Friday, October 14, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (14-10-11)
1) ஊழலே இல்லாத நாடு உள்ளதா?  ஆம்..இருக்கிறது..ஊழல் இல்லாத நாடு டென்மார்க்.அடுத்து சிங்கப்பூர்.இதில் அமெரிக்காவிற்கு 17 வது இடமாம்..இந்தியாவிற்கு..?

2)நமது இதயம் ஆண்டொன்றுக்கு 3கோடியே 68 லட்சம் முறை துடிக்கிறதாம்..அப்படியிருக்கும் அதை நாம் ஆரோக்யமாக வைத்திருக்க வேண்டாமா?

3)மம்தா பேனர்ஜி காலில் சாதாரண ரப்பர் செருப்பைத்தான் அணிகிறார்.எளிய கைத்தறி சேலைதான் கட்டுகிறார்.எளிமை அவரது தனி அடையாளம்.அவர் பயணிக்கும் கார் கூட அரசால் கொடுக்கப்பட்டது அல்லவாம்

4)மாமல்லபுரம்,தஞ்சை பெரிய கோயில்,தாராபுரம் ஐராதீஸ்வரர் கோயில்,கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் ஆகிய நாங்கு கோயில்களை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது இந்தியாவிலேயே நாங்கு உலக பாரம்பரிய சின்னங்கள் கொண்ட மாநிலம் தமிழகம் மட்டுமே!

5)உலகில் ஐந்து கோடி மக்களுக்கு மேல் பேசப்படும் மொழிகள் வெறும் 13 மட்டுமே..அதில் தமிழ் மொழியும் ஒன்று

6)நான் தமிழ் படங்களைப் பார்த்தே இரண்டு ஆண்டுகள் ஆயிற்று என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

7)தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகிலேயே ஊழியர்கள் பணி புரிய சிறந்த நிறுவனமாகத் தெர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறது கூகுள் நிறுவனம்.

8)இந்த வார விகடனில் மதன் கேள்வி பதிலில் கேட்கப்பட்ட கேள்வியும்..பதிலும்..

உலகிலேயே தைரியமாகத் தங்கள் அரசாங்கத்தைக் கிண்டல் செய்பவர்கள் அதிகம் உள்ள நாடு எது?

 சந்தேகம் இல்லாமல் அமெரிக்காதான்.
பில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த போது ஒரு டீ.வி.சேனலில் தமாஷாக ஒரு வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டார்கள்.அதில் பெண்களுக்கு ஒரு கேள்வி..
'கிளிண்டனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள சம்மதமா?
அமெரிக்காவில் உள்ள 90 சதவிகிதம் பெண்கள் அளித்த பதில்..ஐயயோ..மறுபடியுமா?

9)சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்பமுடியாது..
 ஆம்..உண்மைதான்..ஆனால் செல்வாக்கு மிக்கவரானால் சட்டம் தன் பிடியை தளர்த்திவிடும்

10) ஒரு ஜோக்

  மகன்- அப்பா..எங்க வாத்தியார் பள்ளிபடிப்புக்கும், எனக்கும் ரொம்ப தூரம்னு சொல்றார்
  அப்பா- கவலைப்படாதே..நாளைலே இருந்து ரிக்க்ஷா ஏற்பாடு பண்ணிடறேன்


6 comments:

SURYAJEEVA said...

நம் அரசியல்வாதிகளை தமிழர்கள் கிண்டல் செய்யும் அளவு யாரும் செய்வதில்லை என்பது என் எண்ணம்.. மதன் வலைபூக்களை படித்தால் திருத்திக் கொள்வார்

aotspr said...

அனைத்தும் அருமை....
பாராட்டுகள்......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

baleno said...

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் நல்லாக இருந்தது. சூர்யஜீவா சொன்னது போல் தமிழர்கள் கிண்டல் செய்யும் அளவு அரசியல்வாதிகளை வேறு யாரும் கிண்டல் செய்வதில்லை என்றே நானும் நினைக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kannan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி baleno