Friday, November 4, 2011

கனிமொழிக்கு ஜாமின் மறுத்தது சரியானதல்ல : ராம்ஜெத்மலானி




  கனிமொழிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது, நீதி தவறான பாதையில் செல்வதை காட்டுகிறது,'' என, அவரது வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி மற்றும் ஏழு பேருக்கு எதிராக, சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் ஜாமின் கோரி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.

இதுதொடர்பாக, ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறியதாவது: சரியான காரணம் இல்லாமல், கனிமொழியின் ஜாமின் மனுவை நீதிபதி ஷைனி நிராகரித்தது, நீதி தவறான பாதையில் செல்வதை காட்டுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் போய் நிவாரணம் பெறட்டும் என்ற எண்ணத்தில், கனிமொழி மற்றும் பிறரின் ஜாமின் மனுக்களை நீதிபதி ஷைனி தள்ளுபடி செய்துள்ளார்.
இது மோசமான நடைமுறை. வேண்டுமென்றே சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது போன்றது. இப்பிரச்னைக்கு விரைவில் சுப்ரீம் கோர்ட் சரியான தீர்வு காணும் என, நம்புகிறேன். குற்றம் சாட்டப்பட்டவர் ஓடி விடுவார் என்றால், ஆதாரங்களை மாற்றி அமைக்க முற்படுவார் என்றால், ஜாமின் வழங்க மறுக்கலாம். ஆனால், கனிமொழியைப் பொறுத்த மட்டில், அதற்கான ஆதாரங்கள் எதுவும் வழக்கில் இல்லை. இவ்வாறு ராம்ஜெத்மலானி

தகவல் தட்ஸ்தமிழ்

6 comments:

SURYAJEEVA said...

சம்பந்தப் பட்டவங்க எல்லோரையும் இழுத்து விடு நைனா, தானா ஜாமீன் கிடைக்கும்...

goma said...

குற்றவாளிக்குப்பதில் யாராவது சிறைக்குச் சென்றால்,ஜாமின் தரப்படும் என்று சட்டம் வந்தால் எப்படி இருக்கும்?

சி.பி.செந்தில்குமார் said...

suryajeeva said...

சம்பந்தப் பட்டவங்க எல்லோரையும் இழுத்து விடு நைனா, தானா ஜாமீன் கிடைக்கும்...
>>>>>>>>
ரிப்பிட்டேய்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி.. suryajeeva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி..goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி..
சி.பி.செந்தில்குமார்