Sunday, October 16, 2011

தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..
தமிழ்மணத்திற்கும் சில பதிவர்களுக்குமான சர்ச்சை தொடர்ந்து வருவது என்னைப் போன்ற சில பதிவர்களுக்கு சங்கடத்தையே ஏற்படுத்தி வருகிறது.

பதிவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்..

தமிழ்மணம் நடத்துபவர்கள் ஒன்றும் ஞானிகளல்ல...தங்கள் திரட்டிப் பற்றி அவதூறு/கிண்டல் செய்தால் ரசித்துவிட்டுப் போவதற்கு...

சக பதிவர் ஒருவர் போட்ட தமிழ்மண பயோடேட்டா தான் பிரச்னைக்கான ஆரம்பம்..இதை நகைச்சுவையாக தமிழ்மணமும் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

இதற்கு முன்னர் கூட பல ஆபாச பதிவுகள்..தமிழ்மணம் ஏற்றுக்கொண்டுள்ளது.இந்த விஷயத்தில் சரியான அளவுகோலை தமிழ்மணம் வைத்திருக்கவில்லை.வார முன்னணி பதிவுகளை தமிழ்மணம் அறிமுகப் படுத்தியதிலிருந்து தான்..வந்தது வினை..

தங்கள் பதிவுகள் அதில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே..கட் அண்ட் பேஸ்ட் பதிவுகள், கவர்ச்சி தலைப்புடன் கூடிய பதிவுகள் என அதிகரிக்க ஆரம்பித்தன.

இந்த காரணத்தைக் காட்டியே பல மூத்த பதிவர்கள் பதிவுகள் இடுவதை நிறுத்திவிட்டு தங்கள் எண்ணங்களை கூகுள் பிளஸ்ஸில் பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

சரி தலைப்பிற்கு வருவோம்...

தவறு யார் பெயரில் என்னும் கேள்விக்கு நான் போகப் போவதில்லை..

ஆனால்..தமிழ்மணம் சார்பில் பெயரிலி போட்ட சில பின்னூட்டங்கள் , கண்டிப்பாக அருவருப்பையே தந்தன..தனிப்பட்ட மனிதன் இப்படி பின்னூட்டம் இட்டிருந்தால் கவலையில்லை..ஆனால் பெயரிலி செய்தது தவறென்றே எண்ணுகிறேன்.அது அவர் தனிப்பட்ட கருத்து..என தமிழ்மண நிர்வாகிகள் கூறலாம்..ஆனால் அவர் ஒரு பின்னூட்டத்தில் தமிழ்மணம் சார்பாக பெயரிலி எனப் போட்டுள்ளார்.

பெயரிலி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மரியாதையும், மதிப்பும் உண்டு..அவரது திறமை என்னை வியக்க வைத்தது உண்டு.

ஆனால் ஒரு திரட்டியில் முக்கிய பங்கு வகிப்பவர் என்ற வகையில் அவர் இன்னும் சற்று கவனத்துடன் செயல் பட்டிருக்கலாம்.

பேசாத சொற்களுக்கு நாம் எஜமானன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நடந்ததைப் பற்றி பேசி பயனில்லை..இனி நடப்பவை நன்மை பயக்க வேண்டும்...

பெயரிலி இனி புதிதாக எந்த கமெண்டும் போட வேண்டாம்..

சம்பந்தப்பட்ட பதிவர்களும்..இப்பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்கட்டும்.

தமிழ்மணம் இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது என்றும்..இது சம்பந்தமாக ஆதரவு/எதிர்ப்பு பதிவுகள் வெளியிடாது என்றும் அறிவிக்கட்டும்.

14 comments:

Robin said...

//தங்கள் பதிவுகள் அதில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே..கட் அண்ட் பேஸ்ட் பதிவுகள், கவர்ச்சி தலைப்புடன் கூடிய பதிவுகள் என அதிகரிக்க ஆரம்பித்தன.// இனிமேல் அப்படி நடக்காது என்று நினைக்கிறேன்.

SURYAJEEVA said...

சத்தியமா ஒன்னும் புரியல

Astrologer sathishkumar Erode said...

ஜால்ரா சத்தம் காதை கிழிக்குது....

Admin said...

தமிழ்மணத்திற்கு என் கண்டனங்கள்.

Yoga.S. said...

அவரது வார்த்தைப் பிரயோகங்கள் மன்னிக்கக் கூடியவை அல்ல!மேலும் சகோதர மதத்தவரையும் இழிவுபடுத்தியது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல!இது,சமரசத்துக்கு வரக்கூடியதென்று கருத முடியவில்லை!

rajamelaiyur said...

Tamilmanam will be destroyed very soon

Unknown said...

சக பதிவர்களை கேவலமாக திட்டும் தமிழ்மணமே நமக்கு வேண்டாம்

இன்றோடு அதை தூக்கி எறிவோம்

தமிழ்கிழம் said...

//will be destroyed soon//

இந்த comment காமெடி-யாக உள்ளது சகோ.. என்று தமிழர்களை அவமதித்ததோ அன்றே அது அழிந்து விட்டது. நாம் சகோதர மதத்தை அவமதித்தது இன்னும் மன்னிக்க முடியாத குற்றம்...

baleno said...

தமிழ்மணம் நடத்துபவர்கள் ஒன்றும் ஞானிகளல்ல...தங்கள் திரட்டிப் பற்றி அவதூறு கிண்டல் செய்தால் ரசித்துவிட்டுப் போவதற்கு.

நீங்கள் தான் இப்படி சொல்கிறீர்கள். இன்று தமிழ்மணத்தை திறந்த போது தமிழ்மணத்தை அவதூறு செய்து பலர் பதிவுகளிட்டிருந்தார்களே!

smart said...

தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.
பதிவுலகில் மதவாத சக்தி தவறாகப் பயன்படுகிறதா?

J.P Josephine Baba said...

உண்மையை உரைக்கும் பதிவு!

Robin said...

தமிழ் மணத்திற்கெதிரான இஸ்லாமியப் பதிவர்களின் வார்த்தை பயங்கரவாதத்தை கண்டிக்கிறேன்.

வருண் said...

***Robin said...

தமிழ் மணத்திற்கெதிரான இஸ்லாமியப் பதிவர்களின் வார்த்தை பயங்கரவாதத்தை கண்டிக்கிறேன்.

October 18, 2011 2:07:00 AM PDT**

ராபின்: பெயரிலி ஒரு "நல்ல தவறு" செஞ்சி இருக்காரு! நண்பனாவது, தமிழாவது, தமிழ்மணமாவது மதம் ஒண்ணுதான் எங்களுக்கு முக்கியம்னு இவர்கள் நடந்துகொண்டது நிச்சயம் பெருமைக்குரிய விடயம் அல்ல. இதை பதிவுலகில் பலர் பார்த்து "ஏன் இப்படி இருக்கிறார்கள்" என்று மனநாக்கிலேயே பேசி முடித்துக்கொண்டார்கள்.

நான் கூட சமீபத்தில் டோண்டு ராகவன் பதிவில சம்மந்தமே இல்லாமல் நம்ம "ராம பகவான்" மாதிரி நான் மறைஞ்சிருந்து எல்லாம் தாக்கவில்லைனு எழுதினேன். அதையெல்லாம் கேக்க எவனுக்கும் நாதியில்லை. கேட்டாலும் நம்ம என்ன சும்மா நம்ம பேச்சுரிமையை விட்டுப்புடுவோமா?

ஆமா, சாந்தி சமாதானம் போன்ற சமஸ்கிரத வார்த்தைகளுக்கு இவங்க என்னைக்குப்பா காப்பி ரைட் வாங்கினார்கள்?

பெரிய பெரிய "பிர பல பதிவர்கள்" எல்லாம் தமிழ்மணத்தை விட்டு போறேன்னு பதிவுப்பட்டையை எடுத்ததும், "அப்பா ஒரு வழியாத் தொலைஞ்சானுக! வாழ்க பெயரிலி"னு நெறையாப்பேரு நிம்மதி அடஞ்சது என்னவோ உண்மைதான். ரோசமா எனக்கு என் மதம்தான் முக்கியம், தமிழாவது மண்ணாங்கட்டியாவது னு இங்கே தமிழ்மணத்திற்கு திருப்பி வராமல் இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும்! அது நிராசையாடுமே என்ன செய்றது? :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி