Saturday, May 2, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 9

1962ல் வெளியான படங்கள்

பார்த்தால் பசி தீரும்
நிச்சயதாம்பூலம்
வளர்பிறை
படித்தால் மட்டும் போதுமா
பலே பாண்டியா
வடிவுக்கு வளைகாப்பு
செந்தாமரை
பந்தபாசம்
ஆலயமணி

சிவாஜி..பீம்சிங் கூட்டணியில்..பார்த்தால் பசி தீரும்,படித்தால் மட்டும் போதுமா? இரண்டுமே நூறு நாட்கள் படம்.தொடர்ந்து ஒரு நடிகரும்..இயக்குநரும்..பங்கு பெற்ற 5 படங்கள் 100 நாட்கள்.அவற்றில் 3 படங்கள் வெள்ளிவிழா.இந்த சாதனையை இதுவரை வேறு யாரும் முறியடிக்கவில்லை.

ஆலயமணி..கே.ஷங்கர் இயக்கத்தில்..நடிகர் பி.எஸ்.வீரப்பா எடுத்த படம்.100 நாட்கள் படம்.அருமையான பாடல்கள்.
கண்ணான கண்ணனுக்கு,பொன்னை விரும்பும்,சட்டி சுட்டதடா..போன்ற பாடல்கள்.

இந்த வருடம் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றார்.நயாகரா நகரம்.சிவாஜிக்கு ஒரு நாள் மேயராக பதவி அளித்து கௌரவித்தது.

மற்ற படங்கள் பிரபல இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் ஆகியோருடன்..சிவாஜியின் அற்புத நடிப்பும் இருந்தும்..பிரமாத வெற்றி அடையவில்லை.

1963 படங்கள் அடுத்த பதிவில் காணலாம்.

2 comments:

narsim said...

உத்தமபுத்திரன் பற்றி எழுதுங்கள் சார்..(ஒருவேளை ஏற்கனவே எழுதிவிட்டீர்கள் என்றால் மன்னித்து லிங்க் கொடுங்கள்)

ஏனெனில்,ரஜினி முதல் அனைவரின் ஸ்டைல்களின் ஆரம்ப்பப் புள்ளி உத்தமபுத்திரன் சிவாஜியின் அங்க அசைவுகளில் இருந்து தான் என்பது என் கருத்து.. தாழ்மையான கருத்து..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நர்சிம்..சிவாஜி நடித்த படங்களைப்பற்றி சிறு குறிப்புகளே..இத்தொடர்.ஒவ்வொரு ஆண்டு வந்த படங்களை எழுதி வருகிறேன்.மற்றபடி..படங்களின் விமரிசனங்கள் இல்லை.

http://tvrk.blogspot.com/2009/03/5.html