Wednesday, October 28, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 5

'கொங்குதேர் வாழ்க்கை' என்றதும் நமக்கு நினைவில் வருபவர்கள் நாகேஷூம், சிவாஜியும் தான்..

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா..இல்லையா என்ற சந்தேகம் மன்னனுக்குவர..தன் மனதில் உள்ள சந்தேகத்தை போக்குபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என மன்னன் அறிவிக்க..ஏழ்மையில் இருந்த தருமி என்னும் புலவன்..அது தனக்கில்லை என புலம்ப..சிவ பெருமான் வந்து..பாட்டு எழுதித்தர..அதை தருமி கொண்டுவந்து தான் எழுதியது என மன்னனிடம் தர..அதை எழுதியவர் அவர் இல்லை என தருமி எழுதியவரை வரச் சொல்ல..சிவ பெருமான் நேரில் வந்து..'தன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்தது யார்?' என வினவ..நக்கீரன் தான் தான் என்றும்..'நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே' என உரைக்க..பின் நடந்ததை நாம் அறிவோம்..

அந்த 'கொங்குதேர் வாழ்க்கை' பாடல் குறுந்தொகையில் வருகிறது.அதை எழுதியவர் ,'இறையனார்' என்று போடப்பட்டிருக்கிறது.இனி அப்பாடல்...

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

இதற்கான அர்த்தம்

பூக்களை தேர்ந்து ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே சிறையாதலயும் இயல்பாய் கொண்ட வண்டே..நீ சொல்வாயாக...நீ எனது நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுக...மயிலின் மெல்லிய இயல்பும்..செறிவான பற்களும்..எழு பிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ?

(இல்லை ..என அர்த்தம்)

12 comments:

க.பாலாசி said...

//கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே//

இந்த பாடலுக்கான விளக்கம் இதுவரை தெரியாமல்தான் இருந்தேன். இப்போது உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.

ஆமா...பொண்ணுங்க கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலாசி

கட்டபொம்மன் said...

உள்ளேன் ஐயா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மறுமொழி இங்கே கொடுத்துள்ளேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கட்டபொம்மன் said...
உள்ளேன் ஐயா//



வருகைக்கு நன்றி கட்டபொம்மன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..தங்கள் பதிவிலேயே இணைப்புக் கொடுத்தமைக்கும் நன்றி சுரேஷ்

Unknown said...

டி.வி.ஆர் அய்யா,

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டென்பது தானே இப்பாடலின் பொருள்? நீங்கள் இறுதியில் (இல்லை . என அர்த்தம்) என்று சொல்லியிருப்பது தேவியின் கூந்தலைவிட நறுமணம் வாய்ந்த பூ ஒன்றும் இல்லை என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.

மங்களூர் சிவா said...

பலவருடங்களுக்கு முன் பாடத்தில் படித்தமாதிரி நினைவிருக்கிறது.

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

///முகிலன் said...
டி.வி.ஆர் அய்யா,

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம் உண்டென்பது தானே இப்பாடலின் பொருள்? நீங்கள் இறுதியில் (இல்லை . என அர்த்தம்) என்று சொல்லியிருப்பது தேவியின் கூந்தலைவிட நறுமணம் வாய்ந்த பூ ஒன்றும் இல்லை என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.//


தேவியின் கூந்தலைவிட நறுமணம் வாய்ந்த பூ ஒன்றும் இல்லை என்று -
-தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதனால்தான் நக்கீரன் செய்யுளில் பொருள் குற்றம் இருப்பதாகக் கூறியதாக கதை.

வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
பலவருடங்களுக்கு முன் பாடத்தில் படித்தமாதிரி நினைவிருக்கிறது.

நன்றி//


வருகைக்கு நன்றி சிவா

Jawahar said...

1963 லே எஸ்.எஸ்.எல்.சி. தமிழ்லே இந்த செய்யுள் மனப்பாடப் பகுதியிலே வந்திருந்ததுன்னு நினைக்கிறேன். எதிர் வீட்டுப் பெண்ணும் பக்கத்து வீட்டுப் பையனும் 'கொங்குதேர் வாழ்க்கை, கொங்குதேர் வாழ்க்கை' ன்னு மாத்தொலக்கை போடற மாதிரி படிக்கிறப்போ 'ஏன் இவங்க ரெண்டு பெரும் தொங்குதே வாழ்க்கை தொங்குதே வாழ்க்கைன்னு புலம்பறாங்கன்னு நினைப்பேன். அதற்கு விடை கொடுத்த வேலவா உன்னை என்றும் மறவாமை வேண்டும். (கே.பி.எஸ். குரலில் படிக்கவும்)

http://kgjawarlal.wordpress.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Jawahar