Sunday, July 31, 2011

நண்பன்...

துரோகம் இழைத்த
நண்பனை
மன வேதனையுடன்
மன்னியுங்கள்

2)தாய்க்கு சேவை புரியாதவன்
தாயகத்திற்கு சேவையாற்றுவான் என எண்ணினால்
தலையாய முட்டாள்தனம்

3)தண்ணீரில் வாழும்
கொழுத்த மீன்
வசதி அதிகரிக்க
பாலில் வாழ எண்ணி
வாழ்வை இழந்தது

Friday, July 29, 2011

ஓயாத வருகை

முதல்தேதி
சம்பளம் வந்ததும்
கடன்காரர்களுக்கு
கொடுத்திடணும்
எண்ணினேன்
தேதியும் வந்து
சம்பளமும் வந்து
ஓய்ந்தது
கடன்காரர்கள்
வருகை மட்டும்
ஓயவேயில்லை

Thursday, July 28, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (29-7-11)

1)ஜெயா தொலைக்காட்சியில் பணியாற்றும் ரபி பெர்னார்ட்,இந்தி தொலைக்காட்சிகளில் நடித்துவரும் ஸ்மிருதி இரானி,தொலைக்காட்சியில் வினாடி வினா நடத்தி புகழ் பெற்ற கல்கத்தா கல்வியாளர் டெரிக் ஓ-பிரைன் ஆகியோர் ஒரே சமயத்தில் மேல்சபைக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.பி.ஆகியுள்ளனர்.

2)ஈமு கோழியின் இறைச்சியில் கொழுப்பு குறைவாம்.நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு மிகச்சிறந்த அசைவ உணவு இது என அமெரிக்க இதய நலச் சங்கம் சிபாரிசு செய்துள்ளது.

3)இந்தியாவில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 1000 ஆண்களுக்கு 914 ஆகும்.இந்நிலையில் பீகாரில் பகல்பூர் மாவட்டத்தில் தஹ்ரா என்னும் கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 10 மாமரக் கன்றுகளை நடுகின்றனராம்.அவை வளர்ந்து காய்க்கும் பழங்களை விற்று அப்பெண்ணை மணமுடிக்கின்றனராம்

4)நம் நாட்டின் உயரிய விருது பாரதரத்னா...விளையாட்டுத் துறையையும் சேர்த்துக் கொண்டு சச்சினுக்கு அவ்விருதை வழங்குக் கோரிக்கை வளர்ந்து வருகிறது. பாரத் ரத்னா விருதைப் பெற்றவர் முதன் முதலில் ராஜாஜி

5)சுற்றுப்புறச் சூழலில் முதல் மாசு மிகுந்த நாடு எது என்றால்..முதலில் நாம் இந்தியா அல்லது பாகிஸ்தான் என்று சொல்வோம்.ஆனால் உண்மையில் மிகவும் அழுக்கான முதல் நாடு ஆஸ்திரேலியாவாம்.

6)சில நிறுவனங்கள் இந்தியாவிற்கு வெளியே முதலீடு செய்துள்ளன.இதில் எந்தத் தவறுமில்லை.தாராளமயத்தில் பணம் வெளியேயும் போகும் உள்ளேயும் வரும் என்றுள்ளார் நமது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி

7)சன் டிவி அலுவலகம் அமைந்துள்ள இடத்தை அரசு வழிகாட்டு மதிப்பைவிட குறைவான தொகைக்கு வாங்கியதும் முத்திரைத்தாள் கட்டணத்தில் அரசுக்கு 48 லட்சம் நஷ்டம் ஏற்படுத்தியதும் இப்போது தெரியவந்துள்ளது. அடுத்த டான்ஸி..

8) தமிழில் ஒரு நல்ல படம் வந்தது என மகிழ்ச்சியடையமுடியவில்லை.உடனே அது ஆங்கிலப்பட, கொரியப்பட தழுவல் என்று சொல்லப்பட்டுவிடுகிறது.விஜயின் மதராச பட்டிணம் வந்தபோது டைடானிக்கை நினைவுப் படுத்தியதாகக் கூறப்பட்டது.இப்போது தெய்வத் திருமகள் ஐ ஆம் சாம் ஆங்கிலப்படத் தழுவலாம்.தமிழில் அப்படியென்ன கதைகளா இல்லை . அழகர்சாமியின் குதிரை தயாரிப்பாளரைக் கேட்டுப் பாருங்கள்.

Wednesday, July 27, 2011

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி

தமிழகத்தில் இன்று நிலவும் அரசியல் சூழலில் மக்களுக்கு நம்பிக்கையும் வாழ்வும் அளிக்க ஒரு மற்று சக்தி தேவைப்படுவதால்..பாமக மாற்று அணிக்கு தலைமை ஏற்க முடிவெடுத்துள்ளது.ஆதலால் இனி எந்த திராவிடக் கட்சிகளுடன் கூட்டணிக்கு போகமாட்டோம்.உள்ளாட்சித் தேர்தலில் பாமக தலைமையில் அணி அமைத்து போட்டியிடுவோம் என நேற்று கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வருகின்ற 2016 தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நமது நிருபருக்கு தலைவர்கள் அளித்த கற்பனை பேட்டி..

கலைஞர்- மருத்துவர் ராமதாஸின் இம்முடிவு அதிர்ச்சியை கொடுக்கிறது.இதனால் இரவு முழுதும் எனக்கு உறக்கமில்லை.இனி தி.மு.க., எதிர்காலம் குறித்து அதிகப்படியான கவலை என்னை தொற்றிக் கொண்டுவிட்டது.பாமகவினர் தங்கள் முடிவை மறு பரீசலனை செய்ய வேண்டும்.

ஜெ- மருத்துவ சகோதரர் ராமதாசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.அவரை நம்பி கட்சி நடத்தும் தலைவர்கள் பற்றி அவர் சற்றும் கவைலைப்படவில்லையே! அவரின் இம் முடிவு மறு பரீசலனை செய்யாவிடின் பாமகவினர் மீதும் நில அபகரிப்பு மோசடி வழக்குகள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

விடுதலை சிறுத்தை தொல்.திருமாவளவன்- கடந்த இரு நாட்களாக மருத்துவர் என்னை அவர் கூட்டணியில் சேர தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கிறார்.இவரை நம்பி எப்படி....(மனதிற்குள்..மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்க முடியுமா)

வைகோ-நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று எண்ணுகையில் இப்படி ஒரு அறிக்கையா? வேண்டுமானால் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் எனச் சொல்லி அவரது முடிவை மாற்றப்பார்ப்போம்..

கம்யூனிஸ்ட்-ஆகா..நாம கூட்டு சேர இன்னொரு அணி தயாராயிடும் போல இருக்கே..123 ஓகே..

விஜய்காந்த்,சரத்குமார்,கார்த்திக் ..- 2016ல் நாம முதல்வர்னு நினைக்கிறோம்...இவர் இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடறாரே

மக்கள்- நம்மை மறந்துவிட்டார்களே!..அரசியலில் யார் யாருக்கு என்ன இடம்னு தீர்மானிப்பது நாமதானே!

Tuesday, July 26, 2011

வள்ளுவனும் இன்பத்துப் பாலும் -2

வள்ளுவனும் இன்பத்துப் பாலும் -2
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா?..இப்படித் தொடங்கும் ஒரு பழைய சினிமா பாடல்..
என்ன பார்வை உந்தன் பார்வை..எனை மறந்தேன் அந்த வேளை..என்ற கண்ணதாசன் வரிகளும் பிரசித்தம்.
மங்கையரின் பார்வையே ஆயிரம் கதைகள் சொல்லுமாம்..
ஆனால் வள்ளுவனுக்கு மங்கையரின் பார்வை எப்படியிருக்கிறதாம்..தெரியுமா..?
காதலியின் பார்வை ஒரு படையே தன்னைத் தாகுவது போல இருக்கிறதாம்.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து (1082)

அவள் வீசிடம் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்பி நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு சேனையுடன் வந்து என்னைத் தாக்குவது போல இருந்தது..

நாடகம் 'கருப்பு ஆடுகள்'

என்
நாடகம் 'கருப்பு ஆடுகள்' நடை பெறும் இடங்களும், தேதிகளும்..

30-7-11 -
திருமலைப் பிள்ளை தெரு..தியாகராய நகர் - YGP auditorium

1-8-11-
மயிலை தக்ஷினாமூர்தி ஆடிடோரியம் (பி.எஸ்.பள்ளி)

2-8-11 -
திருவான்மியூர் பாபாலால் பவன்

17-8-11 -
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கு

வருகை
புரிந்து கண்டுகளிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்..

 

Sunday, July 24, 2011

விலை என்ன மலிவா




பொறுத்தார்

பூமி

ஆள்வாராம்..



கேளிர்

எல்லாம்



கொத்துக்

கொத்தாய் மடிந்தபின்



பொறுக்கிகள்

தமிழ்

உடல்கள் மீது



சிம்மாசனம்

அமைத்தபின்



மீதம்

இருப்போர்



பூமி

ஆண்டால் என்ன



பூமியுடன்

இணைத்துக் கொண்டால் என்



உயிர்

இழந்தோரின்

விலை என்ன மலிவா

Saturday, July 23, 2011

பொன் எவ்வளவு






மின்மினி

பூச்சூடி


நிலாப்

பொட்டிட்டு


நட்சத்திர

உடை உடுத்தி


பரிதிக்

கணவனை


வழியனுப்ப
வந்திட்டாள்
இரவுப்பெண்


2)

காதலிக்கையில்


பொன்னென்றிட்டான்

திருமணம்

என்றதும்


பொன்

எவ்வளவென்றிட்டான்


3)

யாரைக் கொன்றுவிட்டு
இரத்தம் சொட்டச் சொட்ட
கீழ்வானத்தில் மறைகிறான்
ஆதவன்









Friday, July 22, 2011

சொர்க்கமேயானாலும்....


எங்கெங்கு நோக்கினும்

கொலை

கொள்ளை

கற்பழிப்பு - ஊழல்

அரசியல்வாதிகள்

அதிகாரிகள் - ஆயினும்

சொர்க்கமேயாயினும்

என் நாட்டிற்கு இணையில்லை

என்றும்

என் நாட்டிற்கு இணை ஏதென்றும்

சொல்கிறோமே!! ஏன்...

ஆனந்தவிகடனுக்கு நன்றி



இந்த
வார விகடனில் விகடன் வரவேற்பரையில் எனது மகாபாரதம் வலைப்பூ பற்றி குறிப்பிட்டுள்ளனர்.செய்தி வருமாறு..

மகாபாரதக்
கதைகள்

http://bagavathgeethai.blogspot.com

"
மகாபாரதக் கதைகளின் வழியே அவற்றுள் மறைந்திருக்கும் தத்துவ விசாரங்களை எடுத்துக் கூறும் வலைப்பூ.ஆத்மா, ஜீவாத்மா,பரமாத்மா...என்று ஆங்காங்கே கொஞ்சம் மலைக்கவைத்தாலும், ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் பொதிந்துவைக்கப்பட்டு இருக்கும் நீதி,ஆயிரம் பொன்னுக்கு சமம்.'காலத்தின் வலிமை' என்று இந்திரனுக்கும், பலி என்பவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் கட்டுரை, செல்வத்தை இடைவிடாது சேர்த்துக் கொண்டே இருக்க நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று'

எனக்
குறிப்பிட்டுள்ளனர்.

விகடனுக்கு
எனது நன்றி.


Thursday, July 21, 2011

தெய்வத்திருமகள் என் பார்வையில்


...

மன நலம் குன்றிய தந்தை
..அவன் மீது அளவில்லா பாசம் கொண்ட மகள்...

மகளை அவனிடமிருந்து பிரித்துச் செல்லும் மாமனார்
..மற்றும் குழந்தையின் சித்தி அமலாபால்..

குழந்தையை தந்தையிடம் சட்டப்படி போராடி ஒப்படைக்க நினைக்கும் வக்கீல் அனுஷ்கா
..சந்தானம்..

அவர்களுக்கு எதிராக வாதிடும் நாசர்
..

தந்தையுடன் இருக்கும் மன நலம் குன்றிய நண்பர்கள்
..

இப்படி அளவான பாத்திரங்களுடன்
ஒரு அருமையான திரைப்படத்தை அளித்த தயாரிப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

விக்ரம்
....மீண்டும் தன் திறமையை நிரூபித்துள்ளார்....தேசிய விருது கிடைக்கலாம்.

பேபி
..சாரா..திரையில் இருந்து அப்படியே எடுத்து கொஞ்சத் தோன்றுகிறது.நீதி மன்றக்காட்சியில் விக்ரமிற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு திறமையைக் காட்டியுள்ளார்.

அனுஷ்கா
...வக்கீலாக வந்து..திறமையுள்ளவர்கள் எந்தப் பாத்திரத்திலும் பிரகாசிக்கலாம் என மற்ற நடிகைகளுக்கு உணர்த்தியுள்ளார்.அமலாபாலும் ஓகே.

அருமையான
ஒளிப்பதிவு..

இப்படத்திற்கு
பாடல்களே தேவையில்லை..அதனால்..இசையைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

திரைப்படத்தில்
குறைகளே இல்லையா..என்றால்...இருக்கிறது...ஆனாலும் நிறைகள் அதிகமிருப்பதால் குறைகள் மறக்கப் படுகின்றன.

கிளைமாக்ஸ்
அருமை..

அனுஷ்கா
, விக்ரம்...பாடல் காட்சி தேவையே இல்லை..இதனால் அனுஷ்கா பாத்திரத்தில் சற்று நசுங்கள் ஏற்படுகிறது.

மொத்ததில்
இப்படி ஒரு அருமையான படத்தைக் கொடுத்த இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

டிஸ்கி
- படம் பார்க்கையில் கே.எஸ்.ஜி.யின் கோகிலா (கை கொடுத்த தெய்வம்) சாவித்திரியின் அருமையான நடிப்பு நினைவிற்கு வருவதைத் தடுக்கமுடியவில்லை


Wednesday, July 20, 2011

வள்ளுவனும் இன்பத்துப் பாலும் - 1






உனதழகு

வாட்டுது

என்னை


வண்ண

மயிலாள்


உனைக்

காணின்


மயங்கா

மனமும்


மயங்கிடும்

எனில்


நான்

எம்மாட்டு


இது

சாதாரணன் எழுதுவது...


இதைத்தான்

வள்ளுவன் இன்பத்துப் பாலில் முதல் அதிகாரமான தகை அணங்குறுத்தல் அதிகாரத்தில் முதல் குறளில் சொல்லியுள்ளார்.



அணங்குகொல் ஆய்மயில்  கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

(எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ!! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்)











Tuesday, July 19, 2011

தமிழ்மணம், முதன்முறையாக நன்கொடையை எதிர்நோக்குகிறது.

தமிழ்மணம் செயல்பட்டு வந்த வழங்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தமிழ்மணம் இணைய தளத்தின் தறவிறக்கம் மிகவும் தாமதாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனையைக் களைய பல வித முயற்சிகள் மேற்கொண்டும் எந்தப் பலனும் இல்லாத காரணத்தால் தமிழ்மணம் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலையை எட்டி விட்டது. இதற்கு முக்கியக் காரணம் தமிழ்மணம் செயல்பட்டு வரும் வழங்கி நிறுவனமே. அந் நிறுவனத்திடம் பல வகையில் இந்தப் பிரச்சனையை விளக்கியும் எவ்வித பலனும் இல்லாத காரணத்தால் தமிழ்மணத்தை வேறு வழங்கி நிறுவனத்தின் சேவைக்கு மாற்றும் முயற்சியில் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் இது முழுமையடையும் என்று நம்புகிறோம். தமிழ்மணத்தின் தற்போதைய பிரச்சனைகள் களையப்பட்டு மீண்டும் ஒரு சிறப்பான சேவையை அளிக்க முடியும் என உறுதியளிக்கிறோம். அது வரை தற்போதைய சிரமங்களுக்கு பொறுத்தருள பதிவர்கள், வாசகர்களிடம் வேண்டுகிறோம்
வழங்கிச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், விளம்பரங்கள் மட்டுமே தமிழ்மணத்தின் வழங்கிச் செலவுகளை ஈடுசெய்யக்கூடியதாக இல்லை. இதன் காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்மணம், முதன்முறையாக நன்கொடையை எதிர்நோக்குகிறது. நன்கொடை குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி...
நிர்வாகம்
தமிழ்மணம்

தமிழ்மணம் தமிழின் முதன்மையான வலைத்திரட்டி ஆகும். வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத வகையில் வலைப்பதிவுகள் சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய தளமாக தமிழ்மணம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழ்மணத்தை லாப நோக்கு இல்லாத நிறுவனமாக செயல்பட்டு வரும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் நடத்தி வருகிறது.

தொடர்ச்சியாக வளர்ந்து வரும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு தடையில்லாத தரமான சேவையை வழங்க நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம்

நன்கொடைகளை பேபால் மூலமாக செலுத்தும் வசதியினை ஏற்படுத்தியிருக்கிறோம்
தமிழ்மணத்திற்கு நன்கொடை வழங்குவது குறித்த கேள்விகளுக்கு தமிழ்மணம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் - admin@thamizmanam.com

Wednesday, July 6, 2011

வனத்தில் இருப்பதால் வந்த குரூர புத்தி..





நண்பர் ஒருவர்..இவர் வனமும்..வனம் சார்ந்த இடத்திலும் பணி புரிபவர்..

அதீத புத்திசாலி எனலாம்..

இரு வார இதழ்களில் இவரின் தொடர் அறிவு சார்ந்த கட்டுரைகள் வருகின்றன.அவற்றைப் படித்து அவர் திறமையில் அதீத மகிழ்ச்சியடைந்தவன் நான்.

போன வாரத்தில்..ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டதாய் ஒரு வதந்தி வந்து..அது பற்றி புலனாய்வு நடந்துக் கொண்டிருக்கிறது அமெரிக்காவில்..

அந்தச் செய்தியின் தாக்கம் போல இருக்கிறது..நண்பருக்கு..

தான் இறந்தால் நண்பர்கள் வட்டத்தில் என்னவாகும் என அறிய ஆசை..

ஆகவே தான் இறந்துவிட்டதாக BUZZல் வதந்தியை பரப்புகிறார்.

விஷயம் அறிந்து அனைத்து நண்பர்களிடமும் அதிர்ச்சி...

சில நண்பர்கள் இப்போதுதானே அவரிடம் பேசினோம் என ஆச்சரியம்..

ஒருவேளை..இதைப் பார்த்து..இப்படி ஒரு கட்டுரை எழுதலாம் என்ற எண்ணமாயும் இருக்கலாம்..

ஆனாலும்..இப்படி நடந்துக் கொண்டது அவரது குரூர புத்தியைக் காட்டுகிறது..

அறிவாளிகள் என நாம் நினைப்பவர்கள் சில நேரங்களில் ஏன் அறிவிலியாய் இருக்கிறார்கள்.

நண்பரின் இச் செயலை வன்மையாய் கண்டிக்கிறேன்
 

Tuesday, July 5, 2011

சிரிப்பில் இத்தனை வகையா?




கலைவாணர் என்.எஸ்.கே., ஒரு படத்தில் வித விதமான சிரிப்பைப் பற்றி  ஒரு பாடல் பாடுவார்.

அதுபோல இந்த வார பாக்யா இதழில் ஒரு கேள்விக்கு பாக்கியராஜ் சிரிப்பில் எத்தனை வகை என வித்தியாசமாக சிந்தித்து ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.அவர் சொல்லியுள்ள வகைகளைப் பார்ப்போமா?

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்

ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்

மகிமையில் சிரிப்பவன் மன்னன்

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி

தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி

நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்

கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்

வெற்றியில் சிரிப்பவன் வீரன்

விளையாமல் சிரிப்பவன் வீணன்

தற்பெருமையில் சிரிப்பவன் கோழை

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்

நினைவோடு சிரிப்பவன் அறிவாளி

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்

அன்பால் சிரிப்பவள் அன்னை

காதலால் சிரிப்பவள் மனைவி

நிலை மறந்து சிரிப்பவள் காதலி



டிஸ்கி- (இது நாம்)இதை படித்த பெருமிதத்தில் சிரிப்பவன் அறிவை போற்றுபவன்

 

Monday, July 4, 2011

தி.மு.க.,வினரே உண்மை பேசலாமா?

குடும்ப அரசியல் தான் திமுக தோல்விக்கு காரணம் என திமுகவினரே கூறி வருவது வருத்தம் தருவதாக உள்ளது என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வேதனை தெரிவித்தார்.




மதுரையில் மாவட்ட திமுக பொருளாளர் மிசா. பாண்டியன் இல்லத் திருமணவிழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது,



தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில் தான் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அதிக அளவில் வழங்கப்பட்டது.



ஆனால் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை.



குடும்ப அரசியல் தான் திமுக தோல்விக்கு காரணம் என திமுகவினரே கூறி வருவது வருத்தம் தருவதாக உள்ளது. மாற்று கட்சியினர் அப்படி கூறுவதில்லை. ஆனால் நமது கட்சியினர் தான் இது போன்று தொடர்ந்து பேசி வருகின்றனர்.



இது எனக்கு பெரும் மனவேதனையைத் தருகிறது. கட்சிகாரர்களுக்காக அதிக அளவு உதவிகள் செய்துள்ளேன். இதை அவர்கள் மறந்து விடக்கூடாது.



இனி மேல் திமுகவினர் நடத்தும் இல்ல விழாக்களில் அண்ணா படமும், திமுக தலைவர் கலைஞர் படமும் மட்டுமே போட வேண்டும்.



உங்களுக்கு என் மீது அதிக பாசம் இருந்தால் மட்டும் எனது படத்தை போடலாம். ஆனால் எனது குடும்பத்தினர் படங்களையோ அல்லது அவர்களது பெயர்களையோ கண்டிப்பாக போடக் கூடாது.



அவ்வாறு போடப்படும் நிகழ்ச்சிகளில் நான் நிச்சயம் கலந்து கொள்ளமாட்டேன் என்றார்.





மு.க.அழகிரியின் பேச்சே இப்படி ஒரு தலைப்பு வைக்கத் தோன்றியது



(செய்தி நன்றி தட்ஸ் தமிழ்)







Sunday, July 3, 2011

வானம் வெளுத்த பின்னும்...





வானம் வெளுத்த பின்னும்

விண்ணில் மறையா

வானவில்லாய்..

மறக்க முடியா

மனங்கொத்தியாய்

உன் நினைவுகள்


Saturday, July 2, 2011

2-ஜி யும் பத்மனாபசாமியும்...





2ஜி ஊழலில் நாட்டின் இழப்பீடு 1,76,000 கோடிகள் என நமக்கு தெரியும்..

ஆனால்..இவ்வளவு வருடங்களாக பத்மனாபசாமி தன்னிடமிருந்த ஒரு லட்சம் கோடிகளுக்கும் அதிகமான சொத்து (இன்னமும் வர வேண்டியுள்ளது) தெரிவிக்காததுடன் அதற்கான முறையான வரியும் செலுத்தவில்லை..

சட்டமும் இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கிறது...காரணம் பத்மனாபர் ஒரு பார்ப்பனர் என்பதே..

அவர்களின் சூழ்ச்சியால் நாம் பாதிக்கப் பட்டாலும்..நிலைமை இப்படியே போகாது..

நமக்கும் காலம் வரும்..அன்று.. திருச்செந்தூர் வேல் போல அவர் சொத்துக்களும் காணாமல் போகும்.