ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை இனப்படுகொலை குறித்து விவாதிப்பதை தடுக்கும் வகையில், ஐ.நா.விடம் ஒரு புதிய மனு ஒன்றை அளித்துள்ளது இலங்கை அரசு.
ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை இனப்படுகொலை, போர்க் குற்றம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதைத் தடுக்கும் வகையில் ஐ.நாவுக்கு ஒரு மனுவை அனுப்பியுள்ளது இலங்கை.
அதில் இலங்கையில் நடப்பது அந்த நாட்டின் உள் விவகாரம். அதில் பிற நாடுகள், அமைப்புகள் தலையிட முடியாது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் இலங்கை கோரியுள்ளது.
இலங்கையின் இந்த தீர்மான ஆவணத்தை ஆதரித்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் , எகிப்து, மலேசியா, கியூபா, இந்தோனேசியா, பொலீவியா, நிகாரகுவா, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா ஆகிய 12 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
4 comments:
ஒரு வீட்டிற்குள் நடைபெறும் கொலையை தண்டிக்க இந்தியச் சட்டங்களும், காவல்த்துறையும் நுழைவது எவ்வளவு பொருத்தமோ அதற்கும் அதிகமான அளவு வன்னிப் படுகொலைகளுக்கு தண்டனை கொடுக்க சர்வதேச சட்டமும், ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கும் உரிமையும், கடமையும் உண்டு.
இந்தியாவும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் பங்குபெற்றதால் இப்படிப்பட்ட கேவலமான செயல்களில் ஈடுபடும்.
வருகைக்கு நன்றி திரு
அன்று கிருஷ்ண மேனன் பாராளுமன்றத்திலே கேட்டார்(1958).
சிலோன் ஒரு தனி நாடு.அந்த நாட்டின் உள் விவகாரத்தில் இந்தியா எப்படித் தலையீட முடியும் என்று அண்ணாவின் பேச்சிற்கு.
அறிஞர் அண்ணா அவர்கள்.மதிப்பிற்குரிய் கிருட்டிண் மேனன் அவர்களே!நீங்கள் மெத்தப் படித்த மேதை.உலகை நன்கு அறிந்தவர்.உங்களுக்கு அளவு கடந்த மரியாதை தருவேன்.
அடுத்தவீட்டிலே அவர்கள் முத்தமிட்டு மகிழ்வுடன் இருந்தால் அதைப் பார்க்காமல் முகத்தைத் திரும்பி வந்து விடுவோம்.ஆனால் அவன் அடித்து,உதைத்துத் துன்புறுத்தி அவள் அழுது புலம்பிக்கொண்டுள்ளபோது என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.
இன்று இந்தியா செய்துள்ள அநியாயம் உலக அள்விலே அமெரிக்காவின் ஈராக் படுகொலையை விட வெட்கப் பட வைத்துள்ளது.
வரும் செய்திகள் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றப் போகிறது.
மனிதாபிமானத்துடன் செயல் பட நினைத்த அமெரிக்காவையும் தடுக்க இந்தியாவிற்கு என்ன உரிமை இருக்கிறது?
சீனாவிடம் மானம் போகும் நாட்கள் விரைவிலே வரும் போல் உள்ளது.
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி தமிழன்
Post a Comment