Tuesday, February 12, 2013

விகடனில் 'நட்சத்திர எழுத்தாளர்களும்' அவர்கள் கதைகளும்





முன்பெல்லாம்..தமிழ் பத்திரிகைகளில் ஆறு அல்லது ஏழு சிறுகதைகள் வரும்.இன்னும் அதிகம் போடலாமே..என வாசகர் கடிதங்கள் வரும்..

ஆனால்..இன்று..ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகள் வந்தாலே அதிகம்..பல பத்திரிகைகள் ஒரு பக்க கதைக்கு தாவி விட்டன.. சில பத்திரிகைகள்..அரை பக்கக்கதை,கால் பக்க கதை என்றெல்லாம் வெளியிட ஆரம்பித்து விட்டன..கேட்டால்..வாசகர்கள் இதையே விரும்புகிறார்கள் என பழியை வாசகர்கள் மீது போடுகின்றனர்.

பல சிறுகதைகள்..நம்மால் மறக்க முடிவதில்லை..

ஜெயகாந்தன் சிறுகதைகள் பல இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..

ஒரு தொடர்கதையில் இருந்து..பல சிறுகதைகளுக்கான கரு கிடைப்பதுண்டு..ஆனால்..ஒரு சிறுகதையிலிருந்து..பல தொடர்கதைகள் பிறந்திருக்கின்றன..என்றால்..அதை நம்புவது சற்று கஷ்டம்.உண்மையில் ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றிற்கு ..அப்பெருமை உண்டு.அது...

அக்கினிப்பிரவேசம்..

ஆனந்த விகடனில் வந்த சிறுகதை இது...முத்திரைக்கதை..இந்த கதையை யாரும் மறந்திருக்க முடியாது..இந்த சிறுகதையில் இருந்து பிறந்தவை...

சில நேரங்களில் சில மனிதர்கள்
கோகிலா என்ன செய்கிறாள் ஆகிய தொடர்கள்..

அடுத்ததாக நான் சொல்ல விரும்புவது..பிலஹரியின் ..அரிசி..என்ற கதை..நம்மில் பலருக்கு இக்கதை ஞாபகமிருக்காது..இதுவும் ஆ.வி.யில் வந்த முத்திரைக்கதை..

இக்கதை அம்மாவின் பாசம் பற்றியது..கல்யாணம் ஆனதும் அம்மாவிடம் வெறுப்பு வளர்கிறது அவனுக்கு..ஆனால் அம்மாவின் பாசம்..அதற்கு ஈடு உண்டோ?கதையின் கடைசி வரிகள்..இன்னமும் மறக்காமல் என் ஞாபகத்தில் உள்ளது..

அகோரபசி உள்ள ஒருவன்..முன்னால்..பல இனிப்புகள்..உணவுபண்டங்கள்..ஆனால்..எதைத் தின்றாலும் ஒரு கவளம் சாதத்திற்கு இணை உண்டோ?அந்த அரிசி சாதம் தான்..அம்மா அன்பு..என்பார்.

தமிழ் பத்திரிகைகள்..குறிப்பாக..விகடன்..மீண்டும் தரமுள்ள கதைகளுக்கு முத்திரை அளித்து...முத்திரை கதைகளை வெளியிடலாமே?


இது 2008 அக்டோபர் மாதம் நான் போட்ட பதிவு..

------------------------------------------------------------------------------------------------

அதன்பின் சில மாதங்கள் கழிந்து..நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு.. என்ற பெயரில்..பல பிரபல நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைகள் வாரம் ஒன்று வர ஆரம்பித்தது.

அப்போதுதான்..நாம் சாதாரண எழுத்தாளர்கள் என எண்ணியவர்கள் எல்லாம் நட்சத்திர எழுத்தாளர்கள் என தெரிந்தது (!!!???)

எது எப்படியானால் என்ன..நாம் படிக்க நல்ல கதைகள் கிடைக்கும் எனத் தோன்றியது.

ஆரம்பத்தில் வந்த கதைகள் அதை உறுதிப் படுத்தின...குறிப்பாக..நாஞ்சில் நாடனின் 'நீலவேணி டீச்சர்' ..ஜெயகாந்தனின்..நான் மேலே குறிப்பிட்ட கதையைப் போல..மனதில்..ஃபெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டது.

சாதாரண வாசகனின் திருப்தி..நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை..

இப்போதெல்லாம் வரும் கதைகள்..நட்சத்திரக்கதைகளாகத்தான் ..மாறிக்கொண்டிருக்கின்றன...ஆம்....பத்தோடு பதினொன்று..லட்சக்கணக்கான நட்சத்திரங்களுடன் இதுவும் ஒன்று என்ற ரீதியில்...

விகடனுக்கு ஒரு வேண்டுகோள்...

இனி..'நட்சத்திர எழுத்தாளர்கள் கதை' என்பதை மாற்றிவிடுங்கள்....சாதாரண எழுத்தாளர்களை..'நட்சத்திர  எழுத்தாளர்கள்'
ஆக்கியது போதும்.

தரமான கதை என்பதற்கு..பழையபடி ..விகடன் முத்திரையைக் கொடுங்கள்..அந்தக் கதையை..உங்களுக்கு வரும் கதைகளிலிருந்து..அதை எழுதியது யார் எனப்பாராது..'தரத்தை' மட்டும் பார்த்து முத்திரை கொடுங்கள்.

அந்த சிறுகதைகள் காலத்தை மீண்டும் கொண்டு வாருங்கள்.

அது உங்களால்தான் முடியும்...என உறுதியாக நம்புகிறேன்..

விகடனின் பல்லாண்டு கால வாசகன் என்ற பெயரில்.

10 comments:

ப.கந்தசாமி said...

அந்த நாள் திரும்ப வாராது.சினிமா, சினிமா, எங்கும் சினிமா. எதிலும் சினிமா.

SURYAJEEVA said...

ஒவ்வொருவரின் தத்துவார்த்த மன நிலை தான் இந்த கதை சிறந்தது அந்த கதை சிறந்தது என்று முடிவு எடுக்க வைக்கிறது.... எந்த தத்துவம் பக்கமும் சாராமல் கதைகளை படிக்கும் ஆட்கள் குறைவு... மாறாக தத்துவங்களும் அதிகமாகி கொண்டே போவது இன்னும் கொடுமை... ஆகையால் தான் சிலருக்கு பிடிக்கும் கதைகள் பலருக்கு பிடிப்பதில்லை.. ஜெயகாந்தனின் சிறுகதைகளை சிலாகிக்கும் பலர், கந்தர்வனின் கதைகளை படித்துக் கூட இருக்க மாட்டார்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பழனி. கந்தசாமி .

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

நல்ல பதிவுகள். உங்கள் பணி தொடரட்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி உமா பதிப்பகம்

Rathnavel Natarajan said...

இப்போதெல்லாம் வரும் கதைகள்..நட்சத்திரக்கதைகளாகத்தான் ..மாறிக்கொண்டிருக்கின்றன...ஆம்....பத்தோடு பதினொன்று..லட்சக்கணக்கான நட்சத்திரங்களுடன் இதுவும் ஒன்று என்ற ரீதியில்...

நிஜம் தான். நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Rathnavel Natarajan

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! சிறுகதைகளுக்காகவே விகடன் வாங்கிய காலங்கள் உண்டு! இப்போது விகடன் சினிமா தோரணமாக மாறிவிட்டது! நல்லதொரு பகிர்வு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி S suresh