Thursday, January 1, 2009

கலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்

ஒருவர் கவிஞராக இருப்பார்..அல்லது
எழுத்தாளராக இருப்பார்..அல்லது
திரைப்பட வசனகர்த்தாவாக இருப்பார்..அல்லது
இலக்கியவாதியாக இருப்பார்..அல்லது
திரைப்பட பாடலாசிரியராக இருப்பார்..அல்லது
அரசியல்வாதியாக இருப்பார்.....ஆனால்
தமிழன்னை..தன் செல்லப்புதல்வன் கலைஞருக்கு...எல்லாவற்றையும்...வாரி..வாரி...வழங்கி இருக்கிறாள்.
ஆம்...அந்த தமிழன்னையின் செல்லப்பிள்ளை தான்...நம் கலைஞர்.

இப்பதிவு...திரைப்பட பாடலாசிரியராக கலைஞர்.

பல திரைப்படங்களுக்கு..திரைக்கதை,வசனம் எழுதியவர் அவர் என்பதை நாம் அறிவோம்.ஆனால்..பலருக்கு, குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு திரைப்பட பாடலாசிரியர் என்பது தெரியாது.

1950ல் வந்த மந்திரிகுமாரி படத்தில் இடம் பெற்ற கலைஞர் பாடல்..

அருமைக் கன்னுக்குட்டி - என்
எருமைக் கன்னுக்குட்டி...
ஊருக்கு உழைப்பவன்டி..ஒரு
குற்றம் அறியான்டி
உதைப்பட்டு சாவான்டி....
என்று வரும் வரிகள்...

அடுத்து....அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா படத்தில் கலைஞரின் பாடல்...

பொதுநலம்..என்றும் பொதுநலம்
புகழ் உடலைக் காக்கும்..மிகப் புனிதமான செயல்
பொதுநலம்.....
என்ற பாடல்..(இப்பாடல் பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்)

பூம்புகார்..படத்தில் வரும் அவர் பாடல்..சுந்தராம்பாள் பாடுவார்..
'வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடனின் மனதினில்
மறக்க வொண்ணா வேதம்....- என்ற பாடல்.


மறக்கமுடியுமா...என்ற படத்தில்..அவர் எழுதிய ஒரு அருமையான பாடல்....

காகித ஓடம் கடலலை மேலே
போவதுபோல ...மூவரும் போவோம்...- மறக்கமுடியா பாடல்.

எல்லாவற்றையும் விட நம்மால் மறக்கமுடியாதது...பராசக்தியில்...

பூமாலை..நீயே
புழுதி மண்மேலே-வீணே
வந்தேன்..தவழ்ந்தாய்....என்ற பாடல்.

தவிர...பூமாலை படத்தில்..'கன்னம்..கன்னம்..சந்தனக்கிண்ணம்' என்ற பாடல்..
ராஜா ராணியில்'பூனைக்கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா..மியாவ்..மியாவ்...' பாடல்.

எனக்கு நினைவில் தற்போது வந்த பாடல்கள் இவை.
கடல் நீரை..குடத்திற்குள் அடக்கி விட முடியுமா?

10 comments:

நசரேயன் said...

நல்ல தகவல் ஐயா

வருண் said...

"காகித ஓடம்" (மறக்கமுடியுமா) பாடல் ரொம்ப நல்லா எழுதி இருப்பார்.

"அழுவதை கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை"

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வருண்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///வருண் said...
"காகித ஓடம்" (மறக்கமுடியுமா) பாடல் ரொம்ப நல்லா எழுதி இருப்பார்.

"அழுவதை கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை"///


வருண்..உங்களுக்கு ஒரு உபரி தகவல்

ஒரு தெலுங்கு படம்(பெயர் ஞாபகம் இல்லை) சந்தானம் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது...அது மீண்டும் கலைஞர் திரைக்கதை,வசனத்துடன்..முரசொலி மாறன் இயக்கத்தில் மறக்கமுடியுமா? என நேரடி தமிழ்ப் படமாக வந்தது.

வருண் said...

திரு டி வி ஆர் அவர்களே!

முதலில் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்!



** T.V.Radhakrishnan said...

வருண்..உங்களுக்கு ஒரு உபரி தகவல்

ஒரு தெலுங்கு படம்(பெயர் ஞாபகம் இல்லை) சந்தானம் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது...அது மீண்டும் கலைஞர் திரைக்கதை,வசனத்துடன்..முரசொலி மாறன் இயக்கத்தில் மறக்கமுடியுமா? என நேரடி தமிழ்ப் படமாக வந்தது.

January 2, 2009 1:30:00 AM PST***

இது எனக்கு புதிய தகவல்தான் நன்றி! :-)

பராசக்தி படத்தில் உள்ள இன்னொரு பாடல், "கா கா கா" வும் கலைஞர் எழுதியது என்று எண்ணி இருந்தேன். எனக்கு இப்போ சந்தேகம் வருகிறது.

பராசக்தி டி வி டி யில் பார்த்து சொல்கிறேன் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// வருண் said...
திரு டி வி ஆர் அவர்களே!

முதலில் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்!//

நன்றி!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வருண் said...

update!!!!

***பராசக்தி படத்தில் உள்ள இன்னொரு பாடல், "கா கா கா" வும் கலைஞர் எழுதியது என்று எண்ணி இருந்தேன். எனக்கு இப்போ சந்தேகம் வருகிறது.

பராசக்தி டி வி டி யில் பார்த்து சொல்கிறேன் :)***

பராசக்தி டி வி டி யில் எந்தப்பாடல் யார் எழுதியது என்று தெளிவாக இல்லை!

என்னிடம்,மில்லினியம் கலக்ஷன் சி டி இருக்கிறது. அதில் பார்த்த போது, "கா கா கா" பாடலுக்கும் திரு. கருணாநிதி தான் பாடல் வரிகள் எழுதியதாக போட்டிருக்கிறது.

காகத்தை நோக்கி பாடுவதாக எழுதி இருக்கிறார். சில வரிகள் இங்கே!

"இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை எத்தனையோ இந்த நாட்டிலே

பச்சிஜாதி நீங்க நம்ம பகுத்த்றிவுவாதிகளை பார்க்காதீங்க!"

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருண்..அந்த பாடல் அவர் எழுதியதா? என சரியாகத் தெரியவில்லை.ஆனால் இது சம்பந்தமாக ஒரு தகவல்.அந்த பாடல் போது காகங்கள் வரவில்லையாம்.அதனால்..புறாக்களைப் பிடித்து..அவற்றிற்கு
கறுப்பு வண்ணம் அடித்து காகங்களாக காட்டினார்களாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கா கா கா...பாடல் கலைஞர் எழுதியதுதான்