Showing posts with label சினிமா இயககுனர். Show all posts
Showing posts with label சினிமா இயககுனர். Show all posts

Wednesday, November 26, 2008

தமிழ் திரை உலகம் மறந்த..இயக்குநர்..

சாதாரணமாக நாம் இயக்குநர்கள் பற்றி பேசும் போது...ஸ்ரீதர்,பாலசந்தர்,பாரதிராஜா,பாலு மஹேந்திரா,மணிரத்தினம்..என்றெல்லாம்..பேசுவோம்.ஆனால்..நாம் அனைவருமே மறந்து விட்ட..ஒரு இயக்குநர் இருக்கிறார்..குடும்பப் பாங்கான பல வெற்றிப்படங்களைத் தந்தவர்..

ஆம்..அவர்..கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்..

உருவில் குள்ளமானவர்..அவர் படைப்புகளோ..உச்சம்..

தெய்வப்பிறவி..படத்தின் கதை வசனகர்த்தா..

பணமா..பாசமா...இவர் தந்த மா பெரும் வெற்றிப்படம்..ஜெமினி,சரோஜா தேவி,பகவதி,எஸ்.வரலட்சுமி..நடித்தது...இப்படத்தின் தாக்கமே..பாலசந்தரின்..பூவா..தலையா..

கை கொடுத்த தெய்வத்தை ..மறந்து விட முடியுமா? நடிகையர் திலகம்..அப்பாவி பெண்..கோகிலாவாகவே மாறி..நடித்த அவர் நடிப்புலகின் ஒரு மைல்கல்படம்.நடிகர் திலகத்தையே இப்படத்தில்..சாப்பிட்டுவிட்ட நடிப்பு.

அடுத்து..ஆயிரம் ரூபாய்...இப்படத்திலும்..குறத்தியாக வந்து..நடிப்பில் நம்மை அசத்தியவர் சாவித்திரி.

இவரின் என்னதான் முடிவு என்ற படம்..ஜனாதிபதியின்..வெள்ளிப் பதக்கம் பெற்றது..எப்படிப்பட்ட கொடியவனாய் இருந்தாலும்...மனம் திருந்தி...நல்லவன் ஆனால்..அவனை மன்னிக்க வேண்டும்..என்ற கருத்தைக்கொண்ட படம்.பாலையாவின் அசத்தலான நடிப்புஇதில்.

அடுத்து..தெய்வத்தின் தெய்வம்...விதவை..மறுமணத்தை வலியுறுத்திய படம்.

சாரதா..குமுதம்.செல்வம்,கண் கண்ட தெய்வம்,பேசும் தெய்வம்,குலமா குணமா,குறத்தி மகன் என பட்டியல் நீளும்.

கே.ஆர்.விஜயாவை அறிமுகப் படுத்திய கற்பகம்..இதுவும் மாபெரும் வெற்றிப்படம்..இப்படப் பெயராலேயே..இவர் பின்னர் ஸ்டூடியோவும் ஆரம்பித்தார்.

சுஜாதா நடித்த அடுக்குமல்லி...பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அற்புதமான படம்

நத்தையில் முத்து...தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ..ஒரு பெண்ணின் கதை..

ஆதி பராசக்தி..என்ற..பக்தி படமும் இவரது வெற்றிப்பட்டியலில் அடங்கும்...

இப்படிப்பட்ட ..ஒரு இயக்குநர்..ஏன்..தமிழ் பட உலகம் மறந்துவிட்டதூ?