Wednesday, January 28, 2009

விவேக் தகுதியானவர்தானா...

விவேக்...தமிழ்த் திரையுலகில்..சின்னக்கலைவாணர் என சொல்லிக் கொள்பவர்.

கலைவாணர் காமெடியில்..அருவருப்போ,ஆபாச வசனங்களோ,இரட்டை அர்த்தம் வரும் சொற்களோ வந்ததில்லை.கலைவாணரின் வசனம் ஆபாசம் என்று திரையில் அதை சென்சார் கட் செய்து..வெறும் வாயை மட்டும் அசைத்ததில்லை.பகுத்தறிவு கொள்கைகளையும்...பிறர் மனம் நோகாமல்...இனிப்பு தடவிய காப்சூல் போல தந்தவர்.விவேக் காமெடியில் ஆபாசம் தவிர வேறு இல்லை.

விவேக்...பகுத்தறிவு கொள்கைகளுக்காக கிடைத்த விருது..பத்மஸ்ரீ யாம்.அவரே சொல்லிக் கொள்கிறார்.எம்.ஆர்.ராதா சொல்லாததையா இவர் சொல்லிவிட்டார்.அவரை அப்படியே காபி அடித்து..அவர் பாணியிலேயே பேசினால்...போதுமா...உயர பறந்தாலும் குருவி...பருந்தாகுமா.

சமீபத்திய இவர் படங்களில்..இவர் ஆபாசமாக ஏதோ பேசப்போக..ரஜினி வாயைப்பொத்துவார்.(சிவாஜி)

படிக்காதவன்..படத்தில்..அசால்ட் ஆறுமுகமாம்..பெண் வேடம் போட்டு..குளிக்கும் போது..ஐயா..முத்தம் கொடுக்கிறாங்களே..நெருங்கிட்டங்களே..ரேப் பண்ணிடுவாங்களோ..என்றெல்லாம்..காமெடி என செய்துவிட்டு..உச்சக்கட்டமாக..ஜாக்கெட்டை திறந்து...சே...பெண்கள்...தியேட்டரில்...அருவருப்பில்..வேதனையடைகின்றனர்.

நாகேஷ். திறமையில் 25 சதவிகிதம் இவருக்கு இருக்கிறதா? அப்பேர்ப்பட்ட கலைஞனே...சமீபத்தில்..மனம் திறந்து ..தனக்கு ஜனாதிபதி விருது கிடைக்கவில்லையே!! என வேதனையுடன் கூறியுள்ளார்.மனோரமாவிற்கு பத்மஸ்ரீ விருது கிடைத்த போது..தனக்கு இன்னும் கிடைக்கவில்லையே...என மனம் புழுங்கினார்.

அவரைவிட...விவேக்..எந்த விதத்தில் உயர்ந்தவர்?

இதிலும் அரசியல் விளையாடுகிறதா?

நான் என்ன சொல்ல வருகிறேன்..என்பது..புரிந்திருக்கும் என எண்ணுகிறேன்.

23 comments:

அக்னி பார்வை said...

சரியா சொன்னிங்க, நாம் NSKவுக்கு சிலை வைத்தவர்கள்... ஆனல் விவேக் சொன்ன பகுத்தறிவு கருத்துகள் எந்த அளவுக்கு நடுநிலமையானவை! என்று ஊர் அறியும்.
ஆனலும் விவேக் புத்திசாலி ஐய்யவுக்கும் ஒரு சிங்சா போடுவார் அம்மாவுக்கும் ஒரு சிங்சா போடுவார், பிழைக்க தெரிந்தவர்.. நன் என்ன சொல்கிறேன் என்று புரிந்த்தா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நீங்கள் சொல்வது உண்மை..ஆனாலும் நான் சொல்லவருவது அது அல்ல.
வருகைக்கு நன்றி அக்னிபார்வை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

விஜய் எந்தளவுக்கு மருத்துவர் அல்லது முனைவர் பட்டத்திற்கு தகுதியானவரோ அந்த அளவுக்கு விவேக்கும் பத்மதிரு பட்டத்திற்கு தகுதியானவர்.
வடிவேலுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும். இதில் விஜயகாந்த் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து அரசியல் செய்து கெடுத்தால், முதல் கண்டனம் என்னுடையதாகத் தான் இருக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அடக்கமுள்ளது அடங்கிக்கிடக்குது வீட்டிலே..ஆகாது சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே...என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.அதுசரி..அது என்ன..பத்மதிரு...தமிழில் சொல்ல வேண்டுமாயின்...தாமரைத்திரு..என்பதே சரி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தாமரைதிரு என்றால் அது பா.ச.க கட்சியினர் கொடுக்கும் விருதாகக் காட்டப் படக்கூடும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ஜோதிபாரதி said...
தாமரைதிரு என்றால் அது பா.ச.க கட்சியினர் கொடுக்கும் விருதாகக் காட்டப் படக்கூடும்.//
:-)))))

Unknown said...

அரசாங்க விருதுக்கு இருந்த மரியாதை எல்லாம் போய ரொம்ப நாள் ஆச்சு சார்.....
ஆனாலும் நாகேஷுக்கு தராம இவருக்கு குடுத்ததெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரு .

T.V.ராதாகிருஷ்ணன் said...

///Kamal said...
அரசாங்க விருதுக்கு இருந்த மரியாதை எல்லாம் போய ரொம்ப நாள் ஆச்சு சார்.....
ஆனாலும் நாகேஷுக்கு தராம இவருக்கு குடுத்ததெல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரு .///

அதுதான் என் ஆதங்கமும்..வருகைக்கு நன்றி கமல்

Vel said...

ithu kali kaalam.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// tamilcutter said...
ithu kali kaalam.//

நன்றி tamilcutter

சின்னப் பையன் said...

//அவரைவிட...விவேக்..எந்த விதத்தில் உயர்ந்தவர்?//

எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ச்சின்னப் பையன்

குடுகுடுப்பை said...

நாகேஷுக்கு கிடைக்காத விருது இவருக்கு ????????

? said...

இந்த விருதுகளை எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமே அம்புட்டு தூரம் கேவலப்படுத்துகின்றன நமது அரசியல்/அதிகாரவர்க்க சாக்கடைகள். விட்டுபோனது நாகேசை மட்டுமல்ல, குத்துசண்டையில் வெண்கலம் வென்ற இருவருக்கும் அல்வா தந்துவிட்டார்கள். அதோடு இவர்களில் கோச்சிற்கும் ஒன்றுமில்லை. முதன்முதலாக குத்துச்சண்டையில் சாதனை எனில் ஊக்குவிப்பு இல்லை.

விவேக்கை போல ஐசுவர்யா,ஹெலன் அக்சய் குமார் இவர்களெல்லாம் என்ன கிழித்துவிட்டார்கள் எனத் தெரியவில்லை.இதவிட காமெடி ஹஸ்மத் உல்லாகான் எனும் ஷால் வியாபரிக்கு பதமசிறி கொடுத்திருக்கிறார்கள், அவர் கைவினைக் கலைஞர் எனக் கருதி.

இனி நாகேசுக்கு கொடுத்தாலும் இவனுக மூஞ்சியிலயே எறிந்துவிட வேண்டுமவர், கதக் கலைஞர் சித்தரா தேவி போல!

நசரேயன் said...

எல்லாம் நேரம் தான், நாம என்ன செய்ய

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
நாகேஷுக்கு கிடைக்காத விருது இவருக்கு ????????//

இப்போதெல்லாம்..விருதுகள் கொடுக்கப்படுவதில்லயோ...வாங்கப்படுகின்றனவோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நந்தவனத்தான் said...
இந்த விருதுகளை எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமே அம்புட்டு தூரம் கேவலப்படுத்துகின்றன நமது அரசியல்/அதிகாரவர்க்க சாக்கடைகள். விட்டுபோனது நாகேசை மட்டுமல்ல, குத்துசண்டையில் வெண்கலம் வென்ற இருவருக்கும் அல்வா தந்துவிட்டார்கள். அதோடு இவர்களில் கோச்சிற்கும் ஒன்றுமில்லை. முதன்முதலாக குத்துச்சண்டையில் சாதனை எனில் ஊக்குவிப்பு இல்லை.

விவேக்கை போல ஐசுவர்யா,ஹெலன் அக்சய் குமார் இவர்களெல்லாம் என்ன கிழித்துவிட்டார்கள் எனத் தெரியவில்லை.இதவிட காமெடி ஹஸ்மத் உல்லாகான் எனும் ஷால் வியாபரிக்கு பதமசிறி கொடுத்திருக்கிறார்கள், அவர் கைவினைக் கலைஞர் எனக் கருதி.

இனி நாகேசுக்கு கொடுத்தாலும் இவனுக மூஞ்சியிலயே எறிந்துவிட வேண்டுமவர், கதக் கலைஞர் சித்தரா தேவி போல!///
உங்கள் கூற்று உண்மை. இனி நாகேஷிற்கு கொடுத்தால்...விருதை தூக்கி எறிய வேண்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
எல்லாம் நேரம் தான், நாம என்ன செய்ய//
எல்லாம் நேரம் இல்லை...எல்லாவற்றிலும் அரசியல்.அரசியல் ஆதாயம்.

krishni said...

//குடுகுடுப்பை said...

நாகேஷுக்கு கிடைக்காத விருது இவருக்கு ????????
//

yen ippadi? thiramai oppeedu seiya koodiyathu thane? arasiyaluku kankal illai pola?kadhu than illai ena ninaithom .vivek i vida intha viruthukkup poruththamanavarkal innum silar unde!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

////
krishni said...
//குடுகுடுப்பை said...

நாகேஷுக்கு கிடைக்காத விருது இவருக்கு ????????
//

yen ippadi? thiramai oppeedu seiya koodiyathu thane? arasiyaluku kankal illai pola?kadhu than illai ena ninaithom .vivek i vida intha viruthukkup poruththamanavarkal innum silar unde!!!!////


விவேக்கிற்கு வழங்க வேண்டிய காரணம் என்ன...சற்று யோசியுங்கள் நண்பரே..விளங்கும்..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதும் அதை அவரது குடும்பத்தினர் நிராகரித்ததும் அறிந்ததே. எம்.ஜி.ஆருக்கும் பாரத ரத்னா தான் சார். அதைப் பெற்ற மற்றவர்களைப் பற்றி ஒன்னும் பெரிதாகச் சொல்ல முடியாது. அதனால் எப்பவும் இப்படித்தான். நோ வொண்டர் அட் ஆல்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ஜோதிபாரதி said...
நோ வொண்டர் அட் ஆல்!///

:-)))))))))

No Worries .. said...

ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.
விவேக் காமெடியில் எந்த விதத்திலும் யாருக்கும் குறைந்தவர் அல்ல
கலைவாணர் காமெடி அந்த காலம்
அந்த காலத்தில் தமிழ் படங்களில் கூட ஆபாச வசனங்கள் வந்ததில்லை அனால் இந்த காலத்தில் ஆபாச வசனங்கள் இல்லாத தமிழ் படங்களோ தமிழ் சின்னதிரை தொடர்களோ வருவதில்லை
இவ்வளவு சொல்கிறீர்களே பத்மஸ்ரீ விருது பெற்ற கமல்ஹாசன் ஆபாசமாக பேசியது இல்லையா
சிந்தித்து பாருங்கள்
திறமைக்கு மதிப்பு கொடுங்கள்.
-----
ரூபம்