Monday, January 3, 2011

முதல்வர் பிரதமரை வரவேற்கச் செல்லாதது ஏன்?


முன்னதாக பிரதமர் அடையாறில் உள்ள சுற்றுச் சூழல் பூங்காவைத் திறப்பதற்காகவும்,அறியவில் மாநாட்டைத் துவக்கி வைக்கவும் சென்னை வருவதாக இருந்தது.
ஆனால்..சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பூங்காவிற்குக் கிடைக்காததால்..அதன் திறப்பு நிறுத்தி வைக்கப் பட்டது.இந்நிலையில் மாநாட்டை துவக்கி வைக்க மட்டுமே பிரதமர் சென்னை வந்தார்.
சாதாரணமாக பிரதமர் ஒரு மாநிலத்திற்கு விஜயம் செய்தால் அம் மாநில முதல்வர் விமான நிலையம் சென்று வரவேற்பதுதான் முறை.
ஆனால்..முதல்வர் வைரமுத்து அவர்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருவதாக முன்னரே சொல்லிவிட்டதால்..பிரதமரை வரவேற்க செல்லவில்லை என்று சொல்லப்பட்டது.முதல்வர் சார்பில்..துணை முதல்வர் பிரதமரை வரவேற்றார்.
அடுத்தநாள் பிரதமரை ராஜ்பவனில் சென்று முதல்வர் சந்தித்து..தமிழக வெள்ள நிவாரண உதவிகள் பற்றி பேசினார்.
ஆனால்..உண்மையில் மத்திய சுற்றுச் சூழல் துறை மீது முதல்வர் அதிருப்தி அடைந்துள்ளார்.
முன்னதாக..கேரளாவிற்கு முல்லை பெரியாறு அணை விவகாரம் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளபோதே..அணைக்கு சற்று தள்ளி புதிய அணைகட்ட ஆய்வு செய்ய

சுற்றுச் சூழல் அமைச்சகம் கேரளாவிற்கு அனுமதி வழங்கியது

 ஞாபகத்தில் வைக்க வேண்டிய ஒன்று.
தவிர்த்து..மாநாட்டு துவக்க விழாவை முதல்வர் தவிர்த்ததற்கு..விழாவில் ராஜா விற்கு பின் அந்த இலாகாவை ஏற்ற கபில்சிபல் காரணமாய் இருக்க மாட்டார் என்றும் தோன்றுகிறது.
வழக்கம் போல முதல்வரும், பிரதமரும்..காங்கிரஸ்,தி.மு.க., விற்கான கூட்டணி வலுவாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

நம்புவோமாக..

டிஸ்கி-டி.ஆர்.பாலு ஒரு கூட்டத்தில் பேசுகையில்..கலைஞர் உயிருடன் உள்ளவரை தமிழன் இளிச்சவாயனாக இருக்கமுடியாது என்று கூறியுள்ளார்.அப்போது..கலைஞருக்குப் பின் தமிழர்கள் இ.வா. என்கிறாரா?

21 comments:

pichaikaaran said...

எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்

Unknown said...

இதுல என்னவெல்லாம் உள்குத்து இருக்கோ அவர்களுக்குத்தான் தெரியும்.

a said...

எங்கே செல்லும் இந்த பாதை????

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பார்வையாளன் said...
எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்//

நல்லது என எதைச் சொல்கிறீர்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இனியவன் said...
இதுல என்னவெல்லாம் உள்குத்து இருக்கோ அவர்களுக்குத்தான் தெரியும்.//

நம்மவர்க்குத் தெரியாமையா இருக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வழிப்போக்கன் - யோகேஷ் said...
எங்கே செல்லும் இந்த பாதை????//
யார் யாரைக் கவிழ்க்கப் போகிறார்கள் என்றா

vasu balaji said...

:). இப்படியே பராக் காட்டிண்டிருப்பாங்க.

நசரேயன் said...

ஐயா நீங்க எந்தபக்கமுன்னே தெரியலையே ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
ஐயா நீங்க எந்தபக்கமுன்னே தெரியலையே ?//நமக்குப் பிடிச்சதைப் பத்தி..பிடிச்சமானவங்களைப் பத்தித்தான் எழுதமுடியும்?
மத்தவங்களைப் பற்ரி நமக்கு என்ன கவலை?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
:). இப்படியே பராக் காட்டிண்டிருப்பாங்க//.


ஏதோ நம்மவர்க்கு நல்லது நடந்தா சரி

Unknown said...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!?

vasan said...

பாவ‌ம் பிர‌தம‌ர், பாலுக்கும் காவ‌லா இருக்க‌னும், ஆனா பூணையும் பசியில கிடக்க‌க் கூடாது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//விக்கி உலகம் said...
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!?//
ஒன்னுமே புரியல ஒலகத்திலே :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//vasan said...
பாவ‌ம் பிர‌தம‌ர், பாலுக்கும் காவ‌லா இருக்க‌னும், ஆனா பூணையும் பசியில கிடக்க‌க் கூடாது.//

பால் யாரு..பூனை யாரு :)))

சி.பி.செந்தில்குமார் said...

>>>டிஸ்கி-டி.ஆர்.பாலு ஒரு கூட்டத்தில் பேசுகையில்..கலைஞர் உயிருடன் உள்ளவரை தமிழன் இளிச்சவாயனாக இருக்கமுடியாது என்று கூறியுள்ளார்.அப்போது..கலைஞருக்குப் பின் தமிழர்கள் இ.வா. என்கிறாரா?

more than the post yr disky is attractive

Anonymous said...

ஒரு அடுக்கு மாடிகட்டிடம் கட்டினால் கூட சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் கெடுதல் வரலாம் என்று எண்ண வாய்ப்பு உள்ளது.ஆனால் அது ஒரு பசுமை பூங்கா. அதற்கு அனுமதி கொடுக்க அப்படி ஒன்றும் பெரிய பார்மாலிட்டீஸ் இருப்பதாக தெரியவில்லை. ஆக இது திட்டமிட்ட செயல். பிரதமரை கலந்து கொள்ள வைக்காமல் இருக்க செய்த ஒரு அப்பட்டமான சதி. எனவே முதல்வர் பிரதமரை விமானநிலையம் சென்று அழைக்காமையும் அவருடன் மற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமையும் ஏற்ப்புடையதே. இனியாவது பிரதமர் உணரட்டும்.

Thenammai Lakshmanan said...

அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானோ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி செந்தில்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கொக்கரகோ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

Unknown said...

இலவசம் என்ற மாயை!

http://snabakvinod.blogspot.com/2011/01/blog-post.html

nanpargale pathivai padiththu karuththu sollavum.