Tuesday, May 1, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 36


அத்தியாயம் - 36

(பரிட்சைக்கு நேரமாச்சு நாடகம் பார்த்ததும் பாராட்டும் வைரமுத்து)
நடிகர்திலகத்தை சுவாசிப்பவர் மகேந்திரன்.அவரை நடிப்பில் குருவாய் ஏற்றவர்.
நடிகர்திலகத்தின் வெற்றி படங்கள் சமீப காலமாக டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளிவந்து, அன்று ஓடிய நாட்கள் இன்றும் ஓடி சாதனைகள் புரிந்து வருகின்றன.
 நாடகத்தில் ஒய்ஜிஎம்..அதேமுறையை செய்துக் காட்டியுள்ளார்

 மகேந்திரனின் குழு 1978ல் அரங்கேற்றிய நாடகம் "பரீட்சைக்கு நேரமாச்சு" என்று  முன்னமேயே பார்த்தோம்.
ஒய்ஜிபி நாடகத்தில் ஏற்ற பாத்திரத்தை வெள்ளித்திரையில் சிவாஜி ஏற்க, நாடகத்தில் தான் ஏற்ற வரது குட்டி,ஆனந்த் ஆகிய இரட்டைவேடங்களில் மகேந்திரன்  .வெள்ளித்திரையிலும் நடித்தார்.  
அதே நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியது யூஏஏ.ஆண்டு 2014ல்.மீண்டும் இந்நாடகம் 105காட்சிகள்.இம்முறை நாடகத்தில் ஒய்ஜிபி,வெள்ளித்திரையில் சிவாஜி ஏற்ற பாத்தியரத்தை இம்முறை மேடையில் மகேந்திரன் ஏற்று.தந்தை, குரு ஆகிய இருவருக்கும் சமர்ப்பணம் செய்தார்.நாடகத்தில் முன்னர் மகேந்திரன் ஏற்ற வேடங்களை பாலாஜி ஏற்றார்.

அடுத்தும் மகேந்திரன் வேறு முறையில் வெற்றி பெற்றார்.அது என்ன என பார்ப்போமா?

No comments: