Tuesday, May 12, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 10

1963ல் வந்த படங்கள்

சித்தூர் ராணி பத்மினி
அறிவாளி
இருவர் உள்ளம்
நான் வணங்கும் தெய்வம்
குலமகள் ராதை
பார் மகளே பார்
குங்குமம்
ரத்தத்திலகம்
கல்யாணியின் கணவன்
அன்னை இல்லம்

அறிவாளி நீண்டநாட்கள் வெளிவராமல் இருந்த படமாதலால்..நகைச்சுவை நிறைந்த படமாய்..இருந்தும்..தோல்வியுற்ற படம்.தங்கவேலு,முத்துலக்ஷ்மி சப்பாத்தி நகைச்சுவை வயிறு புண்ணாகும் ஒன்று.

கலைஞர் வசனத்தில்..லக்ஷ்மி அவர்களின் பெண்மனம் நாவல்..இருவர் உள்ளமாக வந்தது.அருமையான பாடல்கள்..சிவாஜி,சரோஜா தேவி நடிப்பு ..படத்திற்கு வெற்றி அளித்தது.100 நாள் படம்.சிறிது கால இடைவெளி விட்டு மீண்டும் திரையிட்ட போதும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம்.

குலமகள் ராதை,கல்யாணியின் கணவன் ஆகிய படங்களும்..நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததால் தோல்வியுற்றன.

ரத்தத்திலகம்..இந்திய..சீனப்போரை வைத்து வந்த படம்.

குங்குமம்...பாசமலர் படத்தை எடுத்த தயாரிப்பாளர் படம்.நல்ல பாடல்கல்..சிவாஜியின் அற்புத நடிப்பு ஆகியவை இருந்தும் தோல்விப்படம்.
அன்னை இல்லம்..சிவாஜி,தேவிகா நடித்த படம்..100 நாள் படம்.

பார் மகளே பார்..பெற்றால் தான் பிள்ளையா? என்ற நாடகம்..படமானது.100 நாள் படம்.

இந்த ஆண்டு 10 படங்கள் வந்தாலும்...4 படங்களே வெற்றி படங்களாக் அ மைந்தன எனலாம்.

1964 படங்கள் அடுத்த பதிவில்.

6 comments:

அக்னி பார்வை said...

என்னுடைய தந்தை ஒரு தீவிர சிவாஜி ரசிகர்..இந்த படங்களையெல்லாம் சின்ன வயதில் இருந்து பார்த்து கேடு வந்திருக்கிறேன் உங்கள் தொடரை படிக்கும் பொழுது பழைய ஞபங்கள் மலருகின்றன.. தொடருங்கள் சார்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அக்னி..முந்தைய பதிவுகளை படித்தீர்களா?

முரளிகண்ணன் said...

நல்ல தகவல்கள். அடுத்த பகுதியை எதிர்பார்த்து.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி முரளி

ஜோ/Joe said...

நன்றி! தொடருங்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஜோ/Joe