Wednesday, November 26, 2008

தமிழ் திரை உலகம் மறந்த..இயக்குநர்..

சாதாரணமாக நாம் இயக்குநர்கள் பற்றி பேசும் போது...ஸ்ரீதர்,பாலசந்தர்,பாரதிராஜா,பாலு மஹேந்திரா,மணிரத்தினம்..என்றெல்லாம்..பேசுவோம்.ஆனால்..நாம் அனைவருமே மறந்து விட்ட..ஒரு இயக்குநர் இருக்கிறார்..குடும்பப் பாங்கான பல வெற்றிப்படங்களைத் தந்தவர்..

ஆம்..அவர்..கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்..

உருவில் குள்ளமானவர்..அவர் படைப்புகளோ..உச்சம்..

தெய்வப்பிறவி..படத்தின் கதை வசனகர்த்தா..

பணமா..பாசமா...இவர் தந்த மா பெரும் வெற்றிப்படம்..ஜெமினி,சரோஜா தேவி,பகவதி,எஸ்.வரலட்சுமி..நடித்தது...இப்படத்தின் தாக்கமே..பாலசந்தரின்..பூவா..தலையா..

கை கொடுத்த தெய்வத்தை ..மறந்து விட முடியுமா? நடிகையர் திலகம்..அப்பாவி பெண்..கோகிலாவாகவே மாறி..நடித்த அவர் நடிப்புலகின் ஒரு மைல்கல்படம்.நடிகர் திலகத்தையே இப்படத்தில்..சாப்பிட்டுவிட்ட நடிப்பு.

அடுத்து..ஆயிரம் ரூபாய்...இப்படத்திலும்..குறத்தியாக வந்து..நடிப்பில் நம்மை அசத்தியவர் சாவித்திரி.

இவரின் என்னதான் முடிவு என்ற படம்..ஜனாதிபதியின்..வெள்ளிப் பதக்கம் பெற்றது..எப்படிப்பட்ட கொடியவனாய் இருந்தாலும்...மனம் திருந்தி...நல்லவன் ஆனால்..அவனை மன்னிக்க வேண்டும்..என்ற கருத்தைக்கொண்ட படம்.பாலையாவின் அசத்தலான நடிப்புஇதில்.

அடுத்து..தெய்வத்தின் தெய்வம்...விதவை..மறுமணத்தை வலியுறுத்திய படம்.

சாரதா..குமுதம்.செல்வம்,கண் கண்ட தெய்வம்,பேசும் தெய்வம்,குலமா குணமா,குறத்தி மகன் என பட்டியல் நீளும்.

கே.ஆர்.விஜயாவை அறிமுகப் படுத்திய கற்பகம்..இதுவும் மாபெரும் வெற்றிப்படம்..இப்படப் பெயராலேயே..இவர் பின்னர் ஸ்டூடியோவும் ஆரம்பித்தார்.

சுஜாதா நடித்த அடுக்குமல்லி...பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அற்புதமான படம்

நத்தையில் முத்து...தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ..ஒரு பெண்ணின் கதை..

ஆதி பராசக்தி..என்ற..பக்தி படமும் இவரது வெற்றிப்பட்டியலில் அடங்கும்...

இப்படிப்பட்ட ..ஒரு இயக்குநர்..ஏன்..தமிழ் பட உலகம் மறந்துவிட்டதூ?

22 comments:

ILA (a) இளா said...

//கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்//
ஆபாவாணன் திவாலாக அவர் எடுத்த கடைசி படம் தெரியுங்களா??
காலத்துக்கு ஏத்த மாதிரி படம் எடுக்கத்தெரியலைன்னா இப்படி நெறைய பேர் மறக்கப்படுவாங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

காலத்திற்கேற்ப படம் எடுக்க வேண்டும்..ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்தான்...இளா..

ஆனால்..இன்று..காலத்திற்கேற்ப ..படம் தராதவர்கள்தான்..நாம் பேசும் முன்னணி இயக்குநர்களும்.(மணிரத்னம் விதிவிலக்கு)

rapp said...

இவர் ஓகே, ஆனா எக்ஸ்ட்ரீம் செண்டிமெண்ட் வசனங்கள், பிளஸ் எக்கச்சக்க பெண்ணடிமை கருத்துக்கள்(சாரதா படத்துலக் கூட விஜயகுமாரி இறந்திடுவாங்களே )

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அற்புதமான இயக்குநர் சில்க் அவர்களை மதித்து தான் தயாரித்த குமுதம் இதழில் பேட்டி எடுத்துப் போட்டு அசத்தியவர்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரஜினிக்கு படம் எடுக்க தெரியுமா அவருக்கு?

T.V.ராதாகிருஷ்ணன் said...

சாரதா..ஆண்மைத்தன்மை..இழந்த கணவன்..மனைவிக்கு..தானே..மறுமணம் செய்விக்கிறான்(!!)..ஆனால்..அந்த பெண்ணோ..அதற்கு சம்மதிக்கவில்லை..திருமணத்தன்று..தன் கணவனை..பிரிய மனமில்லாதவள்..மரணமடைகிறாள்..நீங்கள்..ஏன்..கணவன்..மனைவி உறவு என்பது..உடலுறவுதான் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காத..உயர்ந்த பண்புள்ள பெண்ணாக அவளை எடுத்துக்கொள்ளக்கூடாது...பெண்ணடிமைத் தனம் என ஏன் எண்ண வேண்டும்..rapp

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் said...
ரஜினிக்கு படம் எடுக்க தெரியுமா அவருக்கு?//


ரஜினிக்கு படம் எடுக்க என்று..தனித்திறமை வேண்டும்..அத்திறமை இருந்தும்..அவரை வைத்து பல வெற்றிகளைத் தந்த எஸ்பி.முத்துராமனே..பாண்டியன்..என்ற தோல்விபடத்தையும்..தந்தார்..சந்திரமுகி தந்த வாசு..குசேலன் என்ற தோல்வி படத்தை தந்தார்..
நீங்கள் கேட்ட கேள்விக்கு என் பதில்...கே.பாலசந்தரே..ரஜினி வைத்து படம் எடுக்கும் போது..வேறு இயக்குநர் தேடுகிறார்..அவருக்கும் முந்தயவர் ஆயிற்றே இவர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி
SUREஷ்

rapp said...

அப்டின்னா, அந்தப் பொண்ணு தன் கருத்தை புரிய வெக்கறப் பொண்ணா காமிச்சிருக்கணும். கணவனை பிரிய நிஜமா மனமில்லாதவங்க தற்கொலை பண்ணி நிரந்தரமா பிரியறதும் தவறுதானே. உடலுறவை பொருட்டாக எண்ணாமல் மனதிடத்தோடும், உறுதியோடும் வாழ முடியும்னு நினைக்கிற ஒரு பெண்ணால் கண்டிப்பாக இதனை புரியவைக்க முடியும். அப்டி காமிச்சிருந்தா அது எவ்ளோ பேருக்கு பாசிடிவ்வா, நிஜ வாழ்க்கைக்கும் ஒத்துவரக்கூடியா இருந்திருக்கும்:):):) ஆனா இதுல காமிச்சது கண்டிப்பா என்னைப் பொறுத்தவரை பிற்போக்கான விஷயம்தான்:):):)

rapp said...

me the 10th:):):)

T.V.ராதாகிருஷ்ணன் said...

பெண்ணின் சம்மதத்தை ஒதுக்கிவிட்டு..அவள் கணவன் எடுக்கும் முடிவு அது..ஆகவே..இதில் நாம் குறை சொல்ல வெண்டியது..கணவனையே...ராப்..வேண்டுமானால்..ஒரு தனி பதிவு போட்டுவிடுகிறேன்..இதைப்பற்றி

நசரேயன் said...

போற போக்குல என்னைய விட்டு புட்டீங்களே

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்கள மறக்கவோ..விடவோ..முடியுங்களா? நசரேயன்
நீங்க வந்தாதான்..என் பதிவுகளே முழுமை பெறும்

rapp said...

எனக்குப் புரியுதுங்க சார். நான் இதுல சொல்ல வர்றது என்னன்னா, இவர் மஹேந்திரன், பாலு மகேந்திரா மாதிரி, அப்டியே வாழ்க்கையை படம்பிடிக்கிறவர் இல்லை. சமூக அக்கறையுள்ள குடும்பப் படங்கள் எடுக்கிறவர். அப்டிப்பட்டவர், இதுல முடிக்கும்போது ஒரு வகை பாசிடிவ் தீர்வை சொல்லிருக்கலாம். ஆனா இவர் நெகடிவ் தீர்வை சொல்றது தப்பில்லையா? நம்மூர்ல பெண்கள் தியாகக் குத்துவிளக்கா தன்னை மனதளவில் கற்பனை பண்ணிக்கிறது ஜாஸ்தி. அப்டிப்பட்டவங்களை இது ஊக்கப் படுத்தக்கூடாதில்லையா. தெய்வத்தின் தெய்வம் எடுக்கிறவர், இதிலும் அப்டி செஞ்சிருக்கலாம் ஒரு நல்ல தீர்வை கொடுத்திருக்கலாம்னு சொல்றேன்:):):)

rapp said...

me the 15th:):):)

அருண்மொழிவர்மன் said...

ஆபாவாணன் திவாலாகும்படி இவர் எடுத்த படம் என்ன

T.V.ராதாகிருஷ்ணன் said...

ராப்...நீங்கள் சொல்வதை முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன்..ஆனால்..அந்த படம் வந்த காலகட்டத்தைப் பாருங்கள்...அன்று அந்த படம் சூப்பர் வெற்றி..ஆனால்..விதவை மணம் ஆதரித்த..தெய்வத்தின் தெய்வம்..படு தோல்வி..இன்று ஒருசமயம் அப்படம் வந்திருந்தால்..அதற்கான மாற்றங்களுடன் வந்திருக்கக் கூடும்.
நன்றி ராப்

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்கள் கேள்வி இளாவிற்கு அனுப்பப் படுகிறது..
வருகைக்கு நன்றி அருண்மொழிவர்மன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

சித்தி,சின்னஞ்சிறு உலகம் பட்டியலில் விட்டுப்போய் விட்டன.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அருண்மொழிவர்மன் said...
ஆபாவாணன் திவாலாகும்படி இவர் எடுத்த படம் என்ன//

kaviyaththalaivan

T.V.ராதாகிருஷ்ணன் said...

thakavalukku nanRi Ila

m.g. bala said...

ஆபாவாணன் திவாலாகும்படி செய்த திரைப்படம்
மூங்கில் கோட்டை