மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..
பணநாயகம் வென்றது..தோற்ற கட்சியினர்கள் சொல்வது..எப்போதுமே வழக்கம்.தி.மு.க., முதன் முதலில் தமிழக அரசை பிடித்தவுடன்..அப்போதைய முதல்வர்...'நாட்டில் விஷக்கிருமிகள்' நுழைந்து விட்டன.' என்று சொல்லவில்லையா.
அதாவது..தோல்வியை நம்மால் தாங்க முடியவில்லை..அதற்கான காரணம் எதாவது சொல்ல வேண்டாமா?
தேர்வில் தோற்ற மாணவன்..வாத்தியார் சரியா பேப்பரை திருத்தவில்லை..அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டுட்டாங்க..என்றெல்லாம் சொல்வதில்லையா? அப்படித்தான்.
பாதி முடிவுகள் வந்த போதே..காங்கிரஸ் முன்னிலை என தெரிந்ததும்..அத்வானி, மன்மோகனுக்கு வாழ்த்து தெரிவித்த..அரசியல் பண்பாடு..நம் தமிழகத்தில் இல்லை.
5 தொகுதிகளில் மட்டுமே வென்ற லாலு..காங்கிரஸுடன் கூட்டு வைக்காதது தவறு..என்று சொன்னது போல நம் தலைவர்களால் சொல்ல முடியவில்லை.
மக்கள் மனோநிலை எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது.அவர்களுக்கு தேவை..நிலையான ஆட்சி.அதற்கேற்ப ஓட்டளித்துள்ளார்கள்.
பல இடங்களில்...மாநிலக் கட்சிகள்..தங்கள் பலத்தை தவறாக கணக்குப் போட்டு விட்டன.
ஆந்திராவில்..தனியாக ஆட்சி அமைப்போம்..என..சிரஞ்சீவியும்...தெலுங்கு தேசம்கட்சியும் சொன்னாலும்..வென்றது..தனிப்பெரும்பான்மையாக காங்கிரஸ்தான்.
தமிழகத்தில்...அரித்மெடிக் சரியாகத்தான் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.அ.தி.மு.க.உடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் ..தி.மு.க.,வில் இருந்த போது 40க்கு 40 கிடைத்தது.அது பிரிந்ததால்தான் 9 இடங்களில் அ.தி.மு.க., வென்றது.
சில காங்கிரஸ் தலைவர்கள் வெல்லக் கூடாது என்ற மனோபாவம் தமிழக மக்களிடம் எல்லா இடங்களிலும் இருந்ததால்தான்..இவ்வளவு வெற்றியிலும்..தங்கபாலு,இளங்கோவன்.மணிசங்கர், தோல்வி யுற்றனர்.
எப்படியானாலும்.....நிலமை சாதகமாக இல்லை என பரவலாக செய்திகள் இருந்தும்..மா பெரும் வெற்றி பெற்ற தி.மு.க., வை வாழ்த்துவோம்.
11 comments:
p.chidambaram,t.r,balu,tamilarkalai..thooki nippatina ..manthrikal nandri makesane
//பாதி முடிவுகள் வந்த போதே..காங்கிரஸ் முன்னிலை என தெரிந்ததும்..அத்வானி, மன்மோகனுக்கு வாழ்த்து தெரிவித்த..அரசியல் பண்பாடு..நம் தமிழகத்தில் இல்லை//
தேசிய அளவில் தலைவர்கள் எல்லாம் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. ஆனால் இங்கே திருச்சியில் கலைஞரை பற்றி ஜெ அடித்த கமெண்டுகள் மிகவும் அநாகரீகமானவை
எட்டு வருட காலமாக வெளிநாட்டில் வசிப்பதால் அரசியல் நிலவரம் சரியாக எனக்குத்தெரியவில்லை.
ராமதாஸ் போன்ற அரசியல் வியாபாரிகளை தோற்கடித்த மக்களுக்கு நன்றி.
நானும் 34 வருசங்களா தமிழ்நாட்டை/ இந்தியாவிட்டு வெளியிலே இருப்பதால்
அரசியல்கட்சிகள் விவரம் எதுவும் அவ்வளவாப் புரியலை. இப்போ இந்த இணையம் வந்தபிறகுதான் மேலோட்டமாக் கொஞ்சம் தெரியுது.
காங்கிரஸ், திமுக இதெல்லாம் இப்பக் கிளைவிட்டு வெவ்வேறு கட்சிகளா இருக்குது.
இதைபற்றிய முழுவிவரமும் எதுலே இருந்து எது ஆச்சு, இது ரெண்டுமில்லாமப் புதுசா முளைச்ச காளான்கள் எதெதுன்னு ஒரு பட்டியல் போடுங்களேன்.
குறைஞ்சபட்சம் அறிவாவது எனக்கு வரட்டும்.
****
தேசிய அளவில் தலைவர்கள் எல்லாம் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. ஆனால் இங்கே திருச்சியில் கலைஞரை பற்றி ஜெ அடித்த கமெண்டுகள் மிகவும் அநாகரீகமானவை
*****
:)-
வருகைக்கு நன்றி
Ilaya
உடன்பிறப்பு
//குடுகுடுப்பை
ராமதாஸ் போன்ற அரசியல் வியாபாரிகளை தோற்கடித்த மக்களுக்கு நன்றி.//
அதே போன்று தங்கபாலுவை தோற்கடித்த மக்களுக்கும் நன்றி
//துளசி கோபால் said...
நானும் 34 வருசங்களா தமிழ்நாட்டை/ இந்தியாவிட்டு வெளியிலே இருப்பதால்
அரசியல்கட்சிகள் விவரம் எதுவும் அவ்வளவாப் புரியலை. இப்போ இந்த இணையம் வந்தபிறகுதான் மேலோட்டமாக் கொஞ்சம் தெரியுது.
காங்கிரஸ், திமுக இதெல்லாம் இப்பக் கிளைவிட்டு வெவ்வேறு கட்சிகளா இருக்குது.
இதைபற்றிய முழுவிவரமும் எதுலே இருந்து எது ஆச்சு, இது ரெண்டுமில்லாமப் புதுசா முளைச்ச காளான்கள் எதெதுன்னு ஒரு பட்டியல் போடுங்களேன்.
குறைஞ்சபட்சம் அறிவாவது எனக்கு வரட்டும்.//
kudiya viraivil ezhuthkiren
வருகைக்கு நன்றி மணி
I know about tamil nadu dirty politics.
But My heart realize very pain about Sister and Brothers situation in Eelam.
All the people in tamil nadu I humbly request don't use the words Eelam once again.
see sivagangai election result. india fulla ore kootani naveen chawla+sonia+kalaingar so easy win. thats all. this results is not people result. only money with election commission result
thats all. every one will suffer for this cheating soon.
Post a Comment