Tuesday, January 15, 2013

அலெக்ஸ் பாண்டியன் (விமரிசனம்)




நீண்ட நாட்களுக்குப் பிறகு , ஒரு அருமையான திரப்படத்தைப் பார்த்த திருப்தி இப்படத்தைப் பார்க்கையில் ஏற்பட்டது.

சமீப காலமாக..மிகுந்த பொருட்செலவில் தயாராகும் படங்கள், வசூலில் வெற்றி பெற்றாலும், தோல்வி படங்களாக அமைந்தது குறித்து வருத்தப்படும் நேரத்தில் இப்படம் ஆறுதல் அளிக்கிறது.

புதிய கதைக்களம்..

கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் அசத்தலான நடிப்பு..படத்தின் வெற்றிக்கு துணை செய்கிறது.

லாஜிக்கைப் பற்றிக் கவலைப்படாமல் கண்டபடி எடுக்கப்படும் படங்களுக்கு இப்படம் ஒரு மாறுதல்.

குறிப்பாக..சண்டைக் காட்சிகள் மிகவும் நம்புமாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சகுனி தந்த ஏமாற்றத்தை 'பருத்தி வீரன்" ஈடு செய்துவிட்டார்.

இப்படியெல்லாம் விமரிசனம் எழுத ஆசைதான்...

ஆனால்..ஆசை நிராசையாகப் போய்விட்டதே!

1 comment:

கார்த்திக் சரவணன் said...

சில படங்கள் டிரைலர் பார்த்தாலே தெரிந்துவிடும் மொக்கை என்று... உதாரணம் அலெக்ஸ் பாண்டியன், அதனால்தான் நான் பார்க்கவில்லை.. சில படங்கள் டிரைலர் பார்த்தாலே தெரிந்துவிடும் சூப்பர்ஹிட் என்று... உதாரணம் கண்ணா லட்டு தின்ன ஆசையா, பார்த்துவிட்டேன்...