Showing posts with label அரசியல் -தமிழகம். Show all posts
Showing posts with label அரசியல் -தமிழகம். Show all posts

Tuesday, March 29, 2011

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா..?





கலைஞர் ஒரு ஆங்கில டி.வி., சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்..தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே 'கூட்டணி ஆட்சியா..அல்லது ஒரே கட்சி ஆட்சி செய்யுமா? ' என முடிவெடுக்கப்படும் என்றுள்ளார்.

119 இடங்களில் போட்டியிடும் தி.மு.க., 118 இடங்களில் வென்றால் தான் தனிப்பட்ட மெஜாரிட்டி பெற்று ஆட்சியை செய்ய முடியும்..அதற்கான வாய்ப்புகள் கண்டிப்பாக இல்லை.

அப்படியே மெஜாரிட்டிக்கு குறைவான எம்.எல்.ஏ., க்களுடன்..கூட்டணிக் கட்சிகள் வெளியிருந்து ஆதரவு தர ஆட்சியை அமைத்தாலும்..கடந்த ஐந்து வருடங்களாக வார்த்தைக்கு வார்த்தை 'மைனாரிட்டி தி.மு.க., ஆட்சி' என்று சொல்லிவரும் ஜெ மீண்டும் அதையே சொல்ல ஆரம்பிப்பார்.

இந்நிலையை உணர்ந்துதான் பா.ம.க., முதலிலேயே நிபந்தனையற்ற ஆதரவு..ஆட்சியில் பங்கு இல்லை என்று அறிவித்து விட்டது.இது எவ்வளவு காலம் நிலைக்கும் எனத் தெரியாது.கண்டிப்பாக 2013 ராஜ்யசபாவிற்கான சீட்டுகள் ஒதுக்கும் வரை நீடிக்கும் என பா.ம.க., வை அறிந்தவர்கள் அறிவர்.

63 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றதாக வைத்துக்கொண்டாலும்..அது ஆட்சியில் பங்கு ஏற்காமல் பொறுப்பான எதிர்க்கட்சியாய் செயல்படுமா? தெரியவில்லை.

ஏனெனில்..அதைவிட அதிகத் தொகுதிகளில் வெல்லும் அ.தி.மு.க., விற்கே எதிர்க்கட்சி பொறுப்பும்..அதன் தலைவிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பும் கிடைக்கும்.

அப்போது தங்கபாலுவின் எண்ணம் தவிடுபொடியாகும்..

ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்டு கூட்டணி ஆட்சி அமையுமானால்..கிட்டத்தட்ட ஒரு தி.மு.க., தொண்டனாகவே செயல்படும் தங்கபாலுவிற்கு மந்திரிசபையில் இடம் கிடைக்கலாம்.

காங்கிரஸ் அந்த ஆசையில் தான் உள்ளது.

கொஞ்சம் இடம் கிடைத்தால் மடத்தை பிடுங்க நினைக்கும் இடத்தில் காங்கிரஸ் உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்தால்...காங்கிரஸ் பல்டி அடித்தாலும் அடிக்கக் கூடும்.

இதுவே..இன்றைய தமிழக நிலை..

நடக்கப் போவதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tuesday, March 15, 2011

தி.மு.க.., பறிகொடுத்த தொகுதிகள்


காங்கிரஸ் கட்சிக்கும், பா.ம.க.,விற்கும்,வி.சி.கே.,விற்கும் தி.மு.க., கூட்டணியில் ஒதுக்கியுள்ள தொகுதிகளைப் பார்த்தால் சற்று வியப்பே ஏற்படுகிறது.

நிச்சயம் நம்மால் வெல்ல முடியும் என தி.மு.க., எண்ணும் தொகுதிகள் பல கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

1991ல் சட்டசபைத் தேர்தலில்...ராஜிவ் மறைவு அனுதாப அலை வீசிய போதும்...துறைமுகம் தொகுதி தி.மு.க., வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தது.வென்றவர் கலைஞர் என்பது வேறு விஷயம்.

சென்னையைப் பொறுத்தமட்டில் 16ல் 6 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.இதில் அண்ணாநகர், வேளச்சேரி, துறைமுகம் ஆகியவை தி.மு.க.,வின் தொகுதிகள் எனலாம்.

பல முக்கியத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது நன்றாகவே தெரிகிறது.

ஜெ வையே தோற்கடித்து அன்றைய புதுமுகம் சுகவனத்தைத் தேர்ந்தெடுத்த பர்கூர் பா.ம.க., விற்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

அதே போன்று புதிதாக உருவாகியுள்ள ஆவடி தொகுதி தி.மு.க., வெல்ல முடிந்த தொகுதி.அது காங்கிரஸ் கட்சிக்கு.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் என பா.ம.க.,விற்கும், காங்கிரஸிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் தி.மு.க., பல வலுவான தொகுதிகளை...கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது புரிகிறது.

இஸ்லாமிய சகோதரர்கள் நிறைந்தவை என்ற அளவில் துறைமுகமும்,வாணியம்பாடியும் முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது புரிகிறது..ஆனால் நாகப்பட்டிணம்..கம்யூனிஸ்ட் எளிதில் வெல்லும் தொகுதியை ஏன் முஸ்லீம் லீக்கிற்குக் கொடுத்தார்கள்.தி.மு.க., முஸ்லீம் லீக் காங்கிரஸிற்கு விட்டுக் கொடுத்த ஒரு தொகுதியை..தி.மு.க., மீண்டும் தருவதாகத் தந்தது இத் தொகுதியைத்தான் என புரிகிறது.

மதுரையில்..மதுரை வடக்கு,மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் ஆகியவை காங்கிரஸிற்கும்..சோழவந்தான் பா.ம.க., விற்கும் கொடுத்துள்ளது புருவத்தை உயர்த்த வைக்கிறது.

தி.மு.க., வின் தொகுதிகள் பல பறிபோயுள்ளது புரிகிறது.

இது.....

தி.மு.க., வின் நிலையை புரிய வைக்கிறது

Sunday, March 6, 2011

பி.ஜே.தாமசும்..அரசியல்வாதிகளும்





ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த தாமஸ், அந்த பதவிக்கு வந்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு.

மேலும் உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பில்..

'முக்கிய பதவிக்கு ஆட்களை நியமிக்கும் போது அவர்களின் நேர்மையும் கணக்கில் கொள்ள வேண்டும்.இனி வரும் காலத்தில் எந்தப் பதவியாக இருந்தாலும், அதிகாரிகளின் பெயரை மட்டும் பரிசீலிக்காமல்,பொது வாழ்க்கையில் நேர்மையாகவும், மக்கள் நலனுக்காக உழைக்கும் அனைவரின் பெயரையும் பரிசீலிக்க வேண்டும்' என்றும் எடுத்துச் சொல்லி இருக்கிறது.

இந்த கருத்துகள் அரசு அதிகாரிகள் நியமனத்திற்கு மட்டுமல்ல அவர்களை நியமனம் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

ஆம்..இந்த அரசியல்வாதிகளை நியமிப்பது யார்..?

கண்டிப்பாக இவர்களைத் தெர்ந்தெடுக்கும் மக்கள் தானே..

ஆகவே மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் போதும்...

வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், எந்த ஜாதியைச் சேர்ந்தவர் ,எந்த கூட்டணியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கணக்கில் கொள்ளாது..

வேட்பாளர்..நல்லவரா..நேர்மையானவரா..அவரைத் தேர்ந்தெடுத்தால் மக்களுக்கும்..நாம் சேர்ந்துள்ள தொகுதிக்கும் நல்லது செய்பவராக இருப்பாரா..என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு தகுந்தவருக்கு வாக்களிக்க வேண்டும்..

உண்மையான ஜனநாயகம் மலர்வது என்பது மக்கள் கையில்தான் உள்ளது.

இதை மக்கள் உணர்ந்தால்...

நாடு சிறக்கும்..ஊழல் ஒழியும்.

Monday, January 17, 2011

தி.மு.க., காங்கிரஸ் வெற்றி கூட்டணியா?

வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் கிட்டத்தட்ட கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில்..பா.ம.க., இவர்களுடன் இணையலாம்.விடுதலை சிறுத்தைகள் இணையும்.அப்போது இக்கூட்டணி வலுவானதாக இருக்குமா?

அல்லது..

அ.தி.மு.க., ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட்கள்,விஜய்காந்த்,சீமான் இவர்கள் இணைந்த கூட்டணி வலுவானதா..

பாரதீய ஜனதா கட்சி வலுவானதா..

என்று பார்த்தோமானால்.

தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ்,இரு கம்யூனிஸ்ட்கள் இணைந்த 2006 தேர்தல் கூட்டணி 162 இடங்களில் வெற்றி பெற்றது .இவர்களுக்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 44.5%

அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை இவர்களுக்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 39.8 % ஆனால் முடிவுகள் என்று பார்த்தால் தி.மு.க., கூட்டணிக்கு 162 இடங்கள் கிடைத்தன.

அ.தி.மு.க., கூட்டணிக்கு 68 இடங்கள்.

தனித்து போட்டியிட்ட டி.எம்.டி,கே., ஒரு இடம்.

உண்மையில் விஜய்காந்த் கட்சிக்கான தமிழ் நாடு முழுதும் ஆன ஆதரவு 8.32 சதவிகிதம் இதுவே சரி.

மற்றவை..அந்தந்தக் கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் கிடைத்த சதவிகிதத்தை வைத்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரம்.இது சரியாய் இருக்குமா எனத் தெரியவில்லை.

இந்நிலையில்..வரும் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் அதி.மு.க., கூட்டணிக்கு வந்துள்ளன.வி.சி.கே., தி.மு.க. கூட்டணி.

தனிப்பட்ட கட்சி ஆதரவு எனப் பார்த்தால்..தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், விஜய்காந்தும் மட்டுமே அவர்கள் வாக்கு வங்கியை சரியாக வைத்திருப்பார்கள்.

சென்ற தேர்தலின் படிப் பார்த்தால்..

அ.தி.மு.க.,32.5 +கம்யூனிஸ்ட்3.27+ ம.தி.மு.க. 5.97+விஜ்யகாந்த் 8.38..இவர்களின் ஓட்டு சதவிகிதம் 50.12%

தி.மு.க., 26.4+பா.ம.க.5..58+காங்கிரஸ்8.38 மொத்தம் 40.36%

தவிர்த்து சீமான் அ.தி.மு..க.விற்கும், திருமாவளவன் தி.மு.க., விற்கும் எவ்வளவு வாக்குகள் கொண்டுவருவார்கள் என தெரியவில்லை.

விலைவாசி உயர்வு, ஊழல், இலங்கைத் தமிழர் பிரச்னை ஆகியவை ஆளும் கூட்டணிக்கான வாக்குகளில் சில சதவிகிதங்கள் குறைக்கக் கூடும்.

(மேலும் சென்ற தேர்தலில் தி.மு.க., அதி.மு.க., கட்சிகள் தோற்ற இடத்தில் ..அவைகள் தோல்வியுற்ற வாக்குகளைவிட விஜய்காந்த் 63 தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்)

இன்றைய நிலையில் எதிர்க்கட்சிக் கூட்டணியே சற்று பலம் வாய்ந்ததாகத் தெரிகிறது.போகப் போக நிலைமை மாறலாம்.

ஜெ ., பி.ஜே.பி., ஐயையும் தன் கூட்டணியில் கொண்டு வந்தால் சில சதவிகித வாக்குகள் கூடக் கூடும்.

ஆனால்..ஒன்று மட்டும் நிச்சயம்..இந்தத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை எந்த திராவிடக் கட்சிக்கும் கிடைக்காது என உறுதியாய் சொல்லலாம்.

Wednesday, September 29, 2010

கலைஞரே இதற்கு அர்த்தம் என்ன

 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க விரும்புகிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.



அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 9ம் தேதி திருச்சி வருகை தர உள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் தங்கபாலு காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறார்.



நாகர்கோவிலில் உள்ள பெருமாள் மண்டபத்தில் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கபாலு பேசுகையில்,



காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்தக் கூட்டணி 10 இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.



வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள், கூட்டணி பற்றி இப்போது எதுவும் நாம் சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் அது தொடர்பாக சோனியா காந்தி தான் இதை முடிவு செய்வார்.



ஏற்கனவே, கூட்டணி குறித்து சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத் தெளிவுபடுத்திவிட்டார். மத்தியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சி தொடர்கிறது.



தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க விரும்புகிறோம். அதற்கான சூழல், நேரம், காலம் ஆகியவற்றை காங்கிரஸ் தலைமை தீர்மானிக்கும் என்றார்.
(நன்றி தட்ஸ்தமிழ் )


இனி நாம் 
இதற்கு என்ன அர்த்தம்  என கலைஞரே ..சொல்லுங்கள்