1.ஆயுள்,கர்மம்(செயல்பாடு),பொருளாதாரம்,மரணம்,அறிவு இவை ஐந்தும் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்படுகிறது.
பிறப்பு..தகப்பன் அளிப்பு..இறப்பு ஆண்டவன் அழைப்பு..இவை இரண்டுக்கும் இடைப்பட்டது அரிதாரம் பூசாத நடிப்பு என்னும் வாழ்க்கை.
2.ஒரு எறும்பு தன்னைவிட 50 மடங்கு எடை அதிகமுள்ள பொருட்களைத் தூக்கிச்செல்லுமாம்.தன் குடும்பத்துக்காகவும்,எதிர்காலத்திற்காகவும்..எவ்வளவு சுமை தூக்கி உழைக்கிறது?அது..என்றாவது..நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்னு புலம்பி இருக்கிறதா?இல்லை..என் உழைப்பை இன்னொருவன் திருடிட்டான்..அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான்னு எரிச்சல் பட்டிருக்கா? அது பாட்டிற்கு..தன் கடமையைச் செய்..பலனை எதிர்ப்பாராதேங்கிற மாதிரிதான் நடக்கிறது.
3.ஒருவனுக்கு கோபம் வந்தால்..மிருகம் மாதிரி நடக்கிறான் என்கிறோம்..ஆனால்..அப்படி சொல்வது தவறு. ஏன் தெரியுமா? ஏனென்றால்...மிருகங்களிடையே பொறாமை, குரோதம்,சுயநலம், அடுத்தவனை கெடுப்பது போன்ற ஈனத்தனங்கள் கிடையாது.அவை கள்ளங்கபடமில்லா குழந்தைகள் போல.
4.உங்களைவிட திறமையில்லாதவனுக்கு..உங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு கொடுத்துவிட்டார்கள் என வருத்தப்படுகிறீர்களா? கவலைப்படாதீர்கள்...திறமையில்லாமல் மேலே வந்தவர்கள்..அந்த நிலை என்று பறிபோகுமோ என்ற பயத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.
5.லண்டனில் ஒரு பல்பொருள் அங்காடியை ஒருமுறை காந்தி பார்க்க ஆசைப்பட்டாராம்.பார்த்துவிட்டு..ஏதும் வாங்காமல் வெளியே வந்தாராம்.உடன் இருந்தவர்கள் அதைப்பற்றிக் கேட்டபோது 'உலகில் எவ்வளவு பொருள்கள் இல்லாமல் என்னால் வாழமுடியும் என்பதை தெரிந்துக் கொள்ளவே இங்கே வந்தேன்' என்றாராம்.
6.அனுபவம்
அனுபவம் விவேகத்திற்கு தந்தை
அனுபவம் துன்பத்தின் சாரம்
அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி
அனுபவம்..சிறந்த வெற்றிக்கு அடிப்படை
அனுபவம் செயல்களை எளிதாக்கும்
(எங்கோ படித்தது)
7.ஒரு ஜோக்..
தலைவா..5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்னு நீ சொன்னதை..எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்யறாங்க..
ஏன்
நம்ம தொகுதியில மொத்தமே 4.5 லட்சம் வாக்காளர்கள்தான்.
13 comments:
அருமையான சுண்டல்!
1-2 பரவாயில்ல...
3--நச்
4--ஓ.கே
5-- நெம்ப புடிச்சது ..
6-- பரவாயில்ல..
7-- மொக்கை..
மொத்தத்தில் நல்ல டைம் பாஸ் :-)
மீ த ஃப்ஸ்ர்ட்ன்னு நெனச்சேன்...
அதுக்குள்ள ம்ங்களூர் சிவா முந்திக்கிட்டார்..
(ரொம்ப அலசியதால நேரமாயிடுச்சு தல:-)
:)- Super Sundal.
/*
1.ஆயுள்,கர்மம்(செயல்பாடு),பொருளாதாரம்,மரணம்,அறிவு இவை ஐந்தும் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்படுகிறது.
*/
Absolutely wrong.
///5.லண்டனில் ஒரு பல்பொருள் அங்காடியை ஒருமுறை காந்தி பார்க்க ஆசைப்பட்டாராம்.பார்த்துவிட்டு..ஏதும் வாங்காமல் வெளியே வந்தாராம்.உடன் இருந்தவர்கள் அதைப்பற்றிக் கேட்டபோது 'உலகில் எவ்வளவு பொருள்கள் இல்லாமல் என்னால் வாழமுடியும் என்பதை தெரிந்துக் கொள்ளவே இங்கே வந்தேன்' என்றாராம். ///
நச்
வருகைக்கு நன்றி சிவா
வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி கடைக்குட்டி
ஆஹா..மணி..தன்யனானேன்
வருகைக்கும்..தங்கள் கருத்துக்கும் நன்றி..டண்டணக்கா. எண்ணங்கள் மாறுபடலாம்..அது இயற்கை.
வருகைக்கு நன்றி அக்னி பார்வை
சுண்டல் கலக்கல்..
தொடரட்டும்..
வருகைக்கு நன்றி கலையரசன்
Post a Comment