சீனாவில் கன்ஃப்யூசியஸ் என்ன சொன்னார் தெரியுமா..'ஓ..சீன தேசத்து குழந்தைகளே! நீங்கள் ஒழுக்கத்தோடு இந்தப் பிறவியில் நல்ல கல்வியைக் கற்றால் அடுத்த பிறவியில் இந்திய மண்ணில்
பிறப்பீர்கள்' என்றார்.
2.தான் இறக்கும் போது தன் சட்டைப்பையில் வைத்திருந்த சில சில்லறைக்காசுகள்தான்..காமராஜரின் சொத்து.அதனால்தான் இன்னும் பல கோடி மக்கள் மனதில் அவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
3.குட்டியானையைக் கொண்டுவந்து..சங்கிலியால் கட்டிப்போட்டு பழக்குவார்கள்.அந்த குட்டியானை பலம் கொண்ட மட்டும் சங்கிலியை இழுக்குமாம்.ஆனால் சங்கிலி பலமாக இருப்பதால் அதன்
முயற்சி பலிக்காது.அந்த குட்டி யானை வளர்ந்து பெரிதானதும் கயிறால் கட்டிவைத்தாலும்..அந்த யானை தப்பிக்க முயற்சிக்காது.அதற்கு யானையின் மனோபாவம்தான் முக்கியம்.இரும்புசங்கிலியால் கட்டப்பட்ட காலத்தில்..அது அடைந்த தோல்வி..அதன் மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.அந்தக் காலத்தில் செய்யாத முயற்சியா..எவ்வளவோ முயற்சி செய்தும்..அப்போது தப்ப முடியவில்லை..இப்போதா முடியப்போகிறது என அது நினைக்குமாம்.இந்த தவறான மனோபாவம் நம்மிடமும் இருக்கு.இது கலைந்தால் போதும்.வெற்றி காற்றை சுவாசிக்க தொடங்கிவிடலாம்.
4.சிலர் எப்போதும்..எதையும் சந்தனம்..சகதி என ஒப்பிடுவார்கள்.ஆனால் சேறு சந்தனம் ஆகாது..அதுபோல சந்தனமும் சேறாகாது.சந்தனம் பூஜைக்கு உதவும்..சேறோ..கட்டடம் கட்ட தேவை.ஒவ்வொன்றிற்கும் ..ஒவ்வொரு தனித்தன்மை.எதையும்..எதனோடும் ஒப்பிடக்கூடாது.
5.உலகத்தில் உள்ள எல்லா இருளும் சேர்ந்து முயன்று பார்த்தாலும் கூட ஒரு சிறு மெழுகுவர்த்தி தரும் ஒளியை மறைத்துவிட முடியாது.
6. ஒரு ஜோக்
உனக்கு எப்படிப்பட்ட கணவன் வேணும்
பார்க்க அழகாய் இருக்கணும்.நான் சொன்னால் மட்டுமே பேசணும்.நிறுத்தச் சொன்னால் நிறுத்தணும்.உலக நடப்புப் பற்றி எது கேட்டாலும் சொல்லணும்.பிஸினஸ்,நாடகம்,சினிமா இப்படி எல்லாவற்றிலும் ஆர்வம் இருக்கணும்
அப்ப உன்னை டி.வி.,க்குத்தான் கல்யாணம் பண்ணிவைக்கணும்
10 comments:
3-->
அந்த யானை மேட்டர் அருமை... என்ன மேட்டருங்க!! ரொம்ப மனச பாதிச்சிடுச்சுங்க...
அதுக்காகவே ஓட்டும் போட்டாச்சு...
அதுக்கு முன்னாடி மிச்ச எதும் என் கண்ணுக்கு தெரியல :-)
//சீனாவில் கன்ஃப்யூசியஸ் என்ன சொன்னார் தெரியுமா..'ஓ..சீன தேசத்து குழந்தைகளே! நீங்கள் ஒழுக்கத்தோடு இந்தப் பிறவியில் நல்ல கல்வியைக் கற்றால் அடுத்த பிறவியில் இந்திய மண்ணில்
பிறப்பீர்கள்' என்றார்.//
இன்னோன்னும் சொல்லியிருப்பார்!
ஒருவேளை படிக்கலைன்னா
அமெரிக்காவில் பிறப்பீர்கள் என்று!
வருகைக்கு நன்றி கடைக்குட்டி
//இன்னோன்னும் சொல்லியிருப்பார்!
ஒருவேளை படிக்கலைன்னா
அமெரிக்காவில் பிறப்பீர்கள் என்று!//
:-)))
நன்றி வால்பையன்
இந்த வார சுண்டல் சூப்பர் சார். அதுவும் அந்த யானை மேட்டர் புதுசு எனக்கு. அதுவும் பலரும் இந்த பத்தி எழுத்து முயற்சியை தொடர்ந்து செய்ய முடியலை. உங்க டெடிகேஷனுக்கு பாராட்டுக்கள்.
நன்றி மணி
அன்னே அந்த ’ஒரு ஜோக்’ சூப்பருன்னே :))))))))))
//
சீனாவில் கன்ஃப்யூசியஸ் என்ன சொன்னார் தெரியுமா..'ஓ..சீன தேசத்து குழந்தைகளே! நீங்கள் ஒழுக்கத்தோடு இந்தப் பிறவியில் நல்ல கல்வியைக் கற்றால் அடுத்த பிறவியில் இந்திய மண்ணில்
பிறப்பீர்கள்' என்றார்.
//
அவருக்கு அந்த குழந்தைங்க மேல அப்படி என்ன கோவம்?
//SUBBU said...
அன்னே அந்த ’ஒரு ஜோக்’ சூப்பருன்னே :))))))))))//
நன்றி SUBBU
//Joe said...
//
சீனாவில் கன்ஃப்யூசியஸ் என்ன சொன்னார் தெரியுமா..'ஓ..சீன தேசத்து குழந்தைகளே! நீங்கள் ஒழுக்கத்தோடு இந்தப் பிறவியில் நல்ல கல்வியைக் கற்றால் அடுத்த பிறவியில் இந்திய மண்ணில்
பிறப்பீர்கள்' என்றார்.
//
அவருக்கு அந்த குழந்தைங்க மேல அப்படி என்ன கோவம்?//
:-))))
Post a Comment