ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Showing posts with label அரசியல் -நிகழ்வு. Show all posts
Showing posts with label அரசியல் -நிகழ்வு. Show all posts
Monday, January 3, 2011
முதல்வர் பிரதமரை வரவேற்கச் செல்லாதது ஏன்?
முன்னதாக பிரதமர் அடையாறில் உள்ள சுற்றுச் சூழல் பூங்காவைத் திறப்பதற்காகவும்,அறியவில் மாநாட்டைத் துவக்கி வைக்கவும் சென்னை வருவதாக இருந்தது.
ஆனால்..சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பூங்காவிற்குக் கிடைக்காததால்..அதன் திறப்பு நிறுத்தி வைக்கப் பட்டது.இந்நிலையில் மாநாட்டை துவக்கி வைக்க மட்டுமே பிரதமர் சென்னை வந்தார்.
சாதாரணமாக பிரதமர் ஒரு மாநிலத்திற்கு விஜயம் செய்தால் அம் மாநில முதல்வர் விமான நிலையம் சென்று வரவேற்பதுதான் முறை.
ஆனால்..முதல்வர் வைரமுத்து அவர்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருவதாக முன்னரே சொல்லிவிட்டதால்..பிரதமரை வரவேற்க செல்லவில்லை என்று சொல்லப்பட்டது.முதல்வர் சார்பில்..துணை முதல்வர் பிரதமரை வரவேற்றார்.
அடுத்தநாள் பிரதமரை ராஜ்பவனில் சென்று முதல்வர் சந்தித்து..தமிழக வெள்ள நிவாரண உதவிகள் பற்றி பேசினார்.
ஆனால்..உண்மையில் மத்திய சுற்றுச் சூழல் துறை மீது முதல்வர் அதிருப்தி அடைந்துள்ளார்.
முன்னதாக..கேரளாவிற்கு முல்லை பெரியாறு அணை விவகாரம் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளபோதே..அணைக்கு சற்று தள்ளி புதிய அணைகட்ட ஆய்வு செய்ய
சுற்றுச் சூழல் அமைச்சகம் கேரளாவிற்கு அனுமதி வழங்கியது
ஞாபகத்தில் வைக்க வேண்டிய ஒன்று.
தவிர்த்து..மாநாட்டு துவக்க விழாவை முதல்வர் தவிர்த்ததற்கு..விழாவில் ராஜா விற்கு பின் அந்த இலாகாவை ஏற்ற கபில்சிபல் காரணமாய் இருக்க மாட்டார் என்றும் தோன்றுகிறது.
வழக்கம் போல முதல்வரும், பிரதமரும்..காங்கிரஸ்,தி.மு.க., விற்கான கூட்டணி வலுவாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
நம்புவோமாக..
டிஸ்கி-டி.ஆர்.பாலு ஒரு கூட்டத்தில் பேசுகையில்..கலைஞர் உயிருடன் உள்ளவரை தமிழன் இளிச்சவாயனாக இருக்கமுடியாது என்று கூறியுள்ளார்.அப்போது..கலைஞருக்குப் பின் தமிழர்கள் இ.வா. என்கிறாரா?
Tuesday, September 21, 2010
போடாங்க..நீங்களும் உங்க கொள்கையும்..

சமீபத்திய இரு செய்திகள்
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கான இலவச செல்போன் வழங்கும் திட்டம் இன்று திருப்பூரில் தொடங்கி வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பாலக்கரை அவினாசியில் வறுமைக் கேர்ட்டிற்கு கீழ் வாழம் ஏழை மக்களுக்கு, இலவச செல்போன்கள் வழங்கும் திட்டத்தின் தொடங்க விழா நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா பயனாளிகளுக்கு வழங்கினார்.
அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட 36 கிராமங்களைச் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு இலவச செல்போன்களை ராசா வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தொலைபேசி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 கோடியாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

2) மக்களுக்கு இலவச கோதுமை வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசின் கொள்கை வடிவமைத்தலில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்பது என் கருத்து....இது நமது பிரதமர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளது
டிஸ்கி..இடுகையின் தலைப்பிற்கும் ,செய்திகளுக்கும் தொடர்பிருப்பதாக நீங்க நெனச்சா கம்பெனி பொறுப்பல்ல
Subscribe to:
Posts (Atom)
