Saturday, May 2, 2009

நடிகர்..தயாரிப்பாளர்..பாலாஜி அமரர் ஆனார்..

தமிழ் படத்தயாரிப்பாளர்களில்..அனேகமாக அனைத்துப் படங்களும் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அதில்..முதலில் இருப்பவர் பாலாஜி..

மிகுந்த முயற்சிக்குப் பின்..ஜெமினிகணேசனின் ஆதரவுடன்..திரைஉலகில் அறிமுகமானவர் பாலாஜி.ஔவையார் படத்தில்..முருகனாக சிறு பாத்திரத்தில் நடித்தார்.பின்னர் படிப்படியாக முன்னேறி..பானை பிடித்தவள் பாக்யசாலி,மறுமலர்ச்சி போன்ற படங்களில் கதாநாயகன் ஆனார்.சிவாஜியுடன் பல படங்களில் நடித்தார்.

பின்..தன் மகள் சுஜாதா பெயரில் படத் தயாரிப்பில் ஈடுபட்டார்.ஜெமினி நடிக்க அண்ணாவின் ஆசை..இவர் தயாரித்த முதல் படம்.அது ஓரளவு வெற்றி பெற..தன் படத்தயாரிப்பைத் தொடர்ந்தார்.

சிவாஜியை வைத்து..திருடன்,தங்கை,எங்கிருந்தோ வந்தாள்..என் தம்பி..போன்று பல படங்களை எடுத்தார்.

பின்னர் கமலை வைத்து சில படங்கள் வந்தது..(சவால்)

பின் ரஜினியை வைத்து...தீ..பில்லா போன்ற வெற்றி படங்கள் தயாரித்தார்.

தமிழ்த் திரை உலகில் ராசியான தயாரிப்பாளர் ஆனார்., ஆனால் நடிப்பதையும் விட்டு விடவில்லை..கிட்டத்தட்ட அவர் படங்களில் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை அவரே செய்வார்.

சமீபத்தில் மீண்டும் தன் மகன் தயாரிப்பில் ஈடுபட...அஜித் நடிக்க பில்லா படமும்...சமீபத்தில் யாவரும் நலம் படமும் இவருடையதே..

எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாத இவர் கடைசியாக ஜெயா டிவியில்..திரும்பிப்பார்க்கிறேன்..என்ற நிகழ்ச்சியில் சமீபத்திதான் கலந்துக் கொண்டார்.

மோகன்லால் இவரது மருமகன் ஆவார்

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டவர் இன்று அமரர் ஆனார்.

அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

9 comments:

Unknown said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

குப்பன்.யாஹூ said...

once he was a successful producer films like vidhi, sattam, savaal.

he is good actor, pon ondru kanden mugam kaana villai.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான ரீமேக் தயாரிப்பாளர் இவர். இவர் தொடர்புடைய இடுகை இங்கே உள்ளது.

சுஜாதா ஃபிலிம்ஸ் எடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க..

தயாரிப்பாளரையே போட்டுவிடலாம்.

புருனோ Bruno said...

:(

வருண் said...

TVR: One another hting he never produced any mgr movies. Not even few movies co-starring with m g r ewither. He produced several sivaji movies including "RAJA". He is one of them who made lots of money using sivaji.

He always made re-make movies esp from hindi

He had a sentimental weakness. His hero is always named RAJA and heroine is RADHA :-)))

Anyway, after shivaji he produced two movies with Rajni billa and thee.

Then he moved to Kamal.

How can you miss vaazhvee maayam? a silver jubilee movie for Kamal. Then he produced sattam and savaal did OK but not that great.

Then he went back to rajni and shivaji together, VIDUTHALAI (remake of Gurbaani (hindi) ). It did not do that well either.

He made a movie called Vidhi with mohan poornima jeyaraman which was a SUPER HIT.

I did not know mohanlal is his son-in-law!!

Sorry to know that he passed away
:(

T.V.ராதாகிருஷ்ணன் said...

மரணச்செய்தி கேள்விபட்டதும்...பதிவிடும்போது..என் நினைவில் வந்த படங்களையே பதிவிட்டேன்.அதில் வாழ்வே மாயம் விடுபட்டு விட்டது.ஞாபகப்படுத்தியதற்கு நன்றி வருண்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருண்..ஒரு உபரி செய்தி..பிரபல தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் பல எம்.ஜி.ஆர்., படங்களை எடுத்தார்.சிவாஜியை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை.

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

True, Shivaji never worked with Devar films despite the fact that he himself was a devar. :-)