1.சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களில் 300 பேர் கோடீஸ்வரர்கள்.தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த நாகேஷ்வர ராவ் 173 கோடி சொத்துக்கு அதிபதி.காங்கிரஸ் கட்சியில் 137 பேர்,பி.ஜே.பி., 58 பேர்,சமஜ்வாதி 14 பேர்,பகுஜன்சமாஜ் 13 பேர் கோடீஸ்வரர்களாம்.தமிழகத்து எம்.பி.க்களில் 17 பேர் இந்த லிஸ்டில் உள்ளவர்கள்.
2.பசு பால் தருவதால்தான் அதை நாம் அன்பு காட்டி பராமரிக்கிறோம்..கறவை வற்றிவிட்டால்..கருணை இல்லாமல் கசாப்பு கடைக்காரனுக்கு விற்றுவிடுவோம்.,
3.இது இனாம்..அது இனாம்..என்று சொல்லி மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்குகின்றன அரசியல்கட்சிகள்.நாங்க எங்க கால்ல நிக்க ஆரம்பிச்சாச்சு..உங்க இலவச பிச்சை வேண்டாம்னு மக்கள் சொல்லவேண்டும்.
4.இடஒதுக்கீடு பற்றி புரியாமல் சிலர் குதிக்கிறார்கள்.இட ஒதுக்கீடு என்பது..வறுமை ஒழிப்பு திட்டமோ..வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் திட்டமோ இல்லை.நாட்டில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இடஒதுக்கீடு கொள்கை.
5.கவிஞர் கண்ணதாசன் ஒரு நாள் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றார்.கதவைத் தட்டியதும்..நண்பர் உள்ளிருந்து 'யாரது?' என்றார்.கவி அரசு உடனே..'an outstanding poet is standing outside' என்றார்.
6.ஒரு ஜோக்..
பிரதமர்- (சோனியாவிடம்) எல்லோருக்கும் கேபினட் ரேங்க் கொடுத்தா..ஒதுக்க இலாக்காக்களே இருக்காதே..
சோனியா- அதனால் என்ன...அவங்க எல்லாம் இலாகா இல்லாத மந்திரிகளாய் இருக்கட்டும்.
8 comments:
சிக்ஸர்
துக்ளக் ஆட்சி பற்றி ஒரு பழைய சினிமா இருக்கு பாத்துருக்கீங்களா ராதாகிருஷ்ணன் சார்:-)
//4.இடஒதுக்கீடு பற்றி புரியாமல் சிலர் குதிக்கிறார்கள்.இட ஒதுக்கீடு என்பது..வறுமை ஒழிப்பு திட்டமோ..வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் திட்டமோ இல்லை.நாட்டில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இடஒதுக்கீடு கொள்கை.
//
:) :)
நன்றி முரளி
//இயற்கை said...
துக்ளக் ஆட்சி பற்றி ஒரு பழைய சினிமா இருக்கு பாத்துருக்கீங்களா ராதாகிருஷ்ணன் சார்:-)//
சினிமாவை வேற பார்க்கணுமா? என்ன..
இப்பவே அதுதானே நடக்குது..
வருகைக்கு நன்றி டாக்டர் சார்
:))
நன்றி சிவா
Post a Comment