Monday, December 17, 2012

ஆகாசத்தின்டே நிறம் (மலையாளம்)- விமரிசனம்..


பல்வேறு நாடுகளிலிருந்து ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட 282 படங்களில் , நெடுமுடி வேணு,இந்திரஜித் நடித்த..'ஆகாசத்திண்டே நிறம்' (ஆகாயத்தின் நிறம்) படமும் ஒன்று..

முழுக்க முழுக்க அந்தமான்..நிகோபார் தீவுகளில் எடுக்கப்பட்டுள்ள இப்பட..காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன.பக்கத்தில் இவ்வளவு அழகான...இயற்கை கொஞ்சும் இடத்தை வைத்துக் கொண்டு..நாம் ஏன் படபிடிப்புக்கு வெளிநாடு செல்கிறோம்??!! எம்.ஜே.ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு அற்புதம். வாழ்த்துகள் ஒளிப்பதிவாளருக்கு.

படத்தின் கதை என்று பார்த்தால்..ஒரே வரியில் சொல்லிவிடலாம்..

மனித வாழ்வில் இயற்கை எப்படி பின்னிக் கிடக்கிறது என்பதுதான்.

வயாதான நெடுமுடி வேணு..தான் இருக்குமிடத்திலிருந்து படகில் சென்று..தன் தயாரிப்பான கைவினைப் பொருட்களை விற்று..படகில் திரும்புகையில்..அப்பணத்தை கொள்ளையடிக்க இந்திரஜித் படகில் ஏறுகிறார்.அவரை தான் இருக்குமிடத்திற்கு அழைத்து வருகிறார் வேணு.அங்கு அவருடன் 7 வயது சிறுவன், வாய் பேசமுடியா அமலா பால், ஒரு திக்குவாய் உதவியாளர் வசித்து வருகின்றனர்.அருகாமையில்..வயதான..வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்போரை தன் பாராமரிப்பில்..சிற்சில வேலைகள் செய்யவித்து..மகிழ்வுடன் வைத்திருக்கிறார் வேணு,

இவற்றையெல்லாம் பார்த்த இந்திரஜித்..தானும் மனம் மாறுகிறான்.சொந்த உழைப்பில்தான் வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

வயதானவர்களை பரிசோதிக்க அவ்வப்போது வரும் மருத்துவராக சிறிய கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் வருகிறார்.அமலா பால் அவர்களுக்கும் சிறிய பாத்திரமே.

இனி இப்படங்கள் பெற்றுள்ள விருதுகள்..கலந்துக் கொண்டுள்ள திரை விழாக்கள்.

கேரள மாநில அரசு விருது..
8 ஆவது யூரோசிய சர்வதேச திரைப்பட விருது
தெற்காசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
15 ஆவது ஹாங்காங் திரைப்பட விழாவில் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வாகியுள்ளது.
தவிர்த்து..மலையாளத் திரையுலகில் ஆஸ்காருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் மலையாளப் படம் இது.

தயாரிப்பு - அனில்குமாr
கதை, இயக்கம்- டாக்டர் பிஜு
ஒளிப்பதிவு- எம்.ஜே.ராதாகிருஷ்ணன்
இசை- ரவீந்திர ஜெயின்
படத்தொகுப்பு- மனோஜ் கன்னோத்

திரைப்படக் குழுவினர்  அனைவருக்கும் வாழ்த்துகள்.


.

2 comments:

வடகரை வேலன் said...

ஞாயிறன்றுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். வாசு பாலாஜி பரிந்துரைத்திருந்தார்.

படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

படத்தின் மையக் கருத்தாக நான் கருதுவது, படத்தில் வேணு சொல்லு ஒரு வாக்கியம்தான், “சொந்தம் ஜீவிதம் சினேகிக்கணும்”

இந்தப் படத்தின் இயக்குனர் டாக்டர் பிஜு இயக்கிய வீட்டிலேக்குள்ள வழி படம் பாருங்கள். அதுவும் நல்ல படம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ராஜேந்திரன்...(உங்க பெயரை மறக்கலை..பார்த்தீங்களா?!)