Tuesday, March 29, 2011

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா..?





கலைஞர் ஒரு ஆங்கில டி.வி., சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில்..தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே 'கூட்டணி ஆட்சியா..அல்லது ஒரே கட்சி ஆட்சி செய்யுமா? ' என முடிவெடுக்கப்படும் என்றுள்ளார்.

119 இடங்களில் போட்டியிடும் தி.மு.க., 118 இடங்களில் வென்றால் தான் தனிப்பட்ட மெஜாரிட்டி பெற்று ஆட்சியை செய்ய முடியும்..அதற்கான வாய்ப்புகள் கண்டிப்பாக இல்லை.

அப்படியே மெஜாரிட்டிக்கு குறைவான எம்.எல்.ஏ., க்களுடன்..கூட்டணிக் கட்சிகள் வெளியிருந்து ஆதரவு தர ஆட்சியை அமைத்தாலும்..கடந்த ஐந்து வருடங்களாக வார்த்தைக்கு வார்த்தை 'மைனாரிட்டி தி.மு.க., ஆட்சி' என்று சொல்லிவரும் ஜெ மீண்டும் அதையே சொல்ல ஆரம்பிப்பார்.

இந்நிலையை உணர்ந்துதான் பா.ம.க., முதலிலேயே நிபந்தனையற்ற ஆதரவு..ஆட்சியில் பங்கு இல்லை என்று அறிவித்து விட்டது.இது எவ்வளவு காலம் நிலைக்கும் எனத் தெரியாது.கண்டிப்பாக 2013 ராஜ்யசபாவிற்கான சீட்டுகள் ஒதுக்கும் வரை நீடிக்கும் என பா.ம.க., வை அறிந்தவர்கள் அறிவர்.

63 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றதாக வைத்துக்கொண்டாலும்..அது ஆட்சியில் பங்கு ஏற்காமல் பொறுப்பான எதிர்க்கட்சியாய் செயல்படுமா? தெரியவில்லை.

ஏனெனில்..அதைவிட அதிகத் தொகுதிகளில் வெல்லும் அ.தி.மு.க., விற்கே எதிர்க்கட்சி பொறுப்பும்..அதன் தலைவிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பும் கிடைக்கும்.

அப்போது தங்கபாலுவின் எண்ணம் தவிடுபொடியாகும்..

ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்டு கூட்டணி ஆட்சி அமையுமானால்..கிட்டத்தட்ட ஒரு தி.மு.க., தொண்டனாகவே செயல்படும் தங்கபாலுவிற்கு மந்திரிசபையில் இடம் கிடைக்கலாம்.

காங்கிரஸ் அந்த ஆசையில் தான் உள்ளது.

கொஞ்சம் இடம் கிடைத்தால் மடத்தை பிடுங்க நினைக்கும் இடத்தில் காங்கிரஸ் உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்தால்...காங்கிரஸ் பல்டி அடித்தாலும் அடிக்கக் கூடும்.

இதுவே..இன்றைய தமிழக நிலை..

நடக்கப் போவதை பொறுத்திருந்து பார்ப்போம்.

1 comment:

Chitra said...

நடக்கப் போவதை பொறுத்திருந்து பார்ப்போம்.


.... SURE!!!!!!