சிவாஜிகணேசன் நடித்து வெற்றி பெற்ற பல படங்கள் சென்னையில் 3 அல்லது 4 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும்..வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருந்தால்..அப்படம் நூறு நாட்கள் ஓடும் படம் என வெற்றி பட வரிசையில் சேர்ந்து விடும்..உதாரணத்திற்கு அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திருசூலம் பட விவரத்தைப் பாருங்கள்
'திரிசூலம் மாபெரும் வெற்றி படமாகும்.வெள்ளிவிழா படம்.சென்னையில் வெளியான சாந்தி ,கிரௌன்,புவனேஸ்வரி திரை அரங்குகளில் தொடர்ச்சியாக முறையே 315,313,318 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகும்(100 நாட்களுக்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகள்)மதுரை சிந்தாமணியில் 401 அரங்கு நிறைந்த காட்சிகள்.மேலும் 20 அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.இச்சாதனை முறியடிக்க முடியா சாதனை.இப்படம் சிவாஜியின் 200 ஆவது படம்..அதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 26 மட்டுமே.8 திரை அரங்குகளில் வெள்ளிவிழா.இலங்கையிலும் இரு திரை அரங்குகளில் வெள்ளிவிழா.அந்த நாட்களிலேயே முதன் முதலாய் இரண்டு கோடிகளுக்கு மேல் வசூல் ஆகி சாதனை புரிந்த படம்.'
இரண்டு கோடிகள் வசூலே பெரும் சாதனை என்றால்..படத்திற்கான தயாரிப்பு செலவு எவ்வளவு குறைவாய் இருந்திருக்கும்...நடிகர்கள் சம்பளம் எவ்வளவு இருந்திருக்கும்..
ஆனால்..இன்று வரும் மெகா பட்ஜெட் படங்கள் எல்லாம் குறைந்தது 100 கோடிகளை தாண்டும் படங்கள்..
இன்றைய தயாரிப்பாளர்கள் படங்கள் நூற்றுக் கணக்கில் பிரிண்ட் போடப்படுகின்றன.ஒரு நாளில் 150 காட்சிகள் (சென்னையில் மட்டும்)திரையிடப் படுகின்றன.இது போலவே பிற மாவட்டங்களிலும்.
தவிர்த்து, தமிழகம் முழுவதும்..மற்ற மாநிலங்கள்..உலக மார்க்கெட் எல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்..சராசரியாக 3000 முதல் 6000 காட்சிகள் வரை ஒரே நாளில் நடைபெறுகிறது.மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்தபட்சக் கட்டணமே 120 ரூபாய்.நாள் வசூலே கோடிக்கணக்கில்.
படத்தைப் பற்றி விமரிசனம் வரும் முன், ரசிகனை ஏமாற்றி வசூலை அடைந்து விடுகின்றன.
இது ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் தான் செத்துட்டான்..என்பது போல..(படம் வசூலாகிவிட்டது ஆனால் ஓடத்தான் இல்லை.)
போலிகளை விற்று வியாபாரம் செய்வதற்கும், இதற்கும் அதிக வித்தியாசமில்லை.
ஆனால் அதே நேரம் 40 அல்லது 50 பிரிண்டுகள் மட்டுமே போடப்பட்டு..கிடைத்த தியேட்டர்களில் வெளியாகி..குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில்..கதாநாயகர்கள் சம்பளம் குறைய வேண்டும்..தயாரிப்பு செலவு குறைய வேண்டும்..கதையில் கவனம் செலுத்தப் பட வேண்டும் இல்லையேல்...தோல்வி..தோல்வி..என தியேட்டர்காரர்கள் புலம்பலும்,விநியோகஸ்தர் கதறலும்..தயாரிப்பாளர் தலையில் போட்டுக் கொள்ளும் துண்டுகளும் இருந்து கொண்டுதான் இருக்கும்.
5 comments:
தியேட்டர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டேயும் வருகிறது...
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்
//பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில்..கதாநாயகர்கள் சம்பளம் குறைய வேண்டும்.// சிங்கம்2ல் சூர்யாவுக்கு கொடுத்ததில் 10ல் ஒரு பாகம் கொடுத்தாலே நான் நடித்துக் கொடுத்திருப்பேன். இன்னும் சிலர் 20ல் ஒரு பாகம் சம்பளம் கொடுத்திருந்தாலே நடித்திருப்பார்கள்.
கதாநாயகர்கள் சம்பளம் குறைக்க வேண்டும் என்பதைவிட குறைந்த சம்பளம் வாங்கும் கதாநாயகர்களை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் முன் வர வேண்டும்
நீங்கள் இன்னும் உங்கள் முதல் சம்பளத்துற்கு சம்மான சம்பளம் தான் பெறுகிறீர்களா? உங்கள் ஊதியத்தில் அரைவாசியில் தயாரான பலரை நான் காட்டவா?
நீங்கள் இன்னும் உங்கள் முதல் சம்பளத்துற்கு சம்மான சம்பளம் தான் பெறுகிறீர்களா? உங்கள் ஊதியத்தில் அரைவாசியில் தயாரான பலரை நான் காட்டவா?
Post a Comment