண்டோரா ...... said...
சூப்பர் தலைவா..அமெரிக்காகாரனின் “ஆசீர்வாதம்” அலமேலுவுக்கு//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி தண்டோரா

T.V.Radhakrishnan said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல கதை

வைதேகி உள்ளம் வாடுதே !!//

வருகைக்கு நன்றி Starjan

T.V.Radhakrishnan said...

//சின்ன அம்மிணி said...
வைதேகி தப்பான முடிவு எடுத்துட்டாளா? ஏன் ஜேம்ஸை தவிர்க்கணும்

வெற்றி பெற வாழ்த்துக்கள்//

ஜோசப் ,,வைதேகியின் தந்தை சொன்ன முடிவை அறிய காத்திருக்கிறான்..அவளோ தந்தையை மீறி முடிவெடுக்க தயங்குகிறாள்..இந்நிலையில் அவனை முற்றுமாக புறக்கணிக்கவில்லை..அவனுடன் அப்போதைக்கு பேசுவதை தவிர்க்க எண்ணுகிறாள்..ஆகவேதான் அந்த நளினமாக என்ற சொல்நன்றி சின்ன அம்மிணி

T.V.Radhakrishnan said...

//க.பாலாசி said...
கதை நன்றாயிருக்கிறது அன்பரே...வெற்றிபெற நானும் வாழ்த்துகிறேன்...//


நன்றி பாலாசி

pappu said...

ஜேம்சு, ஜேம்சுதானா? இல்ல ராமானுஜமா?

T.V.Radhakrishnan said...

//pappu said...
ஜேம்சு, ஜேம்சுதானா? இல்ல ராமானுஜமா?//

ஜேம்ஸ் ராமானுஜம் ஆனா கதையில என்ன இருக்கு
வருகைக்கு நன்றி Pappu

மணிகண்டன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வோட்டு சிஸ்டம் கொண்டுவந்தா நான் ஒரு பத்து வோட்டு போடறேன். எனக்கு தனியா எவ்வளவு வெட்டுவீங்க ?

கே.ரவிஷங்கர் said...

பயந்துக்கொண்டே இருந்தேன் கடைசியில் ஏதாவது திடீர் “நீதி” வைத்துவிடுவீர்களோ என.நல்ல வேளை.

எனக்கு திடீர் “நீதி” அலர்ஜி.

பாத்திரங்களை அதனதன் யதார்த்த தளங்களில் சொல்லி இருப்பது நன்று.

இந்த கதை பிடித்திருக்கிறது.

வாழ்த்துக்கள்!

T.V.Radhakrishnan said...

//மணிகண்டன் said...
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வோட்டு சிஸ்டம் கொண்டுவந்தா நான் ஒரு பத்து வோட்டு போடறேன். எனக்கு தனியா எவ்வளவு வெட்டுவீங்க ?//

வெட்டு..குத்து எல்லாம் வேண்டாம்..நான் அஹிம்சைவாதி

T.V.Radhakrishnan said...

//கே.ரவிஷங்கர் said...
இந்த கதை பிடித்திருக்கிறது.

வாழ்த்துக்கள்!//

நன்றி கே.ரவிஷங்கர்

ILA(@)இளா said...

செம நச்

T.V.Radhakrishnan said...

நன்றி இளா

T.V.Radhakrishnan said...

//சின்ன அம்மிணி said...
வைதேகி தப்பான முடிவு எடுத்துட்டாளா? //

வைதேகி காத்திருப்பாள்....

Shakthiprabha said...

நல்லா இருக்கு. பரிசு பெற வாழ்த்துக்கள்.

T.V.Radhakrishnan said...

//Shakthiprabha said...
நல்லா இருக்கு. பரிசு பெற வாழ்த்துக்கள்//

நன்றி Shakthiprabha

நசரேயன் said...

குட் ஈவினிங் சார்

T.V.Radhakrishnan said...

//நசரேயன் said...
குட் ஈவினிங் சார்//

குட் ஈவினிங்..நட்சத்திரம் இரவில் தானே தெரியும்

வருண் said...

வெற்றிபெற வாழ்த்துக்கள், டி வி ஆர்.

காதலிக்காமல் இருக்கிறது கஷ்டம்.

இதுபோல் காதலை பெற்றோரிடம் சொன்னால் 99% அவங்க அதை ஏற்றுக்கொள்வது இல்லை.

கடைசியில் பெற்றோர்கள் சாதிச்சிடுவாங்க.

இந்த நவீன உலகத்தில் 28 வயதான வைதேகியை, அம்மா ரங்கநாயகி அறைவது போன்றவை இன்றும் நம்ம கலாச்சாரத்தில் நடக்கிறது. :((

ஆனால், இது நிறுத்தப்படவேண்டிய ஒரு பெரிய தவறு. It really bothers me. :(

ரொம்ப நிஜக்கதை மாதிரி இருக்கு, டிவிஆர் :)

T.V.Radhakrishnan said...

//வருண் said...
வெற்றிபெற வாழ்த்துக்கள், டி வி ஆர்.

காதலிக்காமல் இருக்கிறது கஷ்டம்.

இதுபோல் காதலை பெற்றோரிடம் சொன்னால் 99% அவங்க அதை ஏற்றுக்கொள்வது இல்லை.

கடைசியில் பெற்றோர்கள் சாதிச்சிடுவாங்க.

இந்த நவீன உலகத்தில் 28 வயதான வைதேகியை, அம்மா ரங்கநாயகி அறைவது போன்றவை இன்றும் நம்ம கலாச்சாரத்தில் நடக்கிறது. :((

ஆனால், இது நிறுத்தப்படவேண்டிய ஒரு பெரிய தவறு. It really bothers me. :(

ரொம்ப நிஜக்கதை மாதிரி இருக்கு, டிவிஆர் :)///

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி வருண்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கதை மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.

யாரும் எப்போதும் திடீரென்று மாறி விட மாட்டர்கள் என்பதை ஒவ்வொரு கதாபாத்திரமும் உணர்த்துகிறது.

வாழ்த்துகள்!

T.V.Radhakrishnan said...

நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை

சதங்கா (Sathanga) said...

நல்ல முடிவு. வாழ்த்துக்கள்.

T.V.Radhakrishnan said...

நன்றி சதங்கா

பின்னோக்கி said...

கதை இந்த காலத்தை ஒட்டி இருந்தது. நான் கூட இது மெகா சீரியல்னு முடிச்சுடுவீங்கன்னு நினைச்சேன். ஆனா கடைசி வரி சூப்பர்.

T.V.Radhakrishnan said...

//பின்னோக்கி said

கதை இந்த காலத்தை ஒட்டி இருந்தது. நான் கூட இது மெகா சீரியல்னு முடிச்சுடுவீங்கன்னு நினைச்சேன். ஆனா கடைசி வரி சூப்பர்.//

நன்றி பின்னோக்கி

Swami said...

நல்ல கதை

வெற்றி பெற வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
ஐ லவ் யூ - சர்வேசன் – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை

T.V.Radhakrishnan said...

நன்றி Swami

T.V.ராதாகிருஷ்ணன் said...

இக்கதை இன்று யூத்ஃபுல் விகடன் முகப்பில் வந்துள்ளது