அமிர்தஸரஸில்..ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன் மோகன் சிங்..'பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களான சீக்கியர் மீது ஜசியா என்ற மத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது விஷயமாக இந்திய அரசு..பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது என்றும்..விரைவில் அவர்கள் குறை அகலும் என்றும் கூறியுள்ளார்.
சிறுபான்மையினரான சீக்கியர் மீது வரி விதிப்பிற்கே..நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் பிரதமர்..இலங்கையில் இனப்படுகொலை ந்டந்து வருவதைப் பற்றி அவ்வளவாக ஏன் கவலைப்படவில்லை.
ஏனெனில்..அங்கு அவதிப்படுபவன் சீக்கியன்...இங்கோ தமிழன்..
தமிழன் உயிர் பற்றி இவர்களுக்கு என்ன கவலை.
நம் பிரதமர்..மட்டும் இரட்டை வேடம் போடவில்லை..அனைத்து காங்கிரஸ்காரனும் இரட்டை வேடம் போடுகிறார்கள்.அதை உணர்ந்துக்கொள் தமிழனே.காங்கிரஸிற்கு பாடம் கற்பி. இதுதான் தருணம்.
தமிழா..ஒரு முறை வாக்குப்பிச்சைப் போட்டுவிட்டு 5 ஆண்டுகளுக்கு வாழ்க்கைப்பிச்சை எடுப்பதை நிறுத்துவோம்.நேர்மை,உண்மை இரண்டும் சேர்ந்த அரசால்தான் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.
9 comments:
கான்கிரசு எப்போதுமே தமிழனுக்கு எதிரிதான்!
அடுத்த தலைமுறைக்கும்,இதை பறை சாற்றுவோம்!
டர்பனோடு ஒரு முகம், காங்கிரசு காரராக ஒரு முகமா ?
// நேர்மை,உண்மை இரண்டும் சேர்ந்த அரசால்தான் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். //
நியாயமான வார்த்தைகள்
வருகைக்கு நன்றி ttpian
//கோவி.கண்ணன் said...
டர்பனோடு ஒரு முகம், காங்கிரசு காரராக ஒரு முகமா ?//
சோனியாவிடம் அப்பாவியாய் ஒரு முகம்
அத்வானி பார்த்த பலஹீன மகம்
இப்படி பல முகங்கள் உண்டு பிரதமருக்கு
நன்றி jothi
துன்பத்தை அனுபவிக்கின்றவர்களைக்காட்டிலும், அவர்களுக்கு உதவ நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையேஎன்று செயலற்ற தன்மையில் ஏங்குவதுதான் மனிதனுக்கு ஏற்படும் மாபெரும்கொடுமை' என்றான் ஆலிவர் கோல்ட்ஸ்மித்
துன்பத்தை அனுபவிக்கின்றவர்களைக்காட்டிலும், அவர்களுக்கு உதவ நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையேஎன்று செயலற்ற தன்மையில் ஏங்குவதுதான் மனிதனுக்கு ஏற்படும் மாபெரும்கொடுமை' என்றான் ஆலிவர் கோல்ட்ஸ்மித்
நன்றி THANGAMANI
Post a Comment