Tuesday, January 20, 2009

படிக்காதவன்..பார்த்தவர் - விமரிசனம்

மூத்த பதிவர்கள் பெரும்பாலோர்..பொங்கல் வெளியீடுகளான படிக்காதவன்,வில்லு படங்கள் விமரிசனம் பதிவிட்டுவிட்ட..நிலையில்..நாமும் ஊரோடு ஒத்து வாழ எண்ணி..படிக்காதவன் பார்த்து ஒரு விமரிசனம் பதிவிடும் வெறியுடன்..தியேட்டருக்கு விரைந்தேன்.

டிக்கட் வாங்கி இருக்கையில் சென்று அமர்ந்தபோது, என் இருக்கைக்கு முன் வரிசையில்..கணவன்,மனைவி,அவர்களது மகள் 12 வயதிருக்கும் அமர்ந்திருந்தனர்.கணவன் நடுவே அமர..வலப்பக்கம் மனைவி,இடப்பக்கம் மகள்.

ஏங்க..என்ன படத்திற்கு வந்திருக்கோம்...இது மனைவி

படிக்காதவன் - கணவன்

ஐய்ய..பழைய படமா? ரஜினி நடிச்சது தானே..என்றாள்..மனைவி

இல்லை..இல்லை..அவர் மாப்பிள்ளை தனுஷ் நடிச்ச படம்.

இந்த படக்கதை 'வீட்டில எல்லாரும் படிச்சவங்க..தனுஷ்..படிக்கதவர்..'என கணவன் கதைச் சுருக்கத்தை சொல்ல ஆரம்பித்ததும்..குறுக்கிட்டாள் மகள்..

'அப்பா..இந்த படம் பார்த்திட்டோம்..தனுஷ்..மன்மத ராசா பாடுவாரே..'என்றாள் .

அக்கம் பக்கம் பார்த்து அவளை'உஷ்' என அடக்கிய அப்பா..'இது புதுபடம்..பிரதாப் போத்தன் தான்...'

'இல்லப்பா..தனுஷோட அப்பா..விஜயன்...இல்லை..இல்லை..மௌலி..இல்லை இல்லை மணிவண்ணன்..இல்லை இல்லை..'இது மனைவி.

'வாயை மூடப்போறீங்களா..இல்லையா ' என்றார் கணவன்.

இருவரும்..கப்சிப்...சிறிது நேரம் கழித்து..மனைவி மட்டும் 'இந்த படம் பார்த்தோம்னு சொன்னா..ஒத்துக்க மாட்டீங்களே...இவரை விட பெரிய படிப்பு படிச்ச நயன்தாரா இவரை காதலிக்கும்.'என முணுமுணுக்க ..கணவன்..'அது யாரடி நீ மோகினி" என்றார்.

'அப்பா...நான் சொன்னேன் இல்லை..ஒல்லி தனுஷ்...ரௌடிகளோட சண்டை போடறார் பாரு' என்றாள் மகள்.

'ஐய்யோ...படம்..பார்க்க விடுங்களேன்' என்று எனக்கே கத்த வேண்டும் போல இருந்தது.

கடைசி வரை..கணவரைத்தவிர மற்ற இருவரும்...படத்தை பார்த்து விட்டோம்..என்றே சாதித்தனர்.

படம் விட்டதும் அவர்கள் பின்னல் சென்ற நான்...அந்தக் கணவன்..'பொங்கல் முதல்...படிக்காதவன்..என்ற போஸ்டரைக்காட்டி..புதுபடம்தான்..என உணர்த்திக்கொண்டிருந்தார்.

ஆமாம்..படத்துக்கு விமரிசனமா? யார் படத்தை பார்த்தார்கள்...விமரிசிக்க

10 comments:

சின்னப் பையன் said...

ஹாஹா... :-)))

மதிபாலா said...

அதான் உண்மை , மொத்தத்தில் படிக்காதவன் - கொஞ்சமும் எனக்கு பிடிக்காதவன்

படிக்காதவன் முதல் பாதி -
பாஸானாவன் !!!
படிக்காதவன் இரண்டாம் பாதி -
பார்டரில் பெயிலானவன்.

ஆனாலும் சூரியத் தொலைக்காட்சி புண்ணியத்தில் போட்ட காசுக்கும் மேலாக வசூலை அள்ளி விடுவான் இந்தப் படிக்காதவன்.

உச்சகட்ட காமெடி இந்த படிக்காதவன் எம்.ஜி.ஆரும் படிக்கல , கலைஞரும் படிக்கல அவுங்க சாதிக்கலையா என்று கானா பாடுவதுதான்.

விவேக் - அய்யோ பாவம் !!! ஆனா ரெண்டாவது பாதில அவரும் இல்லேன்னா நாம ரொம்ப ரொம்பப் பாவம்..!! அதனால மன்னிச்சிடலாம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சத்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மதிபாலா

கோவி.கண்ணன் said...

:)

இது பரவாயில்லை. ஏற்கனவே படம் பார்த்தவர்கள் அருகில் இருந்து படத்திற்கு அடுத்த காட்சியை சொல்லிக் கொண்டு வந்தால் 'வெட்டனும்' னு தோன்றும் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.

நசரேயன் said...

நானும் படம் பார்க்கலை இன்னும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
நானும் படம் பார்க்கலை இன்னும்//


பரவாயில்லை...அதனால் ஒன்னும் பேரிழப்பில்லை

குடுகுடுப்பை said...

வித்தியாசமான விமர்சனம்.
நல்லவேளை நான் வில்லோட தப்பிச்சேன்.

பொம்மலாட்டம் பாருங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
வித்தியாசமான விமர்சனம்.
நல்லவேளை நான் வில்லோட தப்பிச்சேன்.

பொம்மலாட்டம் பாருங்க.//

பொம்மலாட்டம்...இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.