Thursday, April 14, 2011

இந்தத் தேர்தலில் ஸ்டார் பேச்சாளர் யார்..?



ஒவ்வொரு தேர்தலிலும்..குறிப்பிட்ட சில பேச்சாளர்கள் பேச்சைக் கேட்க மக்கள் விரும்புவதுண்டு.

தி.மு.க., வெற்றிகொண்டான்..அ.தி.மு.க., எஸ்.எஸ்.சந்திரன் இருவர் பேச்சிலும் சற்று ஆபாசம் இருந்தாலும்..வேடிக்கையாகப் பேசு இவர்கள் பேச்சை மக்கள் ரசிப்பதுண்டு.

அவர்கள் இருவரும் இன்று இல்லாத நிலையில்..இந்தத் தேர்தலில் யார் பேச்சு நன்றாக இருந்தது எனப் பார்த்தோமானால்..

தி.மு.க., விற்காக கலைஞரைத் தவிர..பல கூட்டங்களில் ஸ்டாலின்,வடிவேலு,குஷ்பூ ஆகியோர் பேசிய பேச்சுகள் பரவலாக கும்பலைக் கூட்டியது.

குஷ்பூ..தனக்குத் தெர்ந்த தமிழில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இருந்த இலவசங்கள் பற்றி பேசியதுடன் ஜெ பற்றியும் விஜய்காந்த் பற்றியும் சற்று தாக்கியே பேசினார்.

வடிவேலுவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்..அவர் விஜய்காந்தின் மீது உள்ள தனிப்பகையை இந்தத் தேர்தலில் பேசித் திட்டித் தீர்த்துக் கொண்டார்.பல இடங்களில் ஒரே மாதிரியே பேசினார்.தான் படங்களில் தான் கைப்புள்ள..நிஜத்தில் தைரியசாலி என்பதுபோல பல இடங்களில் இவர் பேச்சு இருந்தது.

ஸ்டாலின்..போன இடமெல்லாம் மக்கள் கூட்டம்..ஓரிரு இடத்தில் மட்டுமே ஜெ வை சற்று தரக்குறைவாகப் பேசினாரே தவிர..பெரும்பாலும் பல இடங்களில் அருமையாகப் பேசினார்.தரமானப் பேச்சு.

கலைஞர் இப்போதெல்லாம்..யாரோ எழுதித் தருவதைத் தான் படிப்பது போல உள்ளது.பார்த்தே படிக்கிறார்.

ஜெ..அ.தி.மு.க., வின் ஒரே பேச்சாளர் இம்முறை.இவரும் எழுதியதையேப் படித்தார்..பெரும்பாலும் கருணாநிதி அண்ட் கோ வை திட்டும் பேச்சாகவே அமைந்தது.

விஜய்காந்த்..சாரி..என்ன பேசினார் என்பது..அவருக்கேத் தெரியுமா எனப் புரியவில்லை..அவர் பேசியதற்கான அர்த்தத்தை பண்ருட்டியார் திரும்ப சற்றே மாற்றி சொல்ல வேண்டியிருந்தது.

தங்கபாலு...பல இடங்களில் காங்கிரஸ் என்பதை மறந்து தி.மு.க., துதி பாடினார்.

தா.பாண்டியன் பேச்சு சற்று தேவலாம் ரகம்

மற்ற குட்டிப் பேச்சாளர்கள் எல்லாம் தங்கள்..தங்கள்..தலைவர் துதி பாடுவதே கருமமாய்(!) எண்ணினர்.

ராமதாஸ்..தான் தியாகம் செய்த ஒரு தொகுதி பற்றி பேசியதுடன்..கலைஞர் 6ஆவது முறை முதல்வர் ஆவார் என பேசினார்..மனதிற்குள் 2013ல் அன்புமனி ராஜ்யசபா ஸீட் கொடுப்பார் என எண்ணிக் கோண்டே..

மொத்தத்தில் இந்தத் தேர்தலில் ஸ்டார் பேச்சாளர் என தேர்ந்தெடுக்கும் லிஸ்டில் வடிவேலு..ஸ்டாலின் மட்டுமே உள்ளனர்.

பேச்சின் தரத்தைக் கொண்டு..ஸ்டாலினே ஸ்டார் பேச்சாளர் என நான் தேர்ந்தெடுக்கிறேண்

11 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஸ்டாலின் ஜெவை பற்றி அவதூறாகப்பேசி வழக்கில் மாட்டி இருக்காரே?

தமிழ் உதயம் said...

சிங்கமுத்துவை விட்டுட்டீங்களே சார். சரியாக பயன்படுத்தப்பட்டால் வருங்காலத்தில் எஸ்.எஸ்.சந்திரன் அளவிற்கு வரலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

வடிவேல் பல்ரின் மனமும் கவர்ந்தார்

Chitra said...

கருத்து சொல்லும் அளவுக்கு, எனக்கு இதை குறித்த விவரம் தெரியவில்லை. .

vasu balaji said...

வெற்றி கொண்டான்,எஸ்.எஸ். சந்திரனையெல்லாம் சொல்லிட்டு வண்ணை ஸ்டெல்லாவை மறந்ததை வன்மையாக கண்ணடிக்கிறேன்:))))

M.G.ரவிக்குமார்™..., said...

தமிழருவி மணியன்,சீமானை மறந்து விட்டீர்களே?

MANO நாஞ்சில் மனோ said...

அட போங்கப்பா நமக்கு உழைச்சாத்தான் சோறு....

நானானி said...

அடப் போங்கப்பா....தாங்கலை.

ராமனையும் ராவணனையும் விட்டால் இங்கு வேற ஆளே கண்ணுக்கெட்டிய தூரம் தெரியவில்லை.
வடிவேலு தன் பாடும் திறமைக்கு பிரச்சார வேனையே மேடையாக பயன் படுத்திக்கொண்டார். இதில் ஸ்டாராவது ஒண்ணாவது.

goma said...

கூட்டம் கூட்டிய பேச்சாளர் வடிவேலு....ஆனால் சிறந்த பேச்சாளர் இல்லை.

Unknown said...

சிறந்த பேச்சாளர்கள் யாரும் இல்லாததால் இந்த விசயத்தில் நான் 49-O

பூங்குழலி said...

பேசி வாக்கு சேகரிக்க வேண்டிய தேவை இல்லாமல் போனதால்
ஸ்டார் பேச்சாளர்கள் என்று எவருமே இல்லை இந்த தேர்தலில் ....