1.வைகோ-(அம்மாவிடம்) அம்மா..சட்டசபை தேர்தல்ல ம.தி.மு.க.விற்கு 52 சீட் தந்துடுங்க
ஜெ- 52 சீட் தானே இப்பவே தரேன்
(சசிகலாவைக் கூப்பிட்டு..ஒரு பாக்கட் சீட்டுக்கட்டை வரவழைத்துக் கொடுக்கிறார்)
2.அன்புமணி-(தந்தையிடம்) அப்பா என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?
ராமதாஸ்- தி.மு.க. மேல புகார் அறிக்கை ஒன்று தயார் செஞ்சுட்டேன்..இன்னிக்கு வெளியிட்டுடுவேன்..
அன்புமணி-பின்ன என்ன
ராமதாஸ்-நாளைக்கு தி,மு.க.வைப் பாராட்டி ஒரு அறிக்கை தயார் செய்யணுமே
3.காங்கிரஸ் தலைவர் ஒருவர்- நாம...திருமாவளவனை பாராட்டி ஒரு கூட்டம் போடுவோமா?
மற்ற ஒரு தலைவர்- எதற்கு..
முதல் தலைவர்- அவர்தானே சத்யமூர்த்தி பவனை எல்லோருக்கும் இப்ப ஞாபகப்படுத்தினார்.
(இது சம்பந்தமாக தகறாறு ஏற்பட..ஒவ்வொரு கோஷ்டியும்..இன்னொருவர் மீது மேசை,நாற்காலியை வீச ஆரம்பிக்கின்றனர்)
4.பிரேமலதா-(விஜய்காந்திடம்)சாரிங்க..கவலைப்படாதீங்க..அடுத்த தேர்தல்ல பார்த்துக்கலாம்..
விஜய்காந்த்-அதுக்கு கவலைப்படலை...உன் காரை தாக்கினது....வடிவேலுதான்னு சொல்லலாம்னு பார்க்கிறேன்..ஏன்னா..நாளைக்கு கலைஞரோட,இல்லை.ஜெ யோட இணைய சந்தர்ப்பம் கிடைக்கலாமே அதுக்குத்தான்.
5.அன்பழகன் வருத்தத்தோடு இருக்க
ஆர்காட்டார்- ஏன்..வருத்தமா இருக்கீங்க
அன்பழகன்- செயலாளர் பதவி பறிபோயிடுமோன்னுதான்
ஆர்காட்டார்-ஏன் அப்படி சொல்றீங்க
அன்பழகன்-உங்க கிட்ட இருந்த பொருளாளர் பதவி ஸ்டாலினுக்கு போச்சு.இப்ப அழகிரிக்கு பதவி ஏதாவது தரணும்னு சொல்றாரே..செயலாளர் கொடுத்துட்டார்னா..
6.ராதிகா-அரசியலே வேண்டாம்னேன்..கேட்கலை..ஒழுங்கா..அப்பான்னு கூட்டுகிட்டு இருந்தேன்..எல்லாம் போச்சு..
ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Monday, January 12, 2009
திருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வரலாம்...
திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க., பெரும் வெற்றி பெற்றதை அடுத்து..தமிழக அரசியலில் மாற்றங்கள் வரலாம்.
சமீப காலமாக..தி.மு.க.வை கழட்டிவிடலாமா? என்ற எண்ணத்தில் இருந்த காங்கிரஸ் தமிழக தலைவர்கள் இனி வாயடைத்து போய்விடுவார்கள்.தி.மு.க.வை விட்டால் வேறு கதியில்லை என்று..காங்கிரஸ் மேலிடம்..இனி அடக்கி வாசிக்கும்.பா.ம.க.,அணிக்குள் மீண்டும் வரும்.
பாராளுமன்ற தேர்தலுடன்...தமிழக சட்டசபை தேர்தலும் வரலாம்.பாராளுமன்றத்திற்கு காங்கிரஸிற்கு அதிக இடங்களும்..சட்டசபைக்கு..தி.மு.க.விற்கு அதிக இடங்களும் கூட்டணியில் ஒதுக்கப்படும்.
மைனாரிட்டி..தி.மு.க. அரசு..என்ற நிலை மாறி..அறுதி பெரும்பான்மையுடன்..தி.மு.க., பதவிக்கு வரும்.
2011 கனவில் இருப்பவர்கள்..இனி 2014 கனவில் இருக்க வேண்டியதுதான்.
முன்னர்..தமிழக தேர்தல்கள் பற்றி அறிந்தவர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள்.

Sunday, January 11, 2009
வருங்கால முதல்வர்கள் தோல்வி..
திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க., மாபெரும் வெற்றிப் பெற்றது.தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான்..39266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.2011ல் தாங்கள் தான் முதல்வர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த நடிகர்கள் கட்சி வேட்பாளர்கள் படு தோல்வி அடைந்தனர்.
இவ் வெற்றிப் பற்றி..நமது சரடு நிருபருக்கு தலைவர்கள் அளித்தப் பேட்டி.
கலைஞர் - இவ் வெற்றி கடந்த 2 1/2 ஆண்டுகளான தி.மு.க. ஆட்சிமேல் நம்பிக்கை வைத்துள்ள மக்கள் ,பொங்கல் திருநாளாம் தமிழ்புத்தாண்டுக்கு எனக்களித்த பரிசு.
ஜெ- இத் தேர்தலில் அராஜகம் தலை விரித்தாடியது.பணம் வினியோகிக்கப்பட்டது.அரசு இயந்திரங்கள் தவறாக செயல் பட்டன.இது குறித்து கூடிய விரைவில் வழக்கு தாக்கல் செய்வேன்.
விஜய்காந்த்- இத் தேர்தலில் தி.மு.க.தோல்வி அடைந்துள்ளது.தி.மு.க.,தேர்தல் பொறுப்பாளர் மு.க.அழகிரி 50000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவோம் என்றார்.ஆனால்..வெற்றி வாக்கு வித்தியாசம் 39266 தான்..ஆகவே தி.மு.க., 10734 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பதே உண்மை.எங்கள் கட்சியைப் பொறுத்த மட்டில் 8 சதவிகிதம் மக்கள் ஆதரவு தொடர்கிறது.
ராமதாஸ்- பா.ம.க., நடுனிலை வகித்தாலும்...எங்கள் கட்சியினர்கள் வாக்கு தி.மு.க.விற்கு விழுந்ததால் தான் வெற்றிப் பெற்றனர்.
காங்கிரஸ்-இவ் வெற்றி அன்னை சோனியாவிற்கு கிடைத்த வெற்றி.மக்கள் சோனியா பக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறோம்.
கம்யூனிஸ்ட்டுகள்-விரைவில் பொலிட்பீரோ கூடி..கூட்டணிப் பற்றி முடிவெடுப்போம்.,
சரத்குமாரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.

நோன்பு (சிறுகதை)
சிவகாமி கிழித்த நாராய் கட்டிலில் கிடந்தாள்.ஓய்வு பெற்ற வயதை அடைந்தும், வேலைக்குப்போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வயோதிகனைப்போல..டடக்..டடக்..என ஆயாசத்துடன் மின் விசிறி மேலே சுற்றிக் கொண்டிருந்தது.
பிரகாசம் தன் மனைவியைப் பார்த்தார்.
கருமை நிறம் அதிகமா...அல்லது ..வெண்மை நிறம் அதிகமா என தெரியாத வகையில் கேசக்கற்றைகள்.சாந்தமே..உருவான..புன்முறுவலுடன் காணப்படும் அந்த முகம்.. இன்று சற்றே வாடிய ரோஜாப்போல...கண்மூடிக்கிடந்தது.மேல் உதடுகள் மீதும்..நெற்றிப்பரப்பிலும்..முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்.தன் கையில் இருந்த கைகுட்டையால் அவற்றை ஒற்றி எடுத்தார்.
இப்பொது அவர் கண்களில் கண்ணீர் முத்துக்கள்.
அவள்..அவர் வீட்டில்..அவர் மனைவியாய் காலடி வைத்தது முதல்..நேற்று மாலை வரை பம்பரமாய் சுழன்றவள்.ஓய்வு என்றால் என்னவென்றே தெரியாத உயிர்...
அவள் அப்படியிருந்ததால் தான், பிரகாசத்திற்கு வீட்டுக் கவலைகளை மறக்க முடிந்தது.,
அவள் அப்படியிருந்ததால் தான்..அவரால்..தன் இரு சகோதரிகளுக்கும்.மகளுக்கும் திருமணம் செய்துவைக்க முடிந்தது.
தொகுதி எம்.எல்.ஏ., வரும்போது...அல்லக்கைகள் படை சூழ வருவதுபோல..சிவகாமியை கவனிக்கும் மருத்துவருடன்..உதவியாளர்கள் என்ற சிறுகூட்டம் உள்ளே நுழைந்தது.
சிவகாமியை பரிசோதித்த மருத்துவர்...நர்ஸிடம்..'டிரிப்ஸ் ஏற்றுவதை நிறுத்த வேண்டாம்...ஆக்ஸிஜன் சிலிண்டர் தயாராய் வைத்திருங்கள்'என்றார்.
பிரகாசம்..தயங்கியவாறு அவரைப் பார்த்து..'டாக்டர்..'என இழுத்தார்.
புருவங்களை உயர்த்தி 'என்ன' என்பது போல பார்த்தவர் 'இப்ப ஒன்னும் சொல்ல முடியாது.இருபத்து நாலு மணி நேரம் தாண்ட வேண்டும்'என இயந்திரத் தனமாய் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.பிரகாசம்..கடைசியாய் போன மருத்துவரைப் பார்த்து..பரிதாப சிரிப்பு சிரித்தார்.
உதவியாளருக்கு என்ன தோன்றியதோ..அவர் பிரகாசத்தின் தோள்களைத் தட்டி 'இனி எல்லாம் அந்த ஆண்டன் கையில்..'என மேலே கையைக் காட்டிவிட்டு நகர்ந்தார்.
ஆண்டவன்..என்ற வார்த்தையைக் கேட்டதும்..சிவகாமியின் முகத்தைப் பார்த்தார் பிரகாசம்.
'அவர் ஆயுள் நீடிக்க வேண்டும்..அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..என வரலட்சுமி நோன்பும்,கனுப்பொங்கலும்,வெள்ளிக்கிழமைகளில் விரதமும்..என சதா சர்வகாலமும்..தன் கணவனின் நலத்தையே எண்ணிக்கொண்டிருந்தாளே..சிவகாமி..அவள் நலத்தைப் பற்றி..தான் என்றாவது நினைத்ததுண்டா?இது நாள் அவளை ஒரு மனிஷியாகக் கூட நினைக்கவில்லையே..ஒரு இயந்தரம் போலத்தானே..நினைத்திருந்தார்..'
'ஆண்டவா..இவளை என்னிடமிருந்து பிரித்து விடாதே! அவள் நலனுக்காக இனி நான் விரதம் இருக்கிறேன்..நான் அவளுக்காக நோன்பு எடுக்கிறேன்..மனைவி நலத்துக்காக..கணவன் நோன்பு எடுக்கக்கூடாது என எங்கே எழுதி வைத்திருக்கிறது? அவளில்லாமல் ஒரு வினாடிக்கூட இருக்க முடியாது..என உணர்ந்துக் கொண்டேன்' என அரற்றத் தொடங்கினார்.
வாடிய ரோஜா..சற்று சிரிப்பது போல இருந்தது.

சத்யமும்..இன்ஃபோசிஸும்
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முறைகேடுகள் பற்றி..கடந்த மூன்று நாட்களாக மாறி..மாறி ஊடகங்களில் செய்திகளைக் கேட்கிறோம்..படிக்கிறோம்..
சத்யம் நிறுவனத்தை இன்ஃபோஸிஸ் வாங்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த நாராயணமூர்த்தி..கறை படிந்த நிறுவனத்தை வாங்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம் என்ன? என்ற கேள்விக்கு..சமீபத்தில் அதன் துணைத்தலைவர் நந்தன் நிலேகனி.
'ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை நன்னெறிகள் உண்டு.அவற்றிலிருந்து எப்போதும்,எந்த காரணத்துக்காகவும்..நாம் விலகிவிடக் கூடாது.நாம் செய்வது பிஸினஸ் என்றாலும்..இந்த சமூகத்தில் நமக்குள்ள பொறுப்புகளை தட்டிக் கழிக்கக்கூடாது.முதலீட்டாளர்கள் நலனைக் காப்பது ஒரு கம்பெனியின் நோக்கமாக இருக்கலாம்.அதே சமயம் கம்பெனியில் பணிபுரிபவர்களின் நலனை பாதுகாப்பதும் மிகவும் அவசியம்.இதுபோன்ற கொள்கைகள்தான் எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கான அஸ்திவாரம்' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில்..சத்யம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணம் இல்லை என்பதும்,அவர்களின் கிரடிட் கார்ட் லிமிட் குறைக்கப்பட்டுவிட்டது என்றும்..அவர்கள் வாங்கியுள்ள வீட்டுக்கடன் தவணைப் பணத்தை நெருக்க வேண்டாம் என தனியார் வங்கி ஒன்று தீர்மானித்துள்ளதாகவும்..செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

Friday, January 9, 2009
தேங்காய்...மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(10-1-09)
1.தமிழகத்தின் ஜனத்தொகை 7 கோடிக்கும் அதிகம்.அதில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 1/2 முதல் 6 கோடிக்குள் இருக்கும் என வைத்துக் கொண்டாலும்..இதில் தி.மு.க.வில் 1 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.அதாவது கிட்டத்தட்ட 20 சதவிகிதம் தமிழர்கள் தி.மு.க.வில் உறுப்பினர்கள்.தேர்தலில் 33 முதல் 35 சதவிகிதம் வரை ஓட்டுப் பெறுபவர் ஆட்சி அமைக்கும் நிலை இருந்து வருகிறது.தி.மு.க. 10 சதவிகிதம் முதல் 12 சதவிகிதம் ஆதரவுள்ள கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால்..அது அசைக்க முடியா கூட்டணி ஆகும்.(காங்கிரஸ் ஆதரவாளர்கள் 5 சதவிகிதம் இருப்பார்களா..என்பதே சந்தேகம்)ஆகவே தி.மு.க.,காங்கிரஸ்,பா.ம.க., (அல்லது விஜய்காந்த்)கூட்டணி அமைந்தால் 40 ம் நமதே எனலாம்.
2.மேன்மையான எண்ணங்களுடன் இருப்போர்..எப்போதும் தனித்து இரார்.உண்மையான நட்பு என்னும் செடி..மிக மெதுவாகத்தான் வளரும்.
3.கஷ்ட காலங்களில் ஒட்டகத்தின் மேல் ஏறி நின்றாலும்..நாய் கடிக்கத்தான் செய்யும்.
4. அண்ணாவின் ஆங்கிலப் புலமை உலகம் அறிந்தது.ஒருவரின் ஆங்கிலப் புலமையை சோதிக்க நினைத்த வெளிநாட்டவர்..Because என்று தொடர்ந்து மூன்று முறை வரும்படி வாக்கியம் அமைக்க முடியுமா? என்று கேட்டனர்.
உடனே அண்ணா..சற்றுக்கூட யோசியாமல்..No sentence end with because, because..because is the conjunction என்று பதிலளித்தார்.
5'ஒரு பழமொழி
எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய்..இளம் பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்
(மலச்சிக்கலுக்கும்...அண்மையில் பிரசிவித்த தாய்க்கும் உண்டாகும் மூலத்திற்கும் கடுக்காய் ஒரு சிறந்த மருந்து)
6.குழந்தைகளுக்கு ஒரு பாட்டு..
அம்மாவால் மட்டுமே முடியும்..
--------------------------------------
வட்டம்
வட்டமானி இல்லாமல்
அளவுகோல் இல்லாமல்
மையப் புள்ளியும் வைக்காது
சரியான விட்டங்களுடன்
மல்லிகைப்பூ போல
மென்மையும், மணமுமாய்
வட்ட தோசை
அம்மாவால் மட்டுமே
போட முடியும்.

உறவுகளும்..நாமும்...
உறவுகள்...
இதில்தான் எத்தனை வகை..
தாய்,தந்தை,தாத்தா,பாட்டி,மனைவி,மகன்,மகள் போன்ற குடும்ப உறவுகள்..
வெளியே..நண்பர்கள் என சமூக உறவுகள்.
நம் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.உண்மையில்..ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போதுதான்..உறவுகளின் ஞாபகம் வருகிறது.ஆனால்..எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது...உறவில் விரிசல் ஏற்படுகிறது.
நம் உறவுகள்..நம்மை..விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது.நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது.உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது.நமக்கு கோபம் வருவது போல..உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.
சற்று யோசனை செய்தால்..இவை புரியும்..
நம் வீட்டில் வேலை செய்யும்..நபர்கள் கூட..தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை.அதனால்...அவர்களையும்..நமக்கு சமமாக...நம்மில் ஒருவராக..எண்ணி பழகினால்..எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்
உறவுகள்..தொடர..யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.
உறவுக்கு ஆதாரம் அன்புதான்..ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.வெறுப்பை..வெறுத்து ஒதுக்குவோம்.
உறவுப்பூக்கள் மலரும்..இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்..
கடைசியாக ஒரு ஜோக்..
நண்பன்-ஏன்..காலையிலிருந்து வருத்தமாய் இருக்கீங்க?
இவர்- என் மனையுடன் சண்டை..ஒரு மாசம் பேசமாட்டேன்னு சொல்லிட்டா
நண்பன்-இது சந்தோஷ விசயம் தானே...ஏன் வருந்த வேண்டும்
இவர்-அந்த ஒரு மாசம்..இன்னியோட முடியுதே!

Thursday, January 8, 2009
நான் ராமதாஸை ஆதரிக்கிறேன்
திருமங்கலம் இடைத்தேர்தல் இன்ரு.வாக்குப்பதிவு 70 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
தி.மு.க.விற்கு...மக்கள் தங்கள் பக்கம் என நீருபிக்க வேண்டியது கட்டாயம்..ஏனெனில்..நடப்பது அவர்கள் ஆட்சியாய் இருப்பதால்.
அ.தி.மு.க.விற்கோ..ஜெயித்தால்...தி.மு.க.ஆட்சியை மக்கள் விரும்பவில்லை..என்ற ஆயுதத்தை கையில் எடுக்கலாம்.
மூன்றாவதாக இருக்கும் விஜய்காந்திற்கோ..தன் கட்சியின் வாக்கு சதவீகிதம் தெரிந்துக்கொள்ள ஆசை.
சரத்குமாருக்கோ...ஒரு கணிசமான அளவு ஓட்டுக்கள் வாங்கிவிட்டால்..அதைவைத்து..ஏதேனும் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டு வைத்து..குடும்ப உறுப்பினர்கள் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.ஆகும் கனவு.
காங்கிரஸிற்கோ..வரும் பாராளுமன்ற தேர்தலில்..யார் முதுகில் சவாரி செய்யலாம்..என தீர்மானிக்கும் தேர்தல்.
இதற்கு இவர்கள் கடந்த சிலநாளில்..செலவழித்தகோடிக்கணக்கான பணம்...அடிதடியில் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை...தேர்தல் கமிஷனிடம் கொடுக்கப்பட்ட..நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள்,காவல்துறை,ராணுவத்தினர் குவிப்பு..அரசு செலவழிக்கும் மக்கள் வரிப்பணம்..இத்தியாதி...இத்தியாதி...
ஒரு இடைத்தேர்தல் தேவையா..என்பதே கேள்வி.
பொதுத்தேர்தலின் போது..தொகுதி மக்கள் ஒரு கட்சியை சார்ந்த வேட்பாளரை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்கிறார்கள்.இடையே அந்த வேட்பாளர் மறைந்தால்...அவர் சார்ந்த கட்சிக்கே.உரிமம் கொடுத்து...அவர்கள் யாரையேனும் அவ்விடத்திற்கு தேர்ந்தெடுக்க சொல்லலாம்.இதனால் அனாவசிய செலவுகள் கூட குறையும்.பிறக்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுப்பது.லட்டுக்குள் மூக்குத்தி ஆகியவைக் களுக்கான செலவும் இல்லை.இந்த விஷயத்தில்.... ராமதாஸிற்கு என் முழு ஆதரவை தெரிவித்துக்
கொள்கிறேன்

படித்ததும்...கேட்டதும்...
1.பணத்தால் வாங்க முடியாதவை இவை
1.புத்தகத்தை வாங்கலாம்...அறிவை வாங்கமுடியாது
2.உணவை வாங்கலாம்..பசியை வாங்கமுடியாது
3.பகட்டை வாங்கலாம்...பண்பாட்டை வாங்கமுடியாது
4.படுக்கையை வாங்கலாம்..உறக்கத்தை வாங்கமுடியாது
5.கேளிக்கைகளை வாங்களாம்...மகிழ்ச்சியை வாங்கமுடியாது
6.ஆயுதங்களை வாங்கலாம்...வீரத்தை வாங்கமுடியாது
7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது
8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது
2.உலகத்திலேயே அருமையானவர்கள்
1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி
2.புகழை விரும்பாத கொடையாளி
3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்
4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்
5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.
3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்ரின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள்
1.அரசமரம்
2.அத்திமரம்
3.ஆலமரம்
ஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன

Wednesday, January 7, 2009
அப்பா........(சிறுகதை)
'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.
அப்பா....
'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.
நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.
'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி ஆயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.
'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?'
'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்
பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.
மாலை மணி மூணு இருக்கும்.
அலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'
அவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.
இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.
அதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...
எடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.
சுந்தரேசன்..சிறிது சிறிதாக நாற்பதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.

Tuesday, January 6, 2009
தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்..
இப்போது பதிவர்கள் எண்ணிக்கையும்..பதிவுகளின் எண்ணிக்கைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.ஆகவே..ஒரு பதிவர் இடும் பதிவு..சில நேரங்களில் அரை மணி நேரம் கூட..முகப்பில் இருப்பதில்லை.
அதற்கு..அந்த நேரங்களில் எதுவும் பின்னூட்டம் இல்லையெனில்..அதன் ஆயுள் அவ்வளவுதான்.என்னதான் அப்பதிவரின் அடுத்த பதிவில்..முந்தைய பதிவு குறிப்பிட்டிருந்தாலும்.
முகப்பு பக்கத்தில் கிட்டத்தட்ட 16 இடுகைகளின் விவரங்கள் வருகின்றன..ஒவ்வொரு இடுகையின் சில வரிகள் வேறு இடங்களை ஆக்கிரமித்து விடுகின்றன.
ஆகவே...
இக்குறையைப் போக்க..
தமிழ்மணம் ஒவ்வொரு இடுகையின் ஒன்று அல்லது இரண்டு வரிகளை போட்டால் போதும்.
இரு இடுகைகள் நடுவே இடைவெளியையும் குறைத்தால்..இன்னும் சில இடுகைகளையும் காட்டமுடியும்.இதனால் முகப்பில் இடுகை காணப்படும் நேரம் சற்று அதிகரிக்கும்.
தமிழ்மணம் இதைச் செய்யுமா?
பதிவர்கள் தங்களது ஆதரவை தெரிவிக்க தம்ஸ் அப்பில் ஒரு கிளிக் செய்யவும்.

கேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் சென்று பேசப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுக்குச் சென்று பேச்சு நடத்துவதை நினைத்த உடனேயே செய்ய முடியாது. கதவை உடைத்துக் கொண்டு போக முடியாது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை இன்னும் தயாராகவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்து கொள்கிறது. மெத்தனம் காட்டவில்லை. இலங்கைக்குப் பிரணாப் முகர்ஜி போக வேண்டும் என்பதை நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அது உடனடியாக சாத்தியமானதல்ல.
இலங்கைத் தமிழர்களுக்காக இந்த விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி எங்களிடம் கூறி இருக்கிறார்.
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
நன்றி -வெப் துனியா

Monday, January 5, 2009
படித்ததும் கேட்டதும்....
1.இன்னும் தகுதி அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படையில் சாதிவாரியாக தொகுதிகள் ஒதுக்கப்படும் அவலம் நடக்கிறது.அமைச்சர் பதவி முதல்..பல்கலைக்கழக துணை வேந்தர் வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது சாதி அரசியல்தான்.
2.ஒரு சமூகத்திற்கு அரசியல்தான் ஆணிவேர்..அரசியல் அசிங்கமானால் நாடே அசிங்கமாகத்தான் இருக்கும்
3.ஒருமுறை வாக்குப்பிச்சைப் போட்டுவிட்டு 5 ஆண்டுகளுக்கு வாழ்க்கைப்பிச்சை எடுப்பதை நிறுத்துவோம்.நேர்மை,உண்மை இரண்டும் சேர்ந்த அரசினால்தான் நாம் கனவு காணும் சமத்துவ நாடு உருவாகும்.
4.கார்கில் யுத்தத்தில் நாட்டைக் காக்க போராடிய ராணுவ வீரர்களுக்கு செய்யப்பட்ட சவப்பெட்டியிலும் ஊழல்.திரும்புகிற பக்கமெல்லாம் ஊழல்.பார்க்கிற பக்கமெல்லாம் லஞ்சம்.
5.teenage is the time when your children begin to question your answers
6.மனிதனின் தீயசெயல்களை மட்டுமே பார்த்து அதன் காரணமாக அவரை நாம் ஒதுக்கிவிடக்கூடாது.அந்த மனிதன் நாளடைவில் நல்லவனாக மாறக்கூடும்.ராமருக்கு தான் காட்டுக்குப்போக காரணம் கைகேயி என்று தெரிந்தும்..புறப்படும் வேலையில் அவளை நமஸ்கரித்துவிட்டு செல்லவில்லையா?யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் எனத் தெரிந்தும் ..ஏசு கிறிஸ்து கடைசி விருந்தின் போது அவன் பாதங்களை கழுவவில்லையா?தினமும் தன் மீது சகதியை எறிந்து அவமானப்படுத்திய பெண்மனிக்கு...நோய் வந்தபோது யாரும் சொல்லாமலேயே நபிகள் நாயகம் சென்று சேவை செய்யவில்லையா?
7.மனிதனைவிட மிருகங்கள் மேல்...ஏனென்றால்..அவற்றிடம்தான் ..பொறாமை,குரோதம்,சுயநலம்,அடுத்தவனைக் கெடுக்கும் ஈனத்தனம் கிடையாது.அவை கள்ளங்கபடமில்லா..குழந்தைகள் போல.

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...
1. அண்ணாசாமியின் நண்பர் ஒருவர் ஃபோன் செய்தார்..ரிசீவரை எடுத்தவரிடம்..நான் தான் பேசுகிறேன் என்றது..குரல்..
உடனே அண்ணாசாமி- என்ன ஆச்சர்யம்...இங்கேயும் நான் தான் பேசுகிறேன் என்றார்.
2.புத்தாண்டு அன்று அண்ணாசாமி..கலர் டி.வி.ஒன்று வாங்கச் சென்றார்..
அண்ணாசாமி-(கடைக்காரரிடம்)-கலர் டி.வி.இருக்கா?
கடைக்காரர்-பல மாடல்கள் இருக்கிறதே..உங்களுக்கு எது வேண்டும்
அண்ணாசாமி-பச்சைக் கலர் கொடுங்க
3.அண்ணாசாமி..தன் நண்பர்களையெல்லாம் கூப்பிட்டு..ஒரு குறிப்பிட்ட படத்துக்கு வருகிறீர்களா என்று கேட்டுக்கொண்டிருந்தார்.அவர் மனைவி..ஏன் இப்படி எல்லோரையும் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என வினவ...அதற்கு அண்ணாசாமி....இந்த படத்திற்கு..பிலோ 18 நாட் அல்லௌட் என்றார்.
4.முதல் முறையாக அண்ணசாமிக்கு போயிங்க் விமானத்தில் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.ஃப்ளைட்டிற்குள் சென்றதும் உற்சாகம் மேலிட...Boeing..Boeing..என கத்தினார்.உடன் விமானி..Be silent என்றார். அண்ணாசாமி ஓயிங்க்...ஓயிங்க் என கத்த ஆரம்பித்தார்.
5.அண்ணாசாமி ஒரு நேர்முகத் தேர்வுக்கு சென்றார்..அவரிடம்..5+4..எவ்வளவு எனக்கேட்க..9 என்றார். சரியான விடை என்ற தேர்வாளர்..அடுத்து..4ம் 5ம் எவ்வளவு என்றார். இப்படி தலைகீழாக கேட்டால்..எனக்குத் தெரியாதா..விடை 6 என்றார்.

Sunday, January 4, 2009
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...?
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கூறி..கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் 4-12-08 அன்று..பிரதமரை சந்தித்து வலியுறித்தினர்.பிரதமரும் விரைவில் ப்ரனாப் முகர்ஜியை(??!!) அங்கு அனுப்புவதாக வாக்களித்தார்.ஆனால் இதுவரை மத்திய அரசு இவ்விஷயத்தில் மெத்தனமாகவே இருந்து வருகிறது.இவ்விஷயம் கலைஞரை சற்றே உறுத்தியதால் தான்..தி.மு.க., பொதுக்குழுக் கூட்டத்தில் ..மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும்..ஒரு தமிழர் அங்கு பலியாகிறார்..என்று கண்கள் கலங்கக் கூறினார்.பிரதமரின் வாக்குறுதியையும் நினைவு படுத்தினார்.
இதையும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.
இந்நிலையில்..திருமங்கலம் இடைத்தேர்தலில்..பா.ம.க. எக்கட்சிக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்து விட்டது.இப்போது தி.மு.க.உடன் காங்கிரஸ் மட்டுமே உள்ளது.ஆகவே..நம்மை விட்டால் கலைஞருக்கு ஆள் இல்லை என காங்கிரஸ் நினைக்கிறது போலும்.காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஒப்புக்கு திருமங்கலத்தில்..தி.மு.க.வேட்பாளருக்கு ஆதரவு பிரச்சாரம் செய்கின்றனர்.
ராமதாஸ் வேறு..அவ்வப்போது..காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என பேசி வருகிறார்.விஜய்காந்த்தையும் சமீபகாலமாக காங்கிரஸ் அணுகிவருவது தெரிகிறது.திருமங்கலம்..தேர்தல் முடிவுக்குப் பின்..கூட்டணிகள்..விஷயத்தில் மாறுதல்கள் வரலாம்.
காங்கிரஸ்,தே.மு.தி.க.,பா.ம.க. ஆகிய கட்சிக் கூட்டணி உருவாக சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.அப்படி அமையுமே ஆனால்..தி.மு.க.தனித்து விடப்படும்.
காங்கிரஸ் மண் குதிரை என கலைஞர் அறிவார்...அண்ணா சொன்னதுபோல பதவி ..வெறும் துண்டு..கொள்கை என்ற வேட்டியே முக்கியம்.இலங்கைப் பிரச்னையில் ஏற்கனவே ..பதவியை தூக்கி எறிந்தவர் கலைஞர்.
ராஜதந்திரியான கலைஞர்..என்ன முடிவு எடுப்பார்...தமிழக அரசியலில் என்ன என்ன மாற்றங்கள் வரும் ..என ..இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் தெரிய வரும்..
பாராளுமன்ற தேர்தலில்..புதுக் கூட்டணிகள் உருவாகலாம்...
பொறுத்திருந்து பார்ப்போம்.
(ஒரு உபரி செய்தி... எப்போதும் கலைஞருக்கு..வாழ்த்துகள் தெரிவிப்பதில்..முதலில் நிற்கும் சோனியாவும்,மன் மோஹனும்..புத்தாண்டு வாழ்த்துக்களை 3ம் தேதிதான் தெரிவித்தனர்.அதைக்கூட..டி.ஆர்.பாலு..கலைஞரின் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவித்ததும் தான்...இதியும் நினைவில் கொள்ள வேண்டும்.)

Saturday, January 3, 2009
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)
1.பெண்கள் தலையில் பின்னல் போடுவதன் தத்துவம் என்ன தெரியுமா?
பின்னலை மூன்று கால்கள் எடுத்துப் போடுவார்கள்.பக்கங்களில் இருக்கும் இரு இழைகளும் அந்தப் பெண்ணின் பிறந்த வீட்டையும்,புகுந்த வீட்டையும் குறிக்கின்றன.நடு இழையை வைத்து மற்ற இரு இழைகளும் மாறி மாறிப் பின்னப்படுவது அந்தப் பெண் நடுனாயகமாக இருந்து,பிறந்த வீட்டையும்,புகுந்த வீட்டையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு சிறப்பைத் தேடித் தரவேண்டும் என்பதுதானாம்.
2.இட்டுக் கெட்டது காது
இடாமல் கெட்டது கண்
பார்த்துக் கெட்டது பிள்ளை
பாராமல் கெட்டது பயிர்
கேட்டுக் கெட்டது குடி
கேளாமல் கெட்டது கடன்
உண்டு கெட்டது வயிறு
உண்ணாமல் கெட்டது உறவு.
(இதன் பொருள்;- குச்சி,பின் போன்றவற்றை இட்டுக் குடைவதால் கெட்டது காது.மை.நெய் முதலியவைகளை இட்டுப் பராமரிக்காததால் கெட்டது கண்.செல்லம் கொடுத்து வளர்த்ததால் கெட்டது பிள்ளை.அக்கறையின்றி கவனிக்காமல் விட்டதால் கெட்டது நிலத்திலிட்ட பயிர்.வதந்திகள்,கோள் பேசுவதைக் கேட்டதனால் கெட்டாது குடும்பம்.கொடுத்ததை நினைவுபடுத்தாமல் கேளாமல் விட்டதால் கெட்டது கடன்.கண்டபடி உண்டதால் கெட்டது வயிறு..உறவினர் வீடுகளில் நல்லது,கெட்டதுகளில் கலந்து கொண்டு..ஒரு வேளையாவது உண்ணாமல் செல்வதால் கெட்டது அந்த உறவு)
3.பெரிசுகள் இளம் தம்பதிகளை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என ஆசிர்வதிப்பர்.அந்த பதினாறு என்ன என்ன தெரியுமா?
1.புகழ்,2.கல்வி,3.வலிமை,4.வெற்றி5.நன்மக்கள்6.பொன்7.நெல்8.நல்லூழ்9.நுகர்ச்சி10.அறிவு11.அழகு12.நோயின்மை13.வாழ்நாள்14.பெருமை15.இளமை16.துணிவு

அவரவர் பார்வையில்....(சிறுகதை)
அவள்:-
நான் தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை நந்தினி.நான் கதானாயகியாக நடிக்கும் தொடர் தினமும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பாகிறது.அதில் என் நடிப்பைப் பாராட்டி போற்றாதவர்கள் இல்லை.மாமியாரால் கொடுமைப்படுத்தப்படும் மருமகள் பாத்திரம் என்னுடையது.
எனக்கு 26 வயது.என் பெற்றோர்கள் எனக்கு வரன் பார்க்க ஆறம்பித்துவிட்டார்கள்.
ஒரு திருமணத் தரகர் மூலமாக ரவி என்பவரின் ஜாதகம் வந்திருக்கிறது.அவர் சென்னையில் ஒரு மென்பொருள் வல்லுநராக இருக்கிறார்.மாதம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சம்பளம்.
அம்மா சொன்னாள் 'நந்தினி இந்த வரன் மட்டும் உன்னை மணக்க சரி சொல்லிட்டா வாழ்க்கையில் நீ ராசாத்தி மாதிரி இருக்கலாம்.நடிப்புத்தொழிலுக்கே முழுக்கு போட்டுடலாம்' என்று.
அவரை மணந்தால் வாழ்க்கையில் சோகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கலாம்.சிரித்த முகத்துடன் வலம் வரலாம்.
இன்று அந்த தரகர் நல்ல முடிவுடன் வருவார் என எதிர்ப்பார்க்கிறேன்.
ரவியின் தாயார்:-
-----------------
என் மகன் ரவிக்கு நந்தினியின் ஜாதகம் வந்திருக்கு.பாவம் அந்த பொண்ணு.ரொம்ப கொடுமையை அனுபவிச்சுட்டா.ரவி அந்த பெண்ணை திருமணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டா, ஒரு மாமியாரா நடக்காம, என் பெண்ணா நினைச்சு நான் அன்பை செலுத்துவேன்.இன்னிக்கு அவன் சம்மதத்தை எப்படியாவது வாங்கிடணும்.
அவன்:-
----------
நான் ரவி.மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநராக இருக்கேன்.28 வயசு.என்னுடைய தாய்,தந்தைக்கு ஒரே பையன்.எனக்கு திருமணமாகி மருமகள் வீட்டிற்கு வரணும்னு அம்மா ரொம்ப தொண தொணக்க ஆரம்பிச்சுட்டார்.
திடீரென ஒருநாள் இரவு 9 மணிக்கு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டிருந்த என்னைக்கூப்பிட்டு, தொலைக்காட்சி பெட்டி முன்னால் அமர வைத்துவிட்டு 'இந்த தொடரை கொஞ்சம் பாரேன்'என்றாள்.
நானும் பார்த்தேன்.
பாவம்..அந்த நந்தினிப் பெண்..மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறாள்.அவள் முகத்தில் ஒரு அழிக்க முடியா சோகம் குடிகொண்டிருந்தது.
அம்மா கேட்டாள் 'டேய் ரவி அந்த நந்தினியோட ஜாதகம் வந்திருக்கு..பாவம்..பார்த்தா..நல்ல பெண்ணா தெரிகிறாள்.உனக்குப் பேசி முடித்து விடலாமா?'
'வேண்டாம் அம்மா..எனக்கு வரப்போகிறவள் மகிழ்ச்சியா சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும்.இந்தப்பெண் அந்த பாத்திரமாகவே மாறி விட்டதால்..அவளை அறியாமல் ஒரு துயரம் அவள் முகத்தில் குடியேறிவிட்டது.அதை மாற்ற முடியும்னு நான் நினைக்கவில்லை.மேலும் வீட்டிற்குள் நுழையும் போதே மாமியார் என்கிறவள் ஒரு கொடுமைக்காரி என்ற எண்ணத்திலேயே வருவாள்.அதனால் இந்த பெண் எனக்கு வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.

Thursday, January 1, 2009
கலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்
ஒருவர் கவிஞராக இருப்பார்..அல்லது
எழுத்தாளராக இருப்பார்..அல்லது
திரைப்பட வசனகர்த்தாவாக இருப்பார்..அல்லது
இலக்கியவாதியாக இருப்பார்..அல்லது
திரைப்பட பாடலாசிரியராக இருப்பார்..அல்லது
அரசியல்வாதியாக இருப்பார்.....ஆனால்
தமிழன்னை..தன் செல்லப்புதல்வன் கலைஞருக்கு...எல்லாவற்றையும்...வாரி..வாரி...வழங்கி இருக்கிறாள்.
ஆம்...அந்த தமிழன்னையின் செல்லப்பிள்ளை தான்...நம் கலைஞர்.
இப்பதிவு...திரைப்பட பாடலாசிரியராக கலைஞர்.
பல திரைப்படங்களுக்கு..திரைக்கதை,வசனம் எழுதியவர் அவர் என்பதை நாம் அறிவோம்.ஆனால்..பலருக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு திரைப்பட பாடலாசிரியர் என்பது தெரியாது.
1950ல் வந்த மந்திரிகுமாரி படத்தில் இடம் பெற்ற கலைஞர் பாடல்..
அருமைக் கன்னுக்குட்டி - என்
எருமைக் கன்னுக்குட்டி...
ஊருக்கு உழைப்பவன்டி..ஒரு
குற்றம் அறியான்டி
உதைப்பட்டு சாவான்டி....
என்று வரும் வரிகள்...
அடுத்து....அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா படத்தில் கலைஞரின் பாடல்...
பொதுநலம்..என்றும் பொதுநலம்
புகழ் உடலைக் காக்கும்..மிகப் புனிதமான செயல்
பொதுநலம்.....
என்ற பாடல்..(இப்பாடல் பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்)
பூம்புகார்..படத்தில் வரும் அவர் பாடல்..சுந்தராம்பாள் பாடுவார்..
'வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடனின் மனதினில்
மறக்க வொண்ணா வேதம்....- என்ற பாடல்.
மறக்கமுடியுமா...என்ற படத்தில்..அவர் எழுதிய ஒரு அருமையான பாடல்....
காகித ஓடம் கடலலை மேலே
போவதுபோல ...மூவரும் போவோம்...- மறக்கமுடியா பாடல்.
எல்லாவற்றையும் விட நம்மால் மறக்கமுடியாதது...பராசக்தியில்...
பூமாலை..நீயே
புழுதி மண்மேலே-வீணே
வந்தேன்..தவழ்ந்தாய்....என்ற பாடல்.
தவிர...பூமாலை படத்தில்..'கன்னம்..கன்னம்..சந்தனக்கிண்ணம்' என்ற பாடல்..
ராஜா ராணியில்'பூனைக்கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா..மியாவ்..மியாவ்...' பாடல்.
எனக்கு நினைவில் தற்போது வந்த பாடல்கள் இவை.
கடல் நீரை..குடத்திற்குள் அடக்கி விட முடியுமா?

அண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து
எனக்கு வந்திருந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளில் அதி புத்திசாலி அண்ணாசாமியின் வாழ்த்து வித்தியாசமாக இருந்தது.
Happy New Year 2009 என்றும்
அடுத்த வரியில்
இனிய தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் என்றும் கூறி இருந்தார்.அவரை அலை பேசியில் அழைத்து நன்றி தெரிவித்து விட்டு 'ஏன் இப்படி அனுப்பினீர்கள்?'எனக் கேட்டேன்.
சாதாரணமாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துடன்,பொங்கல் வாழ்த்தும் இணைந்து அனுப்புவேன்.இந்த ஆண்டு முதல் தமிழ் புத்தாண்டும்..பொங்கல் அன்று ஆனதால்..மூன்றிற்கும் சேர்த்து இவ்வாழ்த்து.இல்லாவிட்டால்..நாளடைவில்..பொங்கலுக்கு வாழ்த்து சொல்வது..விவசாயிகளை நாம் மறந்தது போல...மறந்து விடுவோம் என்றார்.
பதிவர்கள் அனைவருக்கும்..ஆங்கில,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மறந்து விட்டேனே..
முன்னதாகவே...தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
'பொங்கும் மங்கலம்....எங்கும் தங்குக'

Tuesday, December 23, 2008
கிட்டத்தட்ட 500 பேருக்கு ஒரு வாரம் விடுதலை...
ஒருவார காலத்திற்கு கிட்டத்தட்ட 500 பேர் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.
திருமங்கலம் இடைத்தேர்தலுக்கும் இவ்விடுதலைக்கும் சம்பந்தம் இல்லை.
இவ்விடுதலையை எதிர்த்து யாரும் உயர் நீதி மன்றத்திற்கோ..உச்ச நீதி மன்றத்திற்கோ..செல்ல மாட்டார்கள் என நம்புகிறேன்.
ஆம்...
சில முக்கிய காரணங்களால்..என்னால் அடுத்த ஒரு வாரத்திற்கு புதிய பதிவுகள் போட இயலாது
அதனால்..என் வலைப்பக்கம் தினமும் வருகை தரும்..கிட்டத்தட்ட 500 பேருக்கு..இவ்வாரம் விடுதலை அளிக்கிறேன்.
மீண்டும் அடுத்த புதன்..அவர்கள் என் வலையில் அடைக்கப்படுவார்கள்.

வேட்பாளர் முன்தொகை அ.தி.மு.க.வில் பெட்டி நிறைகிறது
வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் பொட்டியிட விரும்புவோர் 10000 முன்தொகையுடன் விண்ணப்பிக்கும்படி ஜெ..ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இதுவரை 600க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது.அதாவது இதுவரை ஆன கலெக் ஷன் 60 லட்சத்திற்கும் மேல்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்..தங்களுக்கு சீட் வேண்டும் என விண்ணப்பித்தவர்கள் 100க்கும் குறைவு.அப்போது மீதி எல்லாம்....
ஜெ போட்டி இட வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தவர்கள் தான் மற்றவர்கள்.
ஜெ தில்லிக்கு அனுப்பிவிட்டால்...நாம் முதல்வர் ஆகிவிடலாம் என மற்றவர்கள் கனவு காண்கிறார்களோ??!!

Monday, December 22, 2008
சூடான..இடுகையும்...மூத்த பதிவர் நால்வரும்..
சமீபத்திய மூத்த பதிவரின் பதிவு ஒன்றில்...நால்வருடைய பதிவுகள்..சூடான இடுகையில் வருவது மட்டுறுத்தப் பட்டுள்ளதாக சொல்லி இருந்தார்.அவர்கள்..லக்கிலுக்,டோண்டு,கோவி.கண்ணன்,செந்தழல் ரவி என்றும் மற்றவர்களின் பதிவு மூலம் தெரிகிறது.
இவர்களில் கோவி..சொறி நாய் பற்றி ஒரு பதிவு எழுதி 'இது சூடான இடுகையில் வரும்" என்று கூறியதுடன் நில்லாது..சூடான இடுகையில்..கீழிருந்து..மேல் நோக்கி செல்வதை..இரண்டு,மூன்று ஸ்கிரீன் புகைப்படத்தை பதில் இட்டு காண்பித்தார்.
இவரின் இந்த பதிவு...சுஜாதா, ஒரு முறை..எனது லாண்டெரி கணக்கை எழுதினால் கூட..இன்று படிக்க ஆட்கள் இருக்கிறார்கள் எனக் கூறியதை ஞாபகப்படுத்தியது.
அடுத்து..சிங்கையில் தெரு நாய் என்ற ரவியின் பதிவும் சூடான இடுகையில் வந்தது.
டோண்டு, தன் பங்கிற்கு..பெயரிலிடன் ஆன ஒரு சர்ச்சையே ..தன் இடுகை சூடாவதில்லை என்பதாகக் கூறி இருந்தார்.
இவை எல்லாம் தான் உண்மையான காரணங்களா எனத்தெரியாது.
ஒரு வேளை..மூத்த பதிவர்களான இவர்கள் எது எழுதினாலும், படிக்க வருவோர் எண்ணிக்கை..அதிகமாய் இருப்பதால்,(டோண்டு சில சமயங்களில் தன் பதிவை பார்வையிடுவோர் சில வேளைகளில் 1000 தாண்டியிருக்கிறது என கூறியுள்ளார்) புது பதிவர்களுக்கு வருகை குறைவாய் இருப்பதால்..புதியவர்கள் சூடான இடுகையில் இடம் பிடிக்க முடியவில்லை என்று தமிழ்மணம் இப்படிப்பட்ட முடிவு எடுத்திருக்குமேயாயின்....
தமிழ்மணத்திற்கு ஒரு யோசனை...
சூடான இடுகையை இரு பாகங்களாக ஆக்குங்கள்.ஒரு பாகம் முற்றிலும்..மூத்த பதிவர்களுக்கு..(மூத்த பதிவர்களுக்கான அளவுகோல் ஒன்று இருக்கட்டும்)
இரண்டாம் பாகம் மற்றவர்களுக்கு...
இந்த முடிவை அனைவரும் வரவேற்பர் என எண்ணுகிறேன்.

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்
இந்த ஆண்டு முதல்..பொங்கல் திருநாளை..தமிழ் புத்தாண்டு தினமாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சாதாரண குடிமகனின் கவலை அதிகமானது.
அவன் கவலை..
ஏப்ரல் 14ம் நாள்..வழக்கம்போல தமிழ் புத்தாண்டு விடுமுறை என்ன ஆகும் என்பதே.,
அரசும்...இந்தநாளை விடுமுறையாக அறிவிக்கா விட்டால்..ஒரு சாரார், அதை ஒரு பிரச்னை ஆக்கிவிடுவார்களே ..என்ன செய்வது என எண்ணும் போது...
ஆபத்பாந்தவனாக..அம்பேத்கர் இருக்கிறார்.
ஏப்ரல் 14 ..அம்பேத்கார் பிறந்த நாள் ..விடுமுறை நாள்.
சாமான்யனின் கவலை தீர்ந்தது,
***** ***** ***** **** ****
சூரியனை மறைத்த கருமேகம் விலகியதால்...இப்போது சூரிய ஒளி பிரகாசமாய் உள்ளது.
திருமங்கலம் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில்..அழகிரியையும்..அவர் பேச்சையும்..சன் செய்தியில் காட்டினார்கள்.
அதற்கு கொடுக்கப்பட்ட விலை..3 தினகரன் ஊழியர் உயிர்.
***** ***** ****
தூசு தட்டி..வாங்கப்பட்ட..ஒலி/ஒளி பரப்பப்பட்ட விஜய்காந்த் படங்களை சன் என்ன செய்யும்?
அண்ணாசாமிக்கு..இந்த விஷயத்தில் சந்தேகம் நீடிக்கிறதாம்.
**** ****** ***** *****
சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..
சரத்குமார் கட்சியில் ராதிகாவின் பங்கு இருக்காது என முன்னர் சொல்லப்பட்டது..
ஆனால்..சமீபத்தில் அக்கட்சியின் துணைத்தலைவராக ராதிகா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Sunday, December 21, 2008
அனைவருக்கும் நன்றி...
டிசம்பர் 15 முதல் 21 வரை நட்சத்திர பதிவராக 21 பதிவுகள் இட்டுள்ளேன்.,
கூடிய வரை..சில தகவல்களையும் கொடுத்துள்ளதாக நினைக்கிறேன்.
இந்த ஏழு நாட்களும்..கூடிய வரை அரசியல் கலக்காத பதிவுகளே..இட்டு வந்தேன்..
இந்த வாரம் என் வலைப்பக்கம் வந்து இடுகைகளை பார்வையிட்டவர்கள்,படித்தவர்கள்,படித்தபின் பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி.என் வலைப்பக்கம் வராதவர்கள்,நேரம் கிடைக்கும் போது..வந்து படித்து..அவர்கள் கருத்தை தெரிவிக்க வேண்டிகிறேன்.
எனக்கு..இந்த சந்தர்ப்பத்தை அளித்த தமிழ்மணத்திற்கு நன்றி.

Saturday, December 20, 2008
தமிழர் தலைவர் அண்ணா....
பல குடித்தனங்கள் நிறைந்த வீட்டில் படிப்பதற்கேற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் அண்ணா படித்தார்.கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து..வறுமை காரணமாக படிப்பை நிறுத்த முடிவு செய்தார்.
அப்போது... பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அண்ணாவை அழைத்து..'முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நீ படிப்பை தொடர வேண்டும்' என்று கூறி..அவரை பி.ஏ.,(Hons) சேரச் சொன்னார்.அந்த மூன்றாண்டுக்கான முழு புத்தகச் செலவையும் அவரே ஏற்றார்.
படிக்கும் போதே ராணி அம்மையாரை, சம்பிரதாயப்படி மணந்தார்.பின்னரே சுமமரியாதை இயக்கத் தளபதி ஆனார் எனலாம்.
படிப்பு முடிந்ததும், காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தர் வேலை.பின் ஆசிரியர் வேலை..என சில காலம் இருந்தார்.
எப்படியேனும்..அண்ணாவை தன்னிடம் சேர்த்துக் கொள்ள நினைத்த பெரியார்..'விடுதலை'யில் பணியாற்றக் கூப்பிட்டார்.விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.அவை பல இளைஞர்களை அவரிடம் வசீகரித்தன.
சந்திரமோகன்,நீதிதேவன் மயக்கம்,சந்திரோதயம்,ஓர் இரவு,காதல் ஜோதி,வேலைக்காரி போன்ற பல நாடகங்களை எழுதி நடித்தார்.
இடையில் எம்.ஏ.,படித்தார்.ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் மேக்கப் போட்டு நடிப்பதைக் கண்டதும்தான்..கலைஞர்கள் பற்றி..மக்களிடையே ஏற்பட்டிருந்த எண்ணங்கள் மாறின எனலாம்.
1949 ஜூன்...முக்கிய மாதம்..பெரியார் மணியம்மையை மணக்க..அண்ணா போன்றோர்..வெளியே வந்து..புதிய கழகம் ஆரம்பிப்பது என தீர்மானித்தனர்.
17-9-49 அன்று திராவிட முன்னேற்ற கழகம் விதைக்கப்பட்டது.
நாம் திராவிட கழகத்துடன் மோதுவதோ..சாடுவதோ கூடாது.இரண்டு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அண்ணா.
அண்ணாவின்..அரசியல் முக்கியத்துவம்..அவரது எழுத்துலகத்தை முடக்கி விட்டது எனலாம்.அவரது பேச்சும்...எழுத்தும் தான் தமிழ் நெஞ்சங்களில் அவருக்கு நீங்கா இடத்தை அமைத்துக் கொடுத்தது.
அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்த கல்கி அவரை 'தமிழ் நாடக உலகின் பெர்னாட்ஷா' என்றார்.
எதையும்..தாங்கும் இதயம்..
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!
ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்.

அரக்கியிடம் மாட்டிக் கொண்ட பொதுஜனம்
மிஸ்டர் பொதுஜனம்...தீவிரமாக அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தார்..அப்போது அவர் அலைபேசி சிணுங்கியது.அழைக்கும் எண்ணைப் பார்த்தார்..புதியதாக இருந்தது...அவர் தன் அலைபேசி எண்ணை முக்கியமான சிலரைத் தவிர வேறு யாருக்கும் தருவதில்லை..ஆனால் இது யாராய் இருக்கும்? 'ஹலோ'என்றார்..அவர் மூதாதையர் பெயருடன் அவர் பெயரையும் இணைத்து சொல்லி..சார் நாங்க..**** பாங்கிலிருந்து பேசறோம்...உங்களுக்கு கிரெடிட் கார்ட் வேணுமா?வாங்கிற பொருளுக்கு வட்டி இல்லாமல் 30 நாட்களில் கட்டலாம்..அவசர தேவைன்னா 3 வட்டிக்கு கேஷ் கிடைக்கும்...என தூண்டில் போட்டது ஒரு சர்க்கரைக் குரல்.
எலிப்பொறியில்..மசால்வடைக்கு ஆசைப்பட்ட எலியானார் அவர்.
ஒரு சுபயோக சுப தினத்தில்..கிரெடிட் கார்ட் உரிமையாளர்கள் லிஸ்டில் சேர்ந்தார்.
பின் சில பொருள்களை..கார்டை தேய்த்து.. தேய்த்து வாங்கினார்.அந்த மாத ஸ்டேட்மென்ட் வந்தபோது தான் தெரிந்தது.பில்லிங் தேதி 15..அவர் பொருள் வாங்கியது 13ம் தேதி..அவருக்கு 2 நாட்கள் தான் வட்டியில்லா சலுகை.மேலும் கடனில் வாங்கிய பொருளுக்கான முழுத்தொகையும் சலுகைக் காலத்தில் கட்டினால் தான் வட்டி கிடையாது.அதில் கொஞ்ச பாக்கி இருந்தாலும்,அல்லது...முந்தைய மாதம் எதேனும் பாக்கி இருந்தாலோ சலுகை கிடையாது.
இப்படியாக..பொதுஜனம்..தேவை..தேவை இல்லாதவை என பொருள்களை வாங்கிவிட்டு...கார்டின் தவணைத்தொகையில் சிறு பகுதியை மாதா மாதம் கட்டி வந்தார்.லிமிட் தாண்டியது அந்த கார்டுக்கு.தவணைப் பணம் கட்ட முடியவில்லை.அவர்கள் போடும் வட்டியும் 40 சதவிகிதம் மேல்.
வேறு ஒரு பாங்கின்..நுனி நாக்கு ஆங்கில குரல் கேட்டு அந்த பாங்க் கார்டு வாங்கினார்..இப்படியாக ஒரு கடன் அடைக்க ஒரு கடன் என 4 கிரெடிட் கார்ட் அவரிடம்..கடனில் தத்தளிக்கிறார்.
மூழ்காமல் வெளியே வர வழி தெரியவில்லை.வங்கிகளோ அவரிடமிருந்து கடன் வசூலிக்க குண்டர்களை அனுப்ப ஆரம்பித்து விட்டனர்.
ஒழுங்காக தான் உண்டு..தன் வேலை உண்டு என இருந்தவரை..தூண்டில் போட்டு இழுக்கும்..வங்கி தொலைபேசி அழைப்புகள் சிக்கலில் மாட்டிவிட்டன..
முதல் அழைப்பு வரும் போதே நிராகரித்து விடுங்கள்...மேலும்..மேலும்..தொந்தரவு கொடுத்தால்..ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் bankingombudsman அமைப்பில் புகார் செய்யுங்கள்.
கிரெடிட் கார்ட் ..முதலில் அழகான பெண் போலத்தான்..தெரியும்...மாட்டிக்கொண்டுவிட்டால்தான்..அரக்கி எனத் தெரியும்

Friday, December 19, 2008
படித்ததும்...கேட்டதும்... (20-12-08)
1.நான் பட்டினி கிடந்தேன்..நான் நோயாளியாக இருந்தேன்..அந்த சமயத்தில்தான் என்னை நீங்கள் அழைத்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கூறும் ஒவ்வொருத்தரின் தேவைகளையும்
பூர்த்தி செய்து,அவர்களுடைய பசியை ஆற்றுவதிலேயே..நான் கடவுளுக்கு சேவை செய்வதாக உணர்கிறேன். - அன்னை தெரசா
2.குழந்தைகள் நாம் சொல்லிக் கற்பது குறைவு,,நாம் செய்வதைப் பார்த்துக் கற்பதுதான் மிகுதி..அதனால் நாம் நல்லவனாக நடந்து வழி காட்ட வேண்டும்.
3.ஜேசுதாஸின் வாழ்நாள் கனவு சமீபத்தில் நிறைவேறி உள்ளது,கிறிஸ்துவராக இருந்தாலும்..குருவாயூரப்பனின் தீவிர பக்தனான அவருக்கு சமீபத்தில்தான் கோயிலுக்குள் செல்ல முறையான அனுமதி அளித்திருக்கிறதாம் ஆலய நிர்வாகம்.
4.இந்தியாவில் அமுல்படுத்தப்பட்ட பசுமை புரட்சிதான் இதுவரை மனிதனால் மேற்கொள்ளப்பட்ட சீரழிவுகளில் மிக மோசமானது.அந்த திட்டம் உடனடியாகப் பலனளிப்பது போல ஒரு தோற்றத்தை உண்டாக்கியிருந்தது.ஆனால் சமீபத்தில் பஞ்சாபில் அதன் மோசமான தொடர் விளைவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.வருடம் முழுதும் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடப் பழகி விளை நிலங்களை பாழ் படுத்தி விட்டது இந்தியா...இப்படி வருத்தப்பட்டு இருப்பவர்,,இங்கிலாந்து இளவரசரும்..இயற்கை ஆர்வலருமான சார்லஸ்.
5.சுதந்திரம் கிடைத்த ஆறு மாதங்களில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.அடிமை இந்தியாவில் அவரை எதிரியாக நினைத்த பிரிட்டிஷார் கூட மதித்துப் பாதுகாத்த அவரை,சுதந்திர இந்தியாவில் நம்மால் பாதுகாக்க இயலவில்லை.
6.இந்திய ஒருமைப்பாடு என்பது ரவா லாடு போல.குஞ்சாலாடு போல..அல்லது மராத்திக்காரன் சொல்லும் பேசின் லாடு போல..பார்க்க உருண்டையாக,அழகாக..இளம் மஞ்சள் நிறமாக,முந்திரிப்பருப்பு,கிஸ்மிஸ் பதித்ததாக கவர்ச்சியாக இருக்கிறது.இது இனிப்பானது என்பதும் நமக்குத் தெரியும்..ஆனால், அழுந்த விரல்களால் தொட்டால் உதிர்ந்துப் போகும் பொல பொலவென்று மாவாக - தீதும்..நன்றும் (நாஞ்சில் நாடன்)

கல்லூரி மாணவர் சங்கங்களில் அரசியல்...
அரசியல்...
இதில் ஈடுபட 18 வயது நிரம்பிய அனைவருக்கும் உரிமை உண்டு.
அதனால் தானோ என்னவோ ..இப்போழுதெல்லாம்..கல்லூரி மாணவர் யூனியன்,இலக்கிய மன்றம் ஆகியவற்றின் நிவாகக்குழு மாணவர்கள்..அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
இப்படிப்பட்ட பழக்கம்..எப்போது ஏற்பட்டது..
திராவிட கட்சியினர் பேச்சில்..அப்போதைய என்னைப் போன்றோர் மயங்கியதுண்டு.அண்ணாவின் பேச்சும்,நெடுஞ்செழியன் பேச்சும்..பின்னர் கலைஞர் பேச்சும்..எங்களை கட்டிப் போட்டிருக்கின்றன.அவர்கள் பேச்சைக் கேட்டு அதே போல வீட்டில் வந்து பேசிப்பார்த்ததுண்டு.
ஆகவே..இலக்கிய மன்றங்களில் அவர்கள் பேச அழைக்கப்பட்டனர்.காளிமுத்து அவர்கள் கல்லூரியில் படிக்கும் போது அண்ணாவின் பேச்சைக் கேட்டு,மயங்கி தான் தி.மு.க.வில் சேர்ந்தார்.
மாணவர்களிடையே கட்சி புகுந்தது இப்படித்தான்.தி.மு.க.வளர்வதைப் பார்த்து..மற்ற கட்சிகள் விழித்துக்கொண்டு..தங்கள் கிளைகளை திறப்பது போல கல்லூரிகளில் அந்த அந்த கட்சி அணிகள் தோன்ற ஆரம்பித்தன.மாணவர் இடையே..பிளவும்,வன்முறையும்,அராஜகமும் மெல்ல..மெல்ல பரவ ஆரம்பித்தது..கட்சி வேர்கள் ஆழமாக கல்லுரிகளில் ஊடுருவல் ஆயிற்று.
இது தவறு என்று சொல்ல முடியாது..இன்னும் சொல்லப்போனால்..ஆரோக்யமானவை..ஆனால் எதுவரை..
ஒவ்வொரு பிரிவிற்கும்..தேர்தல் முடியும் வரை கட்சி பாகுபாடு..அவர்களிடையே இருக்கலாம்..அதற்குப் பிறகு அவர்கள்..மாணவ சமுதாயத்தினர்..வருங்காலத் தூண்கள்..என்ற எண்ணம் வர வேண்டும்...
இல்லையெனில்...சட்டக்கல்லூரி நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள்...கட்சி,ஜாதி என வேறு..வேறு பெயர்களில் கல்லூரிகளுக்குள் இருந்தே தீரும்.

ரஜினியின் பேச்சுக்கு மறுப்பு..
சில நாட்களுக்கு முன்..தன் ரசிகர்களிடையே ரஜினி 'கடமையைச் செய்,,பலனை எதிர்ப்பார்' என சொல்லப்போக..ஒரு சாரார்..அவர் கீதையை இழித்து உரைப்பதாய் ஆர்ப்பாட்டம் செய்ததை நாம் அறிவோம்.
அனால் ரஜினி சொன்னார் போல பலனை எதிர்ப்பார்த்து கடமையைச் செய்தால்..பல நேரங்களில் பலன் ஏதும் கிட்டாமல் போக நேரிடலாம்.
ஒரு உதவியை யாருக்கேனும் செய்தால்..அதற்கான பிரதிபலன் என்ன வென்று எதிர்ப்பார்க்கக்கூடாது.இதையே திருவள்ளுவர் எவ்வாறு சொல்கிறார் என்றால்..
கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு
என்கிறார்.
உதவி செய்வோரிடமிருந்து பலனை எதிப்பார்க்காதீர்கள்..நமக்கு உயிர் வாழ உதவி செய்யும் மழை நம்மிடம் இருந்து என்ன பிரதிபலனை எதிப்பார்த்து பெய்கிறது.(சூரியனைக் கூட பொங்கல் அன்று வணங்கும் நாம்..மழையை என்றாவது துதிக்கிறோமா? )
ஒரு தந்தை மகனை படிக்க வைத்து..கற்றோர் நிறைந்த சபையில் முதன்மையானவனாய் ஆக்க வேண்டியது, அவர் கடமை.ஆனால் அதற்கு பிரதிபலனாக பிற்காலத்தில் அவன் சம்பாதித்து கொடுப்பான் என்ற எதிப்பார்ப்பு கூடாது.
ஆனால் அவரது மகன் அவருக்கு செய்யும் உதவி...மீண்டும் சொல்கிறேன்..கடமை அல்ல...உதவி..இவ்வளவு அறிஞனான இவனை பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என உலகு சொல்ல வேண்டும்.
இக் கருத்தும் வள்ளுவனுடையதே..
ஆகவே..எந்த ஒரு செயலுக்கும் பிரதிபலனை எதிப்பார்க்காதீர்..கடமையை செய்யுங்கள்..எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தை தரக்கூடியது.

Thursday, December 18, 2008
நீண்ட நாட்கள் வாழ....
இன்று மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது.ஆண்களின் சராசரி வயது 64 ஆகவும்..பெண்களின் சராசரி வயது 65 ஆகவும் உள்ளது.
சிலர் சைவ சாப்பாடு சாப்பிட்டால்..நீண்ட நாட்கள் இருக்கலாம் என எண்ணுகின்றனர்.
நீண்ட நாள் வாழ சைவ,அசைவ சாப்பாடுகள் காரணமில்லை.
சுத்த சைவமான ராஜாஜியும் 94 வயது வாழ்ந்தார்...கடைசி வரை பிரியாணியை விரும்பி உண்ட தந்தை பெரியாரும் 94 ஆண்டுகள் இருந்தார்.
நீண்ட நாட்கள் வாழ குடும்ப ஜீன்ஸ் ஒரு காரணம் என்றாலும்...கட்டுப்பாடான வாழ்க்கையும் அவசியம்.
அளவான சாப்பாடு
உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)
உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.
சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.
மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.
மனம் களங்கம் இல்லை என்றாலே...மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.
நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்கிறோமா?துன்பமாய் இருக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.
இயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.
எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.பாரதி இன்பமாய் நினைத்தவை...எதை எதைத் தெரியுமா?
தண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.
தீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்தாலே இன்பம் (தீபம்)
மண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.
காற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.
ஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்
நட்சத்திரக் கூட்டம் இன்பம்.
தவிர..உயிர்களிடத்தில் பழகுதல் இன்பம்.
மனிதர் உறவு இன்பம்
அன்பு இன்பம்
உண்ணுதல் இன்பம்
உழைத்தல் இன்பம்
உறங்கல் இன்பம்
கூடுதல் இன்பம்
கற்றல் இன்பம்
கேட்டல் இன்பம்
பாடுதல் இன்பம்
பார்த்தல் இன்பம்
எழுதுதல் இன்பம்
இப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்
ஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது...இன்பமாய் வாழ்வோம்.
இறந்த பின் சொர்க்கம் போக வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டு...வாழும் போது..வாழ்வை..நரகமாய் ஆக்கிக் கொள்ளாது சொர்க்கமாய் ஆக்கிக் கொள்வோம்

மாறன் பிரதர்ஸ் பற்றி அதி புத்திசாலி அண்ணாசாமி...
ஐங்கரன் இன்டர்னேஷனல் லண்டனை தலைமையகமாகக் கொண்டது.இந்தியாவில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் கிட்டத்தட்ட DVD உரிமை இவர்களே..அப்படிப்பட்ட நிறுவனம்,மற்றோரு அதே தொழிலில் உள்ள நிறுவனத்தோடு சேர்ந்து ரஜினி நடித்து ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தை 150 கோடி பட்ஜெட்டில் எடுப்பதாக அறிவித்து..அதற்கான படபிடிப்பும் நடந்து வரும் நிலையில், திடீரென..பட்ஜட்டை குறைக்க சொல்லினர்.
ஷங்கருக்கு..தயாரிப்பாளர் வேறாக இருந்தால்..பட்ஜெட்டை அதிகரிப்பதுதான் வழக்கம்.ஆகவே..அவர் அதற்கு மறுக்கவே..சன் டீவி நெட் ஒர்க்..அப்படம் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றது.இதெல்லாம் தெரிந்த விஷயங்கள்.இனி...
குசேலர் தோல்வி படம்..ஆனால்..திராபை படமான காதலில் விழுந்தேன்..சன் டீ.வி.விளம்பரத்தால் கணிசமான லாபத்தை அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்தது.சன் டீவி சரியானபடி விளம்பரப் படுத்தியிருந்தால் குசேலனும் வெற்றிப்பெற்றிருக்கும் என ரஜினியும் உணர்ந்திருப்பார்.
சரி விஷயத்திற்கு வருவோம்..
ஸ்டாலின் மகன் விஜய் நடிக்க குருவி எடுத்தார்
அழகிரி மகன் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் வெளியிடும் உரிமை பெற்றார்.
இவர்களைவிட நாங்கள் சூப்பர் என்று உணர்த்தவே மாறன் பிரதர்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் படம் எடுக்கிறார்களோ...
தமிழகத்தில்..புயல்..மழை இப்போதுதான் ஓய்ந்தது.
மீண்டும் புயல்,மழை இருக்குமா என..சன் டீவியில் சென்னை வானிலை இயக்குநர் ரமணன் என்ன சொல்கிறார் பார்ப்போம்!!!!
இது எல்லாம் தெரியும் வரை அதிபுத்திசாலி அண்ணாசாமிக்கு கண்கள் பனிக்காதாம்..இதயம் இனிக்காதாம்.

கலைவாணர்..சில செய்திகள்..
முகலாய மன்னர் பாபர்..தன் மகன் ஹுமாயூன் உடல் நலம் குன்றி கிடந்த போது..என் உயிரை எடுத்துக் கொண்டு அவன் உயிரைத் தா என வேண்டியதாக படித்ததுண்டு.
ஆனால்...அதுபோல..அறிஞர் அண்ணா அவர்கள்'விஞ்ஞானம்..அனுமதித்தால்..என் உயிரை எடுத்துக் கொண்டு..இவர் உயிர் பிழைக்க என் உயிரைக் கொடுக்கத் தயார்' என்றாராம்.அவர் உயிர்ப்பிக்க விரும்பியது கலைவாணர் என்.எஸ்.கே.,அவர்களை.
தன்னிடம் இல்லை என வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத வள்ளல் என்.எஸ்.கே.,ஏதேனும் சமூக சேவை அமைப்புகள் நன்கொடை கேட்டு வந்தால்..தயங்காமல் பல லட்சம் ரூபாய்கள் உதவி செய்வார்.லட்சம் என்பது..அந்த நாட்களில் பெரிய அளவு பணம்.
அப்போதெல்லாம்..படம் ஓடாது என தயாரிப்பாளர்கள் நினைத்தால்..கலைவாணரை வைத்து,தனி டிராக் எடுத்து படத்தில் சேர்த்து விட்டால்...படம் வெற்றிதான்.
எந்த அரசியல் கட்சியிலும் அவர் அங்கத்தினராய் இருந்ததில்லை.ஆனால்..திராவிட இயக்கம் மீது மா பெரும் பற்று.ஒருசமயம்.சென்னை வானொலியில்..சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி..பாட
இவரைக் கூப்பிட்ட போது..அப்பாட்டில்..பெரியார் பெயர் இல்லை எனக்கூறி.அதைச் சேர்த்தபின்னரே பாடினார்.
மணமகள் என்று கலைவாணர் தயாரித்த படத்திற்கு கலைஞர் வசனம்.சம்பளம் பற்றி பேசிய கலைவாணர்..ஒரு காகிதத்தில் 0000 போட்டு, இந்த சம்பளம் போதுமா என்றாராம்.கலைவாணர் ஏதோ குறும்பு செய்கிறார் என அறிந்துக் கொண்ட கலைஞர் போதும் என்றார்.உடன் கலைவாணர் 0000 பக்கத்தில்1 என்று எழுதி00001 இதுதான் சம்பளம் என்றார்.அந்த காகிதத்தை வாங்கிக் கொண்ட கலைஞர்..அதை தலைகீழாகக் காட்டி..இது போதும் என்றார் (10000)..கலைவாணரின் குறும்பை..கலைஞர் சரிவர புரிந்துக் கொண்டதால்..அங்கு ஒரே சிரிப்பலை.
சுயமரியாதைக் கட்சியை ஆதரித்த கலைவாணர்..நடுனிலையாகவும் இருந்தார்.எல்லாக் கட்சிகளின் கூட்டங்கள்,மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துக் கொள்வார்.ஆனாலும் அவருக்கென தனிப்பட்ட கொள்கைகள் இருந்தன.
நான் இப்போ பணக்காரன்...ஆனால்..பிறக்கும் போது ஏழை..அதுபோல இறக்கும் போதும் ஏழையாகத்தான் இறப்பேன் என்ற கலைவாணர்..இறுதி நாட்களில் வறுமையில் வாடினார்.மஞ்சள்காமாலை நோய் தாக்கி..அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தவரிடம்...சிகிச்சைக்கான பணம் இல்லை.அவரைப் பார்க்க வந்த எம்.ஜி.ஆர்.,பணக்கட்டுகளை அவர் தலையணைக்கீழ் வைத்தாராம்.உடனே கலைவாணர்..'ராமசந்திரா..இப்படி ஒருவனுக்கே அதிக பணம் கொடுக்கக்கூடாது..கொடுப்பதை பிரித்துக் கொடுத்தால்...இன்னும் சிலருக்கும் உதவலாமே என்றாராம்.
தனக்குத் தேவை இருந்த போதும்...அவரின் மனப்போக்கை பாருங்கள்.
1957 ல் தாராமங்கலத்தில்..அண்ணாத்துரையின் படத் திறப்பு விழாவில் கலைவாணர் கலந்த்க் கொண்டது..அவர் கலந்துக் கொண்ட கடைசி நிகழ்ச்சி.
அதுபோல 1969ல் சென்னையில் கலைவாணர் சிலை திறப்பு விழாவே அண்ணா கலந்துக் கொண்ட கடைசி நிகழ்ச்சி.

Wednesday, December 17, 2008
அரசியல்வாதி வீட்டில் நுழைந்த பாம்பு...(நகைச்சுவை)
நம்ம அரசியல்வாதிகள் வீட்டுக்குள்ள ஒரு பாம்பு புகுந்துடுது.அவரவர் அறிக்கை எப்படி இருக்கும்...
கலைஞர்- இப்படி எல்லாம் நடந்தா நான் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வேன்னு ஜெயலலிதாவே பாம்பை அனுப்பி இருப்பாரோ என்னவோ...
ஜெயலலிதா-கருணாநிதிக்கு இனி வரும் தேர்தர்ல்ல வெற்றி கிடைக்குமான்னு தேர்தல் பயம் வந்து விட்டது..அதுதான் இப்படி புலம்பறார்.மத்தியில் இவர் சொல்வதை கேட்கும் ஆட்சியும்,மாநிலத்தில் இவரின் மைனாரிட்டி ஆட்சியும் தானே நடக்கிறது.அவர்களிடம் சொல்லி..தமிழ் நாட்டில் பாம்பே இல்லாமல் செய்திருக்கலாம்.ஏன் செய்யவில்லை என்றால்..என்னை ஒழிக்க அவர் பாம்பை நம்பி இருக்கார்.ஆனால்..நான் பாம்பை அனுப்பினேன் என்ற அவர் மீது வழக்கு போடுவேன்.ஜெயகுமார் தலைமையில் பாம்பு பண்ணைமுன் நாளை அ.தி.மு.க.போராட்டம் நடத்தும்.
தங்கபாலு-இந்த பாம்பு என் வீட்டுக்குள் எப்படி வந்தது?சாமியார் மடமா இது? ஆனால் எங்கள் தலைவர் சோனியா பாம்பு பற்றி எந்த முடிவெடுத்தாலும்..கட்டுப்படுவேன்.
இ.கம்யூனிஸ்ட்-வயலில்..தவளைகளை ஒழிக்க வேண்டிய பாம்புகளை நகரத்தில் என் வீட்டில் விட்டு விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை பொறுக்க மாட்டோம்.மார்க்ஸிஸ்ட் உடன் பேசி தர்ணா தேதி அறிவிக்கப்படும்.
மார்க்சிஸ்ட்-போராட்டம் என்றால்..இரண்டு கம்யூனிஸ்ட்களும் ஒன்று படுவோம்.பாம்பு அவர்கள்..வீட்டில் இருந்தாலும்..எங்கள் விட்டில் இருந்தாலும் தர்ணா ஒன்றுதான்.
ராமதாஸ்-கருணாநிதி அவர்கள்..என் வீட்டில் பாம்பு நுழைந்ததை..முறைப்படி மத்திய அரசிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.தேவையானால்..அனைத்துகட்சி தலைவரையும் அவர் தில்லி அழைத்துச் செல்லலாம்.பா.ம.க.அக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்.
வைகோ-அம்மையார் விரும்பினால்..அந்த பாம்பை நான் பிடித்து..என் வீட்டிற்குள் விட்டுவிடத் தயார்.
விஜய்காந்த்-தமிழ்நாட்டில் 113208 பாம்புகள் இருக்கின்றன.இதில் 42323 நல்ல பாம்பு,21000 மலைப்பாம்பு,12034 சாரைப்பாம்பு,4300கட்டுவிரியன்,8304 தண்ணீர் பாம்பு..மீதி உள்ளவை சில்லரைப் பாம்புகள்.என்னை அழிக்க ஒரு பாம்பை வீட்டிற்குள் விட்டு நான் அழிவேன் என கனவு காண்கிறார்கள்.மொத்த பாம்புகளையும் கோண்டு வந்து விட்டாலும் இந்த விஜய்காந்தை ஒன்றும் செய்ய முடியாது.
பத்திரிகை நிருபர்களுக்கு கலைஞர் பேட்டி;
சரடு நிருபர்; ஜெ தான் பாம்பை உங்கள் வீட்டில் விட்டார் என நீங்கள் சொன்னதால்..உங்கள் மீது வழக்குத் தொடரப் போவதாக ஜெ கூறியுள்ளாரே
கலைஞர்; என்னை ராஜிநாமா செய்யச் சொன்னதால்..கிண்டலுக்கு அப்படிச் சொன்னேன்.வழக்கை சந்திக்க நான் தயார்..அம்மையார் நீதிமன்றம் வரத் தயாரா?
நிருபர்;ராமதாஸ்..மத்திய அரசிடம் அவர் வீட்டு பாம்பு சமாசாரத்தை நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறாரே
கலைஞர்- இவ்வளவு நேரம்..இது மத்திய அரசுக்கு தெரிந்திருக்கும்.அப்படி இல்லை எனில்..அவர் மகன் ஒரு மத்திய அமைச்சர் ஆயிற்றே..அவரே சொல்லலாமே...
எல்லார் வீட்டிலும் நுழைந்தது ஒரே பாம்பு..இவர்களின் அரசியலைப்பார்த்து..நம்மைவிட இவர்கள் நச்சுத்தன்மை உடையவர்கள் என பயந்து ஓடி ஒளிந்தது.

அந்த கிரகமும்..அதன் மக்களும்.. (சிறுகதை )
(இது ஒரு மீள் பதிவு)
அந்த கிரகத்தில் அரைகுறையாக ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணைச்சுற்றி..ஒரு கூட்டம்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது போல ..சேட்டிலைட் மூலம் எடுக்கப் பட்டிருந்த புகைப்படத்துடன்
செய்தி ஒன்று அன்றைய செய்தித் தாள்களில் வந்திருந்தது.
அத்துடன் அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சத்தியக்கூறுகள் இருப்பதாகவும்..உயிர்கள்
வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.
விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள்..அடுத்ததாக உயிருள்ளவர்களை அந்த கிரகத்திற்கு அனுப்பி
வைக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி,பிரதமர் முதல் குப்பன்..சுப்பன் வரை பாராட்டு
தெரிவித்திருந்தனர்.
சில வல்லரசு நாடுகள் இந்த கண்டுபிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல்..விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சியில்
ஈடுபடலாயினர்.
பத்து விண்வெளி வீரர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டு...நான்கு பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அதில் சாதனா சாவ்லா என்று ஒரு பெண்ணும் இருந்தார்.
நாட்டின் பொருளாதார நிலை சரியாய் இல்லாததாலும்..பணவீக்கம் அதிகரித்து வருவதாலும்..
மேற்கொண்டு ஆராய்ச்சிகளுக்கு பண ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் இருப்பதாக நிதி அமைச்சர்
பட்டினியார்...தெரிவிக்க..அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சில கட்சிகள்..ஆதரவை..வாபஸ் வாங்கப்போவதாகவும்..அவர்கள்
தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென்றால்..விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான பணம்
ஒதுக்க வேண்டும் என்றும்..நிதி அமைச்சர் பட்டினியார் பதவி விலக வேண்டும் என்றும் நிபந்தனைகள்
விதித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல்..பிரதமர் தன் தலைப்பாக்குள் கையை விட்டு முடியை பிய்த்துக்
கொண்டார்.கட்சித் தலைவர் மானியா..விண்வெளி ஆராய்ச்சிக்கு...தடை இல்லை என்றும்..
தொடர்ந்து நிதி ஒதுக்கப் பட்டு..திட்டமிட்டப்படி வீரர்கள் அனுப்பப்படுவர் என்றும் கூறி
தற்காலிகமாக ஆட்சியை காப்பாற்றினார்.
நான்கு வீரர்களுடன் விண்கலம் புறப்படும் நாள் வந்தது.விண்வெளி விஞ்ஞானி சங்குண்ணி
மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார்.
10..8...7..6..5..4..3..2..1..0..
உஷ் என கலம் புகையைக் கக்கிக்கொண்டு பறந்தது.
**** ***** ***** *****
இரண்டு மாதம் தன் பயணத்தை முடித்துக்கொண்டு..சில புகைப்படங்களை அனுப்பிய வீரர்கள்
திரும்பினர்.
அவர்கள் பின் அளித்த அறிக்கை..
'நாங்கள் போன இடம் பூமி எனப்பட்டது.அதில் மக்கள் வாழ்கிறார்கள்.மூன்று பாகம் கடல்..ஒரு பாகம் நிலம்.
நாங்கள் இறங்கிய இடத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாய்..தியேட்டர் எனப்படும் இடத்தில் கூடுகின்றனர்.
வறுமையில் வாடினாலும்..ஒலி,ஒளி நிகழ்ச்சியான இவற்றுக்கு மக்கள் பணத்தை செலவழிக்க தயங்குவதில்லை.
அரைகுறையாக உடை உடுத்தியுள்ள நடிகைகளை பார்ப்பதிலும்..தனக்குப் பிடித்த நடிகர்களுக்கு பால்..பீர் போன்ற
திரவ பொருள் கொண்டு அபிஷேகம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.இந்த பகுதிக்கு தமிழ்நாடு என்கிறார்கள்.
அவர்கள் பேசும் மொழி தமிழ்.இதுபோல பல மொழி பேசுபவர்கள் மற்ற இடங்களிலும் இருக்கிறார்களாம்.
தண்ணீருக்கு இவர்கள் மாற்றி...மாற்றி..அடித்துக் கொள்கிறார்கள்.
இப்படி இவர்கள் அறிக்கை நீண்டுக்கொண்டே போகிறது.
அவை அனைத்தும்..செவ்வாய் கிரக பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தன.
உடன்...நமீதாவின் ஒரு குத்தாட்ட புகைப்படமும் பிரசுரமாகி இருந்தது.

டாக்டர் அம்பேத்கர் ..சில செய்திகள்..
மாபெரும் லட்சியத்தையும்..வெற்றியில் நம்பிக்கையும்..வாழ்க்கையில் ஏற்றுக்கோண்டால்..உயர்ந்த நிலையை எவரும் அடையலாம் - அம்பேத்கர்
நமது தேசியக் கொடியில் நடுவில் காங்கிரஸ் சின்னமான ராட்டைதான் வரவேண்டும் என காந்தியும்..அவர் சீடர்களும் கூறினர்.ஓம் வரவேண்டும் என சாவக்கர் கூற...அம்பேத்கர் சொன்னார்
அசோகரின் தர்மச் சக்கரம் தான் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் சரியான சின்னமாக இருக்கும் என்று.அதில் உறுதியாக நின்று அதை நிறைவேற்றினார்.
நாட்டில் மதம்,மொழி,ஜாதி,இனம் என பல இருக்கும் நிலையில்..அனைவரின் உரிமைகளையும் பாதுகாத்து..சட்டங்கள் வடிவமைக்க ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.வேலை பளு காரணம் காட்டி..ஒவ்வொருவரும் நழுவிக் கொள்ள..தனி மனிதனாக..அம்பேத்கர் அக்காரியத்தை செய்து முடித்தார்.
மனு சாஸ்திரத்தால் தான் மனிதர்கள் மனிதர்களை சாதிக்காரணங்களால் வெறுக்கும் அவலம் ஏற்படுகிறது.ஆகவே தீண்டாமைக்கு முதல் எதிரி மனுதான் என்று கூறி..மனு சாஸ்திரத்தை தீ வைத்துக் கொளுத்தி..தீண்டாமைக்கு எதிரான யுத்தத்தை துவக்கி வைத்தவர் அம்பேத்கர்.
புத்த மதம்தான் கடவுள் வழிபாட்டைத் துறந்து அறத்தையும்,மனிதனது நல்ல எண்ணங்களையும் முன்னிறுத்துவதாகவும், அம்மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்றும் எண்ணியவர்,
மேலும் தான் இறக்கும்போது இந்துவாக இறக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் 10லட்சம் பேரை 1956ல் புத்த மதத்திற்கு மாற்றினார்.
இந்தியாவில்...இல்லை..இல்லை..உலகிலேயே அதிக சிலைகள் உள்ள ஒரே தலைவர் இவர் தான்.
அனைவரும்...ஜாதி,மத, பேதம் பார்க்காமல் அம்பேத்கர் பற்றி படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
வரலாறு எவ்வளவு உண்மைகளை மறைத்து வைத்திருக்கிறது என அறிவீர்கள்.

வாய் விட்டு சிரியுங்க....
1.டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்கு ஜோசியரையும் அழைத்து வர்றாரே....ஏன்?
டாக்டர் ஆபரேஷன் செய்யும்போது..ஜோசியர் நோயாளியின் ஜாதகத்தில் மாற்றம் தெரிகிறதான்னு பார்த்துக் கிட்டு இருப்பார்.
2.கட்சி அலுவலகத்தை தலைவர் ஏ.சி. பண்ணச் சொல்லிட்டார்
ஏன்?
அவர் கிட்டே எல்லாருக்கும் குளிர் விட்டுப்போச்சாம்.
3.மருமகள்-(டாக்டரிடம்)டாக்டர் என் மாமியாருக்கு உடம்பு எப்படி இருக்கு?
டாக்டர்-பயப்படறார்போல ஒண்ணுமில்ல
மருமகள்-ஏன் டாக்டர்..எப்பவும் இப்படி நெகடிவ் ஆகவே பேசறீங்க?
4.என் பையன் போற போக்கைப் பார்த்தா கவலையாய் இருக்கு..மதிக்கவே மாட்டேன் என்கிறான்
உங்களையா?
அவன் மனைவியை.
5.போனவாரம்தான் உன் குழந்தைக்கு காதுகுத்தணும்னு லீவு கேட்டீங்க..இப்ப திரும்பவும் காது குத்தணும்னு லீவு கேட்கறீங்களே?
அப்போ..ஒரு காது தான் குத்தினோம்..இப்போ இன்னொரு காது குத்தறோம்.
எனக்கு எப்பவோ காது குத்தியாச்சு.
6.மகன்-(தந்தையிடம்)நீ காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிண்டே...என் காதலை மட்டும் எதிர்க்கிறியே ஏன்?
தந்தை-அதனால்தாண்டா எதிர்க்கிறேன்..

Tuesday, December 16, 2008
நட்பின் சிறப்பு என்பது யாதெனில்....
உயிர் காப்பான் தோழன்..என்பர்.
அது எவ்வளவு தூரம் உண்மை என நான் அறியேன்..ஏனெனில் நான் யார் உயிரையும் காப்பாற்றியதில்லை..என்னையும் யாரும் காப்பாற்றியதில்லை.
ஆனால்..நமக்கு வாழ்வில்..ஏற்படும் நண்பர்கள்தான் எவ்வளவு?
பள்ளி பருவத்தில்...உண்டாகும் இளம் நண்பர்கள்..மன விகாரம் இல்லா வயது.கிடைத்த அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் வயது.ஒன்றாக சேர்ந்து விளையாடிய வயது.மாமரத்தில் இருந்து விழும் அல்லது திருடும் மாங்காயை..உப்பு ,காரம் தோய்த்து சாப்பிட்ட நட்பு,கமர்கட்டை காக்காய் கடி கடித்து பகிர்ந்துக் கொண்ட வயது.போட்டி படிப்பில் மட்டுமே.இப்படி அந்த கால நட்பு..மனதில் பசுமரத்தாணி போல பதிந்து இன்றும் நினைவில் அவர்கள் பெயர் தங்கியிருக்கும் நட்பு.
அடுத்து..கல்லூரி கால நட்பு.பெற்றோர் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்க வைப்பது தெரிந்தும்..பணத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் வயது.இக்காலத்தில் ஏற்படும் நட்பு சிலருக்கு வாழ்வில்..சிகரெட்,மது,மாது..போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி வைக்கிறது..அப்படிப்பட்டவர் நட்பு இவ்வயதில் அதிகம் கிடைக்கிறது.இப்படிப்பட்ட நட்பு..ஆசைக்காக..சில எதிர்ப்பார்ப்புகளோடு அமைந்து விடுகிறது.இப்பருவ நட்பு கம்பி மேல் நடப்பது போல.
அதைத் தாண்டி வந்தால்..அலுவலகத்தில், உடன் வேலை செய்வார் நட்பு.இந்த சமயம்...நிறைய சம்பாதிக்க வேண்டும்,சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாக வரவேண்டும்..அவனைவிட நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்றெல்லாம் எண்ணக்கூடிய சுயநலம் நிறைந்த நட்பு..
பின் ஓய்வு பெற்றதும்..கிடைக்கும் நட்பு...பழைய வாழ்வை அசை போடும் நண்பர்களுடன்.
இப்படி ஒவ்வொரு பருவத்திலும்..பல வேறுபட்ட நண்பர்கள்..பள்ளி பருவம் முதல்..கடைசி வரை தொடரும் நட்பு..ஒரு சிலருக்கே கிட்டும்.அப்படிப்ப நட்பு அமைந்தால் அதுதான் சிறந்த நட்பு..அப்படிப்பட்டவன் தான் சிறந்த நண்பன்.
ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.
இது தான் நட்பின் சிறப்பு.

கோடீஸ்வர எம்.எல்.ஏ..க்கள்
இந்தியாவின் 5 வட மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்.
தேர்தல் நடந்த ராஜஸ்தான்,மத்திய பிரதேசம்,தில்லி,சத்தீஸ்கர்,மிஜோராம் மாநிலங்களின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 629.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 40சதவிகிதம் கோடீஸ்வரர்கள்.
சுருங்கச்சொன்னால்..இன்று இவர்களால்தான் அரசியலில் ஈடுபடமுடியும்.
இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அப்துல் கலாம் இல்லை..யார் சொன்னாலும் சரி...பணம் இல்லையேல் அரசியல் இல்லை..அதே சமயம் விரைவில் பணம் சம்பாத்திக்க அரசியலை விட்டால் வேறு தொழிலும் இல்லை.
இந்த கோடீஸ்வரர்களால்...ஏழை மக்களின் தேவை என்ன என்று எப்படி உணரமுடியும்?
இந்த வேட்பாளர்களில்..3 சதவிகிதம் பேரே..5லட்சத்திற்கும் குறைவான சொத்து உள்ளதாக அறிவித்துள்ளனர்.இது உண்மையா என நாம் அறியோம் பராபரமே!
ஆனால் இப்படி அறிவித்தவர்கள் எவரும் தில்லி தேர்தலில் வெற்றிப் பெறவில்லை.தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 31 சதவிகிதம் 5 கோடிக்கும் அதிகம் சொத்து உள்ளவர்கள்.பின் தங்கிய மாநிலமான சத்தீஸ்கர் எம்.எல்.ஏ.க்கள் கூட கோடீஸ்வரர்கள்.கடந்த தேர்தலில் நின்ற வேட்பாளர்..இந்த தேர்தலிலும் நிற்கும்போது..சென்ற தேர்தலைவிட 1 கோடி அதிகம் சொத்துக் கணக்கு காட்டியுள்ளார்.
அவருக்கு இது எப்படி வந்தது? எப்படி சம்பாதித்தார்..
சாமான்யன் என்றால்...வருமான வரித்துறை குடைந்தெடுக்கும்..சில ஆயிரங்களுக்கே..
ராஜஸ்தானில்..தன் சொத்தின் மதிப்பு 1லட்சம் தான் என்ற வேட்பாளர் வைத்திருப்பது 27 லட்சம் விலையுள்ள பென்ஸ் கார்.
மக்களாட்சி என்றால் மக்களால்..மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியில்லை இப்போதெல்லாம்..
கோடீஸ்வரர்களால் கோடீஸ்வரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சிதான் இந்திய ஜனநாயகம்.
இந்நிலை மாறவேண்டுமானால்...
மக்கள், கட்சிக்காக ஓட்டுப்போடாமல்..போட்டியிடும்..யோக்யமான வேட்பாளரை..அவர் எக்கட்சியாயினும் சரி..தேர்ந்தெடுக்க வேண்டும்..
அதுவரை...இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு என்பது ஏட்டளவில்தான் இருக்கும்

அசைவமா...சைவமா (கவிதை எனில் கவிதை..உரைநடை எனில் உரைநடை)
உணவு விடுதி ஒன்றில்
நான் வெஜிடேரியன்
என்றான் ஒருவன் - மற்றவனோ
நான்வெஜிடேரியன் என்றான்
நான் வெஜிடேரியன் என்பவன்
நானிலத்திலும் இல்லை - எல்லோரும்
நான்வெஜிடேரியனே
விடுதிக்காரன் மேலும் உரைக்கிறான்
அவணியில் விழுந்ததுமே
அன்னை உதிரத்தால் பால் - பின்
ஆவின் உதிரப்பால்
உதிரத்தை சுவைத்தவன்
உண்மையில் நான்வெஜிடேரியன் தானே
வாய் மூடி மௌனியானான்
நான் வெஜிடேரியன் உரைத்தவன்
ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான்
நான்வெஜிடேரியன்.
நான் வெஜிடேரியன்
என்றான் ஒருவன் - மற்றவனோ
நான்வெஜிடேரியன் என்றான்
நான் வெஜிடேரியன் என்பவன்
நானிலத்திலும் இல்லை - எல்லோரும்
நான்வெஜிடேரியனே
விடுதிக்காரன் மேலும் உரைக்கிறான்
அவணியில் விழுந்ததுமே
அன்னை உதிரத்தால் பால் - பின்
ஆவின் உதிரப்பால்
உதிரத்தை சுவைத்தவன்
உண்மையில் நான்வெஜிடேரியன் தானே
வாய் மூடி மௌனியானான்
நான் வெஜிடேரியன் உரைத்தவன்
ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான்
நான்வெஜிடேரியன்.
Monday, December 15, 2008
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்....
தமிழ்..
தமிழன்..
இச்சொற்களைக் கேட்கும்போதே..தேன் வந்து பாயுது காதினிலே..
மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கையில்லை.அப்படி என்று ஒன்று இருந்தால்,அப்பிறப்பும் தமிழனாகவே பிறக்க ஆசை.வள்ளுவன் முதல் கலைஞர் வரை உலகினுக்கு அளித்த தமிழ் மொழியின் சிறப்பு பற்றி ஒரு சில வார்த்தைகள்.
உலகத்திலேயே இறைவனுக்கு தமிழ் மொழியில் உள்ள சொல் போல் எதிலும் இல்லை."கடவுள்".கட எல்லாவற்றையும் கடந்தவர்.உள்.. எல்லாவற்றின் உள்ளும் உள்ளவர்.எவ்வளவு பெரிய தத்துவத்தை இச்சொல் அடக்கியிருக்கிறது.
தமிழில் "ழ" என்ற அருமையான எழுத்து இருக்கிறது."ழ " வரும் சொல் எல்லாமே இனிமை.பழம்,யாழ்,குழல்,குழந்தை,மழலை-இப்படி...
அடுத்து ..மாதா-பிதா-குரு-தெய்வம் என்று சொல்வார்கள்.அதனைப்பாருங்கள்.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்.தமிழின் முதல் உயிரெழுத்து "அ".அந்த எழுத்திலேயே ஆரம்பமாகியுள்ளன முதல் தெய்வங்கள் அம்மா..அப்பா.
இவர்களுக்கு அடுத்து குரு.அதாவது "அ" விற்க்குஅடுத்த எழுத்து "ஆ"...ஆசிரியர்.தமிழின் இரண்டாம் எழுத்தில் ஆரம்பம்.
இவர்களுக்குப்பின் தெய்வம்.அ,ஆ விற்கு பிறகு மூன்றாவது உயிரெழுத்து "இ"..இறைவன்.
நமக்கு இன்றியமையாத தேவைகள் மூன்று.உணவு,உடை,உறையுள்..
இங்கும் முதல் தேவை உணவு..தமிழின் முதல் எழுத்து..அன்னம்.
அடுத்து மானம் காக்க உடை தமிழின் இரண்டாம் எழுத்து.. ஆடை.
மூன்றாவதாக வசிக்க உறையுள்.தமிழின் மூன்றாம் எழுத்து இருப்பிடம்.
இப்படி பலப்பல பெரிய செய்திகளை தனக்குள் அடக்கிய மொழி தெய்வீகத் தமிழ்.
ஆகவே "தேன்மதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்வோம்".
********** *********** ********
ஒரு உபரிச்செய்தி:- தமிழில் ஒன்று முதல் 899 வரை உள்ள அனைத்து சொற்களுமே "உ" கரத்தில் தான் முடியும்.உதாரணம் - ஒன்று.. கடைசி எழுத்து "று".ற் + உ.
899 கடைசி எழுத்து "து" த் +உ.

இறைவன் இருக்கின்றானா?
ஆண்டவன் என்று ஒருவன் இருக்கின்றானா?
மூடநம்பிக்கை..என்று நாத்திகம் பேசும் பகுத்தறிவாளர்கள் கூட சிலசமயம் ..இறைவன் இருக்கின்றானா என தங்களுக்குள்ளாகவாவது கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.
தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நாத்திகனாக கழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.
இறைவன் இருக்கின்றானா-அவன்
இருந்தால் எங்கே வாழ்கிறான்.
நான் ஆஸ்திகன் ஆனேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகன் ஆனேன்
அவன் பயப்படவில்லை என்றும்
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
என்றும் பாடல் எழுதியிருக்கிறார்.பின் நாட்களில் அவரே ஆஸ்திகனாக மாறி கடவுள் இருக்கிறார் என்று நம்பியதுடன் ....அர்த்தமுள்ள இந்துமதம் தந்தார்.
இறை நம்பிக்கை இல்லா கலைஞரும் பல சமயங்களில் "என் ஜாதகம் அப்படி" என்று கூறியதுண்டு.
பகுத்தறிவாளரான அறிஞர் அண்ணா கூட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றிருக்கிறார்.
பின் அதுவே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்லப்பட்டது.
இதுபற்றி சத்குரு-ஜக்கி வாசுதேவ்விடம்" நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?"என்று ஒரு முறை கேட்கப்பட்டது.அதற்கு அவர் பதில்
"கடவுள் என்று நீங்கள் எதைக்சொல்கிறீர்கள்?உங்களைச்சுற்றி படைக்கப்பட்டு இருக்கும் இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கிய சக்தியைத்தானே? அந்த சக்தி எங்கே குடியிருக்கிறது?
எங்கே எல்லாம் படைப்பு நிகழ்கிறதோ ..அங்கல்லாம் தானே...அதோ அந்த மேகத்தில்,மணல் துகளில்,இந்த பூவில்,உங்களில்,என்னில் என்று எங்கும் நீக்கமற கடவுளைத்தவிர வேறு எதை
நீங்கள் காணமுடியும்.?ஒவ்வொரு படைப்பிலும்..அதைப் படைத்தவன் இருக்கின்றான் என்பதை புரிந்துக் கொண்டால்...தினம்..தினம்..கணத்துக்கு கணம்..உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் கடவுளைக் காணலாம்.." என்றார்.
அது சரி..இந்த பதிவு எழுதும் நீ இறைவன் இருக்கிறான்..என்று சொல்கிறாயா? என்கிறீர்களா?
அதற்கு என் பதில்'நான் எங்கே அப்படிச் சொன்னேன்? ஆனால் இருந்தால் நன்றாயிருக்கும்."

அம்மா என்றால் அம்மாதான்..(.சிறுகதை )
தனக்கு முன்னால் தட்டில் கொண்டுவந்து வைக்கப்பட்ட அந்த ஸ்வீட்டைப் பார்த்தான் பிரபு.அவன் அம்மாவின் முகம் அதில் தெரிந்தது.
அவனுக்கு இந்த ஸ்வீட் பிடிக்கும் என எவ்வளவு நாட்கள் அம்மா அதை செய்து கொடுத்திருக்கிறாள்.அம்மாவுக்கு மட்டுமே செய்ய தெரிந்த இனிப்பு அது.என்னுடைய ஸ்வீட் அம்மாவின் ஸ்வீட் அது என்று ர(ரு)சித்தபடியே சாப்பிட்டுஇருக்கிறான் அவன்.
அதெல்லாம் பழைய கதை.
அவனுக்கு திருமணம் ஆனவுடன் அம்மா அவனுடைய மனைவி மைதிலியிடம் " இதோ பாரும்மா: இனிமேல் அவனை கவனிக்கவேண்டியது உன் பொறுப்பு.ஆனா இந்த ஸ்வீட் சமாசாரத்தை மட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன்.இதை நான் செய்தால் தான் அவனுக்கு பிடிக்கும்." என்று கூறிவிட்டாள்.
வீட்டுக்கு வீடு வாசற்படி.அவன் விஷயத்திலும் நடந்தது.
ஆம்..மைதிலிக்கும்..அம்மாவிற்கும் ஒத்து வராததால் தனிக்குடுத்தனம் வந்து விட்டான் அவன்.
அப்போது கூட..'அம்மா..அந்த ஸ்வீட் பண்றதை மைதிலிக்கு சொல்லிக்கொடு' என்று அவன் கூற..அம்மா செய்முறையை எழுதி அவளிடம் கொடுத்தாள்.
அதற்குப் பிறகு மைதிலி எவ்வளவோமுறை அதை செய்துக் கொடுத்து விட்டாள்..ஆனாலும் அம்மா செய்வது போல இல்லை..அந்த கைப் பக்குவம் வரவில்லை.இதை மைதிலியிடம் அவனாக சொல்லாவிட்டாலும்,அவளுக்கும் தெரிந்தே இருந்தது.
அதனால் எவ்வப்போது அவனுக்கு அந்த ஸ்வீட் சாப்பிட ஆசையோ அப்பவெல்லாம் அம்மாவைப் பார்க்க கிளம்பி விடுவான்.
***** ***** ****** ***** *****
'என்ன உங்கம்மா பண்ற மாதிரி இல்லையா'-மைதிலி
தலையை மேலும் கீழும் ஆட்டினான்.மைதிலிக்கு பதிலா அல்லது அந்த ஸ்வீட்டை சாப்பிடும் அழகா என அவனுக்கு மட்டுமே தெரியும்.
இது நடந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.
இன்று அவனது பிறந்த நாள்.அம்மா சாப்பிடக் கூப்பிட்டிருந்தாள்.கண்டிப்பாக அந்த ஸ்வீட் இருக்கும்.மைதிலியுடன் கிளம்பினான் பிரபு.
அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது..அம்மா குளியலறையில் இருந்தாள்.
அவனும்,மைதிலியும் அடுக்களையை நோட்டம்விட்டனர்.அம்மாவின் பழைய டயரி ஒன்று கிடைத்தது.அதை எடுத்து புரட்டுகையில்...பக்கத்தில் அந்த ஸ்வீட் செய்முறை இருந்தது.
அதை படித்த மைதிலி...ஆச்சரியத்துடன் "பார்த்தீங்களா:ஸ்வீட்டில் இந்த பொருட்களையெல்லாம் சேர்க்கணும்னு உங்க அம்மா சொல்லித்தரல்லை.அதனால்தான் உங்க அம்மா செய்வதுபோல வரல்லை'என்றவாறு தேவையான பொருட்கள் எழுதியிருந்த பகுதியை சுட்டிகாட்டி அம்மா மீது குற்றம் சாட்டினாள்.
அதை பார்த்த பிரபுவின் முகத்தில்...கோபம்...வருத்தம்...குழ்ப்பம்...
ஆம்...அம்மா முழுமையாக மைதிலிக்கு சொல்லித்தரவில்லை.ஒருவேளை மைதிலி தன்னிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடாது என்பதற்காகவா? ...ச்சே...அப்படிபட்டவளா அம்மா என்று எண்ணியவன் வாயிலிருந்து அவனை அறியாமலேயே வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.
நடந்ததை எல்லாம் அடுக்களையின் வாயிலிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அம்மா...கண்களில் கண்ணீர் கொப்பளிக்க "பிரபு: என்னை மன்னிச்சுடுடா..நீ தனி குடித்தனம் போனதும் .இந்த ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே என்னை பார்க்க வர்றே..ஒரு வேளை மைதிலியும் என்னைப்போல செய்ய ஆரம்பித்துவிட்டால் ..நீ வர்றதையும் நிறுத்திவிடுவே...உன்னை பார்க்காமல் என்னால் இருக்கமுடியாதுடா... அதனால்தான் இப்படி கீழ்த்தரமாக நடந்துண்டுட்டேன்..தப்புன்னா மன்னிச்சுடுடா"கூப்பிய கைகளுடன் வார்த்தைகள்...துண்டு துண்டாக குமுறலுடன் வந்தன.
அம்மான்னா அம்மாதான் என்றவாறே நாத்தழுதழுக்க அம்மாவை அணைத்துக்கொண்டான் பிரபு.

Sunday, December 14, 2008
ஊடகங்கள் பொறுப்புணர்ந்து செயல்படட்டும்
.
நான்காவது தூண் என சொல்லப்படுபவை ஊடகங்கள்.
மக்களுக்கு அவை சமுதாயத்தில் நடக்கும் செய்திகளை தெரிவிக்க வேண்டிய, பெரும் பொறுப்பில் உள்ளன.ஆனால்...சமீப காலங்களில் ...அவை வெளியிடும் செய்திகள்...சில அரசியல் கட்சிகளுக்கு ஜால்ரா அடிப்பவையாகவும்,ஜாதி வெறியை தூண்டுபவையாகவும்,அரசு சார்புடையதாகவுமே இருந்து வருகின்றன.
சமீபத்தில் சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த கலவரத்தை..மீண்டும்...மீண்டும் காட்டி..குறிப்பாக ஒரு பிரிவை சார்ந்த மாணவன் மயங்கி விழுந்தும், அடிபடுவதையும்..வேறோரு பிரிவு மாணவன் கையில் கத்தியுடன் திரிந்ததையும்.. காட்டிக் கொண்டிருந்தனர்.இவை மறைமுகமாக சம்பந்தப்பட்ட பிரிவினரிடையே..வன்முறை எண்ணத்தை தூண்டி விடுவதைப் போலவே இருந்தன.
தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு..ஒவ்வொரு செய்தியையும்...நுணுக்கமாக ஆராய்ந்து..சரியான செய்திகளை மிகைப்படுத்தாமல்..வன்முறை தூண்டிவிடும் செய்திகளை சற்றுக் குறைத்தும்..மக்களிடம் சென்றடைய செய்ய வேண்டியது கடமை.
மும்பைகுண்டு வெடிப்பில்..CNN போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் முழு நேரமும் இடைவிடாது ஒளி/ஒலி பரப்பிக்கொண்டிருந்தார்கள்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக்கூட இப்படி இடைவிடாமல் cover செய்திருக்கமாட்டார்கள்.சம்பந்த பட்ட ....சம்பந்தப்படாதவர்களிடம்...சம்பவ இடத்தில் .இளம் பெண் நிருபர்கள் பேட்டி எடுப்பதை காட்டிக்கொண்டிருந்தார்கள்.
குண்டு வெடிக்கும் சமயம் ..மக்களோடு மக்களாய் காவல்துறையை சேர்ந்த ஒருவர் படுத்துக்கொண்டதை வட்டம் போட்டு காட்டி ..அவர் செய்யக்கூடாததை செய்ததுபோல் மாற்றி மாற்றி காட்டினர்.தவிர..நமது காவல் துறையும் சில நிர்வாக ரகசியங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.
நடுநிலை என்ற தன்மையே ஊடகங்களில் காணப்படுவதில்லை.இலங்கை பிரச்சனையை இவை எவ்வளவுதூரம் மக்களிடம் சென்றடைய செய்தன.அவதிப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் ஒரு சமயம் இவர்கள் சரியாக செயல் படவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது..
கடைசியாக -
சினிமாவுக்கு தணிக்கைக்குழு உண்டு.
நாடகங்களுக்கு script க்கு போலீஸ் கமிஷனர் அனுமதி தேவை.
ஆனால் இந்த ஊடகங்களுக்கோ எந்த தணிக்கை முறையும் இல்லை.
இனி கலவரம் நடைபெறும் சமயத்தில் ..நேரிடை நிகழ்ச்சிகள் காட்டப்படக்கூடாது.அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளை தணிக்கை செய்தபின்னர் காட்டலாம் என்ற சட்டம் இயற்றலாம்.
இல்லை...இப்படிப்பட்ட நிலை நீடித்தால் ..
ஊடகங்களால்... மககளிடையே வன்முறையும் சாதி வேறுபாடுகளும்,அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் அதிகரிக்குமே தவிர .. குறையாது.
ஊடகங்கள் அவர்களின் பொறுப்புணர்ந்து செயல்படட்டும்.

நலம் நலம் அறிய ஆவல்
இன்று எனது வலைப்பதிவிற்கு வந்திருக்கும் உங்களுக்கு ..என் அன்பு வணக்கம்.
இணையதளம்...
நம் எண்ணங்கள்,எழுத்துக்கள் எல்லாமே பத்திரிகைகளால் ஏற்கப்பட்டு ..பத்திரிகைகளில் வெளிவருவது என்பது நடக்காத,நடக்க முடியாத செயல்.
ஆனால்..நமக்கென இணையதளத்தில் தனி வலைப்பூ ஆரம்பித்து விட்டால்...
நம் எண்ணங்களை அதில் பதித்திடலாம்.
நாம் எழுதும் தரத்திற்கேற்ப..அவற்றை படிப்பவர்கள் எண்ணிக்கையும் கூடும்.
நான் எழுதுவதை படிக்க இப்போதெல்லாம் 400 முதல் 500 பார்வையாளர்கள் வருகின்றனர்.
இப்பதிவு எழுதும் நேரத்தில் இதுவரை 33122 பேர் வந்துள்ளனர். நான் எழுத ஆரம்பித்த இக்குறுகிய காலத்திலேயே..பலரால் கவனிக்கப்பட்டேன்.
என்னை ஊக்குவித்து..என்னை இவ்வார ஸ்டார் பதிவராக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி.
எனக்கு ஆதரவு தரும் சக பதிவர்கள்..என் பதிவிற்கு பின்னூட்டம் இட்டு ..மேன் மேலும் எழுததூண்டிய நண்பர்கள்..வருகை தந்த மற்ற நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.
இவ்வார என் பதிவுகளை படியுங்கள்...உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.
நன்றி...

Saturday, December 13, 2008
வை.கோ.விற்கு ஒரு கடிதம்...
வணக்கம்.
தங்கள் மேடைப் பேச்சில் மயங்குபவர்களில் நானும் ஒருவன்.
தி.மு.க.வின் தானைத்தலைவனாய் இருந்த நீங்கள்...வெளியேற்றப்பட்ட போது கூடமனம் வருந்தியவர்களில் நானும் ஒருவன்.தாய்க்கழகத்திலிருந்து..தங்களது விலக்கம் குறித்து இப்பதிவில்
எதுவும் எழுதப்போவதில்லை.ஏனெனில் தாய்வீட்டில் உள்ள உங்கள் மனதிற்கு எல்லாமே தெரியும் என்பதால்.
அப்படியெனில் இப்பதிவின் நோக்கம்...?
தேவையில்லாமல் POTA வில் கைதாகி இருந்த போது..கலைஞர் பட்ட வேதனையும்..அவர் அப்போது உங்களைப் பார்க்க பட்ட கஷ்டங்களையும்..எல்லோருமே அறிவர். பின்னர் மாறனின் மறைவிற்கு நீங்கள் வந்திருந்த போது..கலைஞரும்,நீங்களும்..மாறனின் இழப்பில் அழுதது...அதை தொலைக்காட்சியில் பார்த்த என்னைப்போன்றோர் ,மீண்டும் தாய்க்கழகத்தில் நீங்கள் இணைய வேண்டும் என்று விரும்பினோம்.
கடந்த சட்டசபை தேர்தலில் அதற்கான காலம் கனிந்து வருவது போல இருந்தது.ஆனால் தொகுதி ஒதுக்கீட்டில்..தங்கள் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதிகள் போதாது என்று..கடைசி நிமிடம்
நீங்கள் அணி மாறினீர்கள்.
ஆனால் இப்போது நடப்பது என்ன?
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்ற போது கூட ஜெ கண்டனம் தெரிவிக்காதவர்.
அந்த கூட்டணியில் உள்ள நீங்கள்..உங்களுக்கு ஒதுக்கிய தொகுதி எம்.எல்.ஏ., மறைவிற்கு பின் நடக்கும் அத்தொகுதி இடைத் தேர்தலில்..போட்டியிட அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்துள்ளதாக செய்திகள் படித்தோம்.(ஒருவேளை அது காலத்தின் கட்டாயமோ!!!)
இந்த விட்டுக்கொடுத்தலை..முன்னரே கலைஞருக்கு செய்திருந்தால் ..மீண்டும் தாய்வீடு வந்த உற்சாகம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.
தன்மானம் காத்த தானைதலைவனாய் இருந்திருப்பீர்கள்.
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை...
Better Late than Never
என்றும் அன்புடன்
ஒரு தமிழன்

படித்ததும்...கேட்டதும்... 13-12-08
1. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் டாக்டர்களையும்,நர்ஸ்களையும் உருவாக்கும் நாடு இந்தியா.
2.குற்றங்களும் தவறுகளும் உருவாக..வேலையில்லாததும்,வறுமையும்தான் முதல் காரணமாய் இருக்க முடியும்.நோய் என்ன வென்று கண்டுபிடிச்சாத்தான் சரியான மருந்து கொடுக்க முடியும்.
3.பிறக்கும் போது நான் இந்துவாகப் பிறந்தது என் குற்றமில்லை..ஆனால் இறக்கும் போது ஒருக்காலும் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் - அம்பேத்கர்
4.ஒரு உயிரினம் அழியாமல் தடுத்த பெருமை பெட்ரோலியத்திற்கு உண்டு.முன்னர் விளக்கு எரிக்க திமிங்கில எண்ணெய்யை பயன்படுத்தினர்..இதனால் திமிங்கிலம் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது..பெட்ரோலியத்தின் ஒரு அங்கமான மண்ணெண்ணெய் கண்டுபிடிக்க திமிங்கிலங்கள் தப்பின.
5.திருமங்கலத்தில் ம.தி.மு.க.,வின் தொகுதியை அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்தார்.வை.கோ., -செய்தி
(இந்த விட்டுக்கொடுப்பு முதல்லேயே இருந்திருந்தால் தி.மு.க. அணியிலேயே இருந்திருக்களாமே தன்மானம் காத்திருக்கலாமே-நாம்)
6.ஆனந்த விகடனில் சமீபத்தில் வந்த லக்கிலுக்கின் கவிதையில் சில வரிகள்
'கள்ளக் கவிதை'
காதல் கழுதை
முன்னே போனா
முட்டுது
பின்னே வந்தா
உதைக்குது.
7.ஆண்டுக்கு 1000 கோடிகளுக்கு மேல் வருமானம் இருந்தாலும்..திருப்பதி கோவில் அரசுக்கு வரிபாக்கி வைத்திருக்கிறது.
8.சமீபத்தில் மறந்த வி.பி.சிங் கிற்கு பாராளுமன்றத்தில் சிலை வைக்க தி.மு.க. முயற்சிகள் மேற்கொள்ளும் - கலைஞர்

Friday, December 12, 2008
ஐஸ்வர்யாராய்க்கே அடுத்த இடம்தான் நமீதாவின் இந்திய சாதனை!
நடிகர் சங்கம் ஒரு விழாவே எடுக்கலாம் பின் வரும் செய்திக்காக! கூகுல் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் லிஸ்டில் மூன்றாவது இடத்திலிருக்கிறார் நமீதா.
இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே தென்னிந்திய நடிகை இவர் மட்டும்தான்! இவருக்கு பிறகுதான் இருக்கிறாராம் ஐஸ்வர்யாராயே! கூகுள் சர்ச் என்ஜின் பற்றி இணையதள வாசகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. எந்த புகைப்படம் தேவை என்றாலும், இந்த சர்ச் என்ஜினுக்கு போய் தேடி டவுன்லோடு செய்து கொள்ளலாம். அப்படி நமீதாவை தேடியவர்களின் எண்ணிக்கை 2008 ம் வருடத்தில் மட்டும் சுமார் 3 கோடி பேர்களாம். முதலிடத்தில் கேத்ரீனா கைப், இரண்டாமிடத்தில் சல்மான் கான், மூன்றாவது இடத்தில் நமீதா!
“இந்த பெருமைக்கு காரணம் என்னுடைய ரசிகர்கள்தான். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும்” என்கிறார் நமீதா. அப்படியே இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் நமீ!
நன்றி .தட்ஸ் தமிழ்

முறுக்கு..எத்தனை முறுக்கு..
முறுக்குகளில் கை முறுக்கு தவிர..தேங்குழல்.முள்ளு முறுக்கு ஆகியவையும் முறுக்கு ஜாதியில் சேரும் (இதிலும் ஜாதியா)
நம் வாழ்வில் பல வேளைகளில் நம்முடன் பின்னி பிணைந்து விட்டது இது.
கல்யாணம் போன்ற விஷேசங்களில் சீர் வரிசையில் முறுக்குக்கு முதலிடம் உண்டு.
9 சுற்று முறுக்கு,7 சுற்று முறுக்கு,5 சுற்று முறுக்கு என கை முறுக்கில் மட்டும் பல வகை உண்டு.சுற்றுகள் அதிகமாக..அதிகமாக..முறுக்குகளுக்கு முறுக்கு அதிகமாகிவிடும்.கடையில் வாங்கும் முறுக்கு இரண்டு சுற்று என்பார்கள்..ஆனால்..ஒன்றரை தான் இருக்கும்.
முறுக்குக்கு பந்தா என்றும் பெயர் உண்டு.
மாப்பிள்ளை முறுக்குப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.மாப்பிள்ளை மாமனார் வீட்டில் காட்டும் பந்தாவிற்கு அந்த பெயர்.ஆனால் இப்ப எல்லாம் மாப்பிள்ளை முறுக்குப் போய் மணப்பெண் முறுக்கு வந்து விட்டது.
நான் படிக்கும் போது முதல் ராங்க் (நம்புங்க வாங்கியிருக்கேன்) வாங்கும் போது..சக மாணவர்களுடன் முறுக்கிக்கொண்டது உண்டு..அதே சமயம் ராங்க் இறங்கும் போது முதலில் வந்த மாணவன் காட்டும் முறுக்கிற்கு..எவ்வளவு அகம்பாவம் பார் அவனுக்கு என்றதுண்டு.
கலைஞர் கூட..வைகோ..தி.மு.க.விலிருந்து போய் ம.தி.மு.க.,ஆரம்பித்தபின்..தேற்தலில் தி.மு.க.உடன் கூட்டணி வைத்தபோது..வைகோவைப் பார்த்து..ரொம்ப முறுக்கிக்காதே என்றதுண்டு.
வீடுகட்டும் போது முறுக்கு ஸ்டீல் கம்பிகள் பயன்படுத்தப்படும்.
சரி..சரி..இந்த பதிவை படிச்சுட்டு,,ஏன் முறுக்கிக்கிட்டு போறீங்க..
என்ன இவன் கூட இப்படி கேட்கிறானே(ரே ன்னு மரியாதை குடுப்பீங்கன்னு தெரியும்) னு நினைக்கிறீங்களா?
என்ன பண்றது...வாயுள்ள பிள்ளைதானே பிழைச்சுக்கும்.

Thursday, December 11, 2008
அதி புத்திசாலி அண்ணாசாமியும்..ஊழலும்..
கொஞ்ச நாட்களாக மத்திய அரசை திட்டிக்கொண்டிருந்த அண்ணாசாமி திடீரென புகழ ஆரம்பித்து விட்டார்.
மும்பையிலே குண்டு வெடிச்சா தில்லி லே இருக்கிறவங்களுக்கு எப்படி காது கேட்கும்..அதனால் மத்திய அரசை இந்த விஷயத்தில் குறை சொல்லக்கூடாது.இதுவரை இருந்த பிரதமர்களிலேயே மன்மோகன் சிங் தான் பெஸ்ட்..சோனியா மாதிரி ஒரு ஒப்பற்ற தலைவர் 1885ல் காங்கிரஸ் ஆரம்பிச்சதிலிருந்து இப்போதான் கிடைச்சிருக்காங்க.இப்படிப்பட்ட காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுக்காத மத்திய பிரதேஷ்,சட்டீஸ்கர் மக்கள் கஷ்டப்படப்போகிறார்கள்.இப்படியெல்லாம் பார்த்தவர்களிடையே எல்லாம் பேத்த ஆரம்பித்து விட்டார்.
அதி புத்திசாலியின் நண்பர் ஒருவர்..இது பற்றி அவரிடம் கேட்க..
யாரிடமும் சொல்லக்கூடாது என்று அண்ணாசாமி சொன்ன விஷயம்.
'என் மீது வருவாய்க்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கு இருக்கிறது.மத்திய அரசை ஆதரிச்சா வழக்கை வாபஸ் வாங்கிடுவாங்க' என்றார்.
(முலாயம்சிங் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு . உச்ச நீதி மன்றத்தில் இருந்தது..கம்யூனிஸ்ட்கள் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கியதால்..காங்கிரஸ் அரசு கவிழாமல் இருக்க முலாயம் தன் கட்சி ஆதரவை அளித்தார்.இப்போது அவர்மீது இருந்த வழக்கு வாபஸ் ஆனது..அதற்கும் நம் அண்ணாசாமியின் முடிவுக்கும்சம்பந்தம் ஏதுமில்லை)

தீர்மானித்து விட்டேன்...இன்று எந்த பதிவும் இடக்கூடாது என்று.
சில சக பதிவர்களும், என் நண்பர்களும்.சொல்கிறார்கள்..
மதுவிற்கு அடிமை ஆவது போல, புகை பிடிப்பதற்கு அடிமை ஆவது போலத்தான்..இந்த பதிவும்.,இதற்கு அடிமை ஆகி விட்டால் கணிணி விட்டு எழுந்திருக்க முடியாது என்று.
அது தவறு..மன உறுதி இருந்தால், எந்த பழக்கத்திலிருந்தும், வேண்டாம் என்னும் போது வெளியே வந்து விடலாம்.
இன்று காலை எழுந்ததும்..என் வீட்டு அம்மாகிட்டே சொல்லிட்டேன்..நான் இன்னிக்கு முழுதும் கணிணி பக்கமே போகப்போவதில்லை.உனக்கு வேண்டுமானால் சமையல் குறிப்பு போட்டுக்கொள் என்று.என்னை அவங்களும் வினோதமாக பார்த்துவிட்டு..அன்றாட வேலைக்கு அடுக்களைக்குள் நுழைஞ்சிட்டாங்க.
உட்கார்ந்து..ஒரு புத்தகத்தை கையில் எடுத்த நான்...ஒரு பக்கம் படித்திருப்பேன்..திடீரென..பதிவுதானே போடமாட்டோம் என்றோம்..நேற்று போட்ட பதிவிற்கு ஏதேனும் பின்னூட்டம் வந்திருக்கிறதா பார்ப்போம்..என..அடுக்களைக்குள் ஒரு பார்வையை வீசி விட்டு கணிணி முன் அமர்ந்து அதை இயக்கி, தமிழ்மணத்திற்கு வந்தேன்.
நாம என்ன கோவியா,பரிசலா,தாமிராவா இல்லை வேலனா ..பின்னூட்டம் வந்து குவிய..எப்பவும் போல நசரேயனும்,குடுகுடுப்பையும் பின்னூட்டம் போட்டிருந்தனர்.
"என்ன ஆச்சு..உங்க தீர்மானம்" உள்ளிருந்து குரல்.
பின்னூட்டம் பார்க்கிறேன்...என்றவன் கை கீ போர்டில் தாளம் போட்டது..
பிறகு...இன்று மட்டும் பதிவு போட்டிடுவோம்...எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்தக்கூடாது என்று தீர்மானித்தேன்..
காலையிலிருந்து இதே சிந்தனையில் இருந்து விட்டதால் பதிவிட மேட்டர் யோசனை செய்யவில்லை (ஆமாம்..இவர் பதிவிலே எல்லாம் ரொம்ப மேட்டர் இருக்கு...அப்படின்னு ஏன் முணுமுணுக்கிறீங்க)
சரி இதையே ஒரு பதிவா இன்னிக்கு போட்டுடலாம்..நாளைக்கு பார்த்துக்கலாம்..
எனக்கு மன உறுதி அதிகம் ..ஆமாம் சொல்லிட்டேன்.
தனக்குத்தானே என்ன பேசிக்கறீங்க..அடுக்களையிலிருந்து குரல் கேட்கிறது.

Wednesday, December 10, 2008
கோமாளிகள்..'ஜெ' கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
சமீபத்தில் இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள் என்றும்..புலிகளிடம் பணம் பெறுபவர்கள் என்றும், அதனால் அவர்களை ஆதரிக்கின்றனர் என்றும் கூறியிருந்தார்.
அவர் எந்த தலைவர்களை கூறினார் என்பது வெள்ளிடைமலை.
ஒரு திருமண விழாவில் கலைஞர் இது பற்றி பேசும்போது..பொன்சேகாவின் கோமாளி அறிவிப்பை..தான் உள்பட அனைத்து தலைவர்களும் கண்டித்தோம். நமக்குள் ஆயிரம் இருந்தாலும் தமிழனை விட்டுக்கொடுப்பதில்லை.ஆனால் கண்டித்த தலைவர்களில் ஒரு முக்கிய கட்சி தலைவர் பெயர் இல்லை.அவர் யார்..என்றதும்..பலர் 'ஜெயலலிதா" என்றனர்.
இப்போது தெரிந்து கொள்ளுங்கள் யார் தமிழர்கள் என்று என்ற பொருள் பட பேசினார்.

பிரசாதமும்...கடவுளும்...நானும்..
TBCD ஐயா பிரசாதத்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் சாப்பிடலாமா? என்று பதிவு போட்டிருந்தார்.
எனக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும்..எங்க வீட்டு அம்மாவோட கோவிலுக்குப் போவேன்..வாசல்லயே நின்னுக்கிட்டு அவங்களை உள்ளே போய் கும்பிட்டுட்டு வரச்சொல்வேன்.நீங்க உள்ள வரல்லேனா..அவசர அவசரமா கும்பிட்டுட்டு வரவேண்டியிருக்கும்பாங்க.
அப்போ நான் சொல்லுவேன்..கோவிலுக்குப் போற உன்னைவிட எனக்குத்தான் புண்ணியம்னு.
நீ போனா என்னைப்பத்தியே நினைச்சுக்கிட்டு இருக்கே..ஆனா நான்..நீ இவ்வளவு நேரம் சிவன் கோயிலை முடிச்சிருப்பே,இப்போ அம்மன் சன்னதி வந்திருப்பே,அடுத்து நவகிரகம் மீதின்னு நீ கும்பிடற ஆண்டவனை நினைச்சுக்கிட்டு இருக்கேன்னு.
சரி விஷயத்திற்கு வரேன்..
ஒவ்வொரு கோவில்ல ஒவ்வொரு பிரசாதம் ருசி.
பெருமாள் கோவில் புளியோதரை ருசி..வேற எங்கேயும் பார்க்க முடியாது.
திருப்பதி தேவஸ்தான லட்டுவாயிருந்தாலும் சரி..வெளி கடைகள்ல விற்கும் லட்டுவானாலும் சரி..அதன் டேஸ்டே..வேறு எந்த இடத்து லட்டுலேயும் இல்லை.மடப்பள்ளி சக்கரைபொங்கல் நன்றாயிருக்கும்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வடை பிரமாதம் (டோண்டு சார்...நான் சொல்றது சரிதானே)
சிவன் கோவில்,முருகன்கோவில்ல ..அதிரசம்.முறுக்கு நல்லாயிருக்கும்.
ஸ்ரீரங்கம் கோவில் தயிர்சாதம்..
அமெரிக்கா பிட்ஸ்பர்க்ல பாலாஜி கோவில் கேண்டீன்ல சாம்பார் சாதம்.மிக்ஸர் ருசி.
வேறு எங்கங்க பிரசாதம் நல்லாயிருக்கும் சொல்லுங்க..ஒரு விஸிட் அடிச்சிடுவோம்.

Tuesday, December 9, 2008
வாய் விட்டு சிரியுங்க..
1.யூனியன் தலைவர்- நம் அலுவலகத்தில் நம் மேல் திணிக்கப்படும் வாலண்டரி ரிடைர்மெண்டை எதிர்க்கும் விதத்தில் நான் முதலில் இந்த ஸ்கீமில் வெளியேறி நிர்வாகத்திற்கு ஒரு பாடம்
கற்பிக்க உள்ளேன்.
2.நான் உங்கிட்டே சொல்லாதேன்னு சொன்ன ரகசியத்தை நீ சுஜாதாகிட்ட சொல்லிட்டதா சொன்னாளே
நான் சுஜாதா கிட்டே சொன்னதை உங்கிட்டேசொல்லாதேன்னு சொன்னேனே சொல்லிட்டாளா
சரி...சரி..நான் அவ கிட்ட உன் கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லி இருக்கேன்..அதனால நான் அவ சொன்னதை உன் கிட்ட சொன்னதை அவகிட்ட சொல்லிடாதே
(படிக்கும் ரங்கமணிகளுக்கு தலை சுற்றுகிறதா)
3.அந்த தமிழ் படம் பார்க்கிறவங்களுக்கெல்லாம் ஒரு சின்ன புத்தகம் தர்றாங்களாமே
அது..அந்த படத்தில வர தமிழ் பாட்டுக்களுக்கு தமிழ் அர்த்தம் போட்டிருக்காங்களாம்.
4.குழந்தை-(சிரசாசனம் செய்யும் தந்தையைப் பார்த்துவிட்டு)அம்மா...அம்மா..சீக்கிரம் வாயேன்..அப்பாவுக்கு தலை இருக்க வேண்டிய இடத்திலே கால் இருக்கு..கால் இருக்க வேண்டிய இடத்திலே தலை இருக்கு.
5.என் பையன் என்னைவிட தைர்யசாலி..என் மனைவி எதைச் சொன்னாலும் எதிர்த்து பேசுவான்.
6.நீ காதலிக்கிற பெண்ணைப்பற்றி என் அபிப்பிராயம் எதுக்கு தம்பி கேட்கிறே?
அந்த பெண்ணைப்பற்றி எனக்கு ஒரு வருஷமாகத்தான் தெரியும்...உங்களுக்கு இருபது வருஷமா தெரியுமே!

முதலில் தமிழ் பின் ஹிந்தி மீண்டும் தமிழ் படம்
சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பத்தேவர் ஒரு வெற்றி தமிழ்ப் பட தயாரிப்பாளர்.புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.ஐ வைத்து பல படங்களை எடுத்தவர்.முதன் முதலில் மிருகங்களை வைத்து படமெடுத்தவர் இவர்தான்.
அவர் மேஜர் சுந்தரராஜன் நடிக்க..குறைந்த செலவில்..தெய்வச்செயல் என்ற படத்தை எடுத்தார்.யானைகள் நடித்தன.படம் வெற்றிப் பெற்று கணிசமான லாபத்தை ஈட்டிக்கொடுத்தது.
பின் அதே கதையை ஹிந்தியில் 'ஹாதி மேரே சாதி' என்று ராஜேஷ் கன்னா,தனுஜா நடிக்க எடுத்தார்..யானைகளும் உண்டு.மாபெரும் வெற்றி.
மீண்டும் எம்.ஜி.ஆர்.,விஜயா நடிக்க அதே கதையை 'நல்ல நேரம்' என தமிழில் எடுத்தார். பெரும் வெற்றி.
ஒரே கதை..தமிழ்..ஹிந்தி..தமிழ் என வெற்றிப்பெற்றன.

Monday, December 8, 2008
கலைஞர் போற்றிய பார்ப்பனர்கள்
திராவிட இயக்கத்தில் இளமைக் காலந்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும்; பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிடத் தவறியதில்லை.
மகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. அய்யர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா.கல்கி, ஏ.எஸ்.கே. அய்யங்கார், வெ.சாமிநாதசர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டை விரித்துரைக்க வேண்டுமென்றால், "அக்கிரகாரத்து அதிசய மனிதர்'' என்று "வ.ரா.'' அவர்களைச் சிறப்பித்து எழுத் தோவியம் தீட்டிய அறிஞர் அண்ணாவின் தம்பி என்ற முறையில் "வ.ரா.'' மறைந்த பிறகும், எழுத்துத்துறை பிதாமகன் எனப்படும் "சாவி'' மூலம் அந்தக் குடும்பத்துக்கு சிறப்பு செய்தவனாவேன், நான்!
1990ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது, வ.ரா. அவர்களின் துணைவியார் புவனேஸ்வரி அம்மையாரை தலைமைச் செயலகத்திற்கே அழைத்து வரச் செய்து, மாதந்தோறும் அவருக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்பதற்கான ஆணையினை அவர்களிடம் ஒப்படைத்தேன். 17.8.1990 அன்று கலைவாணர் அரங்கில் வ.ரா. அவர்களின் நூற்றாண்டு விழாவினை அரசு சார்பில் கொண்டாடினோம்.
திருக்குறள் தந்த அய்யன் வள்ளுவனின் திருவுருவத்தைப் பலரும் பலவிதமாகச் சித்திரித்த நிலையில் ஒரே மாதிரி; அய்யனின் உருவத்தை வரைந்தளிக்க வேண்டுமென்ற பெருந்தமிழறிஞர்களின் கருத்தையேற்று; அனைவரும் ஒப்பும் வகையில் அய்யன் திருவள்ளுவர் உருவத்தை அழகுற தீட்டித் தந்து, அதனை அரசின் வாயிலாகப் பிரசுரிக்கும் வகையையும் வழங்கிய ஓவியப் பெருமகனார் வேணுகோபால் சர்மா அவர்களைப் பெருமைப்படுத்தியதுடன், அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கும் நிதியை வழங்கிய பெருமை நமது அரசுக்கு உண்டு.
17.2.1985 அன்று நான் எழுதிய "குறளோவியம்'' நூல் வெளியீட்டு விழாவிற்கு வேணுகோபால் சர்மா அவர்களை தேடிப் பிடித்து அழைத்து வரச் செய்து அந்த நூல் எழுதியதன் மூலம் எனக்குக் கிடைத்த தொகையில் ரூபாய் பத்தாயிரத்தை என் சொந்த சார்பில், நிதியாக அல்ல, காணிக்கையாக வழங்குவதாகக் கூறி அளித்தேன். பின்னர் 1989ஆம் ஆண்டு வேணுகோபால் சர்மா நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று அவருடைய புதல்வர் 24.5.89 அன்று என்னைச் சந்தித்துக் கூறியதும் உடனடியாக பத்தாயிரம் ரூபாய் வழங்கியதுடன், 7.4.1990 அன்று அவருடைய குடும்பத்தாரைத் தலைமைச் செயலக த்திற்கு அழைத்து அரசின் சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதியினை வழங்கி மகிழ்ந்தேன். என்று கலைஞர் கூறியுள்ளார்

திருவள்ளுவனின் அருமை தெரியாதவனே.....
நீதியை மனிதர்களுக்கு போதிக்கும் இந்நூல்..படிப்பவர்களை மேன்மைப்படுத்தும் தன்மையை உடையது.
133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள்..133 அடி உயரத்தில் குமரி முனையில் நின்றுக்கொண்டு இந்தியாவை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் வள்ளுவன்.இந்நூல் சங்ககாலத்திற்கு பிந்தைய நூலாக இருந்தாலும்..எந்நாளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்திருக்கிறது.
சென்ற நூற்றாண்டில் இந்நூல் ஒரு இலக்கியமாக திகழ திராவிட இயக்கத்தினர் தான் காரணம்.பின்னரே..இது தமிழகத்தின் முதன்மை நூலானது எனலாம்.
தமிழ்ப்பாட புத்தகங்களில் ஆரம்ப பள்ளி முதல்...உயர் கல்விவரை திருக்குறள் இடம் பெற்றுவருகிறது.தமிழக பேருந்துகளில் குறள் இடம் பெற ஆரம்பித்ததுமே..குறள் பற்றி தெரியாதவர் வாய்களிலும் குறள் ஒலிக்கத் தொடங்கியது எனலாம்.
தமிழில் இருந்து உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்கான பெருமை இதையே சேரும்.
அண்டை மாநிலம்..வள்ளுவன் சிலை வைக்க சம்மதிக்காவிட்டால்..வள்ளுவனுக்கு இழுக்கு இல்லை...இழப்பு இல்லை..
நஷ்டம் அம்மாநிலத்தவர்க்கே...
விட்டுத்த்ள்ளுவோம்..
கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்...
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஆவண செய்யுங்கள்.

ஒரு தோல்வி படம் ரீமேக்கில் வெற்றிப்படமானது..
நடிகர்,இயக்குநர் விசு விஸ்வசாந்தி என்று ஒரு நாடகக்குழு நடத்திக்கொண்டிருந்தார்.அப்போது அவர் கதை,வசனம் எழுதி ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி 'உறவுக்கு கை கொடுப்போம்'என்ற நாடகம் நடத்தப்பட்டது.மாபெரும் வெற்றி பெற்ற இந் நாடகத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திரைப்படமாக்க விரும்பினார்.
திரைக்கதையை அவர் பார்த்துக்கொண்டார்.சினிமாவிற்காக மனம் இல்லை என்றாலும் அவர் சொன்ன மாற்றங்களுக்கு விசு ஒப்புக்கொண்டார்.மகேந்திரன் இயக்கத்தில்,கே.எஸ்.ஜி., மேற்பார்வையில் அதே பெயரில் ஜெமினி கணேசன் நடிக்க வெளிவந்தது திரைப்படம்...மாபெரும் தோல்வி.
சில ஆண்டுகள் கழித்து..அதே கதையை விசு திரைக்கதை,வசனம்,இயக்கத்தில் ஏ.வி.எம்.,நிறுவனம் படமாக எடுத்தது.படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன்..சிறந்த குடும்பக்கதை என்று ஜனாதிபதியின் தங்கப்பதக்கத்தையும் பெற்றுத் தந்தது.
அந்த படம்தான் 'சம்சாரம் அது மின்சாரம்'

Sunday, December 7, 2008
தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள்
இலங்கை தமிழர் பிரச்னைக்காக பிரதமரை தமிழக அனைத்துக் கட்சி தலைவர்களும் சென்று பார்த்ததைக் கண்டு ஆத்திரமடைந்த இலங்கை போர்ப்படைத்தளபதி பொன்சேகா ..தமிழக அரசியல் தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமரிசனம் செய்துள்ளார்.
இலங்கையில் ராஜபக்ஷ அதிபராக இருந்தாலும் போர்ப் படைத்தளபதி பொன்சேகாதான்.
அவர் இப்படி கீழ்த்தரமாக தமிழக தலைவர்களை விமரிசனம் செய்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், முப்படைகளின் தலைவர் என்ற முறையில் ராஜபக்க்ஷவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இலங்கை தூதரை இது சம்பந்தமாக இந்திய அரசு வலியுறுத்த வேண்டும், வருத்தம் தெரிவிக்க அவர்கள் தவறினால் இலங்கை தூதரையும்,இதர அதிகாரிகளையும் வெளியேற்றுவோம் என எச்சரிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

20 கோடி டாலர் நோட்டு
உணவு பற்றாக்குறை,விலைவாசி உயர்வு,அரசியலில் குழப்பம் என அதிக பிரச்னைகளைக் கொண்டது அந்த நாடு.
இந்நாட்டில் அனைவரும் லட்சாதிபதிகள் ,கோடீஸ்வரர்கள் தான்.எல்லோரிடமும் லட்சம், கோடி டாலர் நோட்டுக்கள் இருக்கும்.
இங்கு 1 லட்சம் டாலர்,1கோடி டாலர்,10கோடி டாலர் நோட்டுக்களை அரசு அச்சடித்துள்ளது.ஒரு லட்சம் டாலரின் மதிப்பு 45 ரூபாய்.ஒரு ரொட்டி விலை 2 லட்சம் டாலர்.
நாளுக்கு நாள் இந்நாட்டின் டாலர் மதிப்பு குறைந்து வருவதால்..20 கோடி டாலர் நோட்டை வெளியிட அரசு முடிவெடுத்து இருக்கிறதாம்.இந்நாட்டின் 20 கோடி டாலரின் இந்நிய ரூபாய் மதிப்பு 91206 தான்.
அந்த நாடு ஜிம்பாப்வே.
இந்நாட்டு நிதி அமைச்சருக்கு பணவீக்கம் என்றால் என்ன என்று தெரியுமா?

Saturday, December 6, 2008
படம் ஓடவில்லையாயினும் பரவாயில்லை..ஓட்டுங்கள்..-நடிகர்
சமீபத்தில் தமிழ் நடிகர்.. ரித்தீஷ் நடித்த நாயகன் பட 100நாள் விழா நடந்தது.அந்த படம் முடிந்த போது, அதை வாங்கி விநியோகிக்க எந்த விநியோகஸ்தர்களும் முன்வராததால், நடிகரே தன் சொந்த பொறுப்பில் படத்தை வெளியிட்டார்.படம் எதிப்பார்த்ததைவிட சற்று நன்கு ஓடி நடிகருக்கு கணிசமான அளவு லாபத்தை ஈட்டிக்கொடுத்ததாம்.
இப்போது நடிகர் படம் எவ்வளவு நாட்கள் ஓடுமோ அவ்வளவு நிறைய நாட்கள் ஒட வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.அதனால் தியேட்டர் உரிமையாளர்களிடம், ஓட்டும் வரை ஓட்டுங்கள்,லாபம் வந்தால் எனக்கு கொடுங்கள்.நஷ்டமானால் சொல்லுங்கள்.நாம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்கிறாராம்.
இந்த சமயத்தில் நடிகர் திலகம் நடித்த தில்லானா மோகனாம்பாள் படம் 100வது நாள் விழா அன்று..படம் வெள்ளி விழா நோக்கி என விளம்பரப் படுத்தப்பட்டது.ஆனால் 125 நாட்கள் ஓடியதுமே ..வசூல் குறைவானதால்..படம் எடுக்கப்பட்டது ஞாபகம் வருகிறது.
ம்..அதெல்லாம் அப்போது..இப்போது..
ஒரு நாளைக்கு ..ஒரு காட்சி என்றே படம் ஓட்டப்படுகிறது..நூறு நாட்களோ..ஆயிரம் நாட்களோ..

படித்ததும்...கேட்டதும்... 6-12-08
1.அமெரிக்காவில் புதிய மாற்றத்தை விரும்பிய மக்கள், கறுப்பு இன ஒபாமாவை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.அதே போல, ஆந்திராவில் மக்கள் எனக்கு முடி சூட்டுவார்கள்.-சிரஞ்சீவி
2.60லட்ச ரூபாய் செலவில், கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவு மண்டபத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
3.பேரறிஞர் அண்ணா பற்றிய ஆவணப்படத்தை 6 மாதங்கள் உழைத்துச் செதுக்கி இணையத்தின் வீடியோ லைப்ரரியான 'யூ டியூப்'பில் இணைத்துள்ளார் லெனின்.எழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்..இப்போது இணையத்தில் நமக்காக சிரிக்கிறார்.
4.உங்கள் படத்தில் நல்ல அரசியல்வாதி ரோல் இருந்தால் நான் நடிக்கத் தயார் என ஷாருக்கானிடம் சான்ஸ் கேட்டிருக்கிறார் லாலு பிரசாத்.
5.உங்களுக்கு அறிவுத்தாகம் இருந்தால்..மறக்காமல் நாஞ்சில் நாடனின் தீதும் நன்றும் ஆனந்த விகடனில் படியுங்கள்..அருமையான விஷயங்கள்..அழகான நடை.. hats off naadan
6.தன்னுடைய கோட் பாக்கெட்டில் சின்ன அனுமன் படத்தை ஒபாமா வைத்திருப்பது தெரியும்.ஆனால் ஒபாமா தன் அலுவகத்தில் மகாத்மா காந்தியின்படத்தை மாட்டியிருக்கிறார்.
7.தன்மான உணர்ச்சியில் குழந்தைகளை யாரும் வெல்ல முடியாது.உலகமே தலை கீழாக ஆனாலும், குழந்தைகள் ஒருவருக்கும் பணிந்து போவதில்லை.-டாக்டர் மு.வ.
8.எம்.பி.பதவிக்கு போட்டியிட விரும்புவோருக்கு அப்ளிகேஷன் வழங்க ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க.,10000 ருபாயுடன் விண்ணப்பிக்க வேண்டும்.(!!!)(அடி என அழைக்க மனைவியே வராதபோது..குழந்தைக்கு ஆசைப்பட்டால் எப்படி)

Friday, December 5, 2008
பிரனாப் முகர்ஜியும்..இலங்கை பயணமும்..
கலைஞருடன் தில்லி சென்ற அனைத்துகட்சித் தலைவர்களும் இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி பிரதமரிடம் பேசினர்.வழக்கம் போல விளக்கெண்ணெய் தரத்துடன்..நாத்தழு தழுக்க பிரதமர் அனைத்தையும் கேட்டார்.பின் கலைஞர் கேட்டுக்கொண்டதன் பேரில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை இலங்கை அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.இது செய்தி..இலங்கையில்,ப்ரனாப் ,ராஜபக்க்ஷே சந்திப்பு எப்படி என நமது சரடு நிருபர்.
ராஜ- வாங்க பிரனாப்..நாம இப்பத்தானே 15 நாட்களுக்கு முன் இந்தியாவில் சந்தித்தோம்.
பிர-ஆமாம்..ஆனாலும்..கலைஞர் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்..அவருக்காகத்தான் பிரதமர் உங்களிடம் என்னை இப்போது அனுப்பியிருக்கிறார்.
ராஜ_மும்பையில் குண்டுவெடிப்பு...(என இழுக்க)
பிர-ஆம்..அப்பாவி மக்கள் 197 பேர் மரணம்..500க்கும் மேற்பட்டோர் காயம்
ராஜ-தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி..
பிர_ஆமாம்..ஆமாம்..உலநாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தூள்ளார்களே..
ராஜ-இன்னொரு நாட்டில் பயிற்சி பெற்றவர்கள் உங்கள் நாட்டில் புகுந்து அப்பாவி மண்ணின் மைந்தர்களை கொன்றிருக்கிறார்களே..
பிர-ஆமாம்..அது போகட்டும்..நான் வந்த வேலை..
ராஜ-தெரியும்..முதலில் வேற்று நாட்டான் உங்கள் நாட்டுக்குள் வந்து..உங்கள் மக்களை கொன்றிருக்கிறான்.அதைப்பற்றி முதலில் கவலைப் படுங்கள்.விடுத்து எங்கள் நாட்டுக்குள் தமிழர்
அழிவது பற்றி..பிறகு பேசலாம்
பிர-நீங்கள் சொல்வதும் சரி..ஆனால் பிரதமரிடம் என்ன சொல்ல..
ராஜ-போர் நிறுத்தம் இல்லை என்று சொல்லுங்கள்
பிர-கலைஞர் கேட்டால்....
ராஜ-40வருட போராட்டம் 14 நாட்களில் முடியுமா? என்று சொல்லிவிடுங்கள்.
பிர-அப்போது நான் வருகிறேன்..நம் சந்திப்பு இவ்வளவு வெற்றி அடையும் என நான் எதிர்பார்க்கவில்லை..
(பிரனாப் விடைபெறுகிறார்0

1.மெகா சீரியலோட டைரக்டர் கல்யாணத்திற்கு போனது தப்பாயிடுச்சு
ஏன்?
கல்யாணப் பத்திரிகைல போட்டிருந்த பொண்ணு காயத்ரிக்கு பதிலா சாவித்ரின்னு மணப்பெண்ணை மாத்திட்டார்
2.தயாரிப்பாளர் ஏன் இயக்குநர் மேல கோபமாய் இருக்கார்?
டூயட்டை நியூசிலாந்தில வைச்சுக்கலாம்னு சொல்லி..அங்க போயிட்டு..அங்கயும் கதானாயகி தொப்புளையே பாட்டு முழுதும் காட்டியிருக்காராம்
3.தொண்டர்கள் எறும்புபோல செயல்படணும்னு சொல்ற தலைவர்..பேரணியை நத்தைப் போல செயல்படுங்கள்னு சொல்றாரே
அப்போதுதானே..ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க 8 மணி நேரம் ஆச்சுன்னு பத்திரிகைல செய்தி வரும்.
4.தலைவருக்கு பிறந்த குழந்தை அஞ்சாநெஞ்சனா வருவான்னு எப்படி சொல்ற
குழந்தை அழும்போதே வாள்..வாள் ..என்று அழுதாம்
5.எமன்(சித்திரகுப்தனிடம்)கம்ப்யூட்டரை இயக்கி..இன்று யார் யார் உயிரை எடுக்கணும்னு கிங்கரர்களுக்குஒரு பிரிண்ட் அவுட் போட்டுக்கொடுத்திடு
6.டாக்டர்-இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும்..பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்கங்க..
நோயாளி-(பொக்கைவாயைக்காட்டி) பல்லை கடிச்சுக்க முடியாதே டாக்டர்.

Thursday, December 4, 2008
ஒயிட் காலர் ஊழியர்களே உஷார்
சமீபத்திய ஆய்வின்படி ..ஒயிட் காலர் எனப்படும், முழு நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இதய நோய்க்கான தாக்கம் அதிகம் இருக்கிறது என தெரிய வந்திருக்கிறது.அதிலும் குறிப்பாக ஐ.டி.,துறையினரிடையே இது அதிகம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது,
நம் ரத்தத்தில் HDL.,LDL.,இரு வகை கொலஸ்ட்ரால் உண்டு.இதில் HDL எந்த தீங்கும் விளைவிக்காது.மேலும் இது LDL கொலாஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால்..HDLஐ நல்ல கொழுப்பு என்கிறோம்.சாதாரணமாக இந்தியர்கள் ரத்தத்தில் இது குறைவாகவே இருக்கிறது.இது அதிகரிக்க வேண்டுமாயின் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
பொதுவாக நாம் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுவதில்லை.சிலருக்கு நேரமும் இருப்பதில்லை.இதனால் LDL என்னும் கெட்ட கொழுப்பு அதிகரித்து ஹார்ட் அட்டாக்கிற்கு வழி வகுக்கிறது.
உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.ஆண்களுக்கு 36 முதல் 38 அங்குலங்களும்..பெண்களுக்கு 30 முதல் 32 அங்குலங்களுக்குள்ளும் இடுப்பளவு இருக்க வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறையேனும் ரத்தக்கொழுப்பு,நீரிழிவு பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.தினமும் 6 மணி நேரமாவது தூங்குங்கள்.ஒரு மணி நேரமாயினும் உடற்பயிற்சி செய்யுங்கள்.எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.
சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்.
வாழ்வில் பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் இல்லை..ஆரோக்யமான வாழ்வுதான் செல்வம்.

கத்திரிக்காய் முற்றல் என்றால் கோபம் வருவானேன்?
எனக்கு பிடித்த காய் கத்திரிக்காய்..ஆஹா!அதன் மணம்,சுவை என நாளெல்லாம் புகழ்ந்துக் கொண்டே இருக்கலாம்.ஆனால் அழுகல் கத்திரிக்காய் பிடிக்காது.கடையில் காய்கறி வாங்கப்போகும் போது,கடைக்காரரிடம் 'ஐயா..கத்திரிக்காய் நன்றாக இல்லையே!'என்றேன்.
உடனே கடைக்காரர்'என்ன தைர்யம் இருந்தால் இப்படி சொல்வ..பக்கத்துக்கடையில் பீன்ஸ் முத்தலா கிடக்கு..அங்கப் போய் சொல்லிப்பார்'என்றார்.
'ஐயா..எனக்கு பிடித்ததைத் தானே ,நன்றாக இல்லாவிடின் குறை சொல்ல முடியும்..எனக்குப் பிடிக்காத ஒரு காயைப் பற்றி எனக்கு கவலையில்லை'என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
உங்களுக்கு பிடித்தது பொதுவில் இருக்கும்போது,அதைப் பற்றிக்கூற உங்களுக்கு உரிமை உண்டு என்பது கடைக்காரருக்கு ஏன் தெரியவில்லை?

Wednesday, December 3, 2008
தமிழா உன் நெற்றி தயாராகட்டும்..
முல்லை பெரியாறுஅணை சம்பந்தமாக நாடாளுமன்ற நிலைக்குழுவினர் சாம்பசிவ ராவ் தலைமையில் அணையை பார்வையிட்டார்கள்.10 நிமிடங்கள் பார்வையிட்டு விட்டு..'அணை பலவீனமாக உள்ளது,உடைந்தால் 5 மாவட்டங்கள் அழிந்துவிடும், ஆகவே புது அணை கட்டவேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.
ஆனால், உச்ச நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கில்'அணை பலமாக இருப்பதாக' நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.இத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கேரளா ஒத்துழைப்புத் தர வேண்டும்.
10 நிமிடங்களே பார்வையிட்டுவிட்டு அணை பலவீனமாக இருக்கிறது என்ற கருத்தை ஏற்கமுடியாது என்றும்,இக்குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு மத்ய அரசிடம் தன் ஆட்சேபத்தை தெரிவிக்கும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும்,சட்ட அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தில் இந்த பத்து பேர்
பஸ் கண்டக்டர்- நம் அப்பா..அம்மாவிற்கு பிறகு..முன்னேறு..முன்னேறு..என்று நம் முன்னேற்றத்தில் குறியாய் இருப்பவர்.
முடிவெட்டுபவர்-நமக்குள்ள தலைக்கனத்தைக் குறைப்பவர்
பால்காரர்-நாட்டில் தண்ணீர் பஞ்சம் இவருக்கு மட்டும் வரவே வராது
ஆசிரியர்-தூக்கம் வராமல் அவதிப்படுபவர் இன்னலை தவிர்ப்பவர்
அரசியல்வாதி-பொய் வாக்குறுதி கொடுப்பதை சொல்லித் தருபவர்
நண்பன்-தேவைப்பட்ட போது கடன்கொடுப்பவன்
டாக்டர்-நம்மிடம் உள்ள பணத்திற்கேற்ப நம் வியாதியை தீர்ப்பவர்
மகன்/மகள்- பணம் தேவை என்னும் போது நம் சொல்படி நடப்பவர்கள்
வேலைக்காரி-நம் ஏரியா செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தி
மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Tuesday, December 2, 2008
பாகிஸ்தானில் உள்ள தீவிரமுகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் : ஒபாமா
வாஷிங்டன் : மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரம் இருந்தால், அந்நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு, தனது நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளதாகவும், தீவிரவாதிகள் தாக்குதல் மூலம் இந்தியாவைப் பணிய வைக்க முடியாது என்றும் கூறினார். மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரம் இருந்தால், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா, குண்டு வீசித்தாக்குதல் நடத்தலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்தியாவிற்கு நீதி கிடைக்க அமெரிக்கா பாடுபடும் என்று தெரிவித்த ஒபாமா, மும்பை நிலவரம் குறித்து, தான் நடத்திய முதல் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிட்டார். தான், அமெரிக்காவின் அதிபராக, தான் வரும் ஜனவரி 20ஆம் தேதி தான், பதவி ஏற்க இருப்பதால், இதுதொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தற்போது தன்னால் முடிவு எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
நன்றி -குமுதம் செய்திகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் இராணுவம்..
மும்பை தீவிரவாதிகள் பிடியிலிருந்து விடுபட்டு..நொண்டி..நொண்டி பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.
பிடிபட்ட பயங்கரவாதி 5000 பேரை கொல்ல திட்டம் வைத்திருந்தோம் என சொல்கிறான்.இப்பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.மேலும் தாஜ் ஓட்டலில் இருந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு பேசியுள்ளதாகவும் தெரிகிறது.பாகிஸ்தான் விசாரணையில் ஒத்துழைக்க அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு,கடைசியில் அந்த அதிகாரியையும் அனுப்ப இசையவில்லை.
இப்படிப்பட்ட நெருக்கடியான வேலையில், எல்லையில் பாகிஸ்தான் ஒரு லட்சத்திற்கும் மேலான இராணுவத்தினரை குவித்துள்ளதாக தெரிகிறது.ஒவ்வொரு முறையும்,நாம் வெற்றிக்கனியையே இவர்களுடன் போரின்போது சுவைத்து வருகிறோம்.அத் தருணங்களில் பாகிஸ்தான் தந்திரமாக,போர் நிறுத்தம் செய்து பேச்சு வார்த்தைக்கு அழைக்கும்.
பட்டது போதும்.இம்முறை பாகிஸ்தானை ஓட ஓட விரட்டுவோம்.அவர்கள் பிடித்து வைத்திருக்கும் காஷ்மீரப் பகுதியையும் மீட்போம்..என அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரு மித்த கருத்துடன்,ஒற்றுமையாக செயல் பட வேண்டிய நேரம் இது.

Monday, December 1, 2008
அதி புத்திசாலி அண்ணாசாமியின்10 சந்தேகங்களும் ...சன் டீ.வி.யும்
மாறன் சகோதரர்களுக்கும், கலைஞர் குடும்பத்திற்கும் சமரசம் எழுந்ததை ஒட்டி சன்,கலைஞர் டீவி க்கள் சம்பந்தமாக அண்ணாசமிக்கு சந்தேகம் வந்து..இரவு முழுதும் உறக்கமில்லையாம்.
அவர் சந்தேகங்கள்
1.டாப் டென் படங்களில் இனிமேல் முதலில் வாரணம் ஆயிரம் வருமா..இல்லை தெனாவட்டு வருமா?
2.தசாவதாரம்,குசேலன் படங்களை சன் டீ.வி,யிலும் பார்க்க முடியுமா பின்னாட்களில்
3.தூசிதட்டி சில நாட்களாக போட்டு வரும் விஜய்காந்த்,சரத்குமார் படங்கள் நிலை என்ன ஆகும்.
4.மானாட மயிலாட சன்னில் வருமா? சன் டி.டி.எச்.இல்லாமல் அனைவரும் சன்னின் காமெடி சேவை நிகழ்ச்சியை பார்க்க முடியுமா?
5.கருத்துக்கணிப்பு சன்/தினகரன் இனி நடத்துமா?
6.ஆற்காட்டார் நிலைமை என்ன?
7.ஸ்பெக்ட்ரம் ஊழல் இனி அடைக்கி வாசிக்கப்படுமா?
8.மாறன் நினைவு நாளன்று ,ஒரு வேளை மாறன் கலைஞர் கனவில் வந்து ஏதெனும் கூறியிருப்பாரா?
9.தயாநிதிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் டிக்கட் உண்டா?
10.முக்கியமான சந்தேகம்...சமரசம் என்று சும்மா கிண்டலுக்கு சொன்னேன் என்று திடீரென கடைசியில் கலைஞர் கூறிவிடுவாரா?

மிதக்கும் சென்னை..ஜெ தான் காரணம்..
சமீபத்தில் 4 நாட்களாக பெய்த மழையால்..சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.
அதற்கான காரணம் யார் என சன் டீ.வி.நிபுணர் குழு ஆராய்ந்து, ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.அவ்வறிக்கையில் ஜெ ஆட்சியில் இருந்த காலங்களில்தான் சென்னை குடிநீருக்கு ஆதாரமாக இருந்த ஏரிகள் எல்லாம் ஆக்கிரப்பு செய்யப்பட்டு அங்கு கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்தன என்றும்,வடிகால்கள் பல அடைக்கப்பட்டு விட்டன என்றும் தெரிந்துள்ளது.மேலும் அம்மையார் ஒருமுறை தனக்கு தண்ணீர் ராசி உள்ளது என்று சொன்னதையும் நிருபர் குழு ஆராய்ந்து,கலைஞர் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே லாரிகணக்கில் தண்ணீரை வாங்கி கொட்டிவிட்டு ஜெ நீலிக்கண்ணீர் வடிப்பதாக கூறியுள்ளது.
(கலைஞர் குடும்பமும்,சன் டி.வி.சகோதரர்களும் சுமுகமானப்பின் சன் நியூஸ் செய்தியில் இப்படி சொன்னால் ஆச்சர்யப் படத் தேவையில்லை)

Subscribe to:
Posts (Atom)