Friday, May 1, 2009

பத்தே நாட்கள் ஓடிய எம்.ஜி.ஆர்., படம்....

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்நேஷனல் தயாரிக்கும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் மோகன்லால் நடிப்பது தெரிந்த விஷயம்.

இது பற்றி கமல் கூறுகையில்..'மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்து விட்டன.இம்மாத இறுதிக்குள் ஷூட்டிங் முடிந்துவிடும்.உடனுக்குடன் எடிட்டிங்கும் முடிந்துவிடுகிறது.என்னை அறிமுகப்படுத்திய களத்தூர் கண்ணம்மா ஆகஸ்டில் பொன்விழா கொண்டாடுகிறது.அதே மாதத்தில் இப்படத்தை வெளியிட ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.'என்றார்.

இப்படத்தில் மலையாள நடிகரான மோகன்லாலை ஏன் நடிக்க வைத்துள்ளீர்கள் எனக் கேட்கிறார்கள்.என்னை தமிழன் என மலையாள ரசிகர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.அப்படியிருந்திருந்தால்..என்னால் அங்கு 40 படங்கள் நடித்திருக்க முடியாது.மோகன்லால் சிறந்த நடிகர்..a wednesday என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் இது.இப்படம் அனைத்து ரசிகர்களையும் சென்று அடையுமா எனத் தெரியாது.அனைத்து ரசிகர்களையும் திருப்தி படுத்துவது எளிதல்ல.எம்.ஜி.ஆர்., நடித்த பாசம் படம் பரமக்குடியில் 10நாட்கள் தான் ஓடியது என்றும் கூறினார்.

இப்படத்திற்கு ஸ்ருதி ஹாசன் இசை அமைக்கிறார்.இரா.முருகன் வசனங்களை எழுத..மனுஷ்யபுத்திரன் பாடல்களை எழுதிகிறார்.

உன்னைப்போல் ஒருவன்...ஜெயகாந்தனின் ஒரு நாவல் பெயர்..இப்பெயரிலேயே ஜெயகாந்தன் படம் எடுத்து...தேசியவிருது பெற்றார்..என்பது ஒரு உபரி செய்தி.

9 comments:

Vinitha said...

That movie would be a flop. Poor writer Era.Murukan, he works (time) would be killed. He will become one "chamcha" like Mohan ( Crazy ) and dither out.

அக்னி பார்வை said...

சொதப்பாம இருந்தா சரி

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
Vinitha
அக்னி பார்வை

டக்ளஸ்....... said...

படம் வெற்றியடையட்டும்..!
ஹீரோயின் யாரு ஸார்..?

T.V.Radhakrishnan said...

படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை.பத்திரிகை நிருபராக ஒரு பெண் பாத்திரம் மட்டுமே உண்டு.அதுவும் சில காட்சிகளே

தமிழர்ஸ் - Tamilers said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தல பாசம் நல்ல படம் தல..,

பாடல்கள் மிக அற்புதமானவை

உலகம் பிறந்தது எனக்காக..

ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை

ஆனால் படம் கண்டிப்பாக தோல்வியாகத்தான் இருக்கும்:அதற்கான காரணங்களை தனி இடுகையாக கொடுக்கிறேன்.

================================

காதல் வாகனம் என்றொரு படம் இருக்கிறது தல

1967-70க்குள் வந்திருக்கும்; அதுமாதிரி ஒரு எம்.ஜி.ஆர் படத்தினை பார்த்ததே இல்லை:

அதெல்லாம் இரண்டு நாள் கூட ஓடியிருக்காது.

T.V.Radhakrishnan said...

தேவர் ஃபிலிம்ஸ் எடுத்த படு தோல்வி படம் அது.வருகைக்கு நன்றி சுரேஷ்.
பாசம் தோல்வி அடைந்ததற்கு காரணம்..அதில் இறுதியில் எம்.ஜி.ஆர்., இறந்துவிடுவது போல் இருந்த கதை அமைப்புதான்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எம்.ஜி.ஆர் வந்து நின்னாலே போதும்

விசில் பறக்கும் தியேட்டரில்

படம் ஓடுனா என்ன ஓடாட்ட என்ன‌