Sunday, April 10, 2011

எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா..மற்றும் விகடன்..







விகடனில் பொக்கிஷம் என்ற பெயரில் பழைய விகடன்களில் வந்த செய்தியை பிரசுரிப்பது தற்போது வழக்கத்தில் உள்ளது.

சமீபத்திய விகடனில்..சுட்டபிறகு..எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா சந்திப்பு என்ற தலைப்பில்..இவர்கள் இருவருடன் ஹண்டே,கே.ஏ.கே., ஆகியோர் தரையில் அமர்ந்துள்ள புகைப்படத்தை பிரசுரித்து கே.ஏ.கே., ஹண்டே ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.(இச் செய்தி வெளியானது விகடனின் 4-3-01 இதழில்)

'இது பெரியார் இறந்த தினத்தில் எடுக்கப்பட்டது..பெரியாரின் உடல் ராஜாஜி ஹாலுக்கு எடுத்து வரப்படுவது அறிந்து ராமாவரம் தோட்டத்திலிருந்து புரட்சித் தலைவருடன் நாங்கள் புறப்பட்டு

சென்றோம்..

ஒரு புறம் அமைச்சர்கள் புடைசூழ கலைஞர்..இன்னொருபுறம் காமராஜ் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அப்போது இடதுபுறம் நண்பர்களுடன் அமர்ந்திருந்த எம்.ஆர்.ராதா..புரட்சித் தலைவரைப் பார்த்து,'என்ன தலைவரே' என்றார்.

எம்.ஜி.ஆரும், 'என்ன ராதா அண்ணே' என்றார்.

துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சிகளுக்கு பிறகு முதன் முறையாக அவர்கள் சந்திக்கின்றனர்.எங்கே சண்டை வந்து விடுமோ என்ற அச்சத்துடன் நடந்த பனிப்போர் சந்திப்பு அது..

'எதுக்கு அவர் கிட்ட மோதிக்கிட்டு.தனிக்கட்சி எல்லாம்.உங்க மோதல்ல சிந்து பாடி காங்கிரஸ் குறுக்கே வந்துடப் போகுது' என்ற ரீதியில் ராதா பேசினார்.

'இல்லல்ல..சில காரணங்களால்தான் அரசியலில் இறங்கினேன்.முன் வைச்சக் காலை பின் வைக்கப் போறதில்லை' என்றார் எம்.ஜி.ஆர்., பின் பேச்சு வேறு திசையில் சென்றது.. என்றுள்ளனர்..



இனி நாம்..ராதா சொன்னதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது..

அதற்குப் பின் இரண்டு திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றின் முதுகில் காங்கிரஸ் சவாரிசெய்துக் கொண்டுதான் உள்ளது.

இது நாள் வரை இவர்கள் தயவை எதிர்பார்த்த கட்சி..இந்த முறை கலைஞரின் பலவீனத்தை அறிந்து ஆரம்பத்தில் தொகுதி பங்கீட்டில் முரண்டு பிடித்தது.

சமீபத்தில் சென்னை வந்த பிரணாப், 'தேர்தலுக்குப் பின் ஆட்சியில் பங்கு பற்றி முடிவெடுக்கப் படும்' என்றுள்ளார்..

'இருக்க இடம் கொடுத்தால் என்னையே நீ பார்க்கிற..

குறுக்கு வழியைத் தேடறே

கோண புத்தியைக் காட்டற'

என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
 

11 comments:

Unknown said...

இப்போ இருக்கிற அரசியல்வாதிகள் கலைஞர் உட்பட யாருக்கும் நாகரீகம் இல்லை,,,

goma said...

நாமெல்லாம் அவர்களைப் பற்றி பேசுவதே நம் பொன்னான நேரத்தை புழுதியில் போடுவது போல்தான்

Chitra said...

இந்த முறை தேர்தல் முடிவுகள் தான், மக்கள் எந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் வாக்களித்து இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.

Jayadev Das said...

\\இது நாள் வரை இவர்கள் தயவை எதிர்பார்த்த கட்சி..இந்த முறை கலைஞரின் பலவீனத்தை அறிந்து ஆரம்பத்தில் தொகுதி பங்கீட்டில் முரண்டு பிடித்தது.
\\காமராஜர் மற்றும் அண்ணாவுக்கு முன்னால் வரைக்கும்
இருந்த முதல்வர்களை விட நல்லாட்சியை அதுக்கப்புறம் வந்த அண்ணாவும்+'கலக'ங்களும்
கொடுத்துட்டானுங்களா? ஹி...ஹி..ஹி.. மாத்தி மாத்தி சுரண்டி தின்னுட்டு மக்களை ஆண்டிகலாக்கி விட்டுட்டானுங்க, கையில திருவோடு குடுக்காதது ஒண்ணுதான் பாக்கி. ஏன் இவனுங்கள் கையில் நாற்பது எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி கப்பல் வேணும், தொலைத்
தொடர்பு வேணுமுன்னு, ஓநாய் தான் அடித்த இரையில் எந்தெந்தப் பகுதி ருசியா இருக்குமோ அதெல்லாம் முதலில் சாப்பிடுமாமே அது மாதிரி கேட்டு வாங்கி கொல்லையடிச்சானுன்களே அத எங்க போயி சொல்வது? சேது சமுத்திர திட்டம் வேணும் என்று தரையில் புரண்டு அழுதானுன்களே, அது என்ன உமக்கு நல்லது செய்யவா? நிறைய காசு பார்க்கலாமுன்னுதானே? பேரனுங்களுக்கும்
, மகன்களுக்கும் பதவிக்கு வீல் சேரில் டில்லி போறவன் என்னைக்காச்சும் மாநிலப் பிரச்சினைகளுக்குப் போவானா? வெறும் கடிதம் தான் போடுவான். இவனுங்களுக்கு வக்காளத்தா... ஹெ....ஹெ...ஹெ... போங்க சார்.

MANO நாஞ்சில் மனோ said...

இந்த தேர்தல் செமத்தனமான பாடங்களை எல்லா கட்சிகளுக்கும் ஏற்படுத்தும்னு நினைக்கிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//goma said...
நாமெல்லாம் அவர்களைப் பற்றி பேசுவதே நம் பொன்னான நேரத்தை புழுதியில் போடுவது போல்தான்//

நீங்க சொல்வதும் சரிதான்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கே.ஆர்.பி.செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Jayadev das