Wednesday, October 9, 2013

வாய் விட்டு சிரிங்க....



1)ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?

உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.

2)என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...

நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!


3)நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை

குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

4)நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?

டாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க பிழைச்சுடுவீங்க

5.)தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா?நான்தான் உன் கிட்ட ஐந்து ரூபாய் காயின் ஒன்று கொடுத்தேனே!

மகன்-ஆமாம்..ஆனா..பஸ்ல கண்டக்டர்...ஐந்து ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.

6.)கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..

அப்போ நீங்க லேசி மோகன்னு சொல்லுங்க.



9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ரசித்தேன்...

ராஜி said...

லேசி மோகனை ரசித்தேன்.

Unknown said...

#அப்போ நீங்க லேசி மோகன்னு சொல்லுங்க.#இதைப் படிச்சிட்டு லூஸ் மோகன் சாரி லூஸ் மோசன் ஆயிடுச்சி !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தனபாலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bagawanjee

Unknown said...

ரசிக்கத் தக்கதாய் இருந்தது...

Unknown said...

நன்றாக ரசிக்கும்படி இருந்தது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mary Jose