Wednesday, October 7, 2009

தேன் குரலோன் ஏ.எம்.ராஜா..


தமிழ்த் திரையில் நடிகர் திலகம்,எம்.ஜி.ஆர்., இருவருக்கும்..அவர்கள் குரல் போலவே பின்னணிப் பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன்.

அதேபோன்று..ஜெமினி கணேசனுக்கு..அவர் குரலுக்கு ஏற்ற வகையில் பாடியவர்..ஒருவர் ஏ.எம்.ராஜா..மற்றவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

ஆனாலும்..பாரதிக்கு..செந்தமிழ் நாடென்றபோதினில் பாய்ந்ததாம் தேன்..நமக்கெல்லாம் ராஜாவின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் காதுகளில் தேன் பாய்கிறது.

ராஜா..தேன் நிலவு,ஆடிப்பெருக்கு,கல்யாண பரிசு போன்று பல படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.நமக்கு மறக்க முடியா அவர் பாடல்களில் சில..

1951ல் சம்சாரம் படத்தில் அவர் திரை வாழ்க்கை ஆரம்பித்தது.சம்சாரம் சகல தரும சாரம்..அவர் பாடிய முதல் பாடல்.

பின்..நம்மால் மறக்க முடியா..'வாராயோ வெண்ணிலாவே..தெரிந்துக் கொள்ளணும் பெண்ணே' போன்ற மிஸ்ஸியம்மா பாடல்களை?

அமரதீபத்தில் "தேன் உண்ணும் வண்டு..'பாடல் (சிவாஜிக்காக பாடியது)

இல்லறமே நல்லறம் படப்பாடல்கள்..'மைனர் லைஃபு ரொம்ப ஜாலி' மற்றும்..'நினைக்கும் போதே..ஆஹா" பாடல்

தனிமையிலே இனிமை காண முடியுமா? ஆடிப்பெருக்கு பாடல்

கலையே உன் வாழ்க்கையின், துயிலாத பெண் ஒன்று ஆகிய மீண்ட சொர்கம் பாடல்கள்

கண்களின் வார்த்தைகள்,ஆடாத மனமும்,அருகில் வந்தாள் ஆகிய களத்தூர் கண்ணம்மா பாடல்கள்.

குலேபகாவலியில் புரட்சித் தலைவருக்கு பாடிய 'மயக்கும் மாலை' பாடல்..அலிபாபாவில்..'மாசில்லா உண்மைக்காதலே' பாடல்.

ஒஹோ எந்தன் பேபி,பாட்டுப்பாடவா..ஆகிய தேன்நிலவிற்கான பாடல்கள்.

சிங்கார பைங்கிளியே பேசு..மனோகராவிற்காகவும்..'சிற்பி செதுக்காத' எதிர்ப்பாராதது படத்திற்கான( நடிகர் திலகத்திற்காக )பாடல்கள்.

பார்த்திபன் கனவில்..'இதய வானில் உதய நிலவே' பாடல்.

விடிவெள்ளிக்காக 'கொடுத்துப் பார்..பார்"(சிவாஜிக்காக)

கல்யாண பரிசு அனைத்து பாடல்களும்...

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...எல்லாப் பாடல்களுமே தேன்..

இவரது மனைவி பின்னணைப் பாடகி கிருஷ்ணவேணி என்னும் ஜிக்கி..இவருடன் சேர்ந்து ராஜா பாடிய டூயட்டுகள் அனைத்தும் ஹிட்.

ஏ.எம்.ராஜா 1989ல் திருநெல்வேலியில் ஒரு கச்சேரிக்குப் போகும்போது..வள்ளியூர் ரயில் நிலயத்தில் வண்டி நின்றபோது இறங்கியவர்..கிளம்புகையில் ஏறும்போது வழுக்கி விழுந்து ரயில் ஏறி மரணத்தைத் தழுவினார்.

ஆனால்..தமிழிசை உள்ளவரை ராஜாவும் வாழ்வார்.

14 comments:

Anonymous said...

ஜிக்கியோட கணவர்தானே இவர். இவங்க ரெண்டுபேரும் பாடின பாடல்கள் நிறைய இருக்குன்னு நினைக்கறேன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மாசிலா உண்மைக் காதலே தான் எம்.ஜி.ஆருக்கு மிகப் பொருத்தமான குரல் என்று நினைக்கிறேன்...,

ஜோ/Joe said...

அருமையான நினைவு கூறல்.

Robin said...

ஏ. எம். ராஜா மிகவும் மென்மையாக பாடுவார். பி.பி.ஸ்ரீநிவாசும் இவரும் இரட்டையர்கள் எனச் சொல்லலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///சின்ன அம்மிணி said...
ஜிக்கியோட கணவர்தானே இவர். இவங்க ரெண்டுபேரும் பாடின பாடல்கள் நிறைய இருக்குன்னு நினைக்கறேன்.///

ஆம்..உங்க பின்னூட்டம் பார்த்த பிந்தான் ஜிக்கியின் பெயரை எழுத மறந்ததை உணர்ந்தேன்.நன்றி சின்ன அம்மிணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

///SUREஷ் (பழனியிலிருந்து) said...
மாசிலா உண்மைக் காதலே தான் எம்.ஜி.ஆருக்கு மிகப் பொருத்தமான குரல் என்று நினைக்கிறேன்...,///


அந்த ஒரு பாடல் அருமையாக அவருக்கு அமைந்தது உண்மை

நன்றி suresh

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோ/Joe said...
அருமையான நினைவு கூறல்.//


நன்றி ஜோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Robin said...
ஏ. எம். ராஜா மிகவும் மென்மையாக பாடுவார். பி.பி.ஸ்ரீநிவாசும் இவரும் இரட்டையர்கள் எனச் சொல்லலாம்//

உண்மை..ஆனால் ராஜாவின் குரல் மிகவும் குழையும்..மனிதன் என்பவன் போன்ற பாடலையும் பி.பி.எஸ்.,பாடுவார்

நர்சிம் said...

அருமையான பதிவு.

‘அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே நதியன்னநடை நடக்குதம்மா பூமியின் மேலே’

நதி போலவே வளைந்து நெளியும் குரல்..நன்றி ஸார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நர்சிம் said...
அருமையான பதிவு.

‘அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே நதியன்னநடை நடக்குதம்மா பூமியின் மேலே’

நதி போலவே வளைந்து நெளியும் குரல்..நன்றி ஸார்///

நன்றி நர்சிம்

கண்ணே உன்னைக் காணும் கண்கள் பின்னால் இல்லையே!
கண்ணால் காணும் வண்ணம் நானும் முன்னால் இல்லையே!!
இது எப்படி

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஏ எம் ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடிய பாடல்கள் நல்லா இருக்கும் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

///Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஏ எம் ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடிய பாடல்கள் நல்லா இருக்கும்//

நன்றி Starjan

goma said...

.ராஜா ஜிக்கி திருமணமான செய்தியை ,ஒரு பத்திரிகை “ராஜாஜிக்கிக் கல்யாணம் “என்று எழுதி ,ராஜாஜிக்குக் கல்யாணமா ???என்று யோசிக்கும் வண்ணம் விளையாடியது, இன்றும் என் நினைவில் நிற்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
.ராஜா ஜிக்கி திருமணமான செய்தியை ,ஒரு பத்திரிகை “ராஜாஜிக்கிக் கல்யாணம் “என்று எழுதி ,ராஜாஜிக்குக் கல்யாணமா ???என்று யோசிக்கும் வண்ணம் விளையாடியது, இன்றும் என் நினைவில் நிற்கிறது.//

நல்ல தகவல் கோமா..நன்றி