Wednesday, January 14, 2009

சாஃப்ட்வேர் துறையும்...வீட்டுக் கடன்களும்..

ரியல் எஸ்டேட் ஏற்றத்திற்கு சாஃப்ட்வேர் துறைதான் காரணம் என குற்றம் சாட்டப்படுவதுண்டு.

லட்சக்கணக்கில் சம்பளம்..மாதத்தவணைப் பற்றி..கவலையில்லை என்பதால்..வங்கிகளும் கடனை வாரி வழங்கின.700 சதுர அடி வீடுகள் கட்டிய வீடுகட்டும் நிறுவனங்கள் மத்தியதரத்தினரை மறந்து..1000 சதுர அடிகளுக்கு மேல் ..கார் நிறுத்தும் வசதியுடன் அடுக்ககங்கள் கட்டின.ஒரு சதுர அடி 7000,8000 என விலை நிர்ணயித்தன.சாமான்யனுக்கு சொந்த வீடு என்பது கனவாய் போயிற்று.

சரி..வாடகைக்கு வீடு..என்றாலும்..அவர்கள் எவ்வளவு வாடகை கொடுக்கவும் தயாராய் இருந்தனர்.சாதாரணமாக 3000 வாடகை இருந்த அதே இடம்..6000/7000 என வாடகைக் கேட்கப்பட்டது.

ஆனால் இன்று...

செய்துக்கொண்டிருக்கும் வேலை நம்பிக்கையானதாக இல்லை.

பொருளாதார நெருக்கடி... பாதுகாப்பு இல்லை.,

இன்று சம்பாதிக்கிறோம்..நாளை நிலை என்ன..என உறுதியாக கூறமுடியவில்லை.

அமெரிக்காவில் வீட்டுக்கடன் வாங்கி..திருப்பச் செலுத்த முடியாதவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்...ரியல் எஸ்டேட் துறை..அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.நம் நாட்டில் என்ன நடக்கும் எனத் தெரியாது.

ஆகவே நண்பர்களே...இன்று உங்களுக்கு சம்பளம் வருகிறது...அமைதியாக உட்கார்ந்து யோசியுங்கள்.நாளை வேலை போனாலும்..இன்றியமையா தேவைகளான உணவுக்கு..சேமியுங்கள்..உடைக்கு சேமியுங்கள்.உறையுள் வேண்டாமா எனக் கேட்காதீர்கள்.அதுவும் அவசியம்..அதற்கு கணிசமாக..திட்டம் போட்டு சேமியுங்கள்.வீட்டுக் கடன் வாங்காதீர்கள் இப்போது.நிலமை மாறும்..அப்போது அதில் நுழையலாம்.

மீனுக்காக காத்திருக்கும் கொக்காய் இருங்கள்..சமயம் வரும்போது..மீனை கொத்தலாம்.

ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை..போகாறு அகலாக் கடை..என்ற வள்ளுவன் வாக்கின் படி நடங்கள்.

நாளை நமதே..!!

(சத்யம் ஊழியர்கள் பற்றி நினைத்தேன்...அதுவே இப்பதிவு எழுதத் தூண்டியது)

12 comments:

குப்பன்.யாஹூ said...

yes good post.

Private banks like icici, hdfc, axix and all charging too high interest on housing loans, car loans,

so all readers be careful before going for house loan, car, bike loans even too credit cards.

ஷாஜி said...

அப்படியென்றால், மாத வாடகை(for 2BHK) 7000/10000 கொடுப்பதை தொடுருங்கள் என்கிறிர்களா?

என் கண்க்குப்படி, 20 லட்ச வீட்டு கடனுக்கு அரசுடமை ஆக்கப்பட்ட வங்கியில் 9.5% வட்டிக்கு 20 வருட தவனைக்கு, மாத EMI 18000.(தோராயமாக). மேலும் வரிச்சலுகையாக 80c படி ரூ.1 லட்சம் + 1.5 லட்சம் on Intrest per annum.

நாம் மாத வாடகையாக கொடுக்கும் ரூ.10000 உடன் 8000 சேர்த்து கட்டினால், நமக்கு சொந்த வீடு கிடைக்கும் அல்லவா?

(Expert says: wait for another 3 to 6 months to see a drop in property price. but from next year again it will go high. Its DEMAND vs SUPPLY theory)

கூட்டி கழிச்சி பாருங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஐயா..நான் வீடு வாங்கவேண்டாம் என்று.. சொல்லவில்லை.நீங்கள் சொல்லும் 700 சதுர அடிகள் வீடு புதிது என்றால் 20 லட்சத்திற்கு இன்று கிடைக்காது.சரி..பழைய ஃப்ளாட் வாங்கலாம் என்றால் மாதத்தவணை 18000 சரி..18000 மாதத்தவணை கட்டுபவர் சம்பளம் அதிகமாக இருக்கும்.அவர்..கனவு பெரிய அலவில் இருக்கும்..அப்பொது தவணை அதிகரிக்கும்..மெலும் நான் சற்று சேமியுங்கள் என்றுதான் சொல்லியுள்ளேன்.மற்றபடி வீடு,கார் என அவசரப்படாதீர்கள் என்கிறேன்.கடைசியில் சொல்லப்பட்ட குறளை மீண்டும் நினையுங்கள்.பதிவின் நோக்கம் புரியும்.வருகைக்கு நன்றி ஷாஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
குப்பன்_யாஹூ

மணிகண்டன் said...

எத இழந்தாலும் ராத்திரி தூக்கம் வரும்னா, எத வேணும்னாலும் வாங்கலாம் ! இது தான் என் கொள்கை.

"ஐயோ இப்படி இருக்கே நிலைமை, இன்னும் மோசமா போய்டும் போல இருக்கேன்னு" புலம்பிக்கிட்டு அளவுக்கு அதிகமான ஆசையோட இருக்கற மக்களும் இருக்காங்க. செலவழிக்கமாடாங்க, ஆனா நிச்சயமா தூங்கவும் மாட்டாங்க.
மன உளைச்சலையே இருப்பாங்க. கொஞ்ச நாள் கழிச்சி முன்னாடியே வாங்கி இருக்கலாமேன்னு அங்கலாய்க்கவும் செய்வாங்க !

நான் உங்க கருத்துக்கு எதிர்கருத்து சொல்லலைன்னு நிச்சயமா புரிஞ்சிப்பீங்க !

T.V.ராதாகிருஷ்ணன் said...

மணி..உங்களை நான் புரிஞ்சுக்கலைன்னா ..வேறு யார் புரிஞ்சுப்பாங்க..சொல்லுங்க..

அன்புடன் அருணா said...

Good post!
அன்புடன் அருணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அருணா

சின்னப் பையன் said...

மிக நல்ல பதிவு...

நசரேயன் said...

தகவலுக்கு நன்றி, யோசிக்கிற அளவுக்கு காசு இல்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

குடுகுப்பை இருக்க என்ன கவலை உங்களுக்கு நசரேயன்