Thursday, May 21, 2009

வாய் விட்டு சிரியுங்க..

நான் பத்திரிகையை யாருக்கும் ஓசி கொடுக்கறதில்லைன்னு கொள்கை உடையவன்
பரவாயில்லையே., எனக்கும் கிட்டத்தட்ட அதே கொள்கைதான்..பத்திரிகையை ஓசிலதான் படிக்கணும்னு.

2.ரூபாய் 5000 லஞசம் வாங்கினதுக்காக மாட்டிண்டியாமே
ஆமாம்.10000 கொடுத்தப்பறம்தான் வெளியே விட்டாங்க

3.நீங்க நடிச்ச முதல் படமே வெற்றி..அடுத்து உங்க நடவடிக்கை..
ஒரு கட்சி ஆரம்பிப்பதுதான்

4.நம்ம தலைவர் அவர் பையனுக்கு மந்திரி பதவி கொடுக்கப்போறாராமே
அதுலே என்ன தப்பு..நீ கூடத்தான்..உன் ஆஃபீஸ்ல உன் பையனை நுழைக்க முயற்சிக்கறே..

5.எனக்கு இப்போ உடனே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஆகணும்..
ஏன்
டாக்டர்..என்னை அப்பப்ப எழுந்து நடக்கணும்னு சொல்றார்.எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ன்னா அப்பப்ப வெளிநடப்பு செய்யலாமே

6.நேற்று பைக்ல போகும்போது ஒரு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு
அடடா..அப்புறம்..
நல்லவேளை..உன் அட்ரெஸ் ஞாபகம் வந்தது..அதைக் கொடுத்து தப்பிச்சுட்டேன்..

7 comments:

மணிகண்டன் said...

Nallaa irukku sir.

**
4.நம்ம தலைவர் அவர் பையனுக்கு மந்திரி பதவி கொடுக்கப்போறாராமே
அதுலே என்ன தப்பு..நீ கூடத்தான்..உன் ஆஃபீஸ்ல உன் பையனை நுழைக்க முயற்சிக்கறே..
**

ithula mattum suthamaa marunthukku kooda nagaichuvai illa !! unga thalaivar paasam thaan irukku :)-

நையாண்டி நைனா said...

நான் இப்ப வாய விட்டு சிரிச்சா அடுத்து நீங்க போடுற ஜோக்குக்கு சிரிக்க என்கிட்டே வாயி இருக்காதே????

நையாண்டி நைனா said...

கடைசி ஜோக்குதான் டாப்பு

வால்பையன் said...

மூனாவது ஜோக்கில் ஒரு திருத்தம்!

வரிசையா உன் படம் ப்ளாப் ஆகுதே என்ன செய்ய போற!

கட்சி ஆரம்பிக்க வேண்டியது தான்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
ithula mattum suthamaa marunthukku kooda nagaichuvai illa !! unga thalaivar paasam thaan irukku :)-//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நையாண்டி நைனா said...
நான் இப்ப வாய விட்டு சிரிச்சா அடுத்து நீங்க போடுற ஜோக்குக்கு சிரிக்க என்கிட்டே வாயி இருக்காதே????//
அமுக்கமா சிரிக்காம...சத்தமா..வாயை நீங்களே வைச்சுக்கிட்டு..சிரியுங்க..
வருகைக்கு நன்றி நைனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வால்பையன் said...
வரிசையா உன் படம் ப்ளாப் ஆகுதே என்ன செய்ய போற!

கட்சி ஆரம்பிக்க வேண்டியது தான்!//

இது நல்லாயிருக்கு வால்