Friday, September 5, 2008

அடுத்த படத்துக்கு தயாராகிறார் ஜே.கே,ரித்திஷ்

ச்சின்னப்பையன்..நம்ம அடுத்த படம் ஹிட்ன்னு கிண்டல் பண்றார்.அடுத்தும் நாயகன் மாதிரி ஒரு ஹிட் படம் கொடுக்கணும்.என சொன்ன ரித்திஷ்..படத்தோட பெயர் தளபதி என்றாராம்.நண்பர்கள் கதையைப் பற்றி கேட்க...அதை பற்றி கவலை இல்லை...என் கையில் துப்பாக்கி ஒன்று இருந்த்விட்டால் போதும்..சேஸிங் சீன்ஸ்..தோட்டா சத்தம்..என் தலைக்கு மேல் பறக்கும் ஹெலிகாப்டர்னு கதை பண்ணிடுவேன் என்றவர்..பாட்டுக்கள் மட்டும் 'நிலா..நிலா.'.போல் சாங்க்ஸ் வேண்டும் என்றிருக்கிறார்.தயாராய் இருந்த பாடலாசிரியர் மூவர் தங்கள் பாடல்கைள்க்
காட்டினர்
முதல் பாடலாசிரியர்-பா பா பிலாக்சீப் ஹேவ் யௌ எனி வுல்...எஸ் சார் எஸ் சார் திரீ பேக்ஸ் புல்

ரித்திஷ்- நோ..நோ..இந்த பாட்டு வேண்டாம்..தமிழில் வேண்டும்..என் தானைத்தலைவனுக்கு அதுதான் பிடிக்கும்.(இரண்டாம் பாடலாசிரியரிடம்) நீங்க சொல்லுங்க..

இரண்டாம் பாடலாசிரியர்-அம்மா..அம்மா..வா..வா..ஆசை முத்தம் தா தா.இலையில் சோறு போட்டு ஈயை தூர ஓட்டு..உன்னை போல் அம்மா ஊரில் யாரும் இல்லை.என்னால் உனக்குத் தொ
ல்லை ஏதும் இனி இல்லை...

ரித்திஷ்_ போதும் போதும் ..மன்னன்ல ரஜினி பாட்டு 'அம்மா என்று அழைக்காத..' மாதிரி இதுவும் ஹிட் ஆயிடும்..இந்த பாட்டு இருக்கட்டும்.(3வது பாடலாசிரியரிடம்) உங்க பாட்டு..

3ம் பாடலாசிரியர்- யானை யானை அரசரானை..அரசரும் அரசியும் ஏறும் யானை..கட்டிக் கரும்பை முறிக்கும் யானை..

ரித்திஷ்-பியூட்டிஃபுல்..இந்த பாட்டும் கண்டிப்பாய் ஹிட் ஆகும்

(அதற்குள் ஃபோன் வருகிறது..கலைஞர் பேசுகிறார்)

கலைஞர்- தம்பி..கழகக் கண்மனி ரித்திஷ் உன் படத்திற்கு அருமையான பாட்டு வேண்டும்..என்றாயாம்..வசைபாடும் பாடல்களாகவே சில காலமாக எழுதிவரும் நான்..உனக்காக இப்பாட்டை எழுதி உள்ளேன்..கேட்டிடுவாய்
'அ என்றால் அஞ்சா நெஞ்சன்
அ என்றால் அன்னை அஞ்சுகம்
அ என்றால் அண்ணா
அ என்றால் அன்பழகன்
ஆ என்றால் ஆதவன்
ஆ என்றால்.."

ரித்திஷ்-தலைவா இது போதும்..படம் சூபர் ஹிட்தான்.கண்டிப்பாக இது கலைஞர் டி.வி.யில் டாப் டென்னில் முதல் இடம் பிடிக்கும்.

கலைஞர்- தம்பி..இதைத் தவிர அழகின் ஓசை என ஒரு கதையும் உனக்காக வைத்துள்ளேன்

ரித்திஷ் ராங்க் நம்பர் என ஃபோனை வைக்கிறார்.

20 comments:

கோவி.கண்ணன் said...

இராத கிருஷ்ணன் ஐயா,

அஞ்சா நெஞ்சனை விடமாட்டிங்க போல இருக்கு !

கல(ழ)க கண்மணிகள் ஆட்டோ அனுப்பிடப் போறாங்க !

:)
******

உங்களைப் பழிக்கு பழி வாங்கப் போகிறேன். எப்படியா ?

இராதா கிருஷ்ணன் ஐயா நீங்களுமா ?
:)))))))

ஜேகேஆருக்கு அம்பத்தூரில் ரசிகர் மன்றம் எதும் ஆரம்பிக்கு எண்ணம் இருக்கா ?

வால்பையன் said...

நம்ம பதிவர்களிட்ட கேட்டா பட்டய கிளப்ப போராங்க!

சின்னப் பையன் said...

:-)))))))

சின்னப் பையன் said...

எப்படியோ தலயோட பேரைப் போட்டு 'சூடு'ஆகணும்னு முடிவு பண்ணிட்டீங்க... நடத்துங்க.... (அட... என் பேரை சொல்லலீங்க....!!!)...:-))))

rapp said...

//கல(ழ)க கண்மணிகள் ஆட்டோ அனுப்பிடப் போறாங்க !
//

அனுப்பறதாத்தான் இருக்கோம். துடிக்கறது புஜம்(எங்க தலயோடது).

இராப்,
தலைவி,
அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

Kanchana Radhakrishnan said...

//உங்களைப் பழிக்கு பழி வாங்கப் போகிறேன். எப்படியா ?

இராதா கிருஷ்ணன் ஐயா நீங்களுமா ?
:)))))))

ஜேகேஆருக்கு அம்பத்தூரில் ரசிகர் மன்றம் எதும் ஆரம்பிக்கு எண்ணம் இருக்கா ?//உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் பலகற்றும்
கல்லார் அறிவி லாதார்
என்ற குறள் படி நடக்கிறேன்.
ஆமாம்..நீங்கள் எண் ரித்திஷ் பெயரைக்கூட சொல்வது தவறு என ஜே.கே.ஆர்.என்கிறீர்கள்.அவ்வளவு மரியாதையா?
(இது எப்படி இருக்கு)

Kanchana Radhakrishnan said...

// வால்பையன் said...
நம்ம பதிவர்களிட்ட கேட்டா பட்டய கிளப்ப போராங்க!//


கமல் படத்தைவிட இவர் படத்துக்கு வசூல் அதிகமாமே (கமல் படம் இப்போ எத்தனையாவது வாரம் என்பது கணக்கு இல்லை).அதனால் நீங்க சொல்றாப்போல ஆதரவு இவருக்கு கொஞ்சம் அதிகம் தான் போலிருக்கு., அடக்கித்தான் வசிக்கணும் போல.

Kanchana Radhakrishnan said...

// ச்சின்னப் பையன் said...
எப்படியோ தலயோட பேரைப் போட்டு 'சூடு'ஆகணும்னு முடிவு பண்ணிட்டீங்க... நடத்துங்க.... (அட... என் பேரை சொல்லலீங்க....!!!)...:-))))//


ரித்திஷே உங்களுக்காகத்தான் அடுத்த படம் ஹிட் கொடுக்கணும்னு நினைக்கிறார்..ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பணிவு கூடாது

Kanchana Radhakrishnan said...

//rapp said...
//கல(ழ)க கண்மணிகள் ஆட்டோ அனுப்பிடப் போறாங்க !
//

அனுப்பறதாத்தான் இருக்கோம். துடிக்கறது புஜம்(எங்க தலயோடது).

இராப்,
தலைவி,
அகில உலக அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்//


நல்லா கிளப்பறீங்க பீதியை.....

மங்களூர் சிவா said...

/
கதையைப் பற்றி கேட்க...அதை பற்றி கவலை இல்லை...என் கையில் துப்பாக்கி ஒன்று இருந்த்விட்டால் போதும்..சேஸிங் சீன்ஸ்..தோட்டா சத்தம்..என் தலைக்கு மேல் பறக்கும் ஹெலிகாப்டர்னு கதை பண்ணிடுவேன்
/

:)))))))))))))
நாயகன்ல தலைக்குமேல ஒரு கார் பறந்துச்சே பாத்து நொந்துட்டேன்

மங்களூர் சிவா said...

/
இரண்டாம் பாடலாசிரியர்-அம்மா..அம்மா..வா..வா..ஆசை முத்தம் தா தா.இலையில் சோறு போட்டு ஈயை தூர ஓட்டு..உன்னை போல் அம்மா ஊரில் யாரும் இல்லை.என்னால் உனக்குத் தொ
ல்லை ஏதும் இனி இல்லை...

ரித்திஷ்_ போதும் போதும் ..மன்னன்ல ரஜினி பாட்டு 'அம்மா என்று அழைக்காத..' மாதிரி இதுவும் ஹிட் ஆயிடும்.
/

நிலா நிலா ஓடிவா நிஜமாவே நல்லாதான் இருக்குங்க ஓவரா கிண்டல் பண்ணாதீங்க

:)))))))))))))

மங்களூர் சிவா said...

/
3ம் பாடலாசிரியர்- யானை யானை அரசரானை..அரசரும் அரசியும் ஏறும் யானை..கட்டிக் கரும்பை முறிக்கும் யானை..

ரித்திஷ்-பியூட்டிஃபுல்..இந்த பாட்டும் கண்டிப்பாய் ஹிட் ஆகும்
/

நாமல்லாம் இருக்கோமே ஹிட் ஆக்காம விட்டுடுவோமா???

மங்களூர் சிவா said...

/
கலைஞர்- தம்பி..இதைத் தவிர அழகின் ஓசை என ஒரு கதையும் உனக்காக வைத்துள்ளேன்

ரித்திஷ் ராங்க் நம்பர் என ஃபோனை வைக்கிறார்
/

:))))))))))))))))))

டோட்டல் டேமேஜ்

Kanchana Radhakrishnan said...

//
//நாயகன்ல தலைக்குமேல ஒரு கார் பறந்துச்சே பாத்து நொந்துட்டேன்//

காருக்கே நொந்துட்டா..ஹெலிகாப்டர்ன்னா..:-))))))

Kanchana Radhakrishnan said...

//நிலா நிலா ஓடிவா நிஜமாவே நல்லாதான் இருக்குங்க ஓவரா கிண்டல் பண்ணாதீங்க

:)))))))))))))//

அடடா..உண்மையை சொன்னாக்கூட கிண்டல்னு நெனச்சா எப்படி சிவா..

Kanchana Radhakrishnan said...

//நாமல்லாம் இருக்கோமே ஹிட் ஆக்காம விட்டுடுவோமா???//

அதுதானே..நமக்கே தெரியறப்போ வருங்கால சூப்பர் ஸ்டார்,உலக நாயகன் ரித்திஷுக்குத் தெரியாதா என்ன..அதைத்தான் சொன்னேன்

Kanchana Radhakrishnan said...

//:))))))))))))))))))

டோட்டல் டேமேஜ்//

:-)))))))))))

செல்வன் said...

அடுத்த ஜே.கே.ரித்திஷ்சின் படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன்.

Kanchana Radhakrishnan said...

//செல்வன் said...
அடுத்த ஜே.கே.ரித்திஷ்சின் படத்தை பார்க்க ஆவலாய் உள்ளேன்.//


படம் வெளிவரும் அன்று அதற்கான டிக்கட்டை ரித்திஷ் உங்களுக்கு அனுப்பி வைப்பார் என அகில உலக ரித்திஷ் ரசிகர் மன்ற செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

Kanchana Radhakrishnan said...

//ஜேகேஆருக்கு அம்பத்தூரில் ரசிகர் மன்றம் எதும் ஆரம்பிக்கு எண்ணம் இருக்கா ?//
நீங்கள் தலைவராக இருக்க சம்மதித்தால்...நான் ஆரம்பிக்கத் தயார்