Thursday, September 25, 2008

இருவரும்..குசேலனும்..பின்னே சிவாஜியும்...

இருவர் படம் சரிவர ஓடாததால்..பட வினியோகஸ்தர்களுக்கு ஒரு பகுதி பணத்தை திருப்பிக் கொடுத்தாராம் மணரத்னம்..
அதேபோல..பாபா படம் ஓடாததால் ரஜினி கொஞ்சம் பணத்தை திருப்பிக்கொடுத்தாராம்.
குசேலன் படமும் நொண்டுவதால் சில கோடிகளை விநியோகஸ்தர்களுக்கு திருப்பிதருவதாக செய்திகள் வந்தன.
கொடுத்தாரா என இந்த நாள்வரை தெரியவில்லை.
இது போன்று திருப்பிக் கொடுப்பதில் மணிரத்னம் முன்னோடியாக இருந்தார் என செய்திகள் வருகின்றன.,
ஆனால் இந்த பழக்கத்தைவிட.பெருந்தன்மையாக சிவாஜி கணேசன் நடந்துள்ளது...பாதி பேருக்குத் தெரியாது..பாதி பேருக்கு மறந்திருக்கும்.
சிவாஜி நடித்து பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு ..மா பெரும் பொருட்செலவில் கர்ணன் படம் எடுத்த்தார்.
படம் சாந்தி தியேட்டரில் வந்தது.,ஆனால் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை....பட அதிபருக்கும் நஷ்டம்.,
உடனே சிவாஜி பந்துலுக்கு ஒரு படம் இலவசமாக பண்ணித்தருவதாகக் கூறினார்.,
அப்படி அதிக செலவில்லாமல் எடுக்கப்பட்ட படம் முரடன் முத்து.
சுமாராக ஓடியது.
ஆனால்..என்ன காரணத்தாலோ... பந்தலு சிவாஜியை விட்டு விட்டு எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை பிறகு எடுத்தார்.

3 comments:

குடுகுடுப்பை said...

பந்துலு மல்லுவா

சின்னப் பையன் said...

லு இருக்கறதாலெ அவருலு கண்டிப்பாலு தெலுகுலு.....

Kanchana Radhakrishnan said...

//குடுகுடுப்பை said...
பந்துலு மல்லுவா
ச்சின்னப் பையன் said...
லு இருக்கறதாலெ அவருலு கண்டிப்பாலு தெலுகுலு.....//



பந்துலு கன்னடத்துக்காரர்.தெலுங்கு,கன்னடம்,மலயாளம்,தமிழ் நான்கு மொழிகளிலும் படம் எடுத்துள்ளார்.தமிழில் சிவாஜி நடிக்க,வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன்,பலேபாண்டியா,கர்ணன்,முரடன் முத்து ஆகிய படங்களையும்.எம்.ஜி.ஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன்,ரஹசிய போலிகே115,தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய படங்களை எடுத்துள்ளார்.