Thursday, April 2, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(3-4-09)

1. உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் எப்போதும் 3 மூக்குக் கண்ணாடிகள் இருக்குமாம்.இத்தனை கண்ணாடிகள் எதற்கு என்று ஒருவர் கேட்டாராம்.அதற்கு அவர் 'படிப்பதற்கு ஒன்றை பயன்படுத்துவேன்.இன்னொன்று தூரப்பார்வைக்கு.இவை இரண்டும் அடிக்கடி காணாமல் போவதால்..தேடுவதற்கு மூன்றாவது கண்ணாடி' என்றாராம்.

2.தமிழ் மொழியின் சிறப்பு ஒன்றை பாருங்கள்..
"அ" வில் ஆரம்பிக்கும் சொற்கள் கிட்டே கொண்டுவருவதுடன் சம்பந்தப் பட்டவை. அண்மை,அருகாமை,அப்புதல்,அள்ளுதல்,அணைத்தல்
"உ" எழுத்து தூரத்தள்ளுவதற்கும்,மறைப்பதற்கும் உரித்தானது,..உதைத்தல்,உமிழ்தல்,உண்ணுதல்,உதறுதல்
"இ" எழுத்து..கீழே கொண்டுவருவதற்கான சொல்...இடுதல்,இறக்குதல்,இறங்குதல்,இழிதல்
"எ" எழுச்சி வார்த்தைகள்..எடுத்தல்,எட்டுதல்.எய்தல்,எழுதல்

3.நிகழ்ச்சிகளில் தலை காட்ட 1 கோடி, டி.வி.ஷோக்களில் ஒரு எபிசோடிற்கு 10 கோடி, படத்தில் நடிக்க 15 கோடி, விளம்பரம் மூலம் ஆண்டுக்கு 150 கோடி..இது ஹிந்தி ஸ்டார் ஷாருக்கானின் வருமானப் பட்டியல்.சராசரியாக நிமிடத்திற்கு 300 ரூபாய் சம்பாதிக்கிறாராம்.

4.தப்பு கண்டுபிடிப்பதையே தொழிலாகக் கொண்டவனுக்கு கோபம்,ஆத்திரம்,வெறுப்பு எல்லாம் ஏற்படுகிறது.தப்புக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து பொறுத்துக் கொள்ளும் தன்மை ஏற்பட வேண்டும்.

5.வெள்ளிக்கிழமைகளில் சுண்டல் ஏன் தாமதமாக வருகிறது என ஒரு நண்பர் கேட்டார். அவியல், கொத்துபரோட்டா உடன் சுண்டல் வந்தால் சேல்ஸ் இருக்காது.அவை முழு உணவு உண்ட திருப்தியைக் கொடுக்கும். ஆனால்..சுண்டல்? ஆகவேதான் உண்டபின் வருகிறது.

6.சவம்...

ஒருவனுக்கு
ஐஸ் வைத்தால்
வேண்டிய காரியம்
நடக்கும்..ஆனால்
எனக்கு
ஐஸ் வைத்தால்
என் காரியமே
நடக்கும்.

7.தேர்தல் ஜோக்..

தலைவர் தேர்தலுக்கு முன்னரே வெற்றி நமதே என்கிறாரே..
கூட்டணியில் கேட்ட தொகுதி கொடுத்துட்டாங்களாம்..அதைத்தான் சொல்றார்.

17 comments:

கோவி.கண்ணன் said...

//5.வெள்ளிக்கிழமைகளில் சுண்டல் ஏன் தாமதமாக வருகிறது என ஒரு நண்பர் கேட்டார். அவியல், கொத்துபரோட்டா உடன் சுண்டல் வந்தால் சேல்ஸ் இருக்காது.அவை முழு உணவு உண்ட திருப்தியைக் கொடுக்கும். ஆனால்..சுண்டல்? ஆகவேதான் உண்டபின் வருகிறது.
//

சுண்டல் மாலையில் தானே வரும் ?

//தலைவர் தேர்தலுக்கு முன்னரே வெற்றி நமதே என்கிறாரே..
கூட்டணியில் கேட்ட தொகுதி கொடுத்துட்டாங்களாம்..அதைத்தான் சொல்றார்.//

வெற்றி - வேட்பாளர் பெயராக இருக்கும். :)
:)

கடைக்குட்டி said...

மீ த ஃப்ஸ்ட் போடனும்னு நெம்ப ட்ரை பண்ணேன்.. நெட் கனெக்‌ஷன் புட்டுக்கிச்சு..

சுண்டல்-- வழக்கம்போல...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// கோவி.கண்ணன் said
சுண்டல் மாலையில் தானே வரும் ?//

அதாவது..அவியலையும்..கொத்துபரோட்டாவையும் அனுபவித்த பிறகு...சுண்டல் வாங்கிக்கொண்டால் எப்போவேணும்னாலும் சாப்பிடலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கடைக்குட்டி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

Raju said...

சுண்டல்ல கொஞ்சம் எண்ணெய் ஜாஸ்தியா இருக்கே?
அந்த மூனாவது கண்ணாடி பூதக்கண்ணாடியா?

மணிகண்டன் said...

ஓ ! இத்தன நாளா வெள்ளிக்கிழமை - வெள்ளிக்கிழமை வருதுன்னு நோட் பண்ணவே இல்ல. சுண்டலுக்கு தனி ருசி சார். எனக்கு சுண்டல் காலைல தான் கிடைக்குது. நல்லாவும் இருக்கு.

கொத்து பரோட்டா யாரு எழுதறாங்க ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
டக்ளஸ்
எண்ணெய் சற்று அதிகம் இருந்தால்...உடனே கெட்டுப்போகாது(தமிழ்மணத்தில் நீண்ட நேரம் இருக்கும்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணி
கொத்து பரோட்டா பொடுபவர் கேபிள் ஷங்கர்

நையாண்டி நைனா said...

எனக்கும் ஒரு ரெண்டு ரூபாய்க்கு கொடுங்க...

முரளிகண்ணன் said...

\\நிகழ்ச்சிகளில் தலை காட்ட 1 கோடி, டி.வி.ஷோக்களில் ஒரு எபிசோடிற்கு 10 கோடி, படத்தில் நடிக்க 15 கோடி, விளம்பரம் மூலம் ஆண்டுக்கு 150 கோடி..இது ஹிந்தி ஸ்டார் ஷாருக்கானின் வருமானப் பட்டியல்.சராசரியாக நிமிடத்திற்கு 300 ரூபாய் சம்பாதிக்கிறாராம்\\

எபிசோடு என்றால் கணக்கு இடிக்கும். ஒரு நிகழ்ச்சி தொடருக்கு (பல எபிசோடுகள் வருவது) 10 கோடி என நினைக்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நையாண்டி நைனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முரளிகண்ணன் said...
எபிசோடு என்றால் கணக்கு இடிக்கும். ஒரு நிகழ்ச்சி தொடருக்கு (பல எபிசோடுகள் வருவது) 10 கோடி என நினைக்கிறேன்//

ஒரு எபிசோட்..அதாவது ஒரு மணி நேர நிகழ்ச்சி (கௌன் பனேகா குரோர்பதி) 10 கோடி

நிஜமா நல்லவன் said...

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நிஜமா நல்லவன்

மங்களூர் சிவா said...

சுவையான சுண்டல்.